375. நல்லது, நான் இப்போதுதான் அதை விவரித்தேன். பாருங்கள்? நான் உங்களிடம் இதைக் கேட்க விரும்புகிறேன். நான்... இயேசுவானவர் பிதாவிடம் ஜெபித்தபோது, பார்த்தீர்களா... (சபையிலுள்ள ஒரு சகோதரனுடன் சகோதரன் பிரன்ஹாம் பேச ஆரம்பிக்கிறார் - ஆசி) நீங்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இல்லையா, சகோதரனே? நீங்கள் ஒரு நிமிடம் எழுந்து நிற்கமாட்டீர்களா? நீங்கள் பரிசுத்த ஆவியின் ஆபிஷேகத்தை பெற்றிருப்பதாக உரிமை கொண்டாடுகிறீர்களா? (அந்த சகோதரன் 'ஆம் ஐயா” என்று கூறுகிறார் - ஆசி) நானும் அப்படித்தான். அப்படியானால் அது என்ன? இந்த இரகசியங்களை வெளியாக்க என்னில் தானே வல்லமையை உடையவனாக இருப்பதாக நான் உரிமை கொண்டாடவில்லை. பிணியாளியை சுகமாக்கும் வல்லமை என்னிலே இல்லை. அது தேவன்.
376. (சகோதரன் பிரன்ஹாம் சபையிலுள்ள அந்த சகோதரனிடம் தொடர்ந்து பேசுகிறார் - ஆசி) நீங்கள் ஒரு ஊழியக்காரர் என்று நம்புகிறேன். நான் தவறாகக் கூறாவிட்டால், நீங்கள் ஆர்கன்ஸாஸிலிருந்து வருகிறீர்கள். நல்லது இப்பொழுது, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டுமென்னும் வாஞ்சை உங்களிலுள்ளது. சாதாரணமாக, நீங்கள் ஒரு பண்ணையிலும் அதைச் சுற்றியுள்ள இடத்திலும் வளர்க்கப்பட்டீர்கள். உங்களுக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டுமென்று ஏதோ ஒன்று உங்களுக்குள் வந்தது. அது நீங்கள் ஆவியானவர் என்று அழைக்கப்படும் இன்னொருவர், அது சரியா? (ஆம், ஐயா) சரி.
377. (சகோதரன் பிரன்ஹாம் சபையிலுள்ள அந்த சகோதரனிடம் தொடர்ந்து பேசுகிறார் - ஆசி). இப்போது உங்களைக் கேட்க விரும்புகிறேன். அந்த பரிசுத்த ஆவியானவர் உங்ளுக்குள்ளே வாசம் பண்ணுகிறார். அது சரிதானா? (அந்த சகோதரன், "அது சரி” என்கிறார்) நீங்கள் அவருடன் பேசுகிறீர்களா? ("ஆம், ஐயா') சம்பாஷிக்கிறீர்களா? அவரிடம் ஜெபிக்கிறீர்களா? நல்லது அவ்வளவுதான் நான் விரும்பியது... உங்களுக்கு மிக்க நன்றி, பாருங்கள்?
இப்போது அதைப் புரிந்துகொண்டீர்களா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி)
378. உங்களை ஒன்று கேட்பேன்: “பரலோகத்திலிருந்து இறங்கினவரும், பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனெயல்லாமல்” என்று யோவான் 3-ம் அதிகாரத்தில் இயேசு எவ்வாறு கூறினார்... (பாருங்கள்?) பரலோகத்தில் இருக்கிறார். இப்பொழுது பூமிக்கு வருவார்' பாருங்கள்? இப்பொழுது பரலோகத்தில் இருக்கிறவரான மனுஷகுமாரன்' என்று அவர் கூறியபோது இங்கே அந்த நபருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். இப்போது, நீங்கள் அதற்கு எனக்கு பதில் சொல்லுங்கள். இயேசுவும், பிதாவும் ஒரே நபர்தான்.
379. பரிசுத்த ஆவியானவர் என்னிலும் இருக்கும் விதமாகவே இயேசுவும் பிதாவானவரும் ஒரே ஆளாயிருந்தார். நான் பிரசங்கிப்பதை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அது நானல்ல,
ஒரு வார்த்தையைப் பேசி... உங்களுக்குத் தெரியும். ஒரு மிருகத்தை வரவழைக்கக் கூடியது நானல்ல; அங்கே உட்கார்ந்துக் கொண்டு அதைப் பார்த்து அம்மிருகத்தைக் கொன்று அதைப் புசிப்பது; அது சிருஷ்டிக்கும் வல்லமை; அது மனிதர்களிலே கிடையாது.
380. மருத்துவர்களால் தன் முதுகின் மீது கிடத்தப்பட்டு இன்றிரவு இருதயக் கோளாறுடன் இருக்கும் ஒரு சிறு பையனை எடுத்துக்கொண்டு, 'வில்லியம் பிரன்ஹாம் உரைப்பதாவது' என்று என்னால் கூற இயலாது. இல்லை! 'கர்த்தர் உரைக்கிறதாவது', அது முடித்துவிட்டது. அவனை மறுநாளில் மருத்துவர்களிடம் அழைத்துக்கொண்டுச் செல்லும்போது வியாதி முற்றிலுமாய்ப் போய்விட்டிருக்கிறது.
