345. அது ஏழாயிரம்தான், பாருங்கள். அவர்கள் "பாகாலை முத்தம்'' செய்வதில்லை. இங்குள்ள உங்களில் எத்தனை பேர் முன்பு கத்தோலிக்கராயிருந்தீர்கள்? நிச்சயமாக. பாருங்கள்? நீங்கள் சிலைகளை முத்தம் செய்திருப்பீர்கள்? பாருங்கள்?
346. பாபிலோன், நேபுகாத்நேச்சார் காலத்தில், புறஜாதி ராஜ்யம் உண்டாயிருந்தபோது, ஒரு மனிதனை வழிபடும் வழக்கம் இருந்து வந்தது. நேபுகாத்நேச்சார் ஒரு மனிதனின் சொரூபத்தை உண்டாக்கினான். உங்களுக்கு ஆவிக்குரிய சிந்தை இருக்குமானால்... இந்த வெளிப்பாட்டை கவனமாய்க் கேளுங்கள். அவன் தனக்குக் கிடைத்த வெளிப்பாட்டின்படி தானியேலின் சொரூபத்தை உண்டு பண்ணினான். பக்தியுள்ள ஒரு மனிதனை வழிபடுதல். பார்த்தீர்களா? ஏனெனில் தானியேலுக்கு அவன் பெல்தெஷாத்சார் என்று பெயர் சூட்டினான் அல்லவா? அதுவே அவனுடைய தெய்வத்தின் நாமமாயிருந்தது. அந்த தெய்வத்துக்கு அவன் சொரூபத்தை உண்டு பண்ணினான்-அதுவே தானியேலின் சொரூபமாகும். தானியேல் தன் சொந்த சொரூபத்துக்கு முன்பாக வணங்க மறுத்தான். பாருங்கள்? பாருங்கள்?
347. அதே வழக்கம் மறுபடியும் நம்மிடையே உள்ளது. இப்பொழுது கவனியுங்கள். நேபுகாத்நேச்சார் என்னும் அரசனின் மூலமாய் பாபிலோனின் நாட்களின் புறஜாதி ராஜ்யம் தோன்றினது. இந்த அரசன் பரிசுத்தமுள்ள மனிதன் ஒருவனின் சிலையை உண்டு பண்ணி, ஜனங்களெல்லாரும் அதை வணங்கவேண்டுமென்று நிர்ப்பந்தம் செய்து, சபையையும் அரசாங்கத்தையும் ஒருங்கே இணைத்தான். புறஜாதி ராஜ்யம் சொரூபத்தின் பாதங்களில் முடிவடைகிறது. கையெழுத்து சுவரில் தோன்றினது. அப்பொழுது அரசியல் ஆதிக்கம் சபையையும் அரசாங்கத்தையும் ஒன்றுபடுத்தி சிலைகளை முத்தம் செய்ய நிர்ப்பந்தம் செய்தது - பரிசுத்த மனிதனின் சிலை, உண்மையாக.