153. இப்பொழுது, நமக்குத் தெரிந்த வரை ஆதாமும் ஏவாளும் வெள்ளை, அல்லது பழுப்பு, அல்லது மஞ்சள், அல்லது கறுப்பாக இருந்தனரா என்று உங்களுக்கு என்னால் கூறமுடியவில்லை. உங்களுக்கு என்னால் அதைக் கூற முடியாது. தேவனைத் தவிர வேறொருவருக்கும் அது தெரியாது: நான் யூகிக்கிறேன்; அவர் அங்கே இருந்தார். இப்பொழுது அந்த... நாமெல்லாரும் ஒரே பாஷைக்காரரும் ஒரே ஜனத்தாருமாய், குழப்பம் என்கின்ற பாபேல் கோபுரம் வரைக்கும் இருந்து வந்தோம். ஆகவே பிறகு அவர்களுடைய பாஷைகள் வித்தியாசப்பட்டது. நமக்கு தெரிந்த வரை அந்த நேரம் வரை அவர்களெல்லாரும் ஒரே ஜனங்களாயிருந்தனர். பிறகு அவர்கள் உடைந்து உலகின் பல்வேறு பாகங்களுக்கு சிதறிப்போயினர்.
154. சிலர்... நீங்கள் ஒரு மிருகத்தை எடுத்துக்கொள்ளுங்கள்; ஒரு குறிப்பிட்ட மண்பகுதியில் உணவு உண்கின்ற எந்த ஒரு ஜீவனையும் எடுத்துக் கொள்ளுங்கள், அது அந்த நிறமாக மாறிவிடும். நான் - இங்கே ஒரு வேட்டைக்காரன் இருப்பானானால், சில நிமிடங்களுக்கு நீங்கள் என்னை பின்தொடருங்கள். மெக்சிக்கோவிற்கு செல்லுங்கள், ஓநாயைப் பாருங்கள் (coyote) வட அமெரிக்க ப்ரெய்ரி பிரதேசத்தில் வசிக்கும் ஒருவகை ஓநாய்) அரிசோனாவிற்குச் சென்று அங்கே அந்த ஓநாயைப் பாருங்கள் வடபகுதிக்குச் சென்று அதே ஓநாயைப் பாருங்கள், மூன்று நிறங்களையும் பாருங்கள். டெக்ஸாஸில் வளர்கின்ற கிலா, பயங்கர ஜந்துவைப் (Gila Monster) பாருங்கள், அரிசோனாவில் வளர்கின்றதைப் பாருங்கள். அவைகளுக்குள்ளிருக்கின்ற வித்தியாசத்தைப் பாருங்கள் (கவனிக்கிறீர்களா?) அவைகள் இருக்கின்ற நிலம், மண்தான் காரணம். பாருங்கள்?
155. இப்பொழுது, சியாமீஸ் - சியாமீஸ்' (Siamese) ஒறு மஞ்சள் நிற மனிதன் ஆவான், ஜப்பான் தேசமக்கள் மற்றும் இன்னுமாக, ஒரு சியாமீஸ், எத்தியோப்பியா தேசத்தைச் சேர்ந்தவள் ஒரு- ஒரு கறுப்பின மனிதன் அல்லது இப்பொழுது நம்மிடையே உள்ள நீக்ரோ போன்று. அவன் அங்கே இருக்கின்ற அந்த இருண்ட நாடுகளுக்கு சென்றான்.
156. ஆகவே அவர்கள் - ஆகவே - ஆகவே – அவர்கள்... வெள்ளை மனிதராகிய நாமே ஆங்கிலோ - சாக்ஸன் (Anglo- Saxon) ஜனங்கள் ஆகும். ஆகவே-அல்லது அந்த -அல்லது இங்கிருக்கிற ஜனங்கள், வெள்ளை மக்கள் என்று நாம் அழைக்கின்றவர்கள், அவர்கள் இங்கிலாந்து தேசத்திலிருந்து வந்தவர்கள், முன்னர் அது ஏஞ்சல் லாண்ட் (Angel ILand) என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் அவர்கள் வெள்ளையாகவும் வெண் பொன்னிறமாகவும் இன்னும் போன்ற... ஐயர்லாந்து, நார்வே இன்னுமாக -அங்கே மேலே வரை பரவலாக இருக்கின்றனர். அவர்கள் எல்லாரும் ஆங்கிலோ சாக்சன் ஜனத்திலிருந்து வெளிவந்தவர்கள்.
157. இப்பொழுது, முதலாவதாக சபிக்கப்பட்டது எது? அவர்களில் ஒருவரும் அல்ல, நீங்கள் எதை குறிப்பிட முயல்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் காமை குறிப்பிட விரும்புகிறீர்கள். நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும் - காமின் ஜனத்திற்கு.