381. இரத்தத்தில் புற்றுநோயுடன் ஒரு சிறு பிள்ளை, கண்களெல்லாம் வீங்கிப் பெருத்துவிட்டிருந்தது. உடலெல்லாம் மஞ்சளாகி விட்டிருந்தது. வயிறும் கூட... அந்தப் பிள்ளையை இங்கு கொண்டு வருவதற்கும்கூட அதை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று இரத்தம் கொடுப்பது முதலிய காரியங்களைச் செய்யவேண்டியிருந்தது! ஐந்து நிமிடம் கழித்து, சாப்பிடத் தனக்கு ஒரு ஹாம்பார் (ஒருவகைத் திண்பண்டம்-தமிழாக்கியோன்) வேண்டுமென அது அழுதது. அடுத்த நாள் அப்பிள்ளையை மருத்துவரிடம் கொண்டு சென்றபோது அதன் அடையாளம்கூட காணப் படவில்லை. அது வில்லியம் பிரன்ஹாம் உரைப்பதாவது' என்பதா? அது 'கர்த்தர் உரைப்பதாவது' என்பதாகும்! ஆனாலும் அவர் என்னிடத்திலும் வித்தியாசப்பட்ட ஒரு தனி நபராயிருக்கிறார். ஆயினும் அவர் தெரிவிக்கப்படும் ஒரேவழி என் மூலமாகும் ஓ. பாருங்கள்?
382. அவ்வண்ணமாகவே இயேசுவும் பிதாவும்; 'கிரியைகளை நடப்பிக்கிறது நானல்ல, என்னில் வாசம் பண்ணும் பிதாவே இவைகளைச் செய்கிறார்” என்று இயேசு கூறினார்.
இப்போது, “பரலோகத்திலிருந்திறங்கினவரும், பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.” பாருங்கள்? அது என்ன? அவர் சர்வவியாபியாயிருந்தார். ஏனென்றால் அவர் தேவனாயிருந்தார்.
383. இப்போது, இந்த மற்றொரு கேள்வி, நான்... (சகோதரன் பிரன்ஹாம் தன் விரலை ஒருமுறை சொடுக்குகிறார் - ஆசி) நான் இந்த வார்த்தைகளைக் கூறிட விரும்புகிறேன். நீங்கள் பேசிக்கொண்டிருந்ததைப்பற்றி விளக்கிக் கூறுங்கள்... (ஒலி நாடாவில் காலியிடம். சபையில் ஒரு சகோதரன் அந்நிய பாஷையில் பேசுகிறார்.)
நன்றி பிதாவாகிய தேவனே - தேவரீர் ஆவியானவராக இங்கிருப்பதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். பிதாவே, ஒரு சமயம் சத்துருவானவன் வந்து கொண்டிருந்தபோது ஆவியானவர் ஒரு மனி தன் மீது வந்திறங்கி அவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்துக் கூறினார் என்று எங்களுக்கு உரைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்கள் எவ்விதம் சென்று எதிரியை முறியடிப்பதென்றும், எதிரியை எங்கே கண்டுபிடிப்பதென்றும் அறிந்து கொண்டபடியினால் அது காரியங்களை ஒழுங்குபடுத்திற்று.
384. பிதாவே, தேவரீர் எப்போதும் போலவே தேவனாகவே இருந்து வருவதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். தேவரீர் இன்னும் அதேவிதமாகவேயிருக்கிறீர். நாங்கள் மாறிப் போகிறோம், யுகங்கள் மாறுகின்றன. காலங்களும் மாறுகின்றன. ஜனங்களும் மாறுகிறார்கள். ஆனால் தேவரீர் ஒரு போதும் மாறுவதிலை. உம்முடைய முறைமைகள் மாறாதவைகளாயிருக்கின்றன. உம்முடைய கிருபையும் மாறாததாயிருக்கின்றது: உம்முடைய கிரியைகளும் மாறாதவைகளாயிருக்கின்றன. ஏனெனில் அவை அற்புதமானவைகளும், மனிதன் புரிந்துகொள்ளக் கூடாதபடி அவனுடைய எத்தகையை அறிவுக்கும் அப்பாற்பட்டவைகளுமாயிருக்கின்றன.
385. ஆகவே, கர்த்தாவே, உம்முடைய இரகசியங்கள் உம்முடைய ஊழியக்காரர்களின் இருதயங்களில் மறைக்கப்பட்டிருப்பதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். அதற்காக, கர்த்தாவே, நாங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கிறோம். உமக்குரிய ஒவ்வொரு மீனையும் பிடிக்கும் நிச்சயத்துடன் ஒவ்வொருவரையும் கொண்டு வரத்தக்கதாக அன்புடன் பிரயாசப்படவும் நாங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பிரகாசிக்கும் விளக்குகளாகச் செல்லட்டும். தம்முடைய மணவாட்டியை ஆட்டுக்குட்டியானவர் எப்போதும் தம் பக்கத்திலிருக்கத்தக்கதாக, கொண்டு செல்வார். அந்த நேரத்திற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம். ஆமென்.