289. இப்பொழுது "மிருகம் செல்வத்திற்காக ஏமாற்றும் என்று எங்கு கூறப்பட்டுள்ளது?” அது அவ்விதம் உரைக்கவில்லை. ஆனால் நாங்கள் அவ்வாறு ஊகிக்கின்றோம். அன்றிரவு, உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா.. ஒலி நாடாவைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் அதைத்தான் செய்வார்கள் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. நான் கூறினேன். பாருங்கள், கத்தோலிக்கர்கள் உலகத்திலேயே அதிகச் செல்வம் படைத்த குழு- அவர்களைப்போல் யாருமில்லை. அவர்களிடம் இல்லாதவை, யூதர்களிடம் உள்ளன.
290. இன்று நாட்டின் பொருளாதாரமே அங்குதான் இருக்கின்றது. 'லைஃப் லைன்' என்னும் செய்தித்தாளின்படி, நாம் இப்பொழுது வரிப் பணத்தைக் கொண்டு ஜீவனம் செய்துகொண்டு வருகிறோம். (வாஷிங்டன் டி.சியிலிருந்து வரும் வரிப்பணத்தைக் கொண்டு) அது இன்னும் நாற்பது வருடங்களில் திரும்பச் செலுத்தப்படவேண்டும். அதைத்தான் இப்பொழுது நாம் செலவு செய்துக்கொண்டு வருகிறோம். அவ்வளவு பின்னால் நாம் இருக்கிறோம்... இன்னும் நாற்பது வருடங்களில் செலுத் தப்படவேண்டியவைகள். நாடு பணமற்று விட்டது.
291. இப்பொழுது, காஸ்ட்ரோ (Castro) செய்த புத்திசாலித்தனம் என்னவெனில், அவன் பணநோட்டுகளை அச்சடித்து, அதைக்கொடுத்து, பாண்டு (Bond) பத்திரங்களைத் திரும்பி வாங்கிக்கொண்டு அதை எரித்துப் போட்டு, இவ்விதம் நோட்டுகளை மாற்றிக்கொண்டான். அது ஒன்றே அவனால் செய்ய முடிந்தது.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் செய்ய வேண்டியதும் ஒன்றே ஒன்றுதான். இது வில்லியம் பிரன்ஹாம் பேசுவது என்று ஞாபகங் கொள்ளுங்கள். இது என்னுடைய கருத்து. இயற்கையாக ஆலோசிப் போமானால், அது ஒருக்கால் லட்சக்கணக்கான மைல்கள் விலகியிருக்கலாம்-அந்தப் பணத்தில்.. என்று நம்புகிறேன்... பொருளாசை எல்லாத்தீமைக்கும் வேராயிருக்கிறது. அதுதான் காரியங்களைத் தொடங்கிவிடும் என்று நம்புகிறேன்.
292. இப்பொழுது கத்தோலிக்க சபை, ஆராதனை (Mass) போன்றவைகளுக்காக பணம் வாங்குகின்றது. உலகத்தின் செல்வத்தை அதனிடம் வைத்துள்ளது. “அவள் ஐசுவரியமுள்ளவள்” என்று வேதம் கூறுவது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? ஒரு தேசத்தில் மாத்திரமல்ல, வானத்தின் கீழுள்ள எல்லா தேசங்களிலும் அவள் ஐசுவரியமுள்ளவளாயிருக்கிறாள். அவள் பரவியிருக்கிறாள். அவளிடம் செல்வமுள்ளது. அவளிடம் இல்லாதது, யூதர்களின் ஆதிக்கம் கொண்ட 'வால் தெருவில் (Wall Street) உள்ளது.
293. இப்பொழுது, யாக்கோபு திரும்பி வந்தபோது அவனிடம் பணமிருந்தது என்று சென்ற இரவு நாம் பார்த்தோம். அவன் இஸ்ரவேல் ஆனான்-அவனிடம் உண்மையாகவே பணம் இருந்தது. அனால் அவன் ஏசாவிடம் அதன் மூலம் எதையும் பெறமுடியவில்லை. ஏசாவிடம் பணம் இருந்தது பாருங்கள், முன்னடையாளமும் அதன் நிறைவேறுதலும் பிழையின்றிப் பொருந்துகின்றது.
