150. அது சரி. இயேசு, ஞானஸ்நானம் பண்ணப்பட்ட பிறகு தண்ணீரை விட்டு வெளியே வந்து நேராக, அவர் நாற்பது பகல் மற்றும் இரவுகளுக்கு பிசாசினால் சோதிக்கப்படும்படியாக ஆவியானவர் அவரை வனாந்திரத்திற்குள் வழி நடத்தினார். அவர் அங்கே நாற்பது பகல் மற்றும் இரவுகளில் சோதிக்கப்பட்டார். அவர் உபவாசித்தார். அவர் வெளியே வந்தார். அவர் தம்முடைய உபவாசத்தை விட்டு வெளியே வந்த போது பிசாசு அவரை சோதித்தான். அவர் பிசாசை தேவனுடைய வார்த்தையினாலே எதிர்த்து, தம்முடைய ஊழியத்திற்குள் பிரவேசித்து, வேத வசனங்களின்படி மூன்றரை ஆண்டுகள் பிரசங்கித்தார்.
151. கவனியுங்கள், அவர் மூன்றரை ஆண்டுகள் பிரசங்கித்து அந்த நேரத்திலே, அவர் பலியாக சங்கரிக்கப்படுவார் என்று தேவன் தானியேலில் பேசியிருக்கிறார். அது அவ்விதமே சரி. அவர் உலகம் தோன்றுவதற்கு முன்பே நியமிக்கப்பட்டார். அது சரி.
152. மத்தேயு 4 வது அதிகாரத்தில் நீங்கள் அதைக் காணலாம். அது உங்கள் நம்பிக்கையின்படியே சரியாக இல்லையெனில், சரி.
இப்பொழுது அந்த ஒன்று… அதை நாம்… ஓ, ஆம்! முன்பாகவே நியமிக்கப்பட்டிருத்தல். நாம் அதைப் பெற்றிருக்கி றோம், அப்படிதானே...?