63. ஆம், அவ்விதம் தான் நாம் எப்பொழுதும் செய்து வருகிறோம். ஞாயிறு பள்ளியை பிரசங்க ஆராதனைக்கு முன்பு நடத்துங்கள். அப்பொழுது ஞாயிறு பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு, அவர்களுக்கு விருப்பமானால், வகுப்பு முடிவு பெற்று, தருணம் உண்டாயிருக்கும்... சிறுவர்களுக்கு ஒன்றுமே புரிவதில்லை. அவர்கள் பிரசங்க ஆராதனை முழுவதிலும் உட்கார்ந்து விட்டு அதன் பிறகு ஞாயிறு பள்ளிக்கு வருவார்களானால் களைத்து விடுவார்கள். ஞாயிறு பள்ளி முதலில் நடக்கட்டும். அதற்கென்று ஒரு நேரத்தை குறித்து விடுங்கள். ஞாயிறு பள்ளி நடப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அது குறிப்பிட்ட நேரத்தில் நடக்கிறதா என்று ஞாயிறு பள்ளி மேற்பார்வையாளர் கவனித்துக் கொள்ள வேண்டும். அது குறிப்பிட்ட நேரத்தில் முடிவு பெற வேண்டும். ஞாயிறு பள்ளிக்கென்று இவ்வளவு நேரம் ஒதுக்கப்பட்டு, அதன் பின்பு முடிவு பெற வேண்டும்.