158. இப்பொழுது இங்கே, காம், சேம், யாப்பேத் இருக்கின்றனர். இப்பொழுது காம், அவன்- அவன் தன் தகப்பனுடைய நிர்வாணத்தை மூட முயற்சிக்கிவில்லை, ஆனால் சிரித்து, அவனைப் பரியாசம் பண்ணினான். ஆகவே, காம் தன்னுடைய தகப்பனின் நிர்வாணத்தைப் பார்த்ததற்காகவும், அவனுடைய நிர்வாணத்தை மூட முயற்சி செய்யாமலிருந்ததற்காகவும் தேவன் அவன் மீது சாபத்தை வைத்தார். சேமும் யாப்பேத்தும் பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பன் நிர்வாணமாய் படுத்திருந்தபோது தங்கள் (கோட்டுகளினால் தங்கள் தகப்பனை மூடினார்கள். ஆகவே இப்பொழுது, தேவன் காமிடம், அவனுடைய சந்ததி மற்றவர்களுக்கு அடிமையாயிருப்பான் என்றார்.
159. இப்பொழுது, கறுப்பாக இருப்பது ஒரு சாபம் என்று நீங்கள் எண்ணியிருந்தால், அப்படியானால், யூதனும் கறுப்பாக இருக்கின்றானே. அவ்விதமாக நீங்கள் நினைப்பீர்களானால், - அந்த - கறுப்பு மனிதன் அல்லது இப்பொழுது தேசத்தின் நீக்ரோ மனிதன் என்று நாம் அழைக்கிறோமே, நீங்கள் இந்தியாவிற்கு செல்ல வேண்டும். இந்தியர்கள் நீக்ரோக்களை விட அதிக கறுப்பாக உள்ளனர். நான் இரண்டு நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன். இங்கே இருக்கின்ற, இந்த - இந்த எத்தியோப்பியாவிலிருந்து வருகின்ற எத்தியோப்பிய மனிதன், ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவன், இன்றைக்கு நாம் அறிந்திருக்கின்ற கறுப்பு நிற மனிதன் ஆவான். இயேசு வந்த போது நாம் இருந்தவாரே அவர்கள் அங்கே இன்னுமாக அவர்களில் அநேகர் மிக பழைய காலத்தவராக -தங்கள் பழங்குடி இனத்தில் இருக்கின்றனர்.
160. பூர்வீக ஆப்பிரிக்காவின் பூர்வீகக் குடிமக்கள் இப்பொழுது இருக்கின்ற விதமாகவே, வெள்ளை நிற மக்களும் ஆதிகாலத்து பழைய காலத்தவராக இருந்தனர், கூறப்போனால் மோசமாக இருந்தனர். நினைவில் கொள்ளுங்கள், ஆங்கிலோ- சாக்ஸன் ஜனங்களாகிய நாம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாம் அங்கே நிர்வாண பூர்வகால குடிமக்களாக, வேட்டைக்காக ஒரு - ஒரு வில்லுடனும் அம்புடனும், கற்கோடாலியுடனும் இருந்தோம் (அது முற்றிலும் சரி), அது முற்றிலும் சரி. ஆகவே எது தான் அது?
161. இன்று இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மறுப்பவன் தான் சபிக்கப்பட்ட ஒருவன் ஆவான் என்று நான் உங்களுக்கு கூறுகிறேன். அவ்வளவுதான். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
162. இப்பொழுது, உங்களால் கூற முடியாது... நான் சென்று அங்கே அந்த எஸ்கிமோவின் தேசத்தை எடுத்துக் கொள்வேன் என்று உங்களால் கூறமுடியாது. அவன் அங்கே வசிக்கிறான்; அந்த மனிதன் இங்கே நம்மிடையே இருக்கின்ற கறுப்பு நிற மக்களைக் காட்டிலும் கறுப்பாக இருக்கிறான், நான் இந்தியாவிற்கு சென்று இந்தியரைக் கூட்டி வருகிறேன்; அவன் - அவன் கறுப்பாக இருக்கிறான். அவன் கறுத்த நிறமாக இருக்கிறான் - மிக கறுத்த மனிதனாக இருக்கிறான். அவன் எப்படி அழைக்கப்படுகிறானென்றால்... அவன் ஒரு இந்தியனாக இருக்கிறான். நல்லது, இப்பொழுது ஆப்பிரிக்காவில் சில ஆப்பிரிக்க ஜனங்கள் உள்ளனர்... அவர்களில் சிலர் சற்று வெள்ளையாக உள்ளனர்; சிலர் ஏறக்குறைய வெள்ளை நிறத்தவராக இருக்கின்றனர்; அவர்களில் சிலர் வித்தியாசப்பட்ட முறைகளில் இருக்கின்றனர்.
