204. இல்லை, இவர் அவர் அல்ல; பாருங்கள்? இருவரும் வெவ்வேறான மனிதர்கள். எலியாவைப் போன்ற தோற்றத்தில் வரும் எலிசா எலியாவல்ல. யோவான்ஸ்நானன் என்று அழைக்கப்பட்ட மனிதன் மீது வந்த எலியாவின் ஆவி எலியாவல்ல. லவோதிக்கேயா சபையின் கடைசிக் காலத்தில் தோன்றும் செய்தியாளனாகிய ஏழாம் தூதனாகிய மனிதன் உண்மையான எலியா அல்ல. அவர் தன்னுடைய ஜனங்களாகிய புறஜாதியாரிடத்தில் அனுப்பப்படும் ஒரு புறஜாதி மனிதனாயிருப்பார்.
205. எலியா... எலியாவின் ஆவி மக்களுக்குள் அங்கு வரும்பொழுது அவன் ஒரு யூதனாயிருப்பான். ஏனெனில் அவர்கள் (தீர்க்கதரிசிகள்தமிழாக்கியோன்) தங்கள் சொந்த ஜனத்தினிடத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். அதுதான் எனக்குக் கிடைத்த வெளிப்பாடு. ஏனென்றால் நானும்... டாமி ஆஸ்பர்ன் அவர்களும்; நாங்கள் அதைப்பற்றி அப்போது பேசியபொழுது (டாமியும் நானும்) நான் அதை ஒரு போதும் அறியவில்லை. நான் வியாதியஸ்தருக்காக மட்டும் ஜெபித்துக் கொண்டு இருந்தேன்.
206. நான் அங்கு வந்தபொழுது, ஃபோர்ட் வெயின் சுவிசேஷ கூடாரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, அயல் நிலங்களில் பணிபுரியும் ஒரு சுவிசேஷகி வந்திருந்தார்கள். அவர்களுடைய மார்பகங்கள் இவ்வளவு பெரிதாக இருந்தன.- புற்றுநோயால் அரிக்கப்பட்டு விட்டிருந்தது; அவர்கள் அந்தத் தெருவிலுள்ள நாங்கள் வசித்த வீட்டில் இருந்தார்கள். நான் அந்த அருமையான சகோதரிக்காக ஜெபித்தேன். அவர்கள் சுகமாக்கப்பட்டு ஊழியத்திற்குத் திரும்பினார்கள். அவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தபோது-அங்கு பணிபுரியும் கிறிஸ்தவ சுவிசேஷ குழுக்களைப் பற்றிய ஒரு புத்தகத்தை விட்டுச் சென்றிருந்தார்கள்.
207. நானும், “நல்லது, சுவிசேஷகர்கள் அருமையானவர்கள்” என்று எண்ணினேன். நான் சுவிசேஷகர்களைக் குறித்து ஒரு போதும் அதிகமாய் சிந்தித்ததில்லை. 'நல்லது, அந்த வெளியிடங்களிலே அது தேவனுடைய ஒரு காரியமாகும். அதுபோல இங்கு பென் தெருவில் எட்டாம் நம்பர் இடம் (Eighth and Penn Street) என்னுடைய ஸ்தானமாயிருக்கிறது என்று எண்ணினவனாய் என்னால் முடிந்தவரை சிறப்பாக ஊழியம் செய்து வந்தேன்.
208. ஆனால் ஒருநாள் என்னுடைய படிக்கும் அறையில் நான் உட்கார்ந்துகொண்டு நான் அந்தப் புத்தகத்தை எடுத்தேன். அதில் நீக்ரோ வகுப்பினரின் படம் ஒன்று இருந்தது. ஒரு வயது முதிர்ந்த தந்தை தலையில் நரைத்த முடியுடன் அதில் காட்சியளித்தார். அந்த படத்தின் கீழ் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது! "வெள்ளை மனிதனே, வெள்ளை மனிதனே, உன்னுடைய தந்தை எங்கேயிருந்தார்? பாருங்கள்? நான் இப்போது வயோதிபனும் சிந்தை மழுங்கினவனுமாயிருக்கிறேன். என்னால் இப்போது சரிவர புரிந்துக் கொள்ள முடியவில்லை. நான் வாலிபனாயிருந்தபோது இயேசுவை அறிந்திருப்பேனானால் நான் அவரை என் ஜனங்களிடத்திற்கு கொண்டு சென்றிருப்பேன்.”' ஆக, நான் அதைப் படித்தேன்.
