இது என்னிடமுள்ள இந்த காகிதத்துண்டில் உள்ள இரண்டாம் கேள்வி, இது ஒரு சிறு அட்டை.
16. இது இங்குள்ள மேய்ப்பருக்கு சம்பந்தமானது, பாருங்கள். ஏனெனில் ஆவிக்குரிய பாகத்துக்கு அவரே தலைவர். ஒழுங்கை நிலைநாட்ட, ஏழைகளுக்கு உணவளிக்க, இத்தகைய காரியங்களை கவனித்துக் கொள்ள டீக்கன்மார்கள் சபையின் போலீஸ்காரராயுள்ளனர். தர்மகர்த்தாக்கள் பணம் சம்பந்தமான காரியங்களையும் கட்டிடத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஆவிக்குரிய பாகத்தை மேய்ப்பர் மேற் பார்வையிடுகின்றார். சகோ. நெவில், இது உங்களுடன் சம்பந்தப்பட்டது.
17. இப்பொழுது, அங்கே... சில நாட்களுக்கு முன்பு, சபையில் ஒழுங்கு நிலை நாட்டப்பட்ட போது, நான் அந்நிய பாஷைகள் பேசுவதிலும், அர்த்தம் உரைப்பதிலும், தேவன் சபைக்கு அளித்துள்ள எல்லா அருமையான ஆவிக்குரிய வரங்களிலும் நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் நாம் வேதாகம காலத்துக்கு ஒத்த ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அங்கு சபைகள்... நீங்கள் பவுலைக் கவனிப்பீர்களானால், அவன் எபேசுவில் எபேசு சபையை நிறுவினான். அது நன்றாக நிறுவப்பட்ட ஒரு சபை. நீங்கள் கவனித்தீர்களா? பவுல் அநேக பாஷைகளை பேசினான் என்றும், அவன் பாஷைகள் பேசும் வரத்தைப் பெற்றிருந்தான் என்றும் நாமறிவோம். அதை பவுலே கூறியுள்ளான். அது அவன் கற்ற பாஷைகள் அல்ல, அது ஆவிக்குரிய பிரகாரமாய் அவனுக்கு அளிக்கப்பட்டவை. அதைக் குறித்து அவன் எவ்விதம் கொரிந்தியர் நிருபத்தில் கூறுகிறான் என்று பாருங்கள் நேரத்தை வீணாக்காமலிருக்க நான்... வேதத்திலிருந்து அதை படிக்கப் போவதில்லை. ஏனெனில் அவ்விதம் செய்தால், இன்றிரவு நாம் அதிக நேரம் தங்க வேண்டியதாயிருக்கும். எனக்கு நேரம் அதிகமில்லை. இப்பொழுது... நீங்கள் அதை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக.
18. இப்பொழுது, பவுல் ஒரு முறையாவது ஆவிக்குரிய வரங்களைக் குறித்தோ அல்லது அதை எவ்விதம் ஒழுங்கு படுத்த வேண்டும் என்பதைக் குறித்தோ எபேசு சபைக்கு, அல்லது ரோமர் சபைக்கு அல்லது வேறெந்த சபைகளுக்கும் கூறவில்லை. ஆனால் அதைக் குறித்து அவன் கொரிந்தியர்களுக்கு அடிக்கடி கூறி வந்தான், ஏனெனில் அவர்கள் அதை ஒரு பிரச்சனையாக எந்நேரமும் செய்து விட்டனர். பவுல் அவர்களிடம் வந்த போது ஒருவனுக்கு அந்நிய பாஷை பேசும் வரமும், வேறொருவனுக்கு சங்கீதம் பாடும் வரமும் இருப்பதைக் கண்டு, அவர்களுடைய அருமையான வரங்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரத்தை ஏறெடுத்ததாக கூறுகிறான். நீங்கள் கவனிப்பீர்களானால், கொரிந்தியர் முதலாம் அல்லது இரண்டாம் அதிகாரத்தில், கிறிஸ்துவில் அவர்களுடைய ஸ்தானம் என்ன வென்பதை குறித்து பவுல் அவர்களிடம் கூறுகிறான், எவ்விதம் அவன் அவர்கள் எவ்விதம் கிறிஸ்துவில் ஸ்தானத்தை பெற்றுள்ளனர் என்பதைக் குறித்து.
19. அவர்களுக்கு இதை எடுத்துக் கூறின பிறகு, அவன் ஒரு தகப்பனைப் போல் அவர்களுக்கு சவுக்கடி கொடுத்து, “ உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன். கர்த்தருடைய பந்தியில் நீங்கள் குடித்து வெறிப்பதாக கேள்விப்படுகிறேன்” என்கிறான். அவன் அவர்களை கிறிஸ்தவரல்லாதவர்களாக ஆக்கி விடவில்லை. சகோதரராகிய நீங்கள் அவ்விதம் செய்ய வேண்டும், அவர்களை கிறிஸ்தவரல்லாதவர்களாக ஆக்கி விட வேண்டாம். ஆனால் அவர்கள் தேவனுடைய வீட்டில் நடந்து கொண்ட விதம் அது. அங்கு தான் அது அடைகிறது.
20. இதை நான் கூற விரும்புகிறேன். முந்தின காலத்து பவுல் கூறினது போல, “நீங்கள் கூடி வந்திருக்கிற போது, ஒருவன் அந்நிய பாஷையிலே பேசினால், ஒருவன் அர்த்தத்தைச் சொல்ல வேண்டும். அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், அமைதியாய் இருங்கள். ஆனால் அர்த்தம் சொல்லுகிறவன் இருந்தால்...”
