324. ஆம் அது சரி, அவன் என்ன நடக்கின்றதென்பதைக் காண மெல்ல உள்ளே நழுவிச் சென்றான். பாருங்கள்? கவனியுங்கள், அதைக் குறித்து ஒரு முழு பிரசங்கமே செய்யலாம்.
வியாதியஸ்தர்களுக்கு ஜெபம் செய்து முடிக்க எனக்கு பத்து நிமிடங்கள் மாத்திரமேயுள்ளது. நான் இன்னும் கேள்விகளில் பாதிகூட முடிக்கவில்லை. கவனியுங்கள். இந்த கேள்விகளுக்குப் பின்பு மற்றெல்லாவற்றையும் துரிதமாக முடிக்கப் போகின்றேன். பாருங்கள்?
325. இதுதான் நடந்தது, நீங்கள் கிழக்கத்திய நாடுகளின் பழக்க வழக்கங்களை அறிந்திருப்பீர்களானால், பாருங்கள்? ஒரு மணமகன் தன் விவாகத்திற்காக அநேக அழைப்புகளை அனுப்புகிறான். அவன் அனுப்பியுள்ள ஒவ்வொரு அழைப்பிற்கும், அவன் ஒரு ஆளை ஒரு அங்கியுடன் கதவண்டையில் நிற்கக் செய்கிறான் அழைப்புக்கிணங்கி வருபவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் ஏழையாயிருந்தாலும், பணக்காரராயிருந்தாலும், யாராயிருந்தாலும் அவர்கள் அனைவருமே அந்த கலியாண வஸ்திரத்தை தரித்துக் கொள்ளவேண்டும்.
326. அந்த ஆட்கள் கதவண்டையில் நின்றுகொண்டு, கலியாணத்துக்கு வருபவர்களுக்கு அங்கியை உடுத்துவித்தனர். அவனுடைய வெளிதோற்றத்தை அது மறைத்து. அவன் கோடீசுவரனாக இருந்தாலும் சரி, ஒன்றுமேயில்லாத மிகவும் ஏழ்மையானவனாக இருந்தாலும் சரி, விவசாயியாக இருந்தாலும் சரி, குழி வெட்டுபவனாயிருதாலும் சரி, இராஜகுடும்பத்து தனவந்தனாயிருந்தாலும் சரி (Plutocrat) அவர்களெல்லாரும் அந்த அங்கியை அணிந்தவராக இருந்தனர். வாசலில் நுழையும் முன்பு, அது அவனுக்கு அணிவிக்கப்படுகிறது.
327. இப்பொழுது யோவான் 10-ம் அதிகாரத்தைப் பாருங்கள், அந்த அதிகாரம்தான் என்று நினைக்கிறேன். "நானே வாசல்” என்று அவர் அங்கு கூறியுள்ளார். பாருங்கள்? (யோவான் 10:9) "நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால்...” கலியாணத்திற்கு வருபவன் வாசலண்டை நிற்கிறான். அங்குள்ள மனிதன் அவனுக்கு அங்கியைபரிசுத்த ஆவியை - அணிவிக்கிறான். அவன் நுழையும்போது நீதியின் வஸ்திரத்தை அவனுக்குத் தருகிறான்.
328. இப்பொழுது நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் மனிதன் ஏதோ ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்தவன். அவன் பக்கவழியாக நுழைந்து ஜன்னலின் வழியாகவோ அல்லது நுழையக்கூடிய ஒரு துவாரத்தின் வழியாகவோ நுழைந்து - மேசையை அடைந்து அங்கு உட்கார்ந்துவிட்டான். மணவாளன் இங்கு வந்து சுற்றும் முற்றும் பார்த்தபோது... முன்புண்டாயிருந்த ஒரே சிறகுள்ள வாத்தாக இல்லாமல். இப்பொழுது இவன் வித்தியாசமான வாத்தாக இருக்கிறான். பாருங்கள்? “பரிசுத்த ஆவியின் அபிஷேகம், இன்னும் மற்றவை, இல்லாமல் இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்? நீ எப்படி உள்ளே வந்தாய்?” என்று கேட்கிறான். எப்படியோ அவன் பக்கவழியாக நுழைந்து வந்தான். சரியான அழைப்பில்லாமல் அவன் வந்துவிட்டான். பாருங்கள்? அவன் கல்விமுறை போன்ற வழியில் வந்து உள்ளே நுழைந்துவிட்டான்.
329. "அவனைக் கட்டிக்கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள்” என்று அவர் கட்டளையிட்டார். பாருங்கள்? அவன் உபத்திரவகாலத்திற்குள் சென்று விடுகிறான். பாருங்கள்? அவன் வாசலின் வழியாக உட்பிரவேசிக்கவில்லை. ஆகவே, சரி. கேள்வி: