349. இல்லையென்று நம்புகிறேன். இல்லை, இல்லை. நண்பர்களே, அவ்விதக் கருத்தை உங்கள் சிந்தையில் கொள்ளவேண்டாம். பாருங்கள்? நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள். உருளைக் கிழங்கு தோண்டுங்கள். சபைக்குச் செல்லுங்கள். இவ்விதம் தொடர்ந்து சென்றுக் கொண்டிருங்கள். அது இன்று காலை சம்பவிக்குமானால் நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து கொண்டிருப்பவர்களாக காணப்பட வேண்டும். ஆரம்பிக்க வேண்டாம்...
350. அவ்விதம் நீங்கள் வியாக்கியானம் செய்தால், அது எதற்கென்று குறிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை அவமாக்குபவர்களாவீர்கள். அதைப்பற்றிச் சில விசித்திரமான உங்கள் சொந்த கருத்துக்களை உண்டாக்கிக் கொள்ளவேண்டாம். நீங்கள் அமர்ந்திருந்து அத்தகைய காரியங்களைக் கேட்கும்போது, ''நன்றி, கர்த்தாவே, நான் இன்னும் சற்று அருகாமையில் உம்முடன் நடக்கப் போகிறேன்” என்று கூறுங்கள். பாருங்கள்? நீங்கள் செய்யும் வேலையிலிருந்து நின்று விட்டு, ''நான் எல்லாவற்றையும் விற்றுவிடப் போகின்றேன்” என்று கூற வேண்டாம்.
351. நாங்கள் இங்கிருந்து செல்வதற்குச் சற்று முன்பாக, ஒருநாள் வடக்கு கரோலினாவிலிருந்து ஒரு மனிதன் என்னிடம் ஓடோடி வந்து, "தேவனுக்கு மகிமை! அந்த மகத்தான இன்னார் எங்கிருக்கிறார் என்று தெரியுமா?'' என்று வினவினார். நான் "எனக்குத் தெரியாது,'' என்று விடையளித்தேன்.
352. “ஓ, ஆம் ஐயா. அவர் ஆடியோ மிஷன் (Audio mission) நிர்வாகத்தின் தலைவர்'' என்றார் அவர்.
நான், "எது?'' என்று கேட்டேன். அவர், "ஆடியோ மிஷன்” என்றார். நான் "எனக்குப் புரியவில்லை'' என்றேன். அவரோ, "ஓ, இந்த மனிதர் அதற்குத் தலைவர்'' என்றார்.
நான் “அவருடைய பெயர் என்னவென்று சொன்னீர்கள்?'' என்று கேட்டேன்.
353. அவர், ''ப்ரெளன் (Brown) அல்லது பிரான்ஹாம் (Branham) என்று நம்புகிறேன்'' என்றார்.
"என்னுடைய பெயர்தான் பிரான்ஹாம்'' என்று பதிலளித்தேன். ''நீங்கள் ஆடியோ மிஷனின் தலைவரா'' என்று அவர் கேட்டார்.
நான், 'இல்லை, ஐயா'' என்றேன்.
அவர், 'இப்பொழுது ஆயிரம் வருட அரசாட்சி எங்குள்ளது?'' என்று வினவினார்.
நான், 'எனக்குத் தெரியாது' என்று விடையளித்தேன்.
354. அவர், "அது இப்பொழுது இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் அதை அறியாமலிருக்கிறீர்கள்' என்றார். நான், ''இல்லை, ஐயா எனக்குத் தெரியாது'' என்று கூறினேன்.
355. அவர், "தேவனுக்கு மகிமை, சில நண்பர்கள் என்னிடம் வந்து அதைக் குறித்துக் கேட்டனர். நான் வேலையை விட்டுவிட்டேன்.'' அவர் இன்னும் வேலை உடையை அணிந்திருந்தார். ''சகோதரனே, எனக்கு ஆயிரம்வருட அரசாட்சி தேவை'' என்றார்.
356. நான், ''நீங்கள் சற்று குழப்படைந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்படித்தானே, சகோதரனே?'' என்று கேட்டேன்.
357. அந்தச் சமயத்தில் ஒரு வாடகை கார் வந்தது. அதனுள் அமர்ந்திருந்த பெண்மணி. ''நிறுத்து, நிறுத்து நிறுத்து” என்று ஓட்டுநரிடம் கூறினாள், ஒரு சிறு பெண்மணி காரை விட்டு வெளியே வந்து என்னிடம், "நீங்கள் என் கணவருக்காக இப்பொழுது ஜெபிக்க வேண்டும்'' என்றாள்.
நான், "சரி அம்மா, அவருக்கென்ன?'' என்றேன்.
358. அவள், ''நல்லது உங்களைப் பேட்டி கண்டு ஜெபம் செய்து கொள்ள வேண்டுமானால், ஒரு மாத காலம் செல்லும் என்று கேள்விப் பட்டேனே?'' என்றாள்.
நான், "என்ன?" என்று கேட்டேன்.
359. அவள், "ஆம், ஐயா நான் பதட்ட நிலையிலிருக்கிறேன். நீங்கள் கண்டிப்பாக என் கணவருக்காக ஜெபம் செய்யவேண்டும்” என்றாள்.
நான், 'நிச்சயமாக. அவர் எங்கிருக்கிறார்? அவரைக் கொண்டு வாருங்கள்” என்றேன்.
360. இந்த மனிதன் அங்கு நின்றுகொண்டு நடந்தவைகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் என்னிடம், "நீங்கள் வியாதியஸ்தருக்காகவும் ஜெபிப்பதுண்டா ?'' என்று கேட்டார்.
நான், 'ஆம், ஐயா'' என்று பதிலளித்தேன்.
361. “உங்கள் பெயர் என்னவென்று கூறினீர்கள், பிரான்ஹாம் அல்லவா? உங்களுக்கு ஆயிரம் வருட அரசாட்சியைக் குறித்து ஒன்றும் தெரியாதா?'' என்று அவர் கேட்டார்.
362. நான், ''சரி நான் ... இல்லை, எனக்குத் தெரியவில்லை. வேதத்திலிருந்து அதை என்னால் சரிவர புரிந்துகொள்ள முடியவில்லை'' என்றேன்.
363. அவரோ, ''அது இங்கே இருக்கின்றது. ஜனங்கள் எல்லாவிடங்களிலுமிருந்து வந்திருக்கின்றனர்” என்றார். நான், "எந்த இடத்தில் அது இருக்கின்றது?” என்று கேட்டேன். அவர், ''இங்குதான் இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில்லில் அந்த பாலத்தின் கீழ்'' என்று பதிலுரைத்தார்.
364. "ஐயா, நீங்கள் என்னை திகைக்க வைத்துவிட்டீர்கள். எனக்கு அதைக் குறித்து ஒன்றும் தெரியாது. நாம் உள்ளே போய் சற்று அமருவோம். வேண்டுமானால் நாம் இதைக் குறித்து பேசலாம்” என்றேன்.
365. நண்பர்களே, நீங்கள் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் ஒருக் காலும் ஒரு ஊழியத்திற்காக ஆசைப்படவேண்டாம். பாருங்கள்? நான் கூறுவது உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் இருக்கும் இடத்திலேயே மிகவும் மகிழச்சியுள்ளவர்களாயிருப்பீர்கள். பாருங்கள்? நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள்.