225. இயேசுகிறிஸ்து பூமியின் மீது யூதர்களுக்கு பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, உடன்படிக்கையில் பாதி வாரம் உறுதிப்படுத்தப்பட்டது. அவர் புறஜாதி மக்களிடம் செல்லவே இல்லை. அவர் தம்முடைய சீஷர்களுக்கு, "புறஜாதியாரிடத்திற்கு செல்ல வேண்டாம்” என்று கூறினார்; அது யூதர்களுக்கு மாத்திரமே. பாருங்கள்? அவர் மூன்றரை ஆண்டுகள் பிரசங்கித்தார். அதாவது எழுபது வாரங்களில் பாதி; அவர் செய்வார் என்று தானியேல் கூறினதுபோல்.
226. அவர் யூதர்களுக்கு உறுதியாக உறுதிப்படுத்தப்பட்டார் என்பதை நினைவு கூருங்கள். இந்த புறஜாதியாரின் காலத்தை இங்கு நுழைக்க அவர்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டிருந்தது. அந்த முழு திட்டத்தையும் உங்களால் காணமுடிய வில்லையா? கவனியுங்கள். அவர் தம்மை ஒரு தீர்க்கதரிசியாக நிரூபித்தார், தீர்க்கதரிசி என்ன செய்வாரோ அதை அவர் செய்தார், தீர்க்கதரிசிகளின் அடையாளங்களைக் காண்பித்தார். “ஒருவன் தன்னை ஒரு ஞானதிருஷ்டிக்காரன் என்றோ அல்லது ஒரு தீர்க்கதரிசி என்றோ சொல்லிக்கொள்வான் என்றால், அவன் சொல்லுவதைக் கவனித்துப் பாருங்கள், அவன் கூறியவைகள் நிறைவேறும் போது, அவன் கூறியது தொடர்ந்து நடந்து கொண்டே வரும் என்றால்...” என்று உங்கள் சொந்த வேத வாக்கியமே கூறுகின்றது.
227. "தட்டுங்கள். அப்பொழுது திறக்கப்படும், தேடுங்கள்... கண்டடைவீர்கள், கேளுங்கள். கொடுக்கப்படும்.” என்று வேதம் கூறுவதை நீங்கள் காண்பீர்களானால்... "தட்டுங்கள்” என்று சொல்லும்போது, தொடர்ச்சியாக தட்டுங்கள் என்பதைக் கவனியுங்கள். (இதை உதாரணமாக காட்டுவதற்கு, சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தின் மீது இருபத்து மூன்றுமுறை தட்டுகிறார் -ஆசி). அங்கே உறுதியாய் இருங்கள். அந்த அநீதியுள்ள நியாயாதிபதி அந்த ஸ்திரீக்கு பதிலளிக்காமல் இருந்ததுபோல, அவள் தொடர்ந்து தட்டிக்கொண்டே இருந்தாள். "நான் உன் பக்கமாக இருக்கிறேன்” என்று கூறிக்கொண்டு அவன் கதவை தட்டிக்கொண்டே இருந்தாலும் (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுவதை நிறுத்துகிறார் - ஆசி) ஒரு நீதிபதி பதிலுரைக்க மாட்டான். “கர்த்தாவே, நான் இதை பெறவிரும்புகிறேன். ஆமென்.” என்று அவரை தேடி கூறுவீர்களென்றால், அது மாத்திரம் போதாது, நீங்கள் அதை பெறும் வரைக்கும் அங்கேயே உறுதியாய் தரித்து நில்லுங்கள். அது வரும் என்று நீங்கள் அறிவீர்கள். அவர் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அதை பற்றிக்கொண்டு அங்கேயே உறுதியாக நில்லுங்கள். பாருங்கள்?
இப்பொழுது, இப்பொழுது, சபையானது எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகுள்ள உபத்திரவ காலம்தான் எழுபதாவது வாரத்தின் கடைசிப் பாகமாகும். இங்கே மூன்றரை ஆண்டுகள் மறுபடியும் தீர்க்கதரிசிகளால் உறுதிப்படுத்தப்பட கொடுக்கப்படும் புரிந்துக்கொண்டீர்களா? மோசேயும், எலியாவும் வெளிப்படுத்தல் 11. இப்பொழுது, இது என்ன என்பதை நாம் பார்க்கட்டும்.