21. இப்பொழுது, இங்குள்ள சபையை நான் கவனித்து, நீங்கள் வளருவதைக் கண்டிருக்கிறேன். உங்கள் மத்தியில் அநேக ஆவிக்குரிய வரங்கள் கிரியை செய்வதை நான் கண்டிருக்கிறேன். வெளிப்படையாகக் கூறினால், ஒன்றைக் குறித்து நான் கர்த்தரிடமிருந்து வார்த்தையை பெற்று நான் சகோதரன் நெவிலிடம் வந்து அவர் செய்து கொண்டிருந்த ஒன்றின் பேரில் நான் திருத்துதலை செய்ய வேண்டியதாயிற்று.
22. நான்... கர்த்தர். என்னை... பரிசுத்த ஆவி என்னை இந்த மந்தைக்கு கண்காணியாக வைத்திருப்பாரானால், உங்களுக்கு சத்தியத்தை எடுத்துரைப்பது என் மேல் விழுந்த கடமையாகும். நான் சகோ. நெவிலுக்கு மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அவர் சத்தியத்துக்கு செவி கொடுத்தார். தேவன் என்னிடம் கூறுவதை மாத்திரமே உங்களுக்கு நான் எடுத்துரைக்க முடியும்.
23. இப்பொழுது... இந்த விஷயத்தில், உங்கள் சபை வளர்ந்து வருவதை நான் கவனித்துக் கொண்டு வந்த போது, இதை கவனித்தேன். சபையில் இவ்விதம் தான் நாம் முதலில் செய்து கொண்டு வந்தோம். ஆனால் இப்பொழுது இவ்விதம் செய்ய விரும்புகிறோம்.
24. இப்பொழுது, நீங்கள் கவனிக்காமல் போனால், குழந்தைகள்... ஒரு குழந்தைக்கு பேச முடியாத போது, அது பேசுவதற்கு முயற்சி செய்கிறது. பாருங்கள்? அது வாயில் அதின் நுரையை தள்ளிக் கொண்டு அதிக சத்தம் போட்டு... பிரசங்கியின் சத்தத்தை விட அதிக சத்தமிடலாம் என்று நினைத்துக் கொள்கிறது. நல்லது, அது இயற்கை வாழ்க்கையில் மாத்திரமல்ல. ஆவிக்குரிய வாழ்க்கையிலும் அவ்விதமே என்று நாம் காணலாம். அது சிறு பிள்ளை. அந்த குழந்தை 'கூ' என்று சத்தமிட்டு பேச முயற்சிப்பதால், அவனை அடித்து திருத்த முயன்றால், நீங்கள் பிள்ளையைப் பாழாக்கி விடுவீர்கள். பாருங்கள், அவனுக்கு தீங்கு விளைவிப்பீர்கள். அந்த குழந்தை தன் சொற்களை சரியாக பேசும் பருவம் வரைக்கும் அவனை வளர விட்டு, அதன் பிறகு, அப்பா, அம்மா பேசும் போது, அவன் குறுக்கே பேசக்கூடாதென்றும், குறித்த நேரம் வரும் போது, அவன் பேசலாம் என்றும் அவனுக்கு சொல்லிக் கொடுக்கலாம். நான் கூறுவது விளங்குகிறதா? அவன் பேசுவதற்கு நேரம் வரும் போது, அவன் பேசலாம்.
25. வெளியில் நடக்கும் கூட்டங்களில், எனக்கு ஒன்று என் மாம்சத்தில் முள்ளாக இருந்திருக்குமானால், அது நான் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது, யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று அந்நிய பாஷை பேசி, ஆவியைக் கெடுத்து விடுதலே. நியூயார்க் பட்டினத்திலும் மற்றும் வெவ்வேறு இடங்களிலும் நடந்த கூட்டங்களில் நான் பங்கு கொண்டு இப்பொழுது தான் திரும்ப வந்தேன். அங்கு போதகர்கள் இதை பலமுறை அனுமதிக்கின்றனர். அது குழப்பத்தை விளைவிக்கிறதேயன்றி வேறல்ல. பாருங்கள், தேவன் ஒருவகையான கருத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர்... அது... அவர் சபையோரின் மூலம் மற்றொரு வகையான கருத்தை நுழைத்து பீட அழைப்பை கொடுப்பாரானால், அவரே தமது நோக்கத்தை குலைத்து விடுவார்.
26. உதாரணமாக, அது இது போன்றது. நாம் மேசையில் உட்கார்ந்து கொண்டு கர்த்தரைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது மகன் மேசைக்கு வேகமாக ஓடி வந்து நம் கவனம் அனைத்தையும் கவர்ந்து, “ அப்பா அம்மா! என்னே! 'பேஸ்பால் விளையாட்டில் என் குழுவுக்கு நான் ஜெயிக்கும் 'ரன் எடுத்தேன். நாங்கள் இதை, அதை, மற்றதை செய்தோம்' என்று உரக்க சத்தமிட்டால் நாம் புனிதமான பொருளின் மேல் உரையாடிக் கொண்டிருக்கும் போது. அவன் பேஸ்பால் விளையாட்டில் ஜெயிக்கும் 'ரன்' எடுப்பது நல்லது தான். ஆனால் நாம் பேசிக் கொண்டிருக்கும் விஷயத்தில் குறுக்கே நுழைந்து இதை கூறுவது ஒழுங்கற்ற செயல். அவனுடைய நேரம் வரும் வரைக்கும் அவன் காத்திருந்து, 'பேஸ் பால் விளையாட்டில் என்ன செய்தான் என்பதை நம்மிடம் கூறியிருக்க வேண்டும்.
