94. இப்பொழுது,... எனக்குத் தெரிய... இதை எழுதிய நபர் இங்குதான் இருக்க வேண்டும். இப்பொழுது, தேவன்... இங்குள்ள முதலாவது கேள்வியில்! ஆதியாகமம் 2:18-21ல் உள்ள ஆணையும் பெண்ணையும் தேவன் உண்டாக்கினாரா?
95. இல்லை. நான் நான்... 2:18-21ல் இங்கே நீங்கள் காண்கின்றபடி, கவனியுங்கள். பின்பு, தேவனாகிய கர்த்தர்; மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல; ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும்.. மற்ற எல்லாவற்றையும். மண்ணினாலே உருவாக்கி... மேலும் இன்னுமாக
96. இப்பொழுது, தேவன் ஏவாளை ஆதாமின் விலா எலும்பிலிருந்து உருவாக்கினார். ஏனென்றால் ஆதாமின் சரீரத்திலிருந்து ஒரு விலா எலும்பு எடுக்கப்பட்டபடியால், ஸ்திரீகளின் உடல் உள்ளமைப்பில் மனிதனின் அமைப்பில் இருப்பதைவிட கூடுதலான ஒரு விலா எலும்பு உள்ளது. ஆதாம் ஏற்கனவே உண்டாக்கப்பட்டு, தனிமையாக வாழ்ந்து கொண்டிருந்தான், ஆகையால் தேவன். மனிதன் தனிமையாய் இருப்பது நல்ல தல்ல” என்று கூறினார்.
97. ஒரு மனைவியைப் பெற்றுக்கொள்கின்ற உரிமைகள் பாதிரியார்களுக்கு, குருமார்களுக்கு மறுக்கப்படுகிறது. இப்பொழுது, அந்த ரோம சபையானது என்னவேண்டுமானாலும் செய்யலாம். அவர்கள்தான், அவர்கள்தான் அதற்கு பதில் கூறவேண்டும், நானல்ல.
98. நல்லது, சமீபத்தில் ஒரு மனிதன் என்னை இவ்விதம் கேட்டார், “பாதிரியார்களைப் பற்றி நீர் என்ன நினைக்கிறீர்? அங்கே அந்த வாலிபப் பாதிரியார் அந்த ஸ்திரீயை, பெண்ணை இங்கு ஜெபர்சன்வில்லைச் சேர்ந்தவளை கூட்டிச் சென்று விவாகம் செய்ததைக் குறித்து நீர் என்ன நினைக்கிறீர்?” அது அந்த ஐரிஸ் சபையில், ஞாபகமிருக்கிறதா. அவர் பெயர் என்னவென்று நான் மறந்துவிட்டேன்.
99. நான் “விவாகம் செய்ய எனக்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ, விவாகம் செய்துக்கொள்ள அவருக்கும் உரிமை உண்டு. நான் அதைக்குறித்து அவ்விதமாகத்தான் சரியாக நினைக்கிறேன். ஒரே ஒரு காரியம் தவறு என்று நான் எண்ணுகிறேன், அவர் தன்னுடைய சபைக்குச் சென்று தன் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு, பிறகு சென்று அப்பெண்ணை விவாகம் செய்திருக்க வேண்டும். அப்படி ஓடியதற்கு பதிலாக அவர் அதைச் செய்திருக்க வேண்டும்,' என்றேன்.
