136. சற்று பொறுங்கள், II தீமோத்தேயு... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... நான் என்ன கூறினேனோ அதற்கு ஒருவேளை நீங்கள் இணங்காமல் இருக்கலாம். வீட்டிற்கு நீங்கள்... பிறகு, நீங்கள் வீட்டிற்கு சென்று அதிகமாக ஆராய்ந்து பாருங்கள், பிறகு நீங்கள் ஆவிக்குரியவராக ஆக அது உங்களுக்கு உதவியாகயிருக்கும். அது சரி. II தீமோத்தேயு 2:16 இவ்வாறு இருக்கிறது.
சீர்கேடான விண் பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளபோதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்.
ஆம்! மேலும், “சீர்கேடான வீண் பேச்சு” என்பதைக் குறித்து நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். “சீர்கேடான - சீர் கேடான வீண் பேச்சுகளுக்கு விலகியிரு, அவைகள் அதிகரிக்கும்”,
137. இப்பொழுது, முதல் காரியமாக “சீர்கேடான வீண்பேச்சு, அவைகள் அதிகரிக்கும்.” இப்பொழுது, பழையதாக இருக்கிற எதுவும் - வீண்பேச்சு பேசிக்கொண்டேயிருக்கும், வேதாகமம் கூறுகிறது - இயேசு, “உங்கள் 'ஆம்' என்பது 'ஆம்' என்றும் உங்கள் 'இல்லை' என்பது 'இல்லை' என்றே இருக்கட்டும், இதற்கு மிஞ்சினது பாவத்தினால் வருகிறதாயிருக்கும்,” என்றார். நீங்கள் ஒருவருக்கொருவர் நகைச்சுவை மற்றும் ஏளனம் கூட நீங்கள் செய்யக் கூடாது. நீங்கள் பேசுகின்ற ஒவ்வொரு உபயோகமற்ற சொல்லுக்கும் தேவன் உங்களை கணக்கொப்புவிக்கச் செய்வார். அதை நீங்கள் அறிவீர்களா? ஒவ்வொரு வீணான வார்த்தைக்கும் நீங்கள் கணக்கு கொடுக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது. ஆகவே எப்படிப்பட்ட ஒரு ஜனமாக நாம் இருக்க வேண்டியவர்களாகவுள்ளோம்? வெளிப்படையாக, உறுதியாக, அன்புமிக்க, பாசமிக்க, முட்டாள்தனம் மிக்க ஒரு குழுவாக இல்லாதவர்கள், எப்பொழுதுமே...
138. கவனியுங்கள். நீங்கள் அந்த நபரை எடுத்துக் கொள்வீர்களானால் இன்று ஆரம்பிக்கவிருக்கிற... ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவனாகிய நான், என்னையே என்னுடைய சொந்த சுபாவத்தையே கவனித்திருக்கிறேன். ஒவ்வொரு - ஒவ்வொரு முறையும் கிண்டலும் நையாண்டியும் செய்வதுண்டு. என்னுடைய மனைவியும் கூட “இப்பொழுது, பில்...!” என்று கூறுவாள்.
நான், “அது பரவாயில்லை; தேனே.” என்பேன், அவள் கூறுவாள், நான் பிள்ளைகளுடன் நெருக்கித்தள்ளி முட்டி மோதிக் கொண்டிருப்பேன்... நான் கூறுவேன்... அவர்களிடம் நையாண்டி செய்து மற்றும் ஏதாவதொன்றைக் கூறுவேன், “நல்லது இப்பொழுது, உனக்குத் தெரியுமா, கெண்டக்கியிலிருந்து மூன்று மகத்தான மனிதர் வந்துள்ளனர்”.
“அது யார்?”
“நல்லது, ஆபிரகாம்லிங்கன்”
“டானியேல் பூன்”
“ஹ - ஹும்”
“அப்புறம் உன் தந்தை,” அதைப் போன்ற ஒன்று.
139. அதற்கு அவள், “இப்பொழுது, பில், இதோ மறுபடியும் நீர் அதைச் செய்கிறீர்” என்பாள். நான் ஏதாவது ஒரு மறைவிடத்தில் சென்று, “கர்த்தாவே என்னை மன்னியும், அந்த விதமாக கூற நான் விழையவில்லை. எனக்கு ஏதாவதொன்றைச் செய்யும்; நான் அதை விட்டு கடந்து வர செய்யும்” என்பேன், பாருங்கள்?
