301. இப்பொழுது நாம் பார்ப்போம், சரி, ஸ்தாபனங்கள், பாருங்கள்... ஸ்தாபனங்களுக்கு பேச்சுரிமை அரசாங்கத்தால் அளிக்கப்பட்டுள்ளது. பாருங்கள்? அதற்கும் ஒருவனுடைய இருதயத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. பாருங்கள்? ஒருவன் உண்மையான விசுவாசியாக, தேவனுடைய ஆவியால் மறுபடியும் பிறந்தவனாக இருந்தால், என்றாவது ஒரு நாள் அவன் பேசக் கூடாதப்படி தடை பண்ணப்படுவான். பாருங்கள்? அது அவ்வளவு வெளிப்படையாக இருப்பதால், அவனால் அதைக் கண்டு கொள்ளாமலிருக்க முடியாது.
302. இப்பொழுது நண்பர்களே, நீங்கள் இதை நினைவில் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். எனக்குத் தெரிந்தவரைக்கும், தேவன் எக்காலத்திலும்... ஒன்றைச் செய்ததில்லை... பாருங்கள்.
303. கவனியுங்கள், இயேசுவே அதற்கெல்லாம் பிரதானமாயிருந்து வந்துள்ளார். ஏனெனில் அவர் தேவன். அவர் மாம்சரூபம் கொண்ட இம்மானுவேல். இப்பொழுது, இந்த நபர் இயேசுவைப் பாருங்கள். அவர் இவ்வுலகிற்கு வந்தபோது- நான் நினைக்கிறேன்-இவ்வுலகிலிருந்த பத்தில் ஒரு பாகம் பேர்கூட அவர் இவ்வுலகிலுள்ளதை அறிந்துக் கொள்ளவில்லையென்பது உங்களுக்குத் தெரியுமா?
மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், மற்றவையெல்லாம் சம்பவிக்கும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட முன்னோடி இவ்வுலகில் தோன்றினபோது, இஸ்ரவேல் ஜனத்தொகையில் நான் நினைக்கிறேன், நூறில் ஒரு பாகம்கூட அதை அறிந்துக் கொள்ளவில்லை யென்பது உங்களுக்குத் தெரியுமா? அது விசித்திரமாயில்லையா?
304. ஏன், யூதர்களும் இதர ஜனங்களும் உலகம் முழுவதும் அப்பொழுது இருந்தனர். இவ்வுலகின் இரட்சகர் அவர் என்று சாட்சி கொடுக்க இயேசு தோன்றினார் என்பது நினைவிருக்கட்டும். அது சரியா? ஏன் ஜனங்களுக்குப் பின் ஜனங்கள், ஜாதிகளுக்கு பின் ஜாதிகள் அநேகர் அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. ஆயினும் இவ்வுலகில் அது நடந்து கொண்டேயிருந்தது. பாருங்கள்?
305. அவர் ஏன் மற்றவர்கள் அதை அறிந்து கொள்ளச் செய்யவில்லை? அவர் வந்தார்; நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டவர் மாத்திரமே அவரை ஏற்றுக் கொண்டனர். மற்றவர்களுக்கு இதைக் குறித்து அறிவிப்பதால் எவ்வித உபயோகமுமில்லை. ஏனெனில் அவர்களை அவர் மீட்டிருக்க முடியாது; அவர்கள் மீட்கப்படத்தக்கவர்கள் அல்ல. ஏன் அந்த ஆசாரியர்கள் அங்கு நின்று கொண்டிருந்தபோது... அவர் ஏன் அந்த இடத்திற்கு வரவேண்டும்? ஏனெனில் முன்குறிக்கப்பட்டவர்கள் அங்கு சுற்றிலும் இருந்தனர். எனவே ஒரு குழுவுக்கு அவர் பிரசங்கம் செய்ய நேர்ந்தது.
306. அவர் யாரென்பதை அறிந்திருக்க வேண்டிய மகத்தான பண்டிதர்கள், "இந்த மனிதன் பெயல்செபூல். இவன் எங்கள் மேல் ஆளுகை செய்வதையும், மற்றவைகளையும் விடமாட்டோம்” என்றெல்லாம் கூறினர்.