27. இன்றைக்கு வரங்களைக் குறித்த விஷயத்திலும் அதையே நாம் காண்கிறோம். அதன் காரணமாகத் தான் தேவன் அதிகமான ஆவிக்குரிய வரங்களை ஜனங்களுக்கு நம்பி கொடுப்பதில்லை. ஏனெனில் அவைகளை எவ்விதம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. இன்றுள்ள விஷயம் அதுவே, நாம் பெற்றிருப்பதை விட அதிகமாக பெறாமலிருக்கும் காரணம்.
28. பிறகு, ஆவிக்குரிய வரங்களில் நிறைய போலிகளை நாம் காண்கிறோம். நமது சபையில் அவ்வாறில்லை, அதற்காக நான் நன்றியுள்வனாயிருக்கிறேன். அவை போலிகள் அல்ல, நமக்கு உண்மையான வரங்கள் உள்ளன என்று நான் நம்புகிறேன். ஆனால் இவ்வரங்களை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருப்பது என்பது நமக்குத் தெரிந்திருப்பது அவசியம்.
29. நீங்கள் நன்மையான ஒன்றை செய்து கொண்டிருக்கும் போது... நீங்கள் முதன் முறையாக ஒரு முதலாளியின் கீழே வேலைக்கு அமர்ந்து அவர் கொடுக்கும் கட்டளையை நிறைவேற்ற ஆயத்த முள்ளவர்களாயிருந்தால், முதலாளிக்கு உங்கள் மேல் நம்பிக்கை பிறந்து உங்களுக்கு உத்தியோக உயர்வை அவ்வப்போது கொடுத்து கொண்டே வருகிறார்.
30. தேவன் நமக்கு அளித்துள்ள வரங்களை விட இன்னும் அதிகமான வரங்களை நமக்கு நம்பி அளிப்பதற்கு... பிரன்ஹாம் கூடாரத்திற்கு நேரம் வந்து விட்டதென்று நம்புகிறேன். ஆனால் நாம் இப்படியே சென்று கொண்டிருக்கக் கூடாது. அதாவது ஒரு மனிதனுக்கு நாம் எப்பொழுதும் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் என்னும் நிலையில் இருக்கக் கூடாது. தீர்க்கதரிசிகளுடைய ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது” என்று வேதம் உரைக்கிறது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஒரு மனிதன் அல்லது ஸ்திரீயை நீங்கள் வேதப் பிரகாரமான சத்தியத்தை உரைத்து திருத்தி, அந்த நபர் ஒழுங்கை மீறினால், அவர்கள் மேல் தங்கியுள்ளது தேவனுடைய ஆவி அல்ல வென்பதை அது காண்பிக்கிறது. ஏனெனில் வேதம், தீர்க்கதரிசிகளுடைய ஆவி, “ அல்லது 'தீர்க்கதரிசனம் உரைப்பது,” அதாவது சாட்சி கூறுதல், பிரசங்கம் செய்தல், அந்நியபாஷை பேசுதல் அல்லது எதுவாயிருந்தாலும் சரி. ஏனெனில் அந்நிய பாஷைக்கு அர்த்தம் உரைத்தல் தீர்க்கதரிசனமாகும். எனவே அது தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது. வார்த்தையே தீர்க்கதரிசி. ஒரு மனிதன் அல்லது ஸ்திரீ, பிரசங்கிட பிரசங்க பீடத்திலிருக்கும் போது, எழுந்து குதித்து தீர்க்கதரிசனமாக செய்தியை அளிப்பது ஒழுங்கை மீறும் செயல் என்பதை நாம் காண்கிறோம்.
31. இதை நான் பிரன்ஹாம் கூடாரத்துக்கு ஆலோசனையாக கூறுகிறேன், நமக்குள்ள நமது வரங்கள்... இங்கு மிகவும் சிறந்த வரம் பெற்றவர் நமக்குள்ளனர். இந்த வரங்கள் ஒவ்வொன்றும் தன்னில் தானே ஊழியமாக அமைந்துள்ளன. அவை வரங்கள், உதாரணமாக பிரசங்கம் செய்தல் ஒரு வரம், சுகமளித்தல் ஒரு வரம். மற்றவை போலவே இவைகளும் வரங்கள். இவை தம்மில் தாமே ஊழியங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த ஊழியத்தில் நிலைத்திருக்க கட்டளை பெற்றிருக்கிறான்.
32. எனவே பிரன்ஹாம் கூடாரம் இவ்விதம் இயங்கட்டும், முக்கியமாக இந்நாளில் (இதை நான் கூற விரும்பவில்லை, ஆனால் நம்மிடமாக மிக அதிகமாக பாவனைகள் - நம்பிக்கை இருந்தது. நமக்கு பாவனைகள் வேண்டாம். எந்த ஒரு மனிதனும், எந்த ஒரு நேர்மையான நபரும் அதிகமாக பாவனைகளைப் பெற்றிருக்க விரும்பமாட்டார். நாம் நமக்கு உண்மையானது இல்லாமற் போனால், எதையுமே பெற்றுக் கொள்ளாமல் இருப்போம், உண்மையானதைப் பெறும் வரைக்கும் நாம் காத்திருப்போம். இப்பொழுது மனிதராகிய நீங்கள் நான் கூறுவதை ஒத்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். பாவனை எதுவும் வேண்டாம். சகோதரரே, ஏதாவதொன்றை நாம் செய்து, இவ்வுலகை விட்டுச் செல்லக் கூடாது. நாம் உண்மையானதை மற்றும் நம்பத்தகுந்ததை பெற்றிருக்க வேண்டும். அது நமக்கு இல்லாமல் போனால், அதை நாம் பெறும் வரை காத்திருந்து, அதன் பிறகு அதைக் குறித்து பேசுவோம். பாருங்கள்?
