272. இப்பொழுது இதைப் பார்க்கலாம். வெளிப்படுத்தல் 6... ஜனங்களே, நான் துரிதமாகச் செல்லமுடியாது. அவ்வளவுதான்... பாருங்கள், ஏனெனில் நான் தவறாகப் பதில் கூற நேரிடும். இப்பொழுது அப்படி நான் செய்ய அவர் விரும்பவில்லை. அது உண்மை. எனவே எனக்கு உதவி செய்யும். அது உண்மையென்று தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் அறிவார். பாருங்கள் நான் ஏதோ... ஒன்று... நான் கடிகாரத்தைப் பார்த்தேன். 11-30 ஆகியிருந்தது. “நான் துரிதமாகச் செல்லாவிட்டால், வியாதியஸ்தர்களுக்காக ஜெபம் செய்ய முடியாது” என்று எண்ணினேன். அதை நான் பெற்றுக்கொள்ள முயல்கிறேன். ஏனென்றால் நான்... என் சிந்தை... என்னால் முடியவில்லை.
273. நீங்கள் யோசித்துப் பாருங்கள், இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்பொழுது நான் ஒரு மனிதன் பாருங்கள், அங்கு நான் ஏழு நாட்கள் இருந்திருக்கிறேன். இன்று மத்தியமும் எனக்கு வேறேயுள்ளது. நான் தேவனிடத்தில் அறிந்துகொள்ளவேண்டும்.
274. நான் அந்த தவறைச் செய்யக் கூடாது என்று அவர் தீர்மானம் செய்திருந்தப்படியால், அந்த வாக்கியத்தில் எஞ்சியுள்ள பாகத்தை நான் மறுபடியும் படிக்கக் கட்டளையிட்டார். என் மீது ஏதோ ஒன்று உருண்டு, “திரும்பிச் செல்; திரும்பிச் செல்!” என்று கூறினது.
நான், "எதற்குத் திரும்பிச் செல்ல வேண்டும்? இப்பொழுது நிறுத்தி விட்டு, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க வேண்டுமா? இது என்ன? நான் என்ன செய்து விட்டேன்?” என்று நினைத்துக் கொண்டன்.
நான் அந்த வசனத்தை எடுக்கவேண்டும் என்று நினைத்த அதே சமயத்தில் யாரோ ஒருவர், “அந்த வசனத்தை மறுபடியும் படியுங்கள்” என்றார். அதை நான் படித்தபோது, அந்த கேள்வியின் கடைசி பாகத்தின் விடை காணப்பட்டது. பாருங்கள், "வெளிப்படுத்தல் 6”…
275. பாருங்கள், அதை நான் முதலில் படித்தபோது, அது அவ்விதம் தோன்றவில்லை “அவர்கள் புதிய பாட்டைப் பாடினார்கள்”
ஆனால் அதற்குக் கீழுள்ளது என்ன? - அதற்கு அடுத்து வருவது, “எங்களை மீட்டுக் கொண்டீர்”. நிச்சயமாக அது மணவாட்டி - எடுத்துக் கொள்ளப்பட்ட பரிசுத்தவான்கள். "உங்களால்". இங்கு... நிச்சயமாக ஆட்டுக்குட்டியானவர் புஸ்தகத்தை கையில் வைத்திருந்தார். அவர் அப்பொழுது மத்தியஸ்த கிருபையின் சிங்காசனத்தை விட்டு வந்து விட்டார். பாருங்கள்?. பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கவனித்து வருகிறார் என்பதைப் பார்த்தீர்களா? அதையேதான் நான் அன்றிரவும் கூறினேன்.
276. அவர் என்னுடன் அறையில் பேசி முடித்தவுடன், நான் இங்கு வந்து உங்களிடம், “ஆட்டுக்குட்டியானவர் அந்த இடத்தை விட்டு புறப்பட்டு வந்தபோது” ஓ, என்னே! என்று எல்லாவற்றையும் பிரசங்கித்தேன். அதையே ஒரு பொருளாகக் கொண்டு பேசலாம் என்று நம்புகிறேன். பாருங்கள், "ஆட்டுக்குட்டியானவர் தமது சிங்காசனத்தை விட்டு புறப்பட்டு வந்து விட்டார்...” அந்த ஒளி, கிறிஸ்து, அவர் அங்கு பிரசன்னமானபோது, நான் எழுந்து நின்றேன். அவர் பிரசன்னமான போது என்னிடம் அதைக் கூறினார். மத்தியஸ்தராயிருந்த ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டவுடன், இங்கு கீழே வருகிறார், சபைக்கு மீட்பின் நாள் முடிவடைகின்றது.
277. திறக்கப்படும் அடுத்து மீட்பு யூதர்களுக்கு, 1,44,000 பேர்களுக்கு. அது சரியா? ஏனெனில் அவர் மரத்தை வெட்டப் போவதாக வாக்களித்துள்ளார். உங்களுக்கு தெரியும்.
278. இப்பொழுது இங்கு அவர் ஆட்டுக்குட்டியானவர்- புறப்பட்டு வருகிறார். பின்பு மீட்பின் நாள் முடிவடைகின்றது. மீட்கப்பட வேண்டியவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்ட புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டுள்ளனர். அவர் இங்கு புஸ்தகத்தைத் திறக்கிறார். சரி!
279. ஓ, நன்றி கர்த்தாவே, பாருங்கள்? ஒன்றைத் துரிதமாக முடிக்க முயன்ற உம் நடுக்கமுள்ள ஊழியக்காரனை மன்னிப்பீராக!
இப்பொழுது, வெளிப்படுத்தல் 6:11ல் அங்கிகள் கொடுப்பட்டவர்களுடன் ஒப்பிடமுடியுமா?
280. அதைப் பார்க்கலாம் (6:11) சரி, எதைக் குறிப்பிடுகிறார்? அவர் வெள்ளை அங்கிகள்... ஆம், பீடத்தின் கீழுள்ள உயிர்த்தியாகம் செய்தவர்கள்? காலத்திற்கிடையேயுள்ள யூதர்கள், "அவர்களுக்கு வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டன.”
வெளிப்படுத்தல் 7:11ல் கூறப்பட்டுள்ள, தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்தவர்களுடன்...
281. இல்லை, அவர்கள் வித்தியாசமானவர்கள், நிச்சயமாக, ஏனெனில் அவர்களுக்கு “வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டதாக அங்கு பார்த்தோம். அவர்களுக்கு கிருபையாக வெள்ளை அங்கிகள் அளிக்கப்படுகின்றன. இவர்களோ தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்தனர். இவர்கள்தாம் 'சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜாதிகளிலுமிருந்து வந்து, தேவனுக்கு முன்பாக உள்ள திரளான கூட்டம்'. அது சரி. ஆனால் இவர்களோ இரத்த சாட்சிகளாக மரித்த யூதர்கள், நீங்கள் பாருங்கள். இப்பொழுது, இது சரியாக உள்ளது. இப்பொழுது…