282. இல்லை, புறஜாதிகளை அழைப்பதற்கென இந்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட புறஜாதி மனிதன் எடுக்கப்படுவார். ஏனெனில் முழு சபையும்- எல்லாருமே எடுத்துக்கொள்ளப்படுகின்றனர். 11-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள இவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் அப்பொழுது கீழே கொண்டு வரப்படுகின்றனர். புறஜாதியாருக்கு கிருபையின் காலம் முடிவடைந்து, அது யூதர்களுக்கு அனுப்பப்படுகின்றது. இல்லை, இவ்விருவரும் ஒரே மனிதன் அல்ல என்று நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். இது என்னுடைய அறிவுக்கு எட்டினவரை, என்று நினைவு கூருங்கள்.
இது என்ன சொல்லுகிறதென்று பார்ப்போம். கேள்வி "கோதுமையும் திராட்சரசமும்" ஓ, அதுவா...” கோதுமை. இல்லை, "அது என்ன..” என்று நான் யூகிக்கிறேன். “என்ன” என்பது அங்கே இல்லை. அது இதைத்தான் கூறுகின்றது.