33. இதைக் கூற விரும்புகிறேன், அந்நிய பாஷை பேசி, தீர்க்கதரிசனம் உரைத்து, செய்திகளை அளிக்கும் மனிதரும் ஸ்திரீகளும்... அவை உண்மையானவை என்று மனிதராகிய உங்களுடன் நானும் விசுவாசிக்கிறேன். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று வேதம் உரைக்கிறது. மேலும் ஏசாயாவின் புத்தகத்தில், “ பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவேன். இதுவே நீங்கள் பிரவேசிக்க வேண்டும் என்று நான் உரைத்த இளைப்பாறுதல்' என்று கூறப்பட்டுள்ளது.
34. இந்த பிரகாரத்தில் (Sanctuary) ஒரு நேரத்தில் ஒரே வரம் கிரியை செய்ய வேண்டுமென்று நான் ஆலோசனை கூறுகிறேன். அப்பொழுது அது, நான் குறிப்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த ஒழுங்குக்கு நம்மை மறுபடியும் கொண்டு வரும். ஒருவர் பேசிக் கொண்டிருந்தால், தீர்க்கதரிசிகளுடைய ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கட்டும். உங்களுக்கு புரிகிறதா? இப்பொழுது, கிறிஸ்துவின் சரீரத்துக்கு ஊழியத்தைப் பெற்றுள்ளோர். இவ்வளவு நான் கூறி வந்தது இப்பொழுது செயல் முறைக்கு கொண்டு வரப்படட்டும். கிறிஸ்துவின் சரீரத்துக்கு ஊழியத்தைப் பெற்றுள்ளோர் தங்கள் ஊழியத்துக்கான தருணம் வரும் வரை காத்திருக்கட்டும். ஏனெனில் அது கிறிஸ்துவினிடமிருந்து சபைக்கு அளிக்கப்படும் ஊழியமாகும். நீங்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் ஊழியம் செய்ய முடியாது. ஒரு நேரத்தில் ஒருவர் என்பதாக அது இருக்க வேண்டும்.
35. பிரன்ஹாம் கூடாரம் இவ்வாறு இருக்க வேண்டும். அந்நிய பாஷை பேசுவோர், பாஷைக்கு அர்த்தம் உரைப்போர், சபைக்கு அளிக்கப்படவிருக்கும் தீர்க்கதரிசனம் உரைப்போர், இவர்கள் அனைவரும் நேரத்தோடே... ஆராதனை துவங்குவதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட அறையில் ஒன்றுகூடி, கர்த்தருடைய ஊழியத்துக்காக காத்திருக்க வேண்டும்.
36. மேய்ப்பர் சபையோரின் முன்னிலையில் வருவதற்கு முன்பு, தனிமையில் வேதத்தை எடுத்து, அமைதி நிலவும் அவருடைய அறையில் ஆவியில் படித்து, சபையோரிடம் பேசுவதற்கு வெளியே வருவதற்கு முன்பு அபிஷேகம் பண்ணப்பட வேண்டும். இல்லையென்றால், அவர் வெளியே வரும்போது குழப்பத்தில் இருப்பார் (ஆவியின் வரம் பெற்ற ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ஸ்திரீயும் கர்த்தருக்கு முன்பாக வரக்கடவர்கள்). மேய்ப்பருக்கு ஒரே ஊழியம் மட்டும் இருப்பதால் - அவர் ஒரு தீர்க்கதரிசி. பிரசங்கி' (a preacher) என்னும் அர்த்தமுடைய ஆங்கிலச் சொல் “தீர்க்கதரிசி” என்று பொருள்படும். அதாவது, வார்த்தையை எடுத்துரைப்பவர்.
37. வேறொருவருடன் ஒரு பாகமாக ஊழியங்களைக் கொண்டிருப்பவர்கள் - உதாரணமாக ஒருவர் அந்நிய பாஷை பேசுதல், மற்றொருவர் அதற்கு அர்த்தம் உரைத்தல் - ஒருமித்து தங்கள் ஊழியத்திற்காக காத்திருப்பார்களாக. ஒருவர் தனியறையில் தங்கி அந்நிய பாஷை பேசி விட்டு, அதன் பிறகு வெளியே வந்து மற்றவரிடம் அதன் அர்த்தம் என்னவென்று உரைக்கக் கூடாது. அப்படி ஒருவர் செய்வாரானால், அவருக்கு அந்நிய பாஷை பேசும் வரம், அதற்கு அர்த்தம் உரைக்கும் வரம் இரண்டும் இருக்க வேண்டும். பாருங்கள்? அவருக்கு இருக்குமானால், மிகவும் நல்லது, அதை அவ்வாரே நாம் ஏற்றுக் கொள்வோம். நமது சபையிலுள்ள இந்த வரங்களினால் சபையோர் பயனடைய வேண்டுமென்று விரும்புகிறோம். தேவன் அவைகளை நமக்கு அனுப்பினார். அது... இந்த ஆவியின் வரங்களினால் நமது சபை பயனடைய வேண்டுமென்று விரும்புகிறோம். எனவே அந்நிய பாஷை பேசுபவரும், பாஷைக்கு அர்த்தம் உரைப்பவரும் தீர்க்கதரிசனம் உரைப்பவரும், சபை கூடுவதற்கு முன்பாக ஒன்று கூடட்டும். அவர்கள் மாத்திரம் ஒரு அறையில் கூடி, சபைக்கு கர்த்தருடைய ஊழியத்துக்காக காத்திருப்பார்களாக. இது புரிகிறதா?