294. இப்பொழுது இங்கே கவனியுங்கள். அவர்கள் பணத்தையெல்லாம் ஒன்றாகச் சேர்க்க விரும்புவார்கள் என்றும், ரோம ஆதிக்கம் உடன்படிக்கையை முறித்துப் போட்டு, யூதர்களின் பணத்தை அபகரிக்கும் என்றும் கூறினேன். ஒருக்கால் அப்படி நிகழாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் உடன்படிக்கையை முறித்துப் போடுவார்கள் என்று மாத்திரம் எனக்குத் தெரியும். என்ன காரணத்தினால் என்று எனக்கு தெரியாது. ஏனெனில் அவர்கள் என்ன செய்வார்கள் என்று எனக்கு வெளிப்படுத்தப் படவில்லை.
295. ஆனால், கவனியுங்கள். இன்றைக்கும். நாம் இன்றைக்கு செய்ய வேண்டிய ஒரே காரியம்... நாம் வரிப்பணத்தை எடுத்துக் கொண்டு.. அது நாற்பது வருடத்தில் அது திரும்பச் செலுத்தப்படவேண்டுமென்று... பாருங்கள், நம்முடைய தங்கம்... அதை நாம் செலவழித்து விட்டோம். நாம் திவாலாகி விட்டோம். நம்மிடம் பணமில்லை. நம்முடைய முன்காலத்து நன்மதிப்பைக் கொண்டே நாம் வாழ்ந்து வருகிறோம்.
296. சபையும் அதையே இன்று செய்து வருகின்றது - மணவாட்டியல்ல. சபையும் சிங்கத்தின் காலத்தின் ஊழியத்தில் பெற்ற “நாங்கள் சபை, நாங்கள் தாய் சபை, நாங்கள் தொடங்கினோம்.”... அது உண்மை, பாருங்கள்? அது முன்காலத்து நன்மதிப்பைக் கொண்டு வாழத்தலைப் படுகின்றது.
297. மெதோடிஸ்டுகளும் அவ்வாறே முன்காலத்து நன்மதிப்பைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். பாப்டிஸ்டுகளும் முன்காலத்து நன்மதிப்பைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். பெந்தெகொஸ்தரும் தங்கள் "தேவனுக்கு மகிமை” என்பதனால் வாழத்தலைப்படுகின்றனர். அநேக ஆண்டுகளுக்கு முன்பு, பரிசுத்தவான்கள் ஆவியில் நடனமாடுவார்கள். “கர்த்தர் இதைச் செய்தார், அதைச் செய்தார்' என்றெல்லாம் சாட்சியாகக் கூறுவார்கள். அவை முன்காலத்தில் நிகழந்தவை. "இப்பொழுது நாம் பெரியவர்களாகிவிட்டோம். சகோதரனே” ஓ என்னே! பாருங்கள்? - எல்லாம் முன்காலத்தில் பெற்றிருந்த நன்மதிப்பு.
298. இந்த தேசமும், அதன் முற்பிதாக்கள் என்னவாயிருந்தனர் என்னும் முன்காலத்து நன்மதிப்பைக்கொண்டே வாழ்ந்து வருகின்றது. அதன் காரணமாக அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று நினைக்கின்றனர். இஸ்ரவேலர் முன்காலத்தில் என்னவாயிருந்தனர். என்பதற்கு தேவன் மதிப்பு கொடுக்கவில்லை. அக்காலத்தில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதையே அவர் பார்த்தார்.
299. கவனியுங்கள், இதுதான் நடக்கும் என்று நினைக்கிறேன். ஒருக்கால் அது அப்படியில்லாமலிருக் கலாம். இந்தப் பிரச்சனையை, நினைக்கிறேன் நாம் பண நோட்டுகளை மாற்றுவதற்குப் பதிலாக... அது 'பிலிப மாரிஸ்' ஸுக்கு என்ன செய்யும்? விஸ்கி கம்பெனிகளுக்கு அது என்ன செய்யும்? எஃகு தொழிலுக்கு அது என்ன செய்யும்? வணிகத்துறை அனைத்திற்கும் அது என்ன செய்யும்? அது அவர்களை உடைத்துப் போடும். அவர்கள் பணமற்றவர்களாகி விடுவார்கள். "அப்பொழுது நாம் அந்தப் பணத்தை கடன் வாங்கினால்”... அவன் எவ்வளவு சாமர்த்திய முள்ளவன், பாருங்கள்?
300. அப்பொழுது தேசமானது சபைக்கு விற்கப்படும். சபையும், தேசமும் மறுபடியுமாக இணைக்கப்படுகின்றது. அங்கேதான் அவள் (கத்தோலிக்க சபை - தமிழாக்கியோன்) வருகிறாள். பாருங்கள்? அதுவே தான். கவனியுங்கள். சரி. இப்பொழுது, இதில்.