335. இல்லை, இல்லை, அவன் புறஜாதி சபைக்கு அனுப்படும் புறஜாதியாயிருப்பான், பாருங்கள். தேவன் தமக்கு சொந்தமானவர்களிடமே எப்பொழுதும் அனுப்புகிறார் பாருங்கள் "அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.” அவர் எப்பொழுதும் அந்நேரத்தின் செய்தியையே அனுப்புகிறார்
336. தேவன் யூதர்களுடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எந்த புறஜாதி தீர்க்கதரிசியும் அப்பொழுது தோன்றவில்லை. அவ்வாறே தேவன் புறஜாதிகளுடன் தொடர்பு கொள்ளும்போது, யூத தீர்க்கதரிசிகள் வருவதில்லை. தேவன் மறுபடியுமாக யூதர்களிடம் திரும்பும்போது, புறஜாதி தீர்க்கதரிசிகள் இருக்கமாட்டார்கள். பாருங்கள்? நான் கூறுவது புரிகின்றதா? சரி.
எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழ்ந்த பின்பு...
337. ஆம். ஒன்றிலிருந்த மற்றொன்றிற்கு மாறுவதற்கு முன்பாக ஒரு இடை சமயம் உண்டாயிருக்கும் - ஒரு செய்தியிலிருந்து வேறொரு செய்திக்கு போவதற்கு முன்பு நான் உங்ளுக்கு ஏற்கனவே விவரித்துக் கூறினவிதமாக! பவுல் புறஜாதிகளிடம் சென்றது போன்று. சரி…