11. சபையானது தனக்கு சொந்தமானவர்களுக்கு உத்திரவாதமாயிருக்க வேண்டுமென்பதை நாம் உணருகிறோம். இங்குள்ள சபை அங்கத்தினர்களுக்கு ஏற்படும் தேவைகளை அளிப்பதற்கு நாம் முழுவதும் உத்திரவாத முள்ளவர்களாயிருக்கிறோம். இந்த கூடாரத்துக்கு நிலையாக, எப்பொழுதும் வந்து நம்முடன் தொழுது கொள்ளும் அங்கத்தினர்களுக்கு - நாம் உத்திரவாத முள்ளவர்களாயிருக்கிறோம். இங்கு கூடிவரும் நமது சபையின் அங்கத்தினர்கள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுக்கு, நமது சகோதரரும் சகோதரிகளும் என்னும் முறையில், அவர்களுக்கு உதவி செய்ய நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
12. உண்ண உணவும் உடுக்க துணியும் இல்லாத கோடிக்கணக்கானோர் இன்றிரவு உள்ளனர் என்பதை நாம் உணருகிறோம். அவர்கள் அனைவருக்கும் உதவி செய்ய, நம்மால் முடிந்த அனைத்தும் செய்ய நமக்கு ஆவல் உள்ளது. ஆனால் அவ்விதம் நாம் செய்ய நமக்கு பணவசதி இல்லை; முழு உலகத்துக்கும் நம்மால் உதவி செய்ய முடியாது. ஆனால் நமக்கு சொந்தமானவர்களுக்கு உதவி செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். அதன் பிறகு ஏதாகிலும் மீதமிருந்து இந்த சபையின் அங்கத்தினர் அல்லாதவர்க்கு நீங்கள் எதையாகிலும் கொடுக்க விரும்பினால் டீக்கன்மார் குழு அதற்கான தீர்மானம் எடுக்க வேண்டும் என்பது என் கருத்து.
13. இந்த எதிர்ப்பு அல்லது இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டியவர் டீக்கன்மார்களே, ஏனெனில் வேதத்தில், அப்போஸ்தலருடைய நடபடிகளில், உணவு உடைகளைக் குறித்து வாக்கு வாதம் உண்டான போது, அவர்கள் அப்போஸ்தலர்களை வரவழைத்தனர். அவர்கள், “பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழு பேரை உங்களில் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் இந்த வேலையை கவனித்துக் கொள்வார்கள். நாங்களோ ஜெபம் பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம்” என்றனர்.
14. எனவே உணவு போன்ற விஷயத்தை கவனித்துக் கொள்வது மேய்ப்பனின் வேலையல்ல. அது டீக்கன்மார்களின் வேலை. அது தர்மகர்த்தாக்களின் வேலையும் அல்ல. அதை செய்ய வேண்டியது டீக்கன்மார்களே, பிறகு இது... வேதத்தில் அவர்கள் தங்கள் சொந்த தேவைகளுக்காக பணம் கொடுத்தார்கள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அப்பொழுது கிரேக்கர்களுக்கும், யூதர்களுக்கு மிடையே, ஒருவருக்கு மற்றவை விட அதிகம் கிடைக்கிறது என்னும் விஷயத்தில், வாக்குவாதம் உண்டாயிற்று. ஆனால் ஜனங்கள் தங்களுக்குண்டான யாவற்றையும் விற்று சபைக்கு கொடுத்து அதை தாங்கினர். அது அவர்கள் நடுவே சமமாகப் பங்கிடப்பட வேண்டும். அப்பொழுது ஒரு சிறு சச்சரவு எழுந்தது. அங்கு தான் நாம் முதன் முதலாக டீக்கன்மார்களைப் பெற்றோம். அதை செய்வது அவர்களுடைய வேலைகளில் ஒன்றாகும்.
15. என் கருத்து என்னவெனில் நமக்கு சொந்தமானவர்களை, நமது சொந்த ஜனங்களை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். ஏதாகிலும் புகார் வரும் பட்சத்தில், அதை டீக்கன்மார் குழுவின் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதைக் குறித்து என்ன செய்ய வேண்டு மென்று டீக்கன்மார் குழு முடிவு எடுக்க வேண்டும். இவையனைத்தும் - துணிகள், உணவு, பண உதவி, அது என்ன வானாலும் - டீக்கன்மார் மூலம் வரவேண்டும். இந்த டீக்கன் மார்கள், தாங்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தீர்மானம் எடுத்த பிறகு, இந்த பண உதவியைச் செய்ய அல்லது துணிகளை வாங்க, அல்லது வேறெதாவதை செய்ய பணம் கொடுக்க முடியுமா என்று அறிந்து கொள்ள, இதை பொருளாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் டீக்கன்மார் குழு மாத்திரமே கூடி இந்த விஷயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும். இதை தர்மகர்த்தாக்கள் அல்லது மேய்ப்பனிடம் கொண்டு போகக் கூடாது. இது முழுவதும் டீக்கன்மார்களைப் பொறுத்த விஷயம்.