140. ஆகவே ஒவ்வொரு நாளும் நான் - நான் அதைச் செய்தால் இப்பொழுது இக்காலை பின்மாற்றம் என்ற வார்த்தையைக் குறித்து நாம் பேசிக் கொண்டிருந்தோம். நீ அதைச் செய்தால் நீ பின்மாற்றத்திலிருக்கிறாய், ஆம், ஐயா! நீ மனந்திரும்பியாக வேண்டும். அது சரியல்லவா? இப்பொழுது, நீங்கள் உலகத்திற்குள் சென்று இதை மற்றும் அதை செய்தீர்கள் என்று நான் கூற விழையவில்லை, ஆனால் ஏதோ ஒன்றை நீங்கள் செய்துள்ளீர்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் ஜீவிக்கும்படியாக அநுதினமும் மனந்திரும்பி சாகவேண்டும். ஆதலால் கிறிஸ்து இயேசுவுக்குள் ஜீவிக்க ஒவ்வொருநாளும் - ஒவ்வொரு நாளும், நீங்கள் ஒவ்வொரு நாளும் மரிக்க வேண்டும்.
141. நான் ஏதாவதொன்றை காணும் போது... தவறாயிருக்கின்ற காரியங்களை அநேக முறைகள் நான் செய்கிறேன். நான் வெளியே செல்வேன், யாரோ ஒருவர் ஏதோ ஒன்றை அல்லது மற்றதைக் கூறுவார், அதைக் குறித்து ஒரு சிறிய நகைச்சவையை நான் ஒருக்கால் கூறுவேன். யாரோ ஒருவர் கூறுவார். மோசமான ஒன்றல்ல; இப்பொழுது, கிறிஸ்தவர்கள் இழிவான நகைச்சுவைகளைக் கூறுவார்கள் என்று நான் நம்புவதில்லை. இல்லை ஐயா! இல்லை ஐயா! அப்படியானால் அவர்கள் கிறிஸ்தவர்களே அல்ல என்று வேதம் கூறுகிறது. அந்த பழைய சீர்கேடான காரியங்கள் போன்றவை, நகைச்சுவைகள், அரட்டைகள், மற்றும் அதைப் போன்றவைகளை விட்டுவிடுங்கள் என்று கூறுகிறது. இல்லை, அந்த விதமான காரியங்களை கிறிஸ்தவர்கள் கூறமாட்டார்கள்; கிறிஸ்தவர்கள் தூய்மையான எண்ணங்களைக் கொண்டவர்கள் ஆவர்.
142. ஆனால் நீங்கள் கவனிப்பீர்களானால், எப்பொழுதாவதொரு முறை நீங்கள் ஒரு மனிதனை இன்று அவன் ஒரு சிறு நகைச்சுவையைக் கூறுவான். ஆகவே நல்லது, அது சரி என்று நினைத்துக் கொள்வான், அதை அவன் அப்படியே விட்டுவிட்டு அதைக் குறித்து ஒன்றும் சிந்திக்கமாட்டான். அடுத்த நாள் அவன் இரண்டு சிறிய நகைச்சுவைகளைக் கூறுவான். பாருங்கள். ஆகவே அடுத்த காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் வேறெதாவதொன்றைச் செய்து கொண்டிருப்பீர்கள். ஆகவே முதலாவதாக காரியம் என்னவென்பதை நீங்கள் அறிவீர்களா, அது திரும்பவுமாக அந்த அதே பழைய காரியத்திற்கே கொண்டு சென்று விடுகிறது. அது சரியா? அந்த காரியத்தை விட்டு அகன்று செல்லுங்கள். அதை விட்டு விலகுங்கள்! சீர் கேடான வீண் பேச்சுகளுக்கு விலகியிருங்கள்.
143. யாரோ ஒருவர் வந்து... ஒரு சிறிய உதாரணத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன். “திருமதி டோ, அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நான் உங்கள் கணவரைக் கண்டேன். என்னவென்று நான் உங்களுக்கு கூறுவேன். நீங்கள் மாத்திரம்” பாருங்கள் ஒரு... இப்பொழுது நான் நினைப்பதென்னவென்றால்... “அதை நான் கேட்க விரும்பவில்லை!” என்று கூறி, அப்படியே சென்று கொண்டிருங்கள். அதைக் குறித்து கவனம் செலுத்த வேண்டாம், அவர்கள் அதை நிறத்திவிடுவர். அது சரி.
144. “நல்லது என்ன என்று உங்களுக்கு தெரியுமா சகோதரியே? சகோதரனுக்கு என்ன ஆயிற்றென்று நான் உங்களுக்கு கூறுவேன்.” சகோதரி மட்டுமல்ல, ஆனால் சகோதரனும் கூட. பாருங்கள்.