100. இப்பொழுது சில வாரங்களுக்கு முன்பாக இங்கே ஜெபர்சன் வில்லில், அங்கிருந்த ஐரிஷ் கத்தோலிக்கப் பாதிரியார் சம்பவத்தை நீங்கள் நினைவில் கொண்டுள்ளீர்களா! அவர் ஒரு இளம் வயதுக்காரர். அவர் சென்று கொண்டிருந்தார். அங்கே ஒரு பெண்ணை நேசித்தவராய் இருந்தார். அப்போது அவர்... அவருக்கு ஒரு பெரிய அன்பின் காணிக்கை அளித்தார்கள், அவரை இண்டியானா போலீஸிற்கு (Indiana polis) வேறெங்கேயோ சபை மாற்றம் செய்யப் போகிறார்கள். அவர் அப்பெண்ணின் அன்பைப் பெற்று அவளுடன் சென்று விவாகம் செய்து கொண்டார், பிறகு அவரிடமிருந்து ஒரு செய்தியும் வரவில்லை. நல்லது, விவாகம் செய்து கொள்ள அவருக்கு உரிமை உண்டு. ஆனால் அதை அவர் செய்திருக்கக் கூடாது. அவர் சபைக்குச் சென்று பாதிரியார் என்னும் என்னுடைய பொறுப்பை நான் ராஜினாமா செய்கிறேன். நான் விவாகம் செய்து கொள்ளப் போகிறேன், அவ்வளவுதான், அது முடிந்து விட்டது,” என்று இவ்வாறு கூறியிருக்க வேண்டும்.
இந்த ஆதியாகமம் 1:26, ஆதியாகமம் 2:7வுடன் எந்தவிதமான தொடர்பு, இணைப்பைக் கொண்டுள்ளது? தேவன் இரண்டு மனிதர்களை சிருஷ்டித்தார். யார் அந்த மனிதன், அவன்... என்ன தொடர்பை அது கொண்டுள்ளது? என்ன... எப்படி அது வேதவாக்கியத்துடன் இணைகிறது.
101. ஆனால் இப்பொழுது, தேவன் ஏவாளை உருவாக்கினார். ஆவியான ஆதாமையும், ஆவியான ஏவாளையும், ஆதாமையும் ஏவாளையும் மனிதனும் ஸ்திரீயும், ஒரே நேரத்தில் உண்டாக்கியதுதான் தேவன் செய்த இயற்கைக்கு மேம்பட்ட காரியமாகும். பிறகு அவர்... ஆதாமை உண்டாக்கி இங்கே வைத்தார். அது நல்லதல்ல என்று... பாருங்கள், எல்லா நேரத்திலும் தேவனுடைய காட்சி வெளியாகின்றது. இதைப் போல எல்லாமும், அது சரியாக கீழ் வருகிறது, சரியாக வெளியாகின்றது, ஆயிர வருட அரசாட்சியினுள் வந்து நித்தியத்திற்குள் செல்கின்றது. தேவனுடைய காட்சி திறக்கப்படுகின்றது, தேவன் தம்மைத்தாமே திறந்து காண்பிக்கின்றார்.
102. இங்கே, தேவன் தம்மைதாமே இயேசு கிறிஸ்துவுக்குள் வெளிப்படுத்துகின்றார். அது அவர் யார் என்பதைக் காண்பித்தது. இயேசு என்பவர் யார்? துன்பம், துயரம் நிறைந்து அதனுடன் இருந்த, அன்புடைய ஒரு மனிதன். அவர் வேசியை நோக்கி “உன் மேல் குற்றம் சாட்டினவர்கள் எங்கே?” என்று கேட்டார். “ஒருவரும் இல்லை ஆண்டவரே” “நான் உன்னை குற்றம் சாட்டப்போவதில்லை, நீ போ, இனி பாவம் செய்யாதே.”
103. அவர் அந்நாளிலே சுமார் முப்பது மைல்கள் வனாந்திரம், பாலைவனம் வழியாக நடந்ததால் மிகவும் சோர்வாயிருந்து களைப்புற்றிருந்தார்; அங்கே நாயீன் என்னும் ஊரிலிருந்த ஒரு ஸ்திரீ வந்து கொண்டிருந்தாள்; அவளுடைய ஒரே மகன் மரித்துப்போய் இருந்தான். அவர் அடக்க ஊர்வலத்தை நிறுத்தினார். அவன் மேல் கைகளை வைத்து “எழுந்திரு” என்றார். மரித்த அந்தப் பையன் மறுபடியும் எழுந்து உட்கார்ந்தான். அது - அது நம்முடைய கர்த்தராகிய இயேசு. (நன்றி டெட்டி, மகனே) அங்கே, ஏதேனும் நன்மை செய்வதற்காக ஒருபோதும் சோர்வோ களைப்போ இல்லாமல் இருந்தவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆகும். அது, சரி.