200. நல்லது, சற்று நேரத்திற்கு முன்பாக அதை விவரித்தோம் என்று நினைக்கிறேன். பாருங்கள்? அவர்கள் உபத்திரவத்திற்குள் பிரவேசிக்கிறார்கள். அவர்கள் உபத்திரவ காலத்தில் இரத்த சாட்சிகளாக மரிக்கிறார்கள். அவர்கள் கடைசியில், ஆயிரம் வருஷ அரசாட்சிக்குப் பின், தங்களுடைய நியாயத்தீர்ப்புக்காக வருகிறார்கள். பாருங்கள்? ஏனெனில் வேதாகமம் அவ்வாறு கூறுகின்றது. உயிருடன் இருப்பவர்களில் மீதியாக இருப்பவர்கள்... “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடிவடையும் வரைக்கும் உயிரடையவில்லை. அதற்குப் பிறகு நீதிமான்களும், அநீதியுள்ளவர்களும் வந்து கிறிஸ்துவினாலும், மணவாட்டியினாலும் நியாயம் விசாரிக்கப்படுவார்கள். அவர் பத்தாயிரம் மடங்கு பத்தாயிரமான தமது பரிசுத்தவான்களோடு பூமிக்கு வந்தார். அது சரிதானா? - அவருடைய மணவாட்டி.
201. நியாயசங்கம் உட்கார்ந்தது. புஸ்தகங்கள் திறக்கப்பட்டன... புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. ஜீவபுஸ்தமாகிய மற்றொரு புஸ்தகம் திறக்கப்பட்டது. அவர் அங்கு செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் பிரித்தெடுக்கிறார். அது சரிதானா? அதற்கும் மணவாட்டிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவள் அங்கு நியாயத் தீர்ப்பில் நின்று கொண்டிருக்கிறாள், அவளுடைய ராணி... ராணியும் ராஜாவுமாக ஒன்றாக இருக்கிறார்கள். “அவர் தம்முடைய பரிசுத்தவான்களோடு வந்தார்; பத்தாயிரம் மடங்கு பத்தாயிரமானவர்கள் அவருக்கு ஊழியம் செய்தார்கள்.” அவருடைய மனைவி. பிறகு நியாயசங்கம் உட்கார்ந்தது. அதற்குப் பிறகு செம்மறியாடுகள், வெள்ளாடுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன. அன்றிரவு நான் கொண்டு வந்த அந்த சிறு தியானத்தை நினைவு கூருங்கள், அப்போது உங்களுக்கு விளங்கும். மாட்டிடையனைப் பற்றிய தியானம். பாருங்கள்? அதோ, நீங்கள் புரிந்து கொண்டீர்கள்.
202. சபை, ஸ்தாபனத்திலிருக்கும் மக்கள், சுத்தமான கிறிஸ்தவர்கள், செய்தியைப் பெற்றுக் கொண்டவர்கள். அவர்கள் ஒருபோதும் அதைப் பார்க்க மாட்டார்கள். அது ஒருபோதும் அவர்களுக்குப் போதிக்கப்பட மாட்டாது. பலதிறத்தாரும் கலந்திருக்கும் கூட்டத்திலிருப்பவர்கள், இச்செய்தி பிரசங்கிக்கப் படுபவர்கள் அவர்கள் பேரானது ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந் தாலொழிய, மற்றபடி இச்செய்தியானது அவர்கள் தலையின் மேலாகக் கடந்து செல்லும். ஆம். ஆனால் அவர்கள் அருமையான மக்கள்.
203. அவர்கள் மறுபடியும் எழுப்பப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்குப் பிரசங்கித்த அதே கூட்டத்தாரால் அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள். “பரிசுத்தவான்கள் பூமியை நியாயந்தீர்ப்பார்களென்று அறியாதிருக்கிறீர்களா?” அவர்களுக்குப் பிரசங்கிக்கப்படும், பாருங்கள்? அதிலிருந்து (கலப்படமான கூட்டத்திலிருந்து, ஸ்தாபனங்களிலிருந்து - தமிழாக்கியோன்) "வெளியே வரும்படியாக செய்தியைக் குறித்து சாட்சி பகர்ந்த அதே மக்களால் பிரசங்கிக்கப்படுவார்கள். அது விளக்கப்பட்டுவிட்டதென்று நான் நினைக்கிறேன். என்னிடம் இங்கே அநேக கேள்விகளிருக்கின்றன.