331. ஆம் அது சரி. நன்றி, எழுநூறு பேருக்கு பதிலாக... உமக்கு நன்றி. அது சரியாக உள்ளது. ஏழாயிரம் பேருக்கு பதிலாக எழுநூறு... "சகோதரன் பிரன்ஹாம்...” எழுநூறுக்குப் பதிலாக ஏழாயிரம் இப்பொழுது அதை கவனித்தீர்களா?
332. பாருங்கள் ஒரு மனிதன் எவ்விதம் பிரசங்கம் செய்ய வரும்போது... நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்.
எலியா வனாந்திரத்திலிருந்து வந்தபோது, அவனிடம் ஒரு செய்தி உண்டாயிருந்தது. அவன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு நேரடியாக ராஜாவினிடம் சென்று, "என் வாக்கின்படியே அன்றி வானத்திலிருந்து பனியும் கூட பெய்யாதிருக்கும்” என்றான். அந்த வார்த்தையே அவனுக்கு உண்டாயிருந்தது. அதைக் கூறிவிட்டு மற்ற யாரிடமும் வேறொன்றையும் கூறாமல் திரும்பிச் சென்றுவிட்டான். பாருங்கள்.
333. வேறொரு செய்தி அவனுக்குண்டானபோது, அவன் புறப்பட்டு வந்து, அந்தச் செய்தியை உரைத்துவிட்டு திரும்பவும் வனாந்திரத்துக்கு சென்று விட்டான். பாருங்கள்?
334. இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால், நான் இந்த கூடாரத்திற்கு மூலைக்கல்லை நாட்டினபோது அவர், “ஒரு சுவிசேஷகனுடைய ஊழியத்தைச் செய்” என்று கூறினார். அந்த ஊழியம் என்னை விட்டு எடுக்கப்பட்டு, வேறொன்று நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றது. நான் இங்கு வந்து... பாருங்கள், சுவிசேஷகனின் ஊழியத்தை செய்து, மற்ற ஏதோ ஒன்றைச் செய்து, நீங்கள் எதுவரைக்கும் வந்திருக்கிறீர்கள் என்று கண்டு கொண்டிருக்கிறேன்! பாருங்கள்? நீங்கள்... ஓ, இதை புரிந்துகொள்ள சபை போதிய அளவுக்கு ஆவிக்குரியதாயிருக்குமென்று எதிர்பார்க்கிறேன்.