131. நல்லது, அது இவ்விதமாக இருந்தாலொழிய, சகோதரியே மற்றபடி எனக்கு தெரியாது: நீங்கள் உங்கள் சபையில் இராப்போஜனம் எடுக்கையில் ஒரு தரிசனத்தில் இயேசு கிறிஸ்து தோன்றுவதை நீங்கள் கண்டிருந்தால், நீங்கள் அவரை ஒரு அடையாளமாக கைக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைத்தான் அவர் உங்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தார். இராப்போஜனம் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய சரீரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறதாக இருக்கிறது; நீங்கள் அவரை ஒரு அடையாளமாக உங்கள் சரீரத்திற்குள் எடுத்துக் கொள்கிறீர்கள். ஆகவே சுத்தமாக ஜீவியுங்கள், தூய்மையாக ஜீவியுங்கள்.
132. கவனியுங்கள். நீங்கள் இராப்போஜனம் எடுக்கும் போது (இன்னும் சிறிது நேரத்தில் அது வாசிக்கப்பட நீங்கள் கேட்பீர்கள்) நீங்கள் அபாத்திரமாய்ப் புசித்தால், இயேசு கிறிஸ்துவினுடைய சரீரத்திற்கும், இரத்தத்திற்கும் நீங்கள் குற்றமுள்ளவர்களாக இருப்பீர்கள். ஒரு மனிதன் அந்த இராப்போஜனத்தை எடுத்து தேவனுக்கு முன்பாக சரியாக இருப்பானாக, இல்லை இராப்போஜனத்தை எடுக்கிறவன் தேவனுக்கு முன்பாக சரியாக ஜீவிப்பானாக. அதை வீணாக தகுதியாயிராமல் எடுக்காதே. அது…
133. கவனியுங்கள், கடைசி நாட்களில் தேவனுடைய மேஜைகளெல்லாம் முழுவதுமாக வாந்தியினால் நிறைந்திருக்கும் என்று வேதாகமம் முன்னுரைத்திருக்கிறது. அதை புரிந்து கொள்ள ஒருவரும் இல்லை, முடியாதிருக்கிறது. அது சரியா? கவனியுங்கள். சிறிது காலத்திற்கு முன்னர் ஒரு பெரிய கூடாரத்திற்குள் நான் சென்றேன், அதன் பெயரை நான் கூறமாட்டேன்; அதை நீங்கள் எல்லாரும் நன்றாக அறிவீர்கள். அவர்கள் இராப்போஜனத்திற்கு எதை வைத்திருந்தனர் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் ரொட்டியை (bread) எடுத்தார்கள், அதை அவர்கள் துண்டு துண்டாக பாகம் போட்டனர். பிரசங்கி கூறின அந்த மூப்பர்கள், ஏழுபேரும் குடிகாரர்களாக இருந்தனர். அது சரி. அவர்களில் ஒவ்வொருவரும், அந்த முழு குழுவும்... அவர்கள் கட்டிடத்திற்குள் செல்கையில் மக்களிடம் பேசிக் கொண்டே செல்வதை நீங்கள் காணலாம். சபை கலைந்து சென்ற போது, முடிவில், ஞாயிறு பள்ளிக்கும் சபைக்கும் இடையே, ஒவ்வொருவரும், மேய்ப்பர் மற்றும் எல்லாரும் வெளியே சென்று, அந்த புறத்தில் சிகரெட்டுகள் புகைத்துவிட்டு பிறகு உள்ளே வந்து கர்த்தருடைய பந்தியை ஆசரித்தனர். ஆகவே அவன் அதற்காக தேவனுக்கு குற்றமுள்ளவனாயிருக்கிறான் என்று தேவன் கூறினார், “இதினிமித்தம் உங்களில் அநேகர் பலவீனரும் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.” அது சரி.
134. “போஜன பீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது, யாருக்கு நான் உபதேசத்தை போதிப்பேன்” என்றார். அவர், “கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும் இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமும்” என்கிறார்கள். நலமானதை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே நான் பேசுவேன். இங்கே இருக்கும் என்று நான் கூறின இளைப்பாறுதல் இதுவே. ஆனால் அவர்களோ இவைகள் எல்லாவற்றிலும், தங்கள் தலைகளை அசைத்து, “நாங்கள் அதற்கு செவிகொடுக்க மாட்டோம்,” என்று கடந்து சென்று விட்டனர். நண்பர்களே, நாம் எங்குள்ளோம், ஓ, இரக்கம்! விழித்திருங்கள்.
135. ஆம், சகோதரியே உங்கள் தரிசனம்... நீங்கள் தேவனுக்கு முன்பாக நல்ல, சுத்தமான, பரிசுத்தமான ஸ்திரீயாக அங்கே நீங்கள் நின்று கொண்டிருந்தீர்களென்றால், இயேசு, தாமே அந்த இராப்போஜனத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும், நீங்கள் அங்கே அவரை ஒரு அடையாளமாக எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் எடுக்கும் முன்பு அப்படியில்லையெனில், நீங்கள் அதை திரும்பவுமாக தேவனுக்கு முன்பாக உங்களை சரி செய்து கொள்ள வேண்டுமென்று ஒரு எச்சரிப்பாகவும் உங்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தார்.