71. பார்த்தீர்களா, ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தல் உங்களைப் பொறுத்தது. நீங்கள் அதை செய்ய வேண்டும். அவர்களை அங்கு ஒன்று கூட்டி, யாரையாகிலும் தேர்ந்தெடுக்க வேண்டும். சபையை சந்தித்து, “யார். இங்குள்ள யார் கர்த்தரால் ஏவப்படுகிறீர்கள்?” என்று கேளுங்கள். அதன் பிறகு தகுதி பெற்ற ஒரு ஆசிரியரை தெரிந்து கொள்ளுங்கள். அது அவ்வாறு செய்யப்படட்டும். சகோதரரே, அது கிரமமாக செய்யப்பட வேண்டும். ஆசிரியருக்கு அதற்கான தகுதி இல்லாமல் போனால், அவரை மாற்றி விடுங்கள்.
72. ஆர்மன் நெவில் இங்கு போதகராக இனிமேல் இருக்கத் தகுதியில்லை என்று நான் நினைக்கும் நேரம் ஒன்று, தேவனுக்கு கீழ், வருமானால், அதை நான் சபைக்கு அறிவிப்பேன். டீக்கன்மார்களாகிய நீங்கள் டீக்கன்மார்களாக இருக்கத் தகுதியில்லை என்று என்னை நினைக்கத் தூண்டும் ஒரு காரியத்தை இங்கு நான் காண நேர்ந்தால், “இந்த டீக்கன் செய்யத்தகாத ஒன்றை இங்கு செய்து வருவதாகக் காண்கிறேன். அவருடைய கடமையில் அவர் சரியாக இல்லை” என்று சபைக்கு அறிவிப்பேன். ஒரு தர்மகர்த்தாவையும் அல்லது வேறு யாரையும் நான் அவ்வாறு செய்வேன். அவர்களை நான் தேர்ந்தெடுக்கவோ அல்லது நீக்கம் செய்யவோ கூடாது, சபை அதை செய்ய வேண்டும். ஆனால் அதை நான் நிச்சயம் சபைக்கு அறிவிப்பேன். பாருங்கள், ஏனெனில் அதைத்தான் நாம் செய்ய வேண்டும். அதற்காகத் தான் நான் கண்காணிப்பாளனாக இருக்கிறேன், என்ன நடக்கிறதென்பதை நான் கண்டு அறிந்து கொள்ள வேண்டும். நாம் பரலோகத்துக்கு செல்லப் போகிறோம், இங்கு ஒரு கூட்டத்துக்கு சென்று, ஒருவரையொருவர் கேலி செய்து, கேளிக்கையில் கலந்து கொண்டு, 'பேஸ் பந்து விளையாட்டு ஆடுவதற்கு அல்ல. பூமியிலேயே மிகவும் கிருபையுள்ள பொக்கிஷமாகிய தேவனுடைய வார்த்தையை நாம் பெற்றிருக்கிறோம். அதை தேவ பக்தியுள்ள ஒழுங்குடன் கடை பிடிக்க வேண்டும்.
யார் ஆசிரியார்களாக இருக்க வேண்டும்?
73. அவர்களைத் தெரிந்து கொள்வது உங்களைப் பொறுத்தது. ஆனால் நான் குழந்தைகளுக்கு, அவர்களுக்கு திறம்பட கற்றுத் தரத் கூடிய ஒரு வயோதிப ஸ்திரீயை தெரிந்து கொள்வேன். இளைஞர்களுக்கு ஒழுக்கமுள்ள ஒரு ஆசிரியரை தெரிந்து கொள்வேன் - இங்கு வந்து வீனர் ரோஸ்ட் புசிக்கும் ஒருவரை அல்ல. அவர்கள் மனதை அதிலே செலுத்துவதென்பது... வார்த்தையில் மனதை செலுத்தி, வார்த்தையை உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கும் ஒருவரை இந்த சபை எதற்கு உறுதியாய் நிற்கிற தென்றால்... 'வீனர் ரோஸ்ட்' நல்லது தான், நீங்கள் வனபோஜனத்துகாக (Picnics) ஒன்று கூடி ஐக்கியம் கொள்ள விரும்பும் போது, அது நல்லது, சிறு பிள்ளைகளை மகிழ்விக்க நீங்கள் அதை செய்ய வேண்டும். ஆனால் இந்த இடத்தில், தேவனுடைய வார்த்தை மட்டுமே. நீங்கள் வேறெங்காவது ஒன்று கூடும் போது 'வீனர் ரோஸ்ட்' புசிக்கலாம், ஆனால் தேவனுடைய வீட்டில் அல்ல. இங்குள்ள நமக்கு, நம்மைச் சுற்றும் நடைபெறும் விருந்துகளிலும் மற்ற கேளிக்கைகளிலும் நம்பிக்கையில்லை, அதை மூடத்தனமாகக் கருதுகிறோம். அதைக் குறித்து நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள்.