344. ஸ்மக்கர் என்பவர் எழுதியுள்ள 'மகிமையான சீர்திருத்தம்'' என்னும் புத்தகத்தை வாசியுங்கள். சில கல்விமான்கள் அதை வைத்திருக்கின்றனர் என்று நினைக்கிறேன். அது சபையின் சரித்திரமாகும். அது எந்தப் பக்கத்திலுள்ளது என எனக்கு ஞாபகமில்லை. ஆனால் அது ஆப்பிரிக்காவிலுள்ள ஹிப்போ நாட்டவரான பரி. அகஸ்டின் என்பவரால் தொடங்கப்பட்டு சபைக்கு அளிக்கப்பட்டது. அது கி.பி. 354ல் தொடங்கி கி.பி 1850 வரை, அயர்லாந்தில் நேர்ந்த படுகொலை வரை நீடித்தது. அது அதனுடைய காலம் கி.பி.33 அல்லது கி.பி.30... 354. இப்பொழுது நான் அதைச் சரியாகக் கூறட்டும். கி.பி.3-5-4லிருந்து கி.பி.1-8-5-0, 1850 வரை. ரோமாபுரியுடன் போப்பாண்டவருடன் இணங்காத காரணத்திற்காக ஆறு கோடியே எண்பது இலட்சம் பிராடெஸ்டுண்டுகள் கொல்லப்பட்டனர் என்று ரோமரால் 'இரத்தச் சாட்சிகளின் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இது சரித்திரமாகும். அது தவறென்று நீங்கள் கூறமுற்பட்டால், நீங்கள் ஜார்ஜ் வாஷிங்டன் அல்லது லிங்கன் என்பவர்கள் இல்லவே இல்லை என்றும்கூட கூறலாம். ஏனெனில் அதைக் காண நாம் அப்பொழுது பிறக்கவில்லை. அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்தனர் என்று நம்புகிறேன். அவர்கள் இருந்தார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளன.