340. நல்லது, இது நீண்ட ஒன்றாகும். நான் அதை ஆணித்தரமாகக் கூறவேண்டும். ஒருக்கால் என்னால் சரிவர இதை விவரிக்கக்கூடாமல் இருக்கலாம். என்னால் இயன்றவரை விவரிக்கிறேன். சாத்தான் ஆயிர வருஷம் கட்டப்பட்டு, வெளிப்படுத்தல் 20:8ல் கூறப்பட்டுள்ள யுத்தத்திற்கு அவிழ்த்து விடப்படுவதைக் குறித்து தயவு செய்து விவரிக்கவும்.
341. அது அர்மெகதோன் யுத்தம் அல்ல. அந்த யுத்தம் இந்தப் பக்கத்தில் நடக்கிறது (அதாவது ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு என்று குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்) - உபத்திரவ காலம் முடிவடைந்தவுடன். கோகு மாகோகு யுத்தத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
342. ஒன்றுமில்லை. ஒன்று ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு, மற்றொன்று ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பின்பு. நான்காம் முத்திரையில் கூறப்பட்டுள்ளபடி, புதிய பூமியில் வாழும் மக்களினின்று கோகும் மாகோகும் சேர்க்கப்படுவார்களா?
343. சாத்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, பொல்லாதவர் அனைவரையும் ஒன்று கூட்டி இந்த இடத்திற்கு அழைத்து வர புறப்பட்டுச் செல்கிறான், தேவன் அப்பொழுது வானத்திலிருந்து அக்கினியையும் கல் மழையையும் வருஷிக்கச் செய்கின்றார்: அவர்கள் எரிந்து போயினர் ஆக மொத்தம் இரண்டு யுத்தங்கள்.