74. ஞாயிறு பள்ளி மேற்பார்வையாளர் (Sunday School Superintendent). அதுதான் அவருடைய வேலை. அவருக்கு டீக்கன்மார்கள், தர்மகர்த்தாக்கள், போதகர்கள், மற்றவர்களின் ஊழியத்தில் யாதொரு சம்பந்தமும் இருக்கக் கூடாது. அது அவருடைய தனிப்பட்ட உத்தியோகம். உங்கள் ஞாயிறு பள்ளி மேற்பார்வையாளர், எல்லா வகுப்புகளும் ஒழுங்காக நடக்கிறதா என்றும், எல்லா ஆசிரியர்களும் வந்திருக்கிறார்களா என்றும் கவனித்து, ஒரு நாள் ஒரு ஆசிரியர் வராமல் போனால், அவருக்கு பதிலாக வேறொரு ஆசிரியரை அந்த வகுப்புக்கு அனுப்ப வேண்டும்.
75. ஞாயிறு பள்ளி முடிவடைவதற்கு முன்பு... பாடங்கள் நடத்தப்படும் போது, ஞாயிறு பள்ளி மேற்பார்வையாளர் அங்கு சென்று எடுக்கப்பட்ட காணிக்கைகளை (ஞாயிறு பள்ளி காணிக்கைகளை கொண்டு வந்து, எத்தனை பேர் பள்ளிக்கு வந்திருந்தனர், வகுப்பில் எத்தனை வேதாகமங்கள் இருந்தன போன்ற விவரங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை தயார் செய்து, பிரசங்க ஆராதனைக்கு முன்பாக நின்று, ஞாயிறு பள்ளி அறிக்கையை படித்து, எத்தனை ஆசிரியர்கள் வந்திருந்தனர், எத்தனை பேர் வகுப்புக்கு வந்திருந்தனர், அவர்களுடைய மொத்த எண்ணிக்கை எவ்வளவு, காணிக்கை தொகை எவ்வளவு போன்ற விபரங்களை அறிவிக்க வேண்டும். டீக்கன்மார்கள், தர்மகர்த்தாக்கள், போதகர்கள் அதை செய்யக் கூடாது. அவர்களுக்கு இதனுடன் யாதொரு சம்பந்தமுமில்லை. அது ஞாயிறு பள்ளி மேற்பார்வையாளரின் வேலை.
76. ஞாயிறு பள்ளிக்கு சில தேவைகள் உள்ளன என்று மேற்பார்வையாளர் கண்டால், அதை அவர் தர்மகர்த்தாக்களின் குழுவுக்கு தெரியப்படுத்த வேண்டும். முதலில் தர்மகர்த்தாக்கள் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்து இதைக் குறித்து பேச வேண்டும். அதன் பிறகு இதற்கு போதுமான பணம் உள்ளதா என்று பொருளாளர் மூலம் அவர்கள் அறிந்து கொண்டால், இவைகளை வாங்கிக் கொள்ளலாம். ஞாயிறு பள்ளிக்கு சில புத்தகங்கள் அல்லது வேறெதாவது வேண்டுமென்று மேற்பார்வையாளர் நினைத்தால், அல்லது வேதாகமங்கள் தேவைப்பட்டால்: வேதாகமத்திலிருந்து நிறைய வசனங்களை மனப்பாடம் செய்து உரைத்த ஒரு சிறுவனுக்கு வேதாகமத்தை பரிசாக வழங்க வேண்டுமென்று எண்ணி அதை சபையின் மூலம் வாங்க நினைத்தால், அதை அவர்கள் டீக்கன்மார்களிடம் தெரியப்படுத்த வேண்டும்... அதன் பிறகு பணம் உள்ளதா என்று அவர்கள் அறிந்து கொள்ளட்டும். பாருங்கள்?
77. அந்த ஐந்து கேள்விகளுக்கும் பதில் கூறப்பட்டு விட்டதென்று நினைக்கிறேன்.