68. உங்கள் வகுப்புகளை வெவ்வேறாகப் பிரிக்க வேண்டும்... உதாரணமாக வரைபடம் மூலம் (flannel graph) விளக்க வேண்டும் என்று விரும்பும் சிறு பிள்ளைகள் வகுப்பு. அதை பதினான்கு வயது பையன் அல்லது பெண் விரும்ப மாட்டார்கள். பாருங்கள்? இந்த சிறு குழந்தைகளுக்கு கற்றுத் தர ஒரு வயதான தாயை அல்லது அவர்களை எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அறிந்திருக்கும் யாராகிலும் ஒருவரை அமர்த்த வேண்டும். மற்ற வகுப்புகளுக்கு வார்த்தையை எடுத்துரைக்கவல்ல ஒருவரை நியமிக்க வேண்டும். பாருங்கள்? வெவ்வேறு வகுப்புகள் இருக்க வேண்டும். இப்பொழுது கூறப்போனால்... குறைந்தது மூன்று வகுப்புகளாவது இருக்க வேண்டும்.
69. சிறு பிள்ளைகள் வகுப்பு ஒன்று இருக்க வேண்டும், ஏறக்குறைய ஐந்துக்கும் அதற்கு மேற்பட்ட வயதுக்கும். அதற்கு கீழுள்ள குழைந்தைகள் தாயுடன் வைக்கப்பட்டு, அவசியமானால், பிரசங்கத்தின் போது, பாலூட்டும் அறைக்கு கொண்டு செல்லப் பட வேண்டும் - அவர்கள் அழ நேரிட்டால். அதற்காகத் தான் பாலூட்டும் அறை உள்ளது.
70. வகுப்புகள் இவ்வாறு ஒழுங்கு செய்யப்பட வேண்டும் மென்று எண்ணுகிறேன: ஐந்து அல்லது ஆறு வயது முதல் எட்டு, ஒன்பது அல்லது பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஒரு வகுப்பு. பிறகு பத்து வயது முதல் பதினைந்து வயதுடையவர்களுக்கு - வாலிபப் பருவத்தினருக்கான வகுப்பு. பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வயது வந்தவர்களின் வகுப்பு. ஏனெனில் அவர்கள். இப்பொழுதெல்லாம் அவ்வயதில் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. மேலும் அந்த வயதில் அவர்கள் வாக்குகள் அளிக்க (Vote, வோட்டு) விரும்புகின்றனர், ஆகவே அவர்கள் வார்த்தையை கேட்க முடிந்தவர்களாக உள்ளனர், அவர்கள் சபை கட்டிடத்துக்கு வந்து அதை பெற வேண்டும்.