அவர்கள் கையொப்பம் இடவில்லை. இப்பொழுது இல்லை யென்றால், பரவாயில்லை.
183. ஆனால் கவனியுங்கள், உலகத்தோற்றத்திற்கு முன் தேவன் ஒரு பெயரை ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதியிருக்கும் போது, உலகத்தில் உள்ள எதுவும் அதை அழித்துப்போட முடியாது. ஏனென்றால் அது கிறிஸ்துவின் இரத்தமாகிய மையினால் எழுதப்பட்டிருக்கிறது. அது இவ்வளவு பெரியதாக இருந்தாலும், அல்லது அவ்வளவு பெரியதாக இருந்தாலும், அல்லது அவ்வளவு பெரியதாக இருந்தாலும், அல்லது எதுவாக இருந்தாலும், அது ஒன்றுபோலவே செல்லுகிறது. பாருங்கள். எல்லா பிள்ளைகளும், எல்லா சபையும், அங்கிருக்கும் ஒவ்வொன்றும்... தேவன், தம்முடைய முன்னறிவினால்...
184. இப்பொழுது, நமக்கு ஒன்றும் தெரியவில்லை. “சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் அங்கிருந்ததை நிரூபிக்கமுடியுமா?” என்று நீங்கள் கூறலாம். இல்லை, ஐயா. நான் அதை நிரூபிக்க முடியாது. தேவன் என்னை வேறொரு காரியத்திற்கு கருவியாக உபயோகப்படுத்தக்கூடும், உங்களையும் அவ்விதமாகவே உபயோகப்படுத்துவார். ஆனால் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன். அறிவினால் நான் இரட்சிக்கப்படாமல் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். அவ்விதமாகத்தான் நீங்களும் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். அவ்விதமாகத்தான் நாமெல்லோரும் இரட்சிக்கப் பட்டிருக்கிறோம்.
185. ஆனால், தேவன் எல்லைக்கப்பாற்பட்டவர் என்பதை நினைவு கூறுங்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையார் ஆமென் என்று கூறுகின்றார்கள் – ஆசி) எல்லைக்கப்பாற்பட்டவர். நல்லது. எல்லைக்கப்பாற்பட்டவராய் இருப்பதால், அது அவரை சர்வஞானியாக்குகிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ('ஆமென்') சர்வஞானியென்றால் அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்பதாகும். எல்லைக்கப்பாற்பட்டவராக இல்லாமல் அவர் சர்வஞானியாக இருக்க முடியாது. பாருங்கள்? அவர் அறிந்திருப்பதேயல்லாமல் வேறெதுவும் இருந்ததில்லை. பூமியின் மீது இருக்கும் ஒவ்வொரு கொசுவையும் அவர் அறிந்திருந்தார். ஒவ்வொரு கொசுவும் எத்தனை முறை தன் கண்ணை சிமிட்டும் என்றும், ஒவ்வொன்றிலும் எவ்வளவு கொழுப்பு இருக்கும் என்றும், எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்தால் எவ்வளவாய் இருக்கும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். நீங்கள் சுவாசிக்கும் ஒவ்வொரு சுவாசத்தையும், உங்கள் நுரையீரலில் அது எவ்வளவு ஆழமாகச் செல்லும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அதுதான் வரம்பிற்கப்பாற்பட்டவர் என்பதாகும்.
186. அவர் வரம்பிற்கப்பாற்பட்டவராக இருப்பது அவரை சர்வஞானியாக்குகிறது. அது சரியா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி) அவர் சர்வஞானியென்றால் அது அவரை சர்வ வியாபியாக்குகிறது. ஏனென்றால் அவர் நிமிஷத்தையும், மணியையும், நேரத்தையும் ஒரு வினாடியில் 55,000த்தில் ஒருபாக அளவிற்கும் சரியாக அறிந்து, அது எப்பொழுது நடக்கும் என்பதையும் அறிவார். பாருங்கள்? இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? (“ஆமென்”) அப்படியென்றால் எல்லாவற்றையும் அறிவார். ஆகவேதான் அவர் சர்வவல்லமை உள்ளவராக இருக்கிறார். எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், எல்லாவற்றையும் செய்கிறவராய் இருக்கிறார்.
187. இப்பொழுது கவனியுங்கள். தேவனால் முன்குறிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும்... இயேசு எப்பொழுது... வேதம் கூறுகிறது.
188. இயேசு கி.பி.30ல் அடிக்கப்பட்டார் என்பதை நாம் அறிவோம். அது சரியா? கி.பி.30ம் ஆண்டின் மத்தியிலே என்று நினைக்கிறேன்.
189. இப்பொழுது ஆனால் அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னால் அடிக்கப்பட்டார் என்று வேதம் கூறுகிறது, உங்களுடைய பெயர்கள்... ஆட்டுக்குட்டியின் புஸ்தகத்தின் போது... இந்த புஸ்தகத்தை மீட்டுக் கொள்ள ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டபோது... இங்கே ஒரு மகத்தான காரியம் இருக்கிறது. அது உற்சாகத்தை எழுப்பக்கூடும். கவனியுங்கள்! ஆட்டுக்குட்டியானவர். ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகம் உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே எழுதப்பட்டது என்று வேதம் கூறகிறது என்பதை நினைவு கொள்ளுங்கள். அந்த புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிருக்கும் ஒவ்வொருவரும், மீட்கப் படுவதற்காக உலகத் தோற்றத்திற்கு முன்பாக ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டபோது, உங்களுடைய பெயரும் அதில் எழுதப்பட்டது. பாருங்கள், நீங்கள் அதை இப்பொழுது புரிந்துக்கொண்டீர்களா?
190. பாருங்கள், ஒழுங்கில்லாமல் எதுவுமில்லை. கடிகாரம் சுற்றிக் கொண்டிருப்பதுபோல்- தேவனுடைய பெரிய கடிகாரம் வேலை செய்வதுபோல இது இயங்கிக்கொண்டிருக்கிறது. பாருங்கள்? உலகத் தோற்றத்திற்கு முன்பாக உங்களுடைய பெயர் அங்கு எழுதப்பட்டது - அந்த புஸ்தகத்தில் உள்ளவர்களை மீட்பதற்காக ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட் டபோது, இப்பொழுது, அவர் தாம் மீட்டவர்களை பெற்றுக் கொள்வதற்காக அவர் முன்வந்து, புஸ்தகத்தை எடுக்கிறார்.
இப்பொழுது நான் இன்னும் தொடர்ந்து போக விரும்பவில்லை; இன்றைக்கு இன்னொரு கேள்விக்கு விடையளிக்க முடியாமல் போய்விடும். எல்லாம் சரி…