38. பிறகு, இது இப்படி சகோ. நெவில்... நல்லது, இப்பொழுது இதை நான்... மன்னியுங்கள், இதை கூற விரும்புகிறேன். சகோ. காலின்ஸ் அந்நிய பாஷை பேசி, சகோ. ஹிக்கர்ஸன் அதற்கு அர்த்தம் உரைப்பாரானால், இருவரும் ஒருமித்து சபைக்கு ஒரு ஊழியத்தைப் பெற்றுள்ளனர். அது சகோ. நெவிலின் ஊழியம் அல்ல, அது சபைக்கு உங்களுடைய ஊழியம். இதை ஒரு உதராணமாகக் கூறினேன். போதகர் தேவனுடைய வீட்டில் தன் ஊழியத்தைச் செய்ய எவ்வளவு சிரத்தை கொண்டுள்ளாரோ, உங்களுக்கும் உங்கள் ஊழியத்தை செய்ய அவ்வளவு சிரத்தை இருக்க வேண்டும். அதை நீங்கள் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் உங்கள் சொந்த அறையில் அதை நீங்கள் தனியாக செய்யக் கூடாது. ஒருவர் அந்நிய பாஷை பேசி மற்றவர் அர்த்தம் உரைத்தால், நீங்கள் இருவரும் ஒன்று கூட வேண்டும். நீங்கள் சபையிலுள்ள ஒரு அறையில் ஒன்று கூடுங்கள். ஏனெனில் இது தனியான ஊழியம், இது பகிரங்கமான ஊழியம் அல்ல. இது சபைக்கு உதவுவதற்காக பாருங்கள்? இது சபைக்கு உதவுவதற்காக, ஆனால் இதை சபையோரின் மத்தியில் செய்யக் கூடாது. நான் உங்களுக்கு சொல்லும் விதமாகவே அது செய்யப்பட வேண்டும். உதாரணமாக, சகோ. காலின்ஸ் அந்நிய பாஷை பேசி, அதற்கு சகோ. ஹிக்கர்ஸன் அர்த்தம் உரைப்பாரானால், வேறொரு சகோதரன் அதை எழுதிக் கொள்ளட்டும். அதன் பிறகு, அது...
39. கர்த்தர் வரப்போகிறார் என்று நம்மெல்லாருக்கும் தெரியும், அது நாமனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு இரவும் சகோ. நெவில் எழுந்து நின்று, “இதோ, கர்த்தர் வருகிறார். இதோ, கர்த்தர் வருகிறார்!” என்றுரைத்தால், அதில் தவறொன்று மில்லை, பாருங்கள். அவர் போதகர் என்னும் முறையில் மேடையிலிருந்து அதை உரைக்கிறார். அதை ஆதரிக்க அவரிடம் வசனம் உள்ளது. அவர் சபைக்கு போதகராக, தீர்க்கதரிசியாக இல்லை, போதகராக இருப்பாரானால், அவர் கர்த்தருடைய வார்த்தையை நன்றாக படித்து, கர்த்தருடைய வருகையைக் குறித்து கர்த்தருடைய வார்த்தையில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அதன் மூலம் நீங்கள் எச்சரிக்கப்படுகிறீர்கள். ஆனால் இதனுடன் அவர் சம்பந்தப்படாத சபையிலுள்ள மற்ற ஊழியம் என்னவென்றால் அந்நிய பாஷை பேசுதல் அந்நிய பாஷைக்கு அர்த்தம் உரைத்தல் (அது தீர்க்கதரிசனமாகும்) அல்லது ஒரு தீர்க்கதரிசி பேசுவது, அது வார்த்தையில் எழுதப்பட்டிராத ஒன்றாகவும் அது இருக்கும். போன்றவை - வார்த்தையில் எழுதியுள்ளதை போதகர் உங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்; ஆனால் வார்த்தையில் எழுதப்பட்டிராததை அவருக்கு நீங்கள் கூற வேண்டும். உதாரணமாக நீங்கள் சகோ. வீலரிடம் என்று கூறுங்கள், கர்த்தர் உரைக்கிறதாவது நாளை அவருடைய மண் நிலத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறுங்கள் ஏனெனில் அங்கு ஒரு லாரி கவிழ்ந்து விடும்,” அப்படி ஏதோ ஒன்று. அது அப்படி செய்யப்பட வேண்டும். நீங்கள் அந்நிய பாஷை பேசினீர்கள், அவர் அதற்கு அர்த்தம் உரைத்தார். உங்கள் ஊழியம் முடிவடைந்தவுடன் அதை எழுதி மேடையின் மேல் வைத்து விடுங்கள். அன்றிரவு, சபை ஆராதனைக்கு பிறகு... பாடல்கள் பாடத் தொடங்கிய பிறகு, உங்கள் ஊழியம் முடிவடைந்து விட்டால், என்ன தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட தென்று மற்றவர்கள் கூறட்டும்.
40. நம்மிடம் அப்படிப்பட்டவர்கள் இல்லையென்று எண்ணுகிறேன். உங்கள் மத்தியில் இருப்பார்களானால், இதை அங்கு வைத்து விடுங்கள். இந்த ஜனங்கள் ஒன்று கூடும்போது, ஞானமுள்ளவன் முதலில் வரக்கடவன். ஏனெனில் வேதாகமத்தின் படி, ஒருவன் அந்நிய பாஷை பேசி, வேறொருவன் அதற்கு அர்த்தம் உரைத்தால், அது இரண்டு அல்லது மூன்று சாட்சிகளால் நிலை வரப்படாமல் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அது கர்த்தருடைய வார்த்தையென்று இரண்டு அல்லது மூன்று பேர்கள் (பாருங்கள்?) சாட்சியுரைக்க வேண்டும். மற்ற ஊழியங்களைப் போல் இந்த சிறுபான்மை ஊழியங்களில் தவறான ஆவிகள் நுழைந்து விடுகின்றன. பாருங்கள், அவை பறந்து அங்கு வந்து விடுகின்றன. அது நமக்கு வேண்டாம். இப்படிப்பட்ட ஊழியங்கள் தவறு என்று நாம் அம்பலப்படுத்த வேண்டியவர்களாயிருக்கிறோம். ஏனெனில் தேவனுடையதாயுள்ள எதுவும்... அதை அம்பலப்படுத்துவதில் கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில் அது தேவனுடையதாயிருக்குமானால், அது பரீட்சைக்கு நிற்கும்.
