285. இப்பொழுது இதைப் பார்க்கலாம், இதைப் புரிந்துகொள்ள முடியுமா என்று நான் பார்க்கட்டும். நீங்களல்ல, நான் தான். நீங்கள் சரியாகத்தான் அதை எழுதியிருக்கிறீர்கள்; நான் தான்.
நாம் இதுவரை கர்த்தருடைய சரீரத்தை சரிவர நிதானித்து அறியாததே அநேகர் வியாதியுள்ளவர்களாக இருப்பதற்கு காரணமாயிருக்கலாம் அல்லவா? (அதன் முடிவிலே ஒரு கேள்விக்குறி உள்ளது.)
286. சரி, "கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், அநேகர் வியாதியுள்ளவர்களும் பலவீனருமாயிருக்கிறார்கள்” என்று வேதவாக்கியம் கூறுகின்றது. அது முற்றிலும் சரி. ஏனெனில், கர்த்தருடைய சரீரம் என்பது மணவாட்டியாகும், பாருங்கள்? அநேகர் வழிதவறிச் சென்றுவிடுகின்றனர். அதனுடன் அவர்கள் செல்வதில்லை. அது உண்மை. பாருங்கள், எவ்விதம் நடந்துகொள்ள வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையும் வாழ்ந்துவிட்டு, இராப்போஜனத்தில் பங்குகொள்கின்றனர்-அது சரியல்ல, பாருங்கள்? பொய் சொல்பவரும், களவு செய்பவரும், மது அருந்துபவரும் இராப்போஜனத்தில் பங்கு கொள்ளும்போது... அது மிகவும் பயங்கரம். நீங்கள் அப்படிச் செய்யக்கூடாது, பாருங்கள்?
...ஆறாம் முத்திரை திறக்கப்பட்டதால் அது இப்பொழுது வெளிப்பட்டுள்ளதே.
287. “ஆறாம் முத்திரை திறக்கப்படுதல்.” இதை நாம் பார்க்கலாம். இல்லை, இப்பொழுது ஆறாம் முத்திரை திறக்கப்பட்டபோது அது யூதர்களுக்கென்று நாம் பார்த்தோம். பாருங்கள்? சபை ஏற்கனவே சென்று விட்டது. அது உபத்திரவ காலம். எனவே அது ஒன்றாயிருக்காது. இல்லை, இல்லை. இவையிரண்டும் ஒன்றில்லை.
288. ஒன்று ஆவிக்குரிய திராட்சரசம்-அதுதான் தேவனுடைய வார்த்தையின் வெளிப்படுதல். தேவனுடைய வார்த்தை வெளிப்படுவதனால் விசுவாசி ஊக்கமடைகிறான். மற்றொன்று இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் அடையாளமாயுள்ளது. அது கர்த்தருடைய இராப்போஜன மேசையில் அருந்தப்படுகின்றது. எனது புரிந்துகொள்ளுதலின்படி, இதுவே சரியான விடையாகும்.