இதற்கு ஒன்றன் பின் ஒன்றாக பதிலளிப்போம்.
சபை ஒழுங்கு விஷயத்தில், புது சபை பிரதிஷ்டை பண்ணப்பட்ட போது எங்களுக்கு அளிக்கப்பட்ட ஒழுங்கைக் கடை பிடிக்க நாங்கள் முயன்று வருகிறோம்.
78. இப்பொழுது, அது சரி. நீங்கள் சரியாக செய்கிறீர்கள். இது டீக்கன்மார்களின் கேள்வி என்று நினைக்கிறேன். ஏனெனில் இது டீக்கன்மார்களின் வேலை. சரி.
அவ்விதம் செய்ததனால் நாங்கள் அடிக்கடி... ஜனங்கள் எங்கள் மேல் அடிக்கடி கோபங் கொண்டனர்.
79. அவர்கள் என் மீதும் கோபங் கொள்கின்றனர். அவர்கள் எந்த மனிதனின் மீதும் கோபங் கொள்வார்கள். பாருங்கள்? ஒருவர் அவ்விதம் செய்வாரானால், அவரிடம் ஏதோ தவறுள்ளது, அவர்கள் தேவனுடன் சரியாக இல்லை. ஏனெனில் கிறிஸ்துவின் ஆவி கிறிஸ்துவின் போதனைக்கு, கிறிஸ்துவின் வீட்டுக்கு, கிறிஸ்துவின் ஒழுங்குக்கு கீழ்ப்பட்டுள்ளது. பாருங்கள்? எந்த மனிதனும் ஆலோசனை கூறும் தேவ பக்தியுள்ள டீக்கன் ஒருவரிடம் கோபங் கொள்ளும் எந்த மனிதனும், எந்த ஸ்தரீயும், பிள்ளைகளும்... டீக்கனிடம் கோபங்கொள்ளும் பெற்றோர் எவரும்... உண்மையில், எல்லோரும் இந்த சபைக்கு வர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அது எங்காவது தொல்லையை விளைவிக்குமானால், 'மரக்குவியலில் நுழைந்த முயல்' என்று நாம் கூறுவது போல், அந்த நபர் செய்வது சரியல்ல.
80. அவர்கள் சபையை விட்டு விலகினால் செய்ய வேண்டியது ஒன்று மாத்திரமே. நீங்கள் சென்று அவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். டீக்கன் மார்களில் சிலர் அவர்களுடைய சபைக்கு அவர்களுடைய வீட்டிற்கு எப்பொழுதாவது சென்று, அவர் சபையை விட்டுச் சென்ற காரணம் என்னவென்றும், என்ன தவறு நடந்து விட்ட தென்றும் அவர்களிடம் கேட்கலாம். அப்பொழுது அவர்களை... ஒப்புரவாக்க முடியுமா என்று பாருங்கள். உங்களால் முடியாமல் போனால், இரண்டு மூன்று சாட்சிகளை உங்களுடன் கொண்டு சென்று அவர்களுக்கு விளக்கித் தாருங்கள். அவர்கள் விளங்கிக் கொள்ளாமல் போனால், அவர்கள் இந்த சபையின் அங்கத்தினராயிருந்தால், அதை சபையோர் முன்னால் அறிவித்து விடுங்கள். அப்பொழுது அவர்கள்...
81. அவர்கள் சபையின் அங்கத்தினராயிராமல் போனால் - இந்த நமது சபையின் அங்கத்தினராயிராமல் போனால் அவர்கள் ஒழுங்காக இருக்கும் படி செய்ய வேண்டும். பாருங்கள், இங்குள்ள ஒழுங்குக்கு அவர்கள் செவி கொடுத்து கீழ்ப்படிய வேண்டும். ஏனெனில் இது இந்த சபையின் ஒழுங்கு. சில காரியங்களை செய்ய நாம் விரும்புவதில்லை, நான் செய்ய விரும்பாத சில காரியங்கள் இருக்கக் கூடும். ஆனால் இந்த காரியங்கள் செய்யப்பட வேண்டும். இதை நான் கூறுகிறேன் என்று இந்த ஒலிநாடாவின் மூலம் கூறி என்னை அம்பலப்படுத்துகிறேன். அப்பொழுது நான் பேசுவதைக் கேட்பவர்கள், இதை கூறினது நீங்கள் அல்ல, நான் என்பதை அறிந்து கொள்வார்கள். நீங்கள் இந்த கேள்வியை என்னிடம் கேட்டீர்கள். எனக்குத் தெரிந்தமட்டில் தேவனுடைய வார்த்தையிலிருந்து நான் சிறப்பாக பதிலுரைக்கிறேன்.