41. போதகர் செய்வது போல், யாராகிலும் அவருக்கு வார்த்தையின் பேரில் சவால் விட்டால், அவர் பின்வாங்க வேண்டிய அவசியமில்லை. அவர் என்ன பேசுகிறார் என்பதை நன்கு அறிந்தவராய் சவால் விடுபவனிடம் “இங்கே வாருங்கள்” என்பார். பாருங்கள்? அவ்வாறே இந்த மற்ற ஊழியங்களும் அதேவிதமாக அமைந்திருக்க வேண்டும்.
42. இப்பொழுது, ஒருவன் அந்நிய பாஷை பேசி ஒரு செய்தியை அளித்தால்... சிலர் தங்களுக்கு பக்தி விருத்தி உண்டாவதற்காக அந்நிய பாஷையில் பேசி நல்ல ஒரு தருணத்தை அனுபவிப்பதாக வேதம் கூறுகிறது. அவர்கள் உணர்ச்சியோடு அந்நிய பாஷை பேசுகின்றனர். அவர்கள் அந்நிய பாஷை பேசுவது உண்மையே, அவர்கள் உண்மையில் அந்நிய பாஷை பேசுகின்றனர், ஆவியானவரே அதை செய்கிறார். ஆனால் அவர்கள் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டு தங்களுக்கு பக்தி விருத்தி உண்டாக அந்நியபாஷை பேசுவார்களானால், அது சபைக்கு பிரயோஜன மற்றதாக இருக்கும். ஒரு மனிதன் அல்லது ஒரு ஸ்திரீ - யார் அந்நிய பாஷை பேசினாலும் - அவர்கள் தங்களுக்கே பக்தி விருத்தி உண்டாகப் பேசுகிறார்கள். பாருங்கள்?
43. அந்நிய பாஷை பேசுதல் என்பது பக்தி விருத்தி உண்டாவதற்காக தேவனால் அளிக்கப்பட்ட வரம். பவுல் வேதாகமத்தில் கூறியுள்ளது போல், அது சபைக்கு பக்தி விருத்தி உண்டாவதற்காக அளிக்கப்பட்டது. எனவே அது, வேதாகமத்தில் எழுதப்பட்டதற்கு புறம்போயுள்ள, தேவனிடத்திலிருந்து சபைக்கு நேரடியாக வரும் ஒரு செய்தியாக இருக்க வேண்டும். (எனவே இது வேதாகமத்தில் இங்கே எழுதப்பட்டவற்றிற்கு வெளியே தேவனிடத்திலிருந்து சபைக்கு சில நேரடி செய்தியாக இருக்க வேண்டும்.) அது ஏதோ ஒரு...
44. நீங்கள் என்னிடம், 'சகோ. பிரன்ஹாமே, நான் எவ்வகையில் ஞானஸ்நானம் பெற வேண்டும்? என்று கேட்பீர்களானால், நான் உடனே உங்களுக்கு பதிலுரைக்க முடியும். நீங்கள் அந்நிய பாஷையில் பேசி அதை எனக்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அதை எவ்விதம் பெற வேண்டுமென்று வேதாகமத்தில் எழுதிவைக்கப்பட்டுள்ளது. பாருங்கள்? எனக்கு அவசியமில்லை... நீங்கள் என்னிடம் அந்த கேள்வி கேட்டு, வேறு யாராகிலும் அந்நிய பாஷை பேசி அதை உங்களுக்கு அறிவிக்க வேண்டிய அவசிய மில்லை. பாருங்கள், அது ஏற்கனவே எழுதிவைக்கப் பட்டுள்ளது.
45. ஆனால் நீங்கள், “சகோ. பிரன்ஹாமே, நான் என்ன செய்ய வேண்டும், நான் இந்த சபைக்கு செல்ல வேண்டுமா அல்லது வேறொரு சபைக்கு செல்ல வேண்டுமா என்னும் தீர்மானத்தை செய்ய வேண்டியவனாயிருக்கிறேன்” அப்படி ஏதோ ஒன்று, அல்லது, “நான் இதை செய்ய வேண்டுமா, அதை செய்ய வேண்டுமா?” என்று கேட்பீர்களானால், அதற்கான பதில் தேவனிடத்திலிருந்து வர வேண்டும். பாருங்கள், தேவன் அதை நமக்கு அறிவிக்க வேண்டும். ஆனால், அது வேறொரு ஊழியத்தின் வழியாக வரவேண்டும். ஏனெனில் வார்த்தை, “ஆர்மன் நெவில் பிரன்ஹாம் கூடாரத்தை விட்டு விட்டு போர்ட் வேயின் காஸ்பல் கூடாரத்திற்கு செல்லட்டும்” என்று கூறுவது கிடையாது. பாருங்கள், அது இந்த வார்த்தையில் கூறப்படவில்லை, பாருங்கள், அதற்காகத் தான் இந்த வரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
46. உதாரணமாக, ஒரு மனிதன் இங்கு வந்து, “உங்களுக்கு தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கையுண்டா?” என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் பிரசங்கிக்கிறோம், அதை நாம் விசுவாசிக்கிறோம், நாம் எண்ணெய் பூசி ஜெபம் செய்வதில் விசுவாசம் கொண்டுள்ளோம்.