ஆனால் ஒரு சிறிய வேசி - அவளுக்குள் ஜீவன் இருந்தது, அவள் நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டவளாயிருந்தாள். அவளுடைய பெயர் அழியமுடியாததாய் இங்கே தேவனுடைய வார்த்தையில் இருந்தது. தேவனுடைய வார்த்தை அவளிடம் நடந்து சென்றபோது, அவளுக்குள் இருந்த வித்தின் மேல் முதன்முறையாக வெளிச்சம் பட்டது. அவள் உடனே அறிந்துக் கொண்டாள். (சகோதரன் பிரன்ஹாம் தன் விரலை ஒருமுறை சொடுக்கினார் - ஆசி)
307. கவனியுங்கள், அந்த மீன்பிடிப்பவன் அங்கு வந்தான். இயேசு அங்கு அநேக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து அநேகருடைய இருதயங்களிலுள்ள இரகசியங்களையறிந்து கூறி, தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஆகவே, என்னே, அங்கே பரியேசர்கள் நின்று கொண்டிருந்தனர். "இந்த மனிதன் பெயல்செபூல்” என்றனர். அவர்கள் சபையோருக்கு அவர்கள் பதில்கூற வேண்டியவர்களாயிருந்தனர்.
308. சபையார் அங்கு நின்று கொண்டு, “டாக்டர் ஜோன்ஸ் அவர்களே, அங்கு சென்று இந்த மனிதன் கூறுவதைக் கேட்பீர்களா? அவர் என்ன பேசுகிறார் என்பதை அறிந்தவராக இருக்கிறார். அவர் ஒரு சாதாரண மனிதனைப்போல் பேசவில்லை” என்றனர்.
309. "அவர் பேசுவதை நான் கேட்பேன்” அவர் அங்கு நடந்து சென்றார். பாருங்கள், ஆம். தேவன் அப்படிப்பட்டவருக்குள் வரமுடியாது.
இயேசு அங்கு நின்று கொண்டு, அவர் கூறினார்.
அவர்கள், 'பாருங்கள், பாருங்கள் அங்கு ஒரு மனிதன் வருகிறான்... அதோ அவருடைய சீஷர்களின் ஒருவன்... அங்கு ஒரு மனிதன் வருகிறான். அவன் பெயர்... அந்திரேயா.. அங்கிருக்கும் செம்படவர்களை உங்களுக்குத் தெரியுமல்லவா? பாருங்கள்? அது அவர்கள்தான். ஆம், அது அவனுடைய சகோதரனாகிய சீமோன். அவர்கள் அந்த வயோதிப யோனாவின் குமாரர்கள். கவனியுங்கள். அவன் வேறுயாரையே அவரிடத்தில் கொண்டு வருகிறான். அது யார்? ஆம். அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்! அடுத்த படியாக ஒருவன் அவர் அருகாமையில் வருகிறான்” என்றார்கள். அவர், "உன் பெயர் சீமோன்; நீ யோனாவின் குமாரன்” என்று கூறினார்.
310. ஆனால் பரிசேயர் போன்றவர்களோ, “இந்த மனிதன் பெயல்செபூல். பாருங்கள்? அவன் மீது ஒருவகையான ஆவி தங்கியுள்ளது. அவன் விசித்திரமானவன். பாருங்கள்? அவன் பேசுவதை நீங்கள் கேட்க வேண்டாம். அதைவிட்டு அகன்றுச் செல்லுங்கள். அவன் நடத்தும் வேறு எந்த கூட்டத்துக்கும் நான் இனிமேல் வரமாட்டேன். இது முடிந்தவுடன் நாம் இங்கிருந்து சென்று விடுவோம். நாம் மறுபடியும் இங்கே வரவே மாட்டோம்” என்றெல்லாம் கூறினர். பாருங்கள்? ஏன்? அவ்விதமாகவே அவர்கள் அவரைக் கருதினர். பாருங்கள், அவர் யாரிடம் வந்தாரோ அவர்கள்தான் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். பாருங்கள்?
311. ஆனால் எல்லாரும் உதைத்துத் தள்ளிய வேசி அங்கிருந்தாள். நான் வேசித்தனத்தை ஆதரிப்பதாக எண்ணவேண்டாம். இல்லவே இல்லை. முன்குறிக்கப்பட்ட வித்தை நான் உங்களுக்கு எடுத்துக் காண்பிக்கிறேன்.
312. இந்த மீன் பிடிப்பவனைப் பாருங்கள். அவன் படிப்பறியாதவன் என்று வேதம் உரைக்கின்றது. அது சரியா? அது மாத்திரமல்ல. அவன் பேதைமையுள்ளவன்! அது சரியா, தவறா? நாம் அறிந்திருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அநேக காரியங்களைக் குறித்து நாம் மாத்திரம் பேதமையுள்ளவராயிருந்தால்! பாருங்கள்? சரி பாருங்கள்? அவன் பேதமையுள்ளவனும் படிப்பறியாதவனுமாயிருந்தான்! அவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சமூகத்திற்கு நடந்து சென்றான். அவன் யாரென்று இயேசு பகுத்தறிந்து கூறினார். அந்த நேரத்திலேயே அது முடிவு பெற்றது.
