64. அவ்வாறு ஒப்புக் கொள்ளப்பட்டால், போதகர் ஞாயிறு பள்ளியில் கற்றுத் தந்து அதன் பிறகு செய்தியை அளிக்க விரும்பினால், அது அருமையானது - அவர் இரண்டு சேவையும் செய்ய விரும்பினால், அவருக்கு விருப்பம் இல்லாவிட்டால், வயது வந்தவர் வகுப்பிற்கு வேறொரு ஞாயிறு பள்ளி ஆசிரியரை நியமியுங்கள் (பாருங்கள்?) போதகருக்கு யாராகிலும் மனதில் இருந்தால், அந்த நபர் ஆசிரியராக இருக்க விரும்பினால், அந்த பள்ளிக்கு முப்பது நிமிடங்கள் அளியுங்கள், அல்லது நீங்கள் அனுமதிக்க விரும்பும் அவ்வளவு நேரம் - முப்பது, அல்லது முப்பத்தைந்து, நாற்பது நிமிடங்கள், அது எவ்வளவானாலும்.
65. அங்கு ஒரு மணி வைக்கப்பட வேண்டும். அந்த மணி அடிக்கப்படும்போது, அதன் அர்த்தம் என்னவென்றால்... அல்லது சபை மணி அடிக்கப்படும் போது, ஞாயிறு பள்ளியை முடித்து விட வேண்டும். அந்த மணி அடிக்கப்படும் போது, எல்லாமே அங்கு ஒழுங்குக்கு வந்து விட்டதென்று அர்த்தம்.
66. ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் பாட உங்களுக்கு போதிய நேரம் இருக்கும் - நீங்கள் பாட விரும்பும் பாடல்கள் அதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள். ஜனங்களை நீண்ட நேரம் வைத்துக் கொண்டால் அவர்கள் களைத்து விடுவார்கள். பாருங்கள். மணியை அடித்து, ஒரு பாடலைப் பாடி, அல்லது நீங்கள் செய்யப் போவதை செய்து, பிள்ளைகளை அவர்களுடைய வகுப்புகளுக்கு அனுப்பிவிடுங்கள். நேரம் முடிந்தவுடன் - பத்து, பத்தரை அல்லது பத்தே கால் மணி ஆனவுடன் - மணியை அடியுங்கள். அப்பொழுது ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் வகுப்புகளை முடித்துக் கொண்டு, இங்குள்ள கூட்டத்துக்கு வந்து விடுகின்றனர். அதன் பிறகு... அறிக்கையை கொடுங்கள், ஞாயிறு பள்ளி அறிக்கையை. அதன் பிறகு வகுப்பை முடித்துக் கொள்ளுங்கள். பிரசங்க ஆராதனைக்கு தங்க விரும்புவோர் அனைவரும் அடுத்த படியாக தங்கட்டும். பாருங்கள். அப்பொழுது அது ஒழுங்கில் அமைந்திருக்கும்.
கேள்வி? எத்தனை... (யாரோ ஒருவர் சகோ. பிரன்ஹாமிடம், “அப்படியானால் வெவ்வேறு வகுப்புகள் இருக்க வேண்டும், அப்படித் தானே?” என்று கேட்கிறார் - ஆசி).
67. ஓ, ஆமாம். வெவ்வேறு வகுப்புகள் இருந்தாக வேண்டும். பதினான்கு வயது பையன் புரிந்து கொள்ளும் அளவுக்கு மூன்று வயது சிறுவன் புரிந்து கொள்ள முடியாது. அடுத்த கேள்வி அது தான் என்று நினைக்கிறேன்.