267. இல்லை, வெளிப்படுத்தல் 6:5,9 வசனங்கள் இல்லை. நீங்கள் கவனிப்பீர்களானால், இவர்கள் பரிசுத்தவான்களல்ல. அவர்கள்... அவர் இன்னமும் தமது உரிமையைச் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. பாருங்கள்? இவர்கள் பரிசுத்தவான்கள் அல்ல. கவனித்தீர்களா, அவர்கள். மூப்பர்களும் ஜீவன்களும், அவர்கள் பாடுகின்றார்கள்.
268. அதை நாம் படிப்போம். அப்பொழுது அந்த நபர்... அதன் பின்பு நான் முயற்சி செய்வேன்... இன்னுமாக அரை டஜன் கேள்விகள் உள்ளன. அதை சில நிமிடங்களில் முடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். பார்க்கலாம். வெளிப்படுத்தல் 5:9. அதைச் சற்று படிக்கலாம்... இந்த மனிதர் உத்தமமாக இதைக் கேட்டிருக்கிறார். அதை அவர் அறிய ஆவலுள்ளவராய் இருக்கிறார். கவனியுங்கள்.
"அந்த புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, (எடுத்த பொழுது) அந்த நான்கு ஜீவன்களும் இருபத்து நான்கு மூப்பர்கள் தங்கள் சுர மண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து : தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் (எடுக்கவும் - take) அதின் முத்திரைகளை உடைக்கவும் (பாருங்கள்) பாத்திரராயிருக்கிறீர்;... என்று புதிய பாட்டைப் பாடினார்கள். (பாருங்கள், பாருங்கள்)
தேவரீர் எங்களை மீட்டுக்கொண்டு, எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்”
269. அது பரலோகத்திலுள்ள குழு-- மீட்கப்பட்டவர்கள் அல்ல சரி. இப்பொழுது...
சகோதரன் பிரன்ஹாமே. எல்லா... சற்று பொறுங்கள்- (சகோதரன் பிரன்ஹாம் சிறிது நேரம் நிறுத்துகிறார் - ஆசி) நான் நினைக்கிறேன்... என்னை மன்னியுங்கள்.
சகோதரன் பிரன்ஹாமே, தேவபக்தியுள்ள அனைவரும் (ஆம்) தேவபக்தியுள்ள அனைவரும் எடுத்துக்கொள்ளப்படுதலில் சென்றுவிட்டால், எலியாவும் மோசேயும் எங்கிருந்து வருவார்கள்?
270. ஏதோ தவறுள்ளது. ஏதோ தவறுள்ளது. அவ்வளவுதான் அதற்குள்ளது. ஏதோ ஒன்று நிகழந்துவிட்டது. பாருங்கள்? எங்கேயோ தவறு நேர்ந்திருக்கிறது. எல்லோரும் நல்லுணர்வுடன் இருக்கின்றீர்களா? (சபையார் "ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி) வியாதி வேறொன்றும் இல்லையே?
(சபையிலுள்ள ஒருவர் வெளிப்படுத்தல் 5:9ஐ மறுபடியும் படிக்கும்படி வேண்டுகிறார்) வெளிப்படுத்தல்... எந்த பாகம், சகோதரனே? ('5") 5. ('5') ஓ, அந்தக் கேள்வி! ஓ, விடையளிக்கப்பட்ட அந்த கேள்வி. இப்பொழுது அதைப் பார்க்கலாம். “நீர்...” அந்த சரியான இடம்.
அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, (எடுத்த பொழுது-taken) அந்த நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய்விழுந்து: தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் (எடுக்கவும்-take) அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீ அடிக்கப்பட்டு...
இங்குள்ளது! இங்குள்ளது! நான் தவறாகக் கூறிவிட்டேன். பாருங்கள்
சகல கோத்திரங்களிலும்... எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு... என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.”
271. அது சரி. அதைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஓ, பரிசுத்த ஆவியின் பிரசன்னம் மாத்திரம் இங்கில்லாதிருந்தால் என்ன நேர்ந்திருக்கும்? அவர் அனுமதிக்கவில்லை... பாருங்கள், அந்த வாக்கியத்தின் முதல் பாகத்தை மாத்திரமே நான் படித்தேன். பாருங்கள், இங்கு ஒன்று எழுதப்பட்டிருந்தது. கடிகாரத்தைப் பார்த்துவிட்டு... அதை துரித மாக முடிக்க எண்ணினேன், பரிசுத்த ஆவியானவர் என்னை அங்கு நிறுத்துவதைக் கண்டீர்களா? மகிமை! பாருங்கள். அதன் மற்ற பாகத்தை நான் படிக்கவில்லை. பாருங்கள். நான் இங்கு வைத்திருக்கிறேன். பாருங்கள். “அவர்கள் புதிய பாட்டைப் பாடினார்கள்” என்று படித்து விட்டு நிறுத்திவிட்டேன். பாருங்கள். ஆனால் இங்கு பாருங்கள், "ஏனெனில்... சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை மீட்டுக்கொண்டு”. நிச்சயமாக. அவர்தாம் அது... என்னே, ஓ! என்னே! ஓ, என்னே! ஓ, என்னே! பாருங்கள். வேறொரு கேள்வியும் இங்கு உள்ளது.