367. ஆம். வெளிப்படுத்தின விசேஷம் 16, 18:8லும் 12-ம் அதிகாரத்திலும் நீங்கள் இதைக் காணலாம். இதை எழுதினவர் இங்கிருப்பாரானால், இங்கு அதைக் குறித்து உள்ள காகிதக் துண்டை எடுத்துக் கொள்ள விரும்புவாரானால்- நீங்கள் அதைக் காணலாம். ஆம் பாருங்கள்? “ஆம்... ஐயையோ! மகா நகரமே... ஒரே நாழிகையிலே இவள் பாழாய்ப் போனாளே.” பூமியின் வர்த்தகர்களும் மற்றவர்களும் அவளுக்கு சரக்குளை கொண்டு வந்திருந்தனர். அது அப்படியிருக்கும். அது சரி.
368. கம்யூனிஸத்தைக் குறித்து மறந்துவிடுங்கள். பாருங்கள்? அது தேவனைப் பற்றிய எண்ணமில்லாத காட்டுமிரண்டித்தனமான ஒரு கூட்டமேயன்றி, உலகத்தில் வேறொன்றுமல்ல. அது ஒரு அமைப்பாகும்... அது எவ்வளவு சுலபம் என்பதைக் காட்ட, நான் உங்களுக்கு சிலதைக் காட்டட்டும். ஏன், முழு ரஷ்யாவிலுமே நூற்றில் ஒரு பங்கு மக்களே இந்த கம்யூனிஸத்தை (பொது உடைமைக் கொள்கையை) ஆதரிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு செய்தியாளன் தேவைப்படுகிறது. பாருங்கள்? ஒரே ஒரு சதவிகிதம்-அப்படியானால் இன்னமும் தொண்ணூற்றொன்பது சதவிகிதம் மக்கள் கிறிஸ்தவர்கள் பக்கம். ஒரே ஒரு சதவிகிதம்; ஒரு சதவிகிதம் ஜனங்கள் எவ்விதம் தொண்ணூற்றொன்பது சதவிகிதம் மக்களைக் கட்டுப்படுத்தக் கூடும்? இதுவே உங்களுக்குக் காரியத்தை விளங்க வைக்க வேண்டும். தேவன் அதை அனுமதிக்க வில்லையென்றால், அவர்கள் அநேக வருடங்களுக்கு முன்பாகவே அக்கொள்கையை வெளியே தூக்கி எறிந்திருப்பார்கள். பாருங்கள்? நிச்சயமாக.