47. ஆனால் ஒருவர் வந்து, “எனக்கு சுகம் கிடைக்கவில்லை, காரணம் என்ன?” என்று கேட்பாரானால், அந்நிய பாஷை, அர்த்தம் உரைத்தல், தீர்க்கதரிசனம் உரைத்தல் போன்ற ஏதாவதொன்றின் மூலம் தேவன் அவருடைய வாழ்க்கையை ஊடுருவி, அவர் செய்த காரியத்தை வெளியே கொண்டு வந்து அதை அவரிடம் கூறுகிறார். அந்த ஊழியம் போதகரைச் சேர்ந்ததல்ல, அது இந்த வரங்களைச் சேர்ந்தது. ஆனால் அவை கூட்டத்தில் செய்யப்படக் கூடாது. புரிகின்றதா?
48. பவுலுக்கு ஒரு முறையாவது இதைக் குறித்து எபேசு சபைக்கு அறிவுரை கூற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர்கள் ஒழுங்கைக் கடைபிடித்தனர். ரோமர் சபைக்கோ வேறெந்த சபைக்கோ அவன் இதைக் குறித்து கூறவில்லை, கொரிந்து சபைக்கு மாத்திரமே. அவர்களால் ஒழுங்கைக் கடை பிடிக்க முடியவில்லை... அந்நிய பாஷை பேசுவதில் பவுல் நம்பிக்கை கொண்டிருந்தான். எபேசுசபை அந்நிய பாஷை பேசினது, அவ்வாறே கொரிந்து சபையும் (பாருங்கள்), ஆனால் அவனால் எபேசியர்களுக்கு, அந்நிய பாஷை பேசுதல், பாஷைக்கு அர்த்தம் உரைத்தல் போன்றவைகளை விடமேலான காரியங்களைப் போதிக்க முடிந்தது.
49. அந்நிய பாஷை பேசுதல், தீர்க்கதரிசனம் உரைத்தல் போன்றவைகளின் மூலம் அளிக்கப்பட்ட செய்தியை யாராகிலும் ஒருவர் எழுதி மேடையின் மேல் வைத்தால், இதை பேசி அர்த்தம் உரைத்த மக்களின் “கர்த்தர் உரைக்கிறதாவது” என்னும் செய்தியை போதகர் பிரசங்கத்திற்கு முன்பு படிக்க வேண்டும். அர்த்தம் உரைக்கப்பட்ட விதமாகவே அது நடந்தேறினால், அவருடைய ஆவி நமது மத்தியில் இருப்பதற்காக நாம் கரங்களை உயர்த்தி தேவனுக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம். அது நடக்காவிட்டால், அந்த பொல்லாத ஆவி உங்களை விட்டுப் போகும் வரைக்கும் அதை செய்யாதீர்கள். தேவன் பொய் சொல்ல மாட்டார், அவர் எப்பொழுதுமே உண்மை பேசுகிறவர்.
50. பிறகு, பாருங்கள், நீங்கள் புருஷரைப் போல் நடந்து கொள்ள போதிய வயதுடையவர்களாயிருக்கின்றீர்கள். நீங்கள் “கூ,கூ,கூ” என்று சத்தமிடும் குழந்தைகள் அல்ல. நீங்கள் செய்யும் ஒவ்வொன்றிற்கும் அர்த்தம் இருக்க வேண்டும்.
51. இப்பொழுது ஒழுங்குக்கு வந்து கொண்டிருக்கும் சபை, இந்த ஒழுங்கைக் கடை பிடிக்கட்டும். ஒருவன் தீர்க்கதரிசனம் உரைத்தால்... கல்லாதவன் ஒருவன் உங்கள் மத்தியில் வந்திருக்கும் போது, நீங்கள் அந்நிய பாஷை பேசினால், அவனுக்கு நீங்கள் விளங்காத பாஷை பேசும் காட்டு மனிதனாக இருப்பீர்கள். நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று அவனுக்கு விளங்காது. பாருங்கள்? இதைக் குறித்து இந்நாளில் அதிக குழப்பம் இருக்கும் போது, இது இடறலை விளைவிக்கிறது. ஒருவர் அந்நிய பாஷை பேசட்டும். வேறொருவர் அதற்கு அர்த்தம் உரைத்து செய்தியை அளிக்கட்டும். என்ன நடக்கப் போகிறதென்பதைக் குறித்து அது மேடையின் மேல் வாசிக்கப்படட்டும். அது நடக்கும் போது, என்ன நடக்கிறதென்று நீங்கள் காணலாம். “ நாளை குறிப்பிட்ட நேரத்தில் அல்லது அடுத்த வாரம் குறிப்பிட்ட நாளில் ஒருகுறிப்பிட்ட காரியம் நடக்கும்” என்று அவர்களிடம் கூறுங்கள். அப்பொழுது அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் அவிசுவாசி, நடக்கப் போவதை முன்னறிவிப்பதைக் கேட்கட்டும். அப்பொழுது உங்கள் மத்தியில் என்ன விதமான ஆவி உள்ளதென்று அவர்கள் அறிந்து கொள்வார்கள், அது தேவனுடைய ஆவியாயிருக்கும். பவுல் அதைத் தான் கூறினான்: “ஒருவன் தீர்க்கதரிசனம் உரைத்து இருதயத்தின் அந்தரங்கங்களை வெளிப்படுத்தினால், சபையோர் எல்லாரும் அல்லது அந்த அவிசுவாசி முகங்குப்புற விழுந்து, “தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறார்” என்று அறிக்கையிடுவான் அல்லவா?” என்றான். அவன் பாருங்கள்? ஏனெனில் அது தவறாயிருக்க வழியில்லை...