“சகோதரனே, என்ன நடந்தது என்று நான் உங்களுக்கு கூறுவேன். நாம் இந்த பிரசங்கியை மாத்திரம் அப்புறப்படுத்தி விட்டால், நாம் இதை செய்வோமானால், அல்லது இந்த டீக்களை நாம் அப்புறப்படுத்துவோமானால், அல்லது இதை நாம் செய்வோமானால்” ஓ, ஓ! அந்த காரியத்தை விட்டு விட்டு - விட்டு விலகுங்கள்.
145. உங்கள் மேஜையின் மேல் ஒரு அருமையான சிறு காரியத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன், சிறிது காலத்திற்கு முன்னர் ஃபிளாரிடாவில் அந்த சிறு காரியத்தை நான் கண்டேன். அது மூன்று சிறிய குரங்குகள்; அதில் ஒன்று தன் கைகளை தன் கண்களின் மேல் வைத்திருந்து, “தீமை யானதைப் பார்க்காதே” என்று கூறினது; இன்னொன்று விரல்களை வைத்து “தீமையானதிற்கு செவிசாய்க்காதே” என்று கூறினது; இன்னும் ஒன்று தன்னுடைய வாயின் மேல் தன் கையை வைத்து 'தீமையானதைப் பேசாதே” என்று கூறினது, அது ஒரு அருமையான காரியம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அவ்வாறே நினைக்கிறீர்கள் அல்லவா? ஆம், ஐயா! ஓ, என்னே! அது ஒரு மிக அருமையான காரியம்.
146. உங்கள் மனதை மாத்திரம் தூய்மையாகவும் கிறிஸ்துவின் மீதும் வைத்திருங்கள், நீங்கள் சிந்தித்து இப்பொழுது கூறலாம்... இப்பொழுது பாருங்கள், நீங்கள் கவனிக்கவில்லையெனில், நீங்கள் உங்களையே ஒரு இடத்திற்கு கொண்டு சென்று விடுவீர்கள், நீங்கள் அதைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பீர்களானால்... நீங்கள் அதை சிந்திக்காதீர்கள்... இப்பொழுது அந்த தவறை நீங்கள் செய்ய முடியாத விதத்தில் உங்களால் மிக பரிபூரணமாக இருக்க முடியாது. ஏனெனில் நீங்கள் செல்லமாட்டீர்கள் என்பதால் அந்த வழியாக நீங்கள் எப்பொழுதாவது செல்வேன் என்று நீங்கள் நினைப்பீர்களா. இல்லை ஐயா! நீங்கள் பாவமில்லாதவர்கள் அல்ல, ஆகவே நீங்கள் இந்த புறமாக அல்லது அப்பக்கமாக நிச்சயமாக அவர்களுடைய பாதையில் சென்று விடுவீர்கள்.
147. ஆனால் கீழே அடித்து தள்ளப்பட்ட ஒரு மனிதன், அவன் ஒரு உண்மையான போர்வீரனாக இருப்பானானால் அவன் மறுபடியுமாக எழுந்து நிற்பான், “கர்த்தாவே நான் எழுந்து மறுபடியும் அதை முயற்சித்து பார்க்கட்டும்.” ஆனால் ஒரு கோழையோ தன்னுடைய முதல் சிறிய தவறை அவன் செய்வதை பார்க்கையில் இன்று காலை நான் கூறின விதமாக அவன் இருப்பான்: அந்த மூட்டுப்பூச்சியும் (ஒரு வகை கம்பளிப்பூச்சி) தண்ணீர் பூச்சியும் மறுபடியுமாக நேராக தண்ணீருக்குள் ஊர்ந்து சென்று விடும். பாருங்கள்? அவனால் அதை தாங்க முடியாது.
148. ஆகவே எல்லா பழைய அந்த சீர்கேடான வீண்பேச்சு, பேசிக் கொண்டே இருத்தல், பேசுதல் போன்றவற்றிலிருந்து விலகுங்கள். வீண்பேச்சு என்றால் “குழப்பம்” என்று அர்த்தம். ஆகவே வேதாகமம், “உங்கள் நடுவிலே சச்சரவுகளை உண்டாக்குகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” என்று கூறுகிறது.
149. யாராவது ஒருவர், “ஹூ ஹூம் ஹூ ஹூம்” என்று கூறுவாரானால். இப்பொழுது - இப்பொழுது “எப்படியிருக்கிறீர்கள்? மறுபடியுமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. உமக்கு நன்றி” என்று மாத்திரம் கூறுங்கள். அப்படியே சென்று கொண்டிருங்கள். அது தான் சிறந்த காரியம். அவர்களை விலக்கி விடாதீர்கள். அவர்களை பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். அது எங்கு செல்கின்றது என்பதை நீங்கள் காண்பதால் நீங்கள் எந்த ஒரு கவனத்தையும் செலுத்த வேண்டாம்.