313. இப்பொழுது அதைக் குறித்து தர்க்கம் செய்யும் மற்றவனைக் கவனியுங்கள். “பாருங்கள், அவன் விசுவாசித்தான். அவன் யாரென்று கவனியுங்கள். அவன் யார் தெரியுமா? நல்லது, அந்த மனிதன் ஒரு போதும்... அவன் ஒரு செம்படவன். அவனுக்கு மொழியின் முதல் அட்சரங்களாகிய ABC கூட தெரியாது. அவனிடம் நான் மீன் வாங்கியிருக்கிறேன். ரசீதில் கையொப்பமிடக்கூட அவனுக்கு தெரியாது. அப்படிப்பட்டவர்கள்தான் இத்தகைய காரியங்களுக்கு செவிகொடுப்பார்கள்.” கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென். பாருங்கள்? “அவனுக்கு... அவனுடைய தகப்பனாரைப் பாருங்கள். அவனும் பேதமையுள்ளவன். அவன் மகனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவேயில்லை” ஆனால் அப் படிப்பட்ட ஒருவனை தேவனே தம் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி, அவர் விரும்பும் முறையில் அவனைப் படிக்க வைக்கிறார்.
314. பள்ளிக்கூடத்திற்குப் போகாதிருப்பதை நான் ஆதரிக்கவில்ல. நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள் என்ற நம்புகிறேன். அந்த பள்ளிக் கூடங்களில் உங்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதைக் குறித்து அதை உதாரணமாக மாத்திரம் கூறுகிறேன். பாருங்கள், அத்தகைய காரியங்கள்-அது அவர்கள் தலைகளுக்குமேல் செல்வதன் காரணமும் அதுவேதான்.
315. உங்களுக்குத் தெரியுமா? நாட்டில் இருந்த யூதர்களில் மூன்றில் ஒருபாகம்கூட அவர் வந்திருப்பதை குறித்து அறிந்திருக்கவில்லை. அந்த மூன்றில் ஒரு பாகத்தில் ஐந்தில் ஒரு பாகம் மாத்திரமே அவருடைய பிரசங்கங்களைக் கேட்டனர். அந்த ஐந்தில் ஒரு பாகத்தில் நூறில் ஒருபாகம் மாத்திரமே அதை ஏற்றுகொண்டனர். அவருக்கு எத்தனைப்பேர் இருந்தார்களென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் அனைவரிலும் பன்னிரண்டு பேர் மாத்திரமே அவருக்கு சிலுவையினண்டையில் இருந்தனர். மற்றவர்கள் எங்கே? பாருங்கள்? அந்த எழுபது பேர் சென்று விட்டார்கள்.
316. இப்பொழுது அவர் வியாதியஸ்தர்களை சுகப்படுத்தி தமது போதகத்தைக் குறித்து ஒன்றும் சொல்லாமலிருந்த சமயங்களில்... அவர் வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்தினவராய் சுற்றித் திரிந்தார். ஓ, என்னே! அது அவர் மேல் தங்கியிருந்த தேவனுடைய ஆவியாகும். அதை நீங்கள் நம்புகிறீர்களா? (சபையார் "ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி) அவர் வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்தினபோது, "அற்புதம்” என்று எல்லோரும் பாராட்டினார்கள். "ரபீ, அது மிகவும் மகத்தான காரியம். சகோதரரே, நீங்கள் அவரை உங்கள் சபைக்கு அழைக்கவேண்டும். வல்லமையைக் குறித்து நீங்கள் பேசினால், அந்த மனிதன் உண்மையாகவே வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்தும் வல்லமை கொண்டிருந்தார்” என்றெல்லாம் அவரைப் பாராட்டினார்கள்.
317. சரி, போலியாட்கள் எழும்பத்தான் செய்வார்கள். இதோ அவர்கள் வருகிறார்கள். ஏனெனில் ஒவ்வொரு குழுவும் உங்கள் சொந்த மனிதரைக் கொண்டிருக் கவேண்டும்.
இதோ அவர் வருகிறார். முதலாவது நடந்தது என்னவென்றால், ஒருநாள் அவர் உட்கார்ந்து கொண்டிருந்தார்.
“ரபீ, நாங்கள் உம்முடன் வர மனதாயிருக்கிறோம்.'