52. ஆனால் இப்பொழுது நமக்கு வேண்டாம்... பவுல் கொரிந்தியர்களிடம், “நான் குழந்தையாயிருந்த போது, குழந்தையைப் போல நடந்து கொண்டேன், குழந்தையைப் போலப் பேசினேன்.” அவனுக்கு குழந்தையின் மனம் இருந்தது. “நான் புருஷனான போதோ குழந்தைக் கேற்றவைகளை ஒழித்து விட்டேன்” என்றான்.
53. இப்பொழுது, உங்கள் எல்லோருக்கும் கூறுகிறேன். பாருங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இந்த வரங்களையுடைய குழந்தைகளாய் இங்கும் அங்கும் விளையாடிக் கொண்டிருந்தீர்கள். ஆனால் நீங்கள் நீண்ட காலமாய் பள்ளிக் கூடத்தில் பயின்று வந்திருக்கிறீர்கள். நீங்கள் புருஷராகும் நேரம் இது, எனவே இவைகளை விளையாடுவதற்கென்று உபயோகிக்கக் கூடாது. இந்த வரங்கள் புனிதமானவை, இவை தேவனுடையவை, இவைகளைக் கொண்டு நீங்கள் விளையாடாதீர்கள். தேவன் இவைகளை உபயோகிக்க நாம் இடம் கொடுப்போம். அவ்வாறே உங்கள் ஊழியம் இருக்க வேண்டுமென்று விரும்புவோம், அந்த வழியில் தான் பிரன்ஹாம் கூடாரத்தை நாம் ஊழியத்தில் கொண்டு வர வேண்டும். இதைக் குறித்து எப்பொழுதாகிலும் கேள்வி எழும்பினால், இந்த விதமாகத்தான் பிரன்ஹாம் கூடாரத்தில் செய்யப்பட வேண்டும் என்பதற்கு இந்த ஒலிநாடா சாட்சியாக இருக்கட்டும்.
54. இங்கு அந்நியர் வருவார்களானால் இது சபை பாகுபாடற்ற கூடாரம் என்பதால் அந்நியர் எல்லா நேரத்திலும் இங்கு வருகின்றனர். இங்கு வருபவர்களுக்கு இதைக் குறித்த சரியான பயிற்சி அளிக்கப்படாமல் இருக்க வகையுண்டு. அவர்களுக்கு அதிகம் தெரியாது. அவர்களுடைய போதகரின் முன்னிலையில் அவர்கள் குதித்து அவருடைய செய்தியையும் பீட அழைப்பையும் பாழாக்கி, அந்நிய பாஷை பேசி எல்லாவற்றையும் செய்கின்றனர். அவர்களைக் காட்டிலும் நீங்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள். பாருங்கள்? ஆராதனை தொடங்கின பிறகு அவர்கள் கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டால், அவர்களிடம் செல்ல வேண்டியது டீக்கனின் கடமையாகும். உங்கள் போதகர் அதை செய்ய வேண்டாம். உங்கள் சபையில் டீக்கன்மார்கள் இல்லாமல் போனாலொழிய. இதை கவனித்துக் கொள்ள வேண்டியது ஒரு டீக்கனே. பாருங்கள்?
55. இப்பொழுது, ஆராதனையின் போது... ஒருவர் எழுந்து நின்று ஒரு செய்தியை அளித்தால், அதற்காக போதகர் ஒரு நிமிடம் நிறுத்திக் கொண்டு அவரைப் பேச அனுமதிப்பாரானால், நல்லது, பாருங்கள், அது போதகரைப் பொறுத்தது. ஆனால் உடனே டீக்கன், அந்த நபர் கட்டிடத்தை விட்டு வெளியே செல்வதற்கு முன்பு, அவரை ஒரு புறம் அழைத்துச் சென்று இதைக் குறித்து சொல்ல வேண்டும். அவர் கேள்வி கேட்கத் தொடங்கினால், உடனே அவரை இந்த ஒலி நாடாவுக்கு அழைத்து சென்று, “இப்படித்தான் இந்த சபையின் பேராயர் அல்லது கண் காணிப்பாளர்...” கண்காணிப்பாளர் தான் பேராயர். பாருங்கள், அவ்வாறே வேதத்தில் கூறப்பட்டுள்ளது, “கண்காணிப்பு” (bishoptic), பாருங்கள். எனவே அவர் சபையின் பொதுவான கண்காணிப்பாளர்...“ இதுவே ஒழுங்கு. இதைத் தான் சபை கடை பிடிக்கிறது. உங்கள் செய்தியை அளிக்க வேண்டும் என்பதே எங்கள் வாஞ்சையாயுள்ளது. நீங்கள் கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியை பெற்றிருந்தால்... அது அளிக்கப்பட்டு, மேடையின் மேல் எழுதிவைக்கப்படட்டும். எங்கள் போதகர் அந்த செய்தியை சபையோருக்கு படித்து காண்பிப்பார்” என்று கூறுங்கள். ஆனால் அது வேத வசனங்களை மீண்டும் கூறுவதாய் அமைந்திருக்கலாகாது. அது ஏதோ ஒன்று நடக்கப் போவதைக் குறித்தோ, அல்லது அவர்கள் செய்ய வேண்டிய ஒன்றைக் குறித்தோ ஜனங்களுக்கு நேரடியாக வரும் செய்தியாக இருக்க வேண்டும். இதை புரிந்து கொண்டீர்களா? சரி.