இல்லை, இப்பொழுது தான் நான் விளக்கினேன். இது மூன்றாம் கேள்வி.
56. டீக்கன்மார்களே, சபையில் தயவாயும் நட்புத்தன்மையோடும் ஒழுங்கைக் காத்துக் கொள்வது உங்கள் கடமையாகும். சபையில் யாராகிலும் ஒழுங்கை மீறினால், அல்லது குடித்து விட்டு சபைக்கு வந்தால், நீங்கள் தான் அதை கவனிக்க வேண்டும்.
57. அன்று இரவு மேடையின் மேல் நின்று கொண்டிருந்த போதகர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த குடிகாரன் இரட்டை குழாய் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்து அவனுடைய மனைவி எங்கே என்று அலறினான். அவன் போதகரிடம் சென்று அவன் மனைவி எங்கே என்று கேட்டான். போதகர் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த அவனுடைய மனைவியைக் காண்பித்தார். போதகர் அவனுடன் ஈடுபடத் தொடங்கினார். அதற்கு பதிலாக துப்பாக்கியைவைத்திருந்த அந்த மனிதன் திரும்பி பிரசங்க பீடத்தில் நின்று கொணிருந்த போதகரை சுட்டு கொன்று விட்டு, தன் மனைவியையும் சுட்டுக் கொன்று விட்டு, தன்னையும்சுட்டுக் கொண்டான்.
58. அந்த மனிதன் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த போது ஒரு கூட்டம் டீக்கன்மார்கள் இருந்திருப்பார்களானால் அவர்கள் அவனை இறுகப் பிடித்து அவனுடைய கையிலிருந்து துப்பாக்கியை பிடுங்கியிருப்பார்கள். பாருங்கள்? அவர்களே ஒழுங்கை காக்கும் டீக்கன்மார்கள். இவை எல்லை மீறி நடந்து கொண்டிருப்பதால், நீங்கள் எதையும் எதிர்ப்பார்க்கலாம். ஆனால், ஞாபகம் கொள்ளுங்கள், யார் என்ன நினைத்தாலும், தேவனுடைய சபையில் தேவனுடைய போலீஸ்காரர்கள் டீக்கன்மார்களே. சில நேரங்களில், ஒரு போலீஸ்காரன் தன் நண்பரில் ஒருவனை கைது செய்ய விருப்பங்கொள்ள மாட்டான். ஆனால் அவன் தன் உத்தியோகக் கடமையை நிறைவேற்றுவதாக ஆணையிட்டுள்ளபடியால், அதை எப்படியும் செய்தாக வேண்டும். அது அவன் தன் நகரத்துக்காக நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். பாருங்கள்?
59. அவ்வாறே ஒரு டீக்கனும் தன் சபையில் செய்ய வேண்டிய கடமையுண்டு. போதகர் செய்தியை அளித்துக் கொண்டிருக்கும் போது, யாராகிலும் குதிக்கவோ அல்லது அப்படிப்பட்ட வேறெதாவதையோ செய்து போதகரைத் தடை செய்தால், இரண்டு அல்லது மூன்று டீக்கன்மார்கள் அவரிடம் நடந்து சென்று, “சகோதரனே, உம்மிடம் சிறிது பேசலாமா?” என்று கூறி, பாருங்கள், அவரை சபையிலிருந்து வெளியே இங்குள்ள அலுவலகத்துக்கு, அல்லது வேறெதாவது அலுவலகத்துக்கு, அழைத்து வந்து, “ நீங்கள் தடை செய்யக் கூடாது” என்று ஆலோசனை கூற வேண்டும். உங்களுக்குத் தெரியுமா, ஆராதனை நடப்பதற்கு தடையாயிருந்தால் நாட்டின் சட்டபடி அதற்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். பாருங்கள்? சிலர், உதாரணமாக குற்றம் புரிந்தவர்கள், உங்கள் மத்தியில் வரும் போது, அல்லது மூடமதாபிமானம் கொண்டவர்கள் வந்து இவ்வாறு நடந்து கொள்ளும் போது, டீக்கன்மார்கள்... டீக்கன் மார்களால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், தர்மகர்த்தாக்களில் ஒருவர் அல்லது சபையிலுள்ள வேறு யாராகிலும் சென்று அவர்களுக்கு உதவி செய்யலாம். அது உங்களுக்குத் தெரியும்.
60. இந்த கேள்வியை நான் மறுபடியும் படிக்கிறேன்.
சபையில் ஒழுங்கைக் கடைபிடிக்க, டீக்கன்மார்கள் ஜனங்களை அதைக் குறித்து அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும் முறையைக் காட்டிலும் சிறந்த முறை வேறெதாகிலும் உண்டா?
61. இப்பொழுது, எப்பொழுதாகிலும், நான் நினைக்கிறேன். போதகர் அடிக்கடி... அல்லது இந்த ஒலிநாடாவைப் போடுங்கள். இது சாட்சியாக நிற்கட்டும். டீக்கன்மார்கள் போலீஸ்காரர்கள். அவர்களுடைய சொற்கள் சட்டமும் ஒழுங்குமாம். பாருங்கள்? தேவனுடைய வீட்டை சரியான முறையில் வைத்திருக்க அவர்கள் சபையிலிருந்தும் நாட்டின் சட்டங்களின் மூலமாகவும் அதிகாரம் பெற்றுள்ளனர். டீக்கனின் சொல்லுக்கு முரணாக நடப்பவர் எவருமே இரண்டு ஆண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வகையுண்டு. டீக்கன்மார்கள் அவர்களைப் போகச் சொல்லி அவர்கள் போகாமல் ஒழுங்கற்ற விதத்தில் நடந்து கொண்டால், அவர்களுக்கு என்ன நடக்குமென்று அவர்கள் அறியாமலிருக்கின்றனர்... அப்படிப்பட்டவருக்கு எல்லா விதமான அபராதமும் விதிக்கப்பட வகையுண்டு.
62. இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படுமானால்... உதாரணமாக யாராகிலும் குதித்து ஒழுங்கை மீறினால் அல்லது அந்நியபாஷை பேசினால், அவர்களை நான் ஒன்றும் செய்ய மாட்டேன். பாருங்கள், அவர்கள் செய்யட்டும், ஏனெனில் அவர்கள் அந்நியர். ஆனால் அவர்கள் நமது சொந்த ஜனங்களாயிருந்தால், அப்பொழுது... அடுத்த நாள் இரவு டீக்கன்மார்களாகிய நீங்கள் இந்த ஒலிநாடாவை வெளியே எடுத்து, “ ஆராதனை தொடங்குவதற்கு முன்பு, சபையின் ஒழுங்கைக் குறித்த ஒலிநாடாவை நாங்கள் போடப் போகிறோம். நீங்கள் ஒவ்வொருவரும் அதை புரிந்து கொள்ள வேண்டும்”, என்று கூறுங்கள். போதகர்களும் நீங்கள் அனைவரும் இவ்வாறு ஒத்துழைக்கலாம்.