163. நீங்கள் யூதரிடம் செல்லுங்கள்; எல்லா யூதர்களும் கறுத்த நிறம் கொண்டவர்களாயிருக்கின்றனர் என்று நீங்கள் கூறுவீர்கள். யூதன் பழுப்பு நிற மனிதன் ஆவான், ஆனால் சிகப்பு தலை, நீல நிறக்கண்கள், வெள்ளை தோலைக் கொண்ட அநேகம் பேர்களை நான் கண்டிருக்கிறேன். பாருங்கள்?
164. ஆகவே அந்த முழு காரியம் என்னவெனில்: நாமெல்லாரும் ஒரே மரத்திலிருந்து வந்தவர்கள் ஆவர். அது சரி. ஏவாளின் விழுந்து போதலின் மூலமாக நாமெல்லாரும் சபிக்கப்பட்டோம். பிறகு நாமெல்லாரும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலமாக இரட்சிக்கப்பட்டோம். இதோ அது. ஆகவே சாபம் என்பது இல்லை. விசுவாசிக்காதவர்கள் குற்றஞ்சாட்டபட்டவர்கள், ஆனால் விசுவாசிக்கிறவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஆகவே நண்பர்களே, கறுப்பு நிறத்தவரோ அல்லது நீக்ரோ மனிதனோ அல்லது வெள்ளை மனிதனோ, அல்லது மஞ்சள் நிற மனிதனோ, இவர்களில் யாருமே இல்லை, அவர்கள்... கறுப்பாயிருப்பதால் கறுப்பு மனிதன் சபிக்கப் பட்டவனாகயிருந்தால், அப்படியானால் மஞ்சள் நிறமனிதன் பாதி சபிக்கப்பட்டிருக்கிறான். பிறகு அந்த - ஆகவே அப்படியானால் மஞ்சள் நிற மனிதன் - பிறகு பழுப்பு நிற மனிதன், அவன் மூன்றில் இரண்டு பங்கு சபிக்கப்பட்டவனாக உள்ளான். பாருங்கள், பாருங்கள்? ஆகவே அப்படியானால் ஆப்பிரிக்கா மனிதன் ஐந்தில் நான்கு பங்கு சபிக்கப்பட்டிருக்கிரான். இன்னுமாக இந்தியன் மிகவும் சபிக்கப்பட்டிருக்கின்றன என்று நான் யூகிக்கிறேன். ஓ, என்னே! எப்படிப்பட்ட ஒரு முட்டாள்தனம்! இல்லை! அது வித்தியாசப்பட்ட சீதோஷணம், மற்றும் காரியங்களில் மக்கள் ஜீவிக்கிறதால் அவர்கள் கறுத்துப் போயினர். இன்னுமாக...?...
165. அமெரிக்க இந்தியனைப் பாருங்கள். அவர்களில் அநேகர்... அங்கேயிருக்கின்ற நவஜோ, இந்த நாட்டில் இருக்கின்ற கறுப்பு நிற எத்தியோப்பிய ஜனங்களைக் காட்டிலும் கறுப்பு நிற ஜாதி மக்களாக இருக்கின்றனர், நவஜோ. அப்பாச்சுகள் (Apaches). அவர்கள் ஒரு - ஒரு விதமான செம்பு நிறமக்களாக இருக்கின்றனர். மேலும் வித்தியாசமான ஜாதிகள்... பாருங்கள்? அங்கே சரியாக இந்தியர்கள் மத்தியில், சரியாக இங்கே, நீங்கள் கறுப்பு நிற ஒன்றைக் காணலாம், ஏறக்குறைய... செரோக்கீயும் தாம் இருக்கிறது போன்று ஏறத்தாழ மங்கலான வெளுத்துப்போன நிறத்தையுடையவனாக இருக்கிறான். இங்கே சரியாக இந்த தேசத்தில் வித்தியாசமாக பிரிவுகள் இருக்கின்றன. ஆகவே நீங்கள் பாருங்கள், அவர்கள் பாதி சபிக்கப்பட்டுள்ளனர், முழுவதும் சபிக்கப்பட்டுள்ளனர் என்று உங்களால் கூறமுடியாது. அவர்கள் கறுப்பராயிருப்பதால் அவர்கள் சபிக்கப்படவில்லை. அவர்கள் மஞ்சள் அல்லது அவர்கள் வெள்ளை நிறத்தவராக இருப்பதால் அவர்கள் சபிக்கப் படவில்லை. எனக்குத் தெரிந்த வரையில் ஓரே ஒரு சாபம் தான் உண்டு, அது இயேசு கிறிஸ்துவைக் குறித்த அவிசுவாசமே. (டானி எனக்குத் தெரியும், முடிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது, ஆனால் இன்னும் இரண்டு கேள்விகள் என்னிடம் இருக்கின்றன).