370. நல்லது, அவர் வனாந்திரத்திற்குப் போவார் என்று திட்டவட்டமாக கூறமாட்டேன். ஆனால் அவர் இவ்விதமாய் இருப்பார். பாருங்கள். அவர்... எலியாவும் எலிசாவுமாக இருந்தார். நீங்கள் கவனித்தீர்களா? அதைப் போன்ற மனிதர்கள் பெரும்பாலும் ஒதுங்கியே இருக்கிறார்கள் அவர்கள் மனிதர்களிடமிருந்து தள்ளியே ஜீவிக்கிறார்கள். அவர்களோ விநோதமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஜனங்களோடு அதிகம் கலவாதிருக்கிறார்கள்.
371. எலிசாவும், எலியாவும், யோவான் ஸ்நானனும் எப்படியிருந்தார்களென்றும் அவர்களிலிருந்த ஆவியின் தன்மையையும் கவனித்தீர்களா? அந்த மனிதன் வனாந்தரத்தை விரும்புகிறவனாக இருப்பான் என நம்புகிறேன். அவன் ஒருவேளை வனாந்தரத்தில் தங்குகிறவனாயிருக்கக்கூடும். அவன் ஒரு துறவியாக வனாந்திரத்திலேயே வாழ்பவனாக இருப்பானோ என்பதைக் குறித்து எனக்குத் தெரியாது. சில சமயங்களில் அவர்கள் அவ்விதம் வாழ்ந்தனர். எலிசா அவ்விதம் வாழவில்லை. ஆனால் எலியாவோ அவ்விதம் வாழ்ந்தான். பிறகு யோவானும்கூட வனாந்திரத்திலே வாழ்ந்தான்.
372. இந்த மற்ற தீர்க்கதரிசிகள் யூதேயாவிலிருந்து வரும்போது அவர்கள் எங்கே தங்குவார்கள் என்பது தெரியவில்லை. அதைச் சொல்வது கடினமான காரியம். அவர்கள் எங்காவது குன்றுகளில் தற்காலிகமாக தங்கக்கூடும். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைக்கின்ற அந்த நாட்களில் என்ன செய்வார்களென்று தெரியவில்லை.
நான் என்ன சொல்ல முயற்சிக்கிறேன் என்றால், இதுதான் இருக்குமா... “அவர்கள் வனாந்தரத்திலே வசிப்பவர்களாக இருப்பார்களா?” என்று கேட்கப் பார்க்கிறார்கள்.
373. நல்லது, எங்காவது போதுமான காடுகளுள்ள வனாந்தரத்தை வசிப்பதற்கென்று தேடுவார்களென்றால், அவர்கள் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவிற்குத்தான் போகவேண்டும். பார்த்தீர்களா? ஆகவே அது யாராவது... வனாந்தரங்களெல்லாம் அழிக்கப் பட்டுவிட்டன. பாருங்கள்? அதிகமான காடு விடப்படவில்லை. ஆகவே ஒரே காரியம், அவர்கள் வனாந்தரத்தை விரும்புகிறவர்களாகவும் ஒருவேளை அதிகமாக வனாந்தரத்தில் தங்குகிறவர்களாகவும் இருக்கக்கூடும். மேலும் அவர்கள்... அவர்களுடைய இயற்கைக் குணத்தைக் கவனிப்பீர்களானால், அவர்கள் விட்டுக் கொடுக்காதவர்களாக இருப்பார்கள். அது வரும்போது நீங்கள் அதை அறிந்து கொள்வீர்கள். பாருங்கள்? நீங்கள் விழித்திருப்பீர்களானால் நீங்கள் அதைக் காண்பீர்கள்.
374. இப்பொழுது, இங்கே ஒரு கேள்வியிருக்கிறது. அதை எப்படி அணுகுவதென்று தெரியவில்லை. இன்னும் ஒரு கேள்வி என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது, அதன்பிறகு ஒலி நாடாவை (ஒலிப்பதிவு செய்வதை) நிறுத்தச் சொல்லப் போகிறேன்.