228. ஏழாயிரம் என்று சொல்ல நினைத்தேன். அதற்காக என்னை மன்னியுங்கள், பாருங்கள். அது ஒரு பேசும் தோரணையாயிருந்தது.
நான் சற்று நேரத்திற்கு முன்பு சொன்னதுபோல... நான் இங்கு நின்றதைக் கவனித்தீர்களா? "ஆட்டுக்குட் டியானவரைக் கண்டதற்கு அவர்கள் சாட்சி கொடுக்கிறார்கள்...” என்று கூறினேன். பார்த்தீர்களா? பாருங்கள்? ஆட்டுக்குட்டியானவர் பூமியில் இருந்தார் - பாருங்கள்? "தேவனுடைய ஆவியானவர் ஆட்டுக்குட் டியானவர் மீது வந்ததைக் கண்டதற்கு சாட்சி கொடுக்கிறார்கள்.”
229. இப்போது, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் பார்த்தீர்களா? அது சரியான கிரேக்க பாஷையின் முறைப்படி எழுதப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் கவனிப்பீர்களானால், அது இவ்விதமாக இருக்கும்... இப்போது வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள்... பரிசுத்த யாக்கோபின் மொழி பெயர்ப்பில் “நான் - நான் – நான் - வாசம் பண்ணபிரியமாயிருக்கும் என்னுடைய நேசகுமாரன் இவர்” என்பதாக வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில், நாம் இன்று சொல்வதுபோல சொல்வோமென்றால்; “நான் உள்ளே வாசம் பண்ண பிரியமாயிருக்கும் என்னுடைய நேசக்குமாரன் இவர்” என்று கூறுவோம் - அதைத் திருப்பி விடுவோம், பாருங்கள். “நான் வாசம் பண்ண பிரியமாயிருக்கும் என்னுடைய நேசகுமாரன் இவர்” பாருங்கள்? இப்போது, இன்றைக்கு நாம்: "நான் உள்ளே வாசம்பண்ண பிரியமாயிருக்கும் என்னுடைய நேசகுமாரன் இவர்” என்று கூறுவோம்-அதே வார்த்தை வித்தியாசமாய் பொருத்தப்பட்டிருக்கிறது. பாருங்கள்?
230. இப்போது, ஆம், நான் கருதியது... தயவாக என்னை மன்னியுங்கள். சகோதரர்களே, தூர இடங்களில் இந்த ஒலி நாடாவைக் கேட்கிறவர்களே, நண்பர்களே, கேளுங்கள்: நான் அதை அவ்விதம் சொல்ல நினைக்கவில்லை. நான் சுவிசேஷத்தின் ஒரு ஊழியக்காரன்; அதை எத்தனை முறை பிரசங்கித்திருக்கிறேனோ, அத்தனை முறையும் அது ஏழாயிரம் என்பதை அறிந்திருந்தேன். நான் எழுநூறு என்று சொல்ல நேர்ந்தது. எழுநூறு என்று நான் நினைக்கவில்லை, நான் கருதினது... நான் அதை வேதத்திலிருந்து படிக்கவில்லை. நான் பேசிக்கொண்டிருக்கும்போது என் மனதில் அவ்வண்ணம் வந்தது. ஏழாயிரம் என்பதற்குப் பதிலாக எழு நூறு என்று கூறிவிட்டேன். அத்தகைய தவறுகளை நான் எப்போதும் செய்கிறேன். நான் நிச்சயமாக ஏதும் அறியாதவன், ஆகவே நீங்கள் என்னை மன்னித்துவிடுங்கள். பாருங்கள்? அப்படிச் செய்ய நான் நினைக்கவில்லை.