318. "சரி, உட்காருங்கள். நாம் போகலாம்.” அவர் எழுபது பேர்களை அனுப்பினார்.
ஒருநாள், ஒரு மகத்தான அற்புதத்தை அவர் செய்த பின்பு, அவர் உட்கார்ந்து அவர்களுக்கு தேவனுடைய வார்த்தையை விவரிக்கத் தொடங்கினார். “ஏழாம் தூதனின் சத்தத்தின்போது...” சரி, அவர் அவர்களுக்கு தேவனுடைய வார்த்தையை-சத்தியத்தை எடுத்துரைக்கத் தொடங்கினார். அவர்கள், “ஆ ஆ ஆ சற்று பொறுங்கள் இதைக் குறித்து எனக்குத் தெரியாது. இது எங்கள் போதகங்களுக்கு முரணாய் அமைந்துள்ளது” என்றனர். அவர்கள் மேலும், "சரி, நாம் தேவாலயத்தை விட்டு விட்டு (Synagogue) வந்தோம். சகோதரரே, ஒருக்கால் நாம் தவறு செய்திருக்கக் கூடும். நாம் திரும்பச் சென்று விடுவது நல்லது. ஏனெனில் இந்த மனிதன் புதிர் போட்டு பேசுகிறார். அவர் ஒரு விசித்திரமான மனிதன். அதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றனர். பாருங்கள்? அது என்ன? - ஆரம்பத்திலேயே அந்த வித்து முன் குறிக்கப்படவில்லை. அது உண்மை.
319. முதலில் அவர்கள் செய்தது என்னவென்றால், அவர்கள் போதகர் குழு ஒன்றை அமைத்து, அந்த போதகர்களிடம் பேசினார்கள். அவர்கள், "ஆ ஆ ஆ, உம்ம்ம்ம், நாம் திரும்பி போய்விடுவது நல்லது. நாம் திரும்பிச்சென்று நமது ஸ்தாபனங்களை அடைந்து, நமது பத்திரங்களை மீண்டும் எடுத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட ஒரு மனிதனை யார் புரிந்துகொள்ளக்கூடும்? இங்கு ஒருவிதமாகவும் அங்கு ஒருவிதமாகவும் அவர் கூறுகிறார்” என்றார்கள்.
320. அவர்கள் (மற்றவர்கள்) அதை அவ்விதமாகப் புரிந்து கொள்ளவில்லை. சிலரிடம் அவர் உவமைகளாகப் பேசினார். மற்றவர்களிடம் அல்ல.
எனவே அவர்கள் சென்று விட்டார்கள். அப்பொழுது அவர் திரும்பி, அங்கு நின்றுகொண்டிருந்த பன்னிருவைரையும் நோக்கி, “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?” என்று கேட்டார்.
321. இப்பொழுது கவனியுங்கள், பேதுரு, "உங்களுக்குத் தெரியுமா? அந்த இடத்தில் நான் சென்றிருந்தேன். நான் வேறு எங்கு செல்ல முடியும்? உலகில் வேறெந்த இடத்திற்கு நான் செல்ல முடியும்? உலகத்தின் குப்பைகள் நிரம்பிய அந்த குப்பை களத்திற்கு நான் மறுபடியும் செல்ல முடியாது. பாருங்கள்? வேறெங்கு நான் செல்வேன்? என்னால் முடியாது” என்றான்.
322. அப்பொழுது இயேசு, "அப்படியானால் சரி, என்னுடன் வா” என்றார். பார்த்தீர்களா? இருபத்தைந்து லட்சம் மக்களிடையே பன்னிரண்டு பேர் மாத்திரமே. கோடிக்கணக்கான மக்களுள்ள உலகத்திற்கு இரட்சகர், ஆனால் இன்னும் தாழ்மையுள்ளவர். பாருங்கள். தாழ்மை யுள்ளவர்களாயிருங்கள்; தாழ்மையில் நிலைத்திருங்கள், கவனியுங்கள்,
இப்பொழுது பரிசேயர் அனைவரும் இருந்தபோதிலும், அந்த வேசி அங்கு வந்து “நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன். மேசியா வருவாரென்று அறிவேன். அவர் வரும்போது இவைகளைச் செய்வார்” என்றாள்.
இயேசு, “நானே அவர்” என்றார்.
323. அவள், “ஆம், அது உண்மை “ என்று கூறிவிட்டு சென்று விட்டாள். அவளை ஒருமுறையாவது நிறுத்திப்பாருங்கள்; உங்களால் முடியாது.