209. "திரும்பவும் அதைப்படி, திரும்பவும் அதைப்படி” என்று ஏதோ ஒன்று சொல்லிக் கொண்டேயிருந்தது. நான் படித்துக் கொண்டிருந்தேன்... ஓ, பாருங்கள்! உங்களுக்கும் அந்த அனுபவம் வந்திருக்கும் - “படித்ததையே திரும்பவும் திரும்பவும் படிப்பது. அதில் ஏதோ ஒன்றிருக்கிறது.”
210. நான் அன்று க்ரீன் மில் என்னும் உயரமான இடத்தில், அந்தக் குகையை விட்டு வெளியே வந்தபோது, மக்கள் எப்படி அன்னிய பாஷை பேசியும், உண்மையான பரிசுத்த ஆவியைப் பெற்றும் ஆர்ப்பரித்தும் கூட அந்திக் கிறிஸ்துவாகயிருக்க முடியும் என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை-உண்மையான பரிசுத்த ஆவியைக் கொண்டு அன்னிய பாஷைகள் பேசி, பல பாஷைகளைப் பேசினாலும் கூட இன்னும் சாத்தானாகயிருக்கிறார்கள். ஆம், அது சரிதான்! நான் அதை உங்களுக்கு நிரூபித்துக் காட்ட முடியும். ஆம், நிச்சயமாக! அவர்கள் அதைச் செய்தபோது... கவனித்துப் பாருங்கள்.
211. ஆகவே அன்னிய பாஷைகள் பேசுவது பரிசுத்த ஆவியைப் பெற்றதற்கு அத்தாட்சியல்ல, அது பரிசுத்த ஆவியின் வரங்களில் ஒன்றாகும். பாருங்கள்? அவருடைய வரங்களில் ஒவ்வொன்றையும் பிசாசானவன் போலியாகச் செய்து காண்பிக்கக்கூடும். தெய்வீக சுக மளித்தல் மற்றும் ஒவ்வொரு வரத்தையும்.
“அந்நாளில் அநேகர் என்னை நோக்கி," கர்த்தாவே, பிசாசுகளைத் துரத்தினேன் அல்லவா; நான் செய்தேனல்லவா...” அது சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதாகும். "...உம்முடைய நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோமல்லவா, இந்த எல்லாக் காரியங்களையும் அக்கிரமச் செய்கைக்காரர்களே, நான் உங்களை அறியவும் இல்லை” என்று கூறுவார்.
212. "ஒரே மழையானது நீதிமான்கள் மேலும், அநீதியுள்ளவர்கள் மேலும் விழுவதாக" வேதாகமம் கூறுகிறது. கோதுமை நிலத்தில் வளர்ந்திருக்கும் களையும் அதே மழையைப் பெறுவதனால், அந்த ஒரே மழையினால் சந்தோஷத்தைப் பெற்று கூச்சலிடக் கூடும்; "ஆனால் அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிவீர்கள்!” அச்சிறு களையானது, கோதுமை பெருமளவிற்கு அதே மழையைப் பெற்று, நின்று குதூகலித்து, கூச்சலிடக்கூடும்.
213. அங்கேதான் புரிந்து கொள்கிறோம். ஆகவே அவர்கள் கூச்சலிடக்கூடும். அன்னிய பாஷைகளில் பேசக்கூடும். அவர்கள் விரும்பும் ஒவ்வொன்றையும் போலியாகச் செய்து காட்டக்கூடும், ஆனால் அந்த நாளிலே, "அக்கிரமச் செய்கைகாரர்களே” என்று அழைக்கப்படுவார்கள்.
214. நான் சற்று நேரத்திற்கு முன்பு சொன்னதுபோல, நான் சொல்வதற்கு செவிசாயுங்கள்; கூர்ந்து கவனியுங்கள்! உங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து வார்த்தையோடு உங்களையே சோதித்துப் பாருங்கள். நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள்.
215. குட்டையான முடியை உடைய பெண்களே, அதை வளர விடுங்கள். நீங்கள் அரைக்கால் சட்டை அணிந்திருப்பீர்களானால் அவைகளைக் களைந்து விடுங்கள். ஒரு பெண்மணியைப் போல நடவுங்கள். ஆண்களாகிய நீங்கள் இன்னமும் சிகரெட் புகைத்துக் கொண்டும், கேளிக்கைகளில் ஈடுபடுவீர்களானால், அதைக் நிறுத்துங்கள்! நீங்கள் அதைக் குறித்து எவ்வளவு பேசுகிறீர்கள் என்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை. நீங்கள் இன்னமும் அந்த சங்கங்களைக் பிடித்துக்கொண்டு, "இதுதான் அது” என்றும் அதுதான் இது” என்றும் கூறிக்கொண்டிருப்பீர்களானால் நீங்கள் நிறுத்திக் கொள்வது நல்லது. திரும்பிப் பார்த்து வார்த்தையோடு பரிசோதித்துப் பாருங்கள். நாம் கடந்து போகிறோம்...
