199. ஆம், அது சரி. அதன் நிறைவேறுதல்தான். அது சுலபமானது. அது பாவமனுஷன் தான். இதே மனிதன் தான் மரணம் என்னும் மங்கின நிறமுடைய குதிரையின் மீது ஏறுகிறவரைக்கும் பல கட்டங்களில் குதிரையின் மீது ஏறியிருக்கிறவனாய் காணப்படுகிறான். கிறிஸ்துவோ நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல் என்பவைகளோடு வெள்ளைக் குதிரைக்கு வருகிறார். அவர்தான் அந்த ஜீவன். பாருங்கள்.