192. இல்லை, ஐயா. இல்லை, ஐயா. சிஷ்டிக்கப்பட்டதொன்றும் நித்தியமானதல்ல, இல்லை, சிருஷ்டிக்கப்பட்டதெல்லாம்... ஆகவேதான் நித்திய நரகம் என்பது ஒன்று இருக்க முடியாது. நீங்கள் ஒரு நித்திய நரகத்தில் வேகப் போகிறீர்கள் என்று யாராகிலும் சொன்னால், எனக்கு அதற்குரிய வேதவாக்கியத்தைக் காட்டுங்கள். பாருங்கள்? அவ்விதமான காரியம் ஒன்றுமில்லை.
193. நரகமானது, பிசாசுக்கும் அவனது தூதர்களுக்கும், அந்திக் கிறிஸ்துவுக்கும், அவனது மக்களுக்கும் சிருஷ்டிக்கப்பட்டது. அதுதான் மாம்ச சரீரத்தில் தோன்றும் பிசாசு. அழிக்கப்படுவதற்கென்றே அது சிருஷ்டிக்கப்பட்டது.
194. முழு உலகத்திலும், எல்லா இடங்களிலும் ஒன்றே ஒன்றுதான் நித்தியமானதாக இருக்கிறது. அதுதான் தேவன். ஒரு அணுவோ, அல்லது எலக்ட்ரானோ, அல்லது காஸ்மிக் ஒளியோ (cosmic light), அல்லது மற்றெதுவோ உண்டாவதற்கு முன்னமே அவர் தேவனாக இருந்தார். அவர் சிருஷ்டி கர்த்தர்.
195. நீ நித்தியமாயிருப்பதற்கு ஒரே ஒரு வழி, நீ நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளுதலாகும். அதற்குத்தான் 'சோ' (Zoe) என்னும் கிரேக்க வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். 'சோ' - அது சரியில்லையா? சோ. சோ. கலியாண வாக்குப்படி உன்னுடைய தகப்பனார் உன்னுடைய தாயின் மூலம் தன்னுடைய ஜீவனை உனக்குள் அளித்திருப்பதுபோல தேவன் அந்த ஜீவனை உனக்களிக்கிறார். அவன் அவ்விதம் தன் ஜீவனை ஒரு குமாரனுக்காக அளிக்கும் போது மகிழ்ச்சியுறுகிறான் (joy of imparting)... (என்னைப் புரிந்துக் கொண்டீர்களா?). அவ்விதமாகவே தேவன் தம்முடைய ஜீவனை ஒரு குமாரனுக்கு அளிக்கும் போது மகிழ்ச்சியுறுகிறார். பாருங்கள்? அப்பொழுது நீ 'சோ' என்னும் தேவனுடைய சொந்த ஜீவனைப் பெற்று, அவருக்குள் ஒரு பாகமாக மாறிவிடுகிறாய். "நான் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்.”
196. "கடைசி நாட்களில் அவர்களை எழுப்புவேன்.” இந்த ஒரே விதமாகத்தான் நீங்கள் நித்திய ஜீவனை பெற்றிருக்கிறீர்கள்; அந்த நித்திய ஜீவன் வெளிப்படுவதற்கு, தான் எந்த சரீரத்திற்குள் வரவேண்டும் என்பதை அறிந்திருக்கிறது. அது வெறுமையாக அங்கு கிடக்க முடியாது. தேவனுடைய ஆவி, கிறிஸ்துவின் ஆவி, அந்த மகத்தான நாளிலே அந்தச் சரீரத்தின் மேல் அசைவாடினபோது, அது (சரீரம்தமிழாக்கியோன்) மறுபடியும் எழுந்திருக்கும் என்று அறிந்திருந்ததைப் போல, பரிசுத்தவான்களும் தங்கள் சரீரம் மறுபடியும் எழுந்திருக்கும் என்று அறிந்துள்ளார்கள்.
197. இயேசு மரித்தபோது, அவர் நரகத்திற்கு செல்லவேண்டியதாக இருந்ததால், அவர் அங்கு சென்றார் என்பதை இப்பொழுது நினைவு கூருங்கள். அவர்தான் பாவத்தின் தடையரண் (sin-barrier). "நோவாவின் காலத்தில் மனந்திரும்பாமலிருந்த ஆத்துமாக்களுக்கு பிரசங்கிப்பதற்காக அவர் நரகத்திற்குச் சென்றார்” அது சரிதானா? அவர் நரகத்திற்குச் சென்று, தேவனிடத்திலிருந்து தங்களை பிரித்துக் கொண்டிருந்த ஆத்துமாக்களுக்கு பிரசங்கித்தார். மரணம் என்பது பிரிவினையாகும். அவர்கள் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டிருந்தார்கள் - மீண்டும் திரும்ப போகமுடியாது. ஸ்திரீயின் வித்து என்று கூறப்பட்டவர் அவர் தான் என்று சாட்சி பகர இயேசு அங்குச் சென்றார்.
198. சர்ப்பத்தின் வித்து... சர்ப்பத்தின் வித்து என்ன செய்தது என்பதைக் கவனித்தீர்களா? சிவப்புக் குதிரை. அந்திக்கிறிஸ்து - பிரிவினையாகிய மரணத்தோடு முடிவடைகிறான். ஸ்திரீயின் வித்து-ஜீவனானது வெண்மையான குதிரையுடன் முடிவடைகிறது - இயேசு கிறிஸ்து. அது என்னவென்பதைப் புரிந்து கொண்டீர்களா? - ஒருவருக்கு விரோதமாக மற்றொருவர்-ஸ்திரீயின் வித்துக்கு விரோதமாக சர்ப்பத்தின் வித்து. இப்பொழுது அறிந்துக் கொண்டீர்களா? ஓ, இதைக் குறித்து இன்னும் சற்று சிந்தித்தால் அது நன்றாக இருக்குமல்லவா? ஆனால் இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.