216. குட்டையான முடி, இந்த காலத்திற்குரிய மற்ற எல்லாக் காரியங்களுக்கும் அப்பாற்பட்டு நாம் ஜீவிக்க வேண்டும். நாம் இப்போது வேறு செய்தோம்.” நான் (இயேசு) சொல்லுவேன், “என்னைவிட்டு அகன்று போங்கள், எதற்குள்ளாகவோ வந்து விட்டபடியால் தேவன் உலகத் தோற்றத்திற்கு முன்பாக அந்தப் புஸ்தகத்தில் மறைத்து வைத்திருந்த இரகசியங்களையெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தச் சிறிய காரியங்களில் கீழ்ப்படிகிறவர்களே, இந்த மற்ற காரியங்களையும் பிடித்துக் கொள்வார்கள். நீங்கள் அப்படிச் செய்யவில்லையென்றால், கிழக்குக்கும் மேற்குக்கும் இருக்கிற தூரமாக அது உங்கள் தலையின் மேலாகக் கடந்து போகும். அது அப்படியே...
217. கிதியோன் தன் மனிதர்களைப் பிரித்தது போல - ஆயிரமாயிரமானவர் அங்கே இருந்தனர். "அது மிகவும் அதிகம். அவர்களை மறுபடியும் பிரித்தெடு” என்று தேவன் கூறினார்; அவர்களுக்கு மற்றொரு சோதனையைத்தந்து, அவர்களை மறுபடியுமாக பிரித்தெடுத்தார் - அவர்களை மறுபடியுமாக பிரித்தெடுத்து, கடைசியாக அவனிடம் கையளவே உள்ள ஆட்கள் இருக்கும் வரை பிரித்தெடுத்தார். "இந்த வேலையை செய்ய நான் விரும்பும் கூட்டம் அது தான்” என்றார். உண்மையில் நடந்தது அதுதான்.
218. பெந்தெகொஸ்தே ஸ்திரீகள், முன்னும் பின்னுமாக போவது, அங்கே உட்கார்வது, கேட்பது, வார்த்தையின்படி தவறாகும். அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை ஐயா! ஒவ்வொரு வருடம் நான் கடந்து செல்லும்போதும், நான் இதைக்குறித்து போதிக்க ஆரம்பித்தபோது இருந்ததைக் காட்டிலும் அதிகமான பெண்கள் தங்கள் முடிகளை குட்டையாக வெட்டிக் கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.
219. "அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்... நீங்கள்...” என்கிறார்கள். யாரோ ஒருவர் சொன்னார், “நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, மக்கள் உங்களை ஒரு தீர்க்கதரிசியாக கருதுகின்றனர்” என்று. நான் ஒரு தீர்க்கதரிசி என்று நான் கூறுகிறதில்லை. நான் அவ்விதம் கூறுவதை நீங்கள் யாரும் கேட்டிருக்கமாட்டீர்கள். அவ்விதம் நீங்கள் கேட்டிருப்பீர்களானால், அவ்விதம் கருதுவீர்களானால்... “நீங்கள் ஏன் பரிசுத்த ஆவியை எவ்விதம் பெற்றுக்கொள்வது என்று மக்களுக்கு போதிக்கக் கூடாது? இதை எவ்விதம் பெறுவது, பரிசுத்த ஆவியின் வரங்களை எவ்விதம் பெறுவது போன்ற காரியங்களைப் போதித்து சபைக்கு ஏன் உதவக்கூடாது?” என்று கூறினார்கள். அவர்கள் தங்கள் ஏ,பி,சி (A B C)களை கற்றுக் கொள்ளக்கூட தங்கள் செவியை சாய்க்காதிருக்கும்போது, நான் எவ்விதம் அவர்களுக்கு அல்ஜீப்ரா (Algebra) கற்றுத்தர முடியும்? அது சரிதான். நீங்கள் இந்தச் சிறிய காரியங்களை சரி செய்யுங்கள். இங்கே கீழே இறங்கி வந்து, சுத்தி செய்து கொண்டு, சரியாக துவங்குங்கள். ஆமென். அது சரி.
