191. இல்லை. வேதாகமத்தில் நரகத்திற்கு என்ன மொழிப் பெயர்த்திருக்கிறார்களோ, நான் அதை விசுவாசிக்கிறேன். இப்பொழுது இங்கே பண்டிதர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களை கனப்படுத்த விரும்புகிறேன். சகோதரன் ஐவர்சன் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார், சகோதரன் வேயில் மற்றும் உண்மையான வேத பண்டிதர்களாகிய சகோதரர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நரகம் தான் “பாதாளம்” என்று மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது. அது சரியா? இதுதான் பாதாளத்திற்குரிய கிரேக்க பதமாகும். ஆனால் அக்கினிக்கடல் என்பது வேறொன்றாகும். ஏனென்றால் வெளிப்படுத்தின விசேஷத்தில் நரகமும் மற்றெல்லாமும் அக்கினிக்கடலில் தள்ளப்பட்டன என்று பார்க்கிறோம். பாருங்கள்? எல்லாம் சரி, இப்பொழுது கவனிப்போம்.