231. ஆமாம், ஐயா! பாருங்கள்? இப்பொழுது இங்கே கவனியுங்கள், நான் இதை ஆரம்பிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அதன் மீது நான் ஒரு பிரசங்கமே செய்யக்கூடும். ஆனால் அதைச் செய்யமாட்டேன், ஆனால் உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். தேவன், ஆதாமுக்கு அவனுடைய மணவாட்டியை அவனுடைய விலாவிலிருந்து கொடுத்த போது, அவன், "இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்” என்றான். அது சரிதானே?
232. தேவன், கிறிஸ்துவுக்கு அவருடைய மணவாட்டியை கொடுத்த போது, ஆவியானவர் மணவாட்டியாகிய மாம்சத்தை தந்தார். அவருடைய இருதயத்திற்கு கீழாக அவர் குத்தப்பட்டார், தண்ணீரும், இரத்தமும், ஆவியும் புறப்பட்டு வந்தன; அதுதான் "அவருடைய மாம்சத்தில் மாம்சமும், அவருடைய எலும்பில் எலும்புமாக” உருவாக்கப்பட்டது. மணவாட்டிதாமே, கிறிஸ்துவின் எலும்பும் மாம்சமாகவும் இருக்கிறோம் நிச்சயமாக. அவர்கள் அவ்விதமாகத்தான் இருக்கிறார்கள். அதுதான் அவரது மணவாட்டி.