220. நான் எதைக்குறித்து பேசிக் கொண்டிருந்தேன்? நான் பேசிக் கொண்டிருந்த பொருளைவிட்டு விலகிச் செல்ல நினைக்கவில்லை; என்னை மன்னியுங்கள், பார்த்தீர்களா? நல்லது. "எங்களில் சிலர் குழப்பமடைந் திருக்கிறார்கள். எலியா ஒரே ஆள்தானா..?” என்ற கேள்விதான். ஆமாம், ஊம், அது உண்மை. இல்லை. புறஜாதிகளுக்கு வரும் இந்த எலியா அந்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்ட புறஜாதி மனிதனாயிருப்பார். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் குழப்பத்திலிருந்து தம் பிள்ளைகளை வெளியே கொண்டுவர தேவன் அதே ஆவியை உபயோகிக்கிறார். அது அவருடைய நோக்கத்தை நன்றாக நிறைவேற்றுகிறது. ஆகவே அந்த ஆவி மறுபடியும் கீழிறங்கி வந்திருக்கிறது, ஏனென்றால், பாருங்கள்...
அதிக மெருகேற்றப்பெற்ற, கல்வியறிவு பெற்றவர்களை அவர் உபயோகிக்கக் கூடுமானால்-அத்தகைய இனத்தைச் சேர்ந்தவர்தான் அதைப்பிடித்துக்கொள்வர்.
221. தன்னுடைய அச்சரங்களை (A B C)க்கூட சரியாக அறிந்திராத, தன்னுடைய வார்த்தைகளை சரியாக உச்சரிக்கத்தெரியாத, அப்படிப்பட்ட ஒரு மனிதனை அவர் கொண்டுவருகிறார். வனாந்தரங்களிலிருந்து யாராவது ஒருவரை எங்காவது கொண்டுவந்து எளிய சிந்தை உள்ள மக்களிடம் அனுப்பி அவர்களுக்குப் புரிய வைத்து, அவர்களை எடுத்துக் கொள்கிறார். (சகோதரர் பிரன்ஹாம் தன் விரலை ஒருமுறை சொடுக்குகிறார் - ஆசி) அவ்விதமாக அவர்கள் அதைப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் அதைப் பெற்றுக் கொள்கிறார்கள், பாருங்கள். அது மெருகேற்றப்பட்டதாக வருமானால்...
222. பவுல் கூறியதுபோல, "நான் கல்வியின் மெருகோடு உங்களிடம் வரவில்லை; நான் உயிர்த்தெழுதலின் வல்லமையில் உங்களிடம் வருகிறேன்” என்றார். அவருடைய கல்வியை அவரிடமிருந்து எடுத்துப் போட, அரேபியாவில் தேவன் மூன்றரை வருடம் எடுத்துக் கொண்டார். மோசேயிடமிருந்து அதை எடுத்துப்போட 40 வருடம் எடுத்துக் கொண்டார். பாருங்கள்? ஆகவே அதுதான் விஷயம்.
கல்வியறிவு இல்லாமையை நான் ஆதரிக்கவில்லை. கல்வியறிவு தேவையில்லை என்பதை உங்களுக்கு கூற முயற்சிக்கிறேன்.
223. இந்த உலகத்தின் ஞானம் மாறுபட்டதாயிருக்கிறது. சுவிசேஷம் பரவுவதற்கு கல்வியானது மிகப்பெரிய தடையாக இருந்திருக்கிறது. கல்வி அறிவு இல்லாமலிருந்தால், இந்தப் பெரிய வேத பாடசாலைகள் முதலியவைகள் இல்லாமலிருப்போம். மக்கள் எளிய மனதுள்ளவர்களாக தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுப்பார்கள்; ஆனால் அவர்களோ அவ்வளவாக மெருகேற்றப்பட்டவர்களாக குழப்பப்பட்டு, அங்குள்ள எல்லாவித ஸ்தாபனங்களோடும் இறுக இணைக்கப்பட்டவர்களாய் அங்கேயே தங்கிவிடப் போகிறார்கள். அவ்வளவுதான், அவர்கள் அந்த ஆவியை பெற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் எப்போதாவது ஒரு நல்ல ஸ்திரீயை மிகவும் கீழ்த்தரமான மனிதனுக்கு மணம் முடித்திருக்கிறீர்களா? ஒன்று அந்த கீழ்த்தரமான மனிதன் அந்த ஸ்திரீயைப்போல நல்லவனாவான். அல்லது, அந்த ஸ்திரீ அவனைப்போல் கீழ்த்தரமானவளாவாள். பாருங்கள்? அது சரிதான்.
224. "அவர்களை விட்டு வெளியே வாருங்கள். நான் எடுத்துக் கொள்ளப்படுதலை நிகழ்த்த ஆயத்தமாகிறேன்” என்று அவர் சொன்னதற்கு அதுதான் காரணம். உங்களை இங்கிருந்து கொண்டு போய் விடத்தக்கதான ஒரு வகையான விசுவாசம் உங்களுக்கிருக்க வேண்டும்.