82. “சகோ. பிரன்ஹாமே, இந்த ஜனங்கள் கோபங்கொண்டு நம்மை விட்டுச் சென்றால், வேதம் இவர்களைக் குறித்து என்ன உரைக்கிறது?”
83. “ அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை. ஆகவே அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள். அது தான் அதன் முடிவு. “ சபையை விட்டுப் போனார்கள், அதைத் தான் அவர்கள் செய்தார்கள்.”
வேறு சிலர், முக்கியமாக பிள்ளைகள், நாங்கள் கூறுவதற்கு செவி கொடுக்க மறுக்கின்றனர்.
84. பிள்ளைகள் ஒழுக்கம் அறிந்தவர்களாயிருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் அதைப் படிக்க வேண்டும். என் பிள்ளைகளும் கூட இங்கு வரும் போது ஒழுங்கற்றவர்களாகி விடுகின்றனர். நீங்கள் பட்சபாதம் காண்பிக்க வேண்டாம். அது சாராள், ரெபேக்கா, ஜோசப், பில்லி, யாராயிருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன். அவர்களால் ஒழுங்காக நடந்து கொள்ள முடியவில்லையென்றால், அவர்கள் ஒழுக்கம் கற்றுக் கொள்ளும் வரைக்கும் சபைக்கு வரக்கூடாது. இது ஒரு விளையாட்டு அரங்கமல்ல. இது தேவனுடைய வீடு. இது விளையாடுவதற்கோ, ஹாஸ்ய துணுக்குகள் எழுதி, சிரித்து விளையாடுவதற்கோ சறுக்கிக் கொண்டு ஓடுவதற்கோ இடமல்ல. இது தேவனுடைய வீடு, இங்கு தேவ பக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
85. நீங்கள் தொழுது கொள்ள இங்கு வருகின்றீர்கள், ஒருவரையொருவர் சந்திக்க அல்ல. இது திறந்த வெளி இன்பப்பயண (picinic) இடமோ, சந்திக்கும் இடமோ அல்ல. இது பரிசுத்த ஆவி உங்களை சந்திக்கும் இடம்: அவர் என்ன கூறுகிறாரோ அதற்கு செவி கொடுங்கள். ஒருவருக்கொருவர் கூறுவதை அல்ல. இங்கு நாம் ஒருவரோடாருவர் ஜக்கியம் கொள்ள வரவில்லை, கிறிஸ்துவுடன் ஐக்கியங் கொள்ளவே வந்திருக்கிறோம். இது தேவனை தொழுது கொள்ளும் வீடு. பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாய் செய்ய வேண்டும்... அவருடைய பெற்றோர்கள் செய்ய வேண்டும். இதை அறிந்து கொள்ளுங்கள் இந்த டீக்கன்மார்கள்... பிள்ளைகளின் பெற்றோர் டீக்கன்மார்கள் கூறுவதைக் கேட்காமல் போனால், பெற்றோர்களே திருத்தப்பட வேண்டும்.
பிள்ளைகளைக் குறித்து அவர்களுடைய பெற்றோரிடம் நாங்கள் பேசினோம், அவர்கள் அவர்களைக் கவனித்துக் கொள்வதில்லை.
86. அவர்கள் இந்த சபையின் அங்கத்தினராய் இருப்பார்களானால், நீங்கள் இரண்டு அல்லது மூன்று பேர்களை உங்களுடன் கூட்டிக் கொண்டு, அந்த பெற்றோரை அலுவலகம் ஒன்றிற்கு தனியே அழைத்துக் கொண்டு வந்து அவரிடம் பேச வேண்டும். அது யாராயிருந்தாலும் எனக்கு கவலையில்லை, அது நானோ, சகோ.நெவிலோ, அது பில்லிபாலும் அவனுடைய சிறு பையனும், அது சகோ. காலின்ஸும் அவருடைய பிள்ளைகளில் ஒருவனும், மற்றுமுள்ள உங்களில் யாராயிருந்தாலும் சரி. நாம்... நாம் ஒருவரிலொருவர் அன்பு கூருகிறோம், ஆனால் நாம் தேவனுக்கும், அவருடைய வார்த்தைக்கும் கடமைப்பட்டிருக்கிறோம். அது 'டாக்' காயிருந்தாலும், அது யாராயிருந்தாலும், நாம் ஒருவரை யொருவர் உள்ளே அழைத்து, ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்க வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் நேர்மையாயிராமல் போனால், தேவன் எவ்விதம் நம்முடன் ஈடுபட முடியும்? நாம் எவ்விதம் அவருடன் நேர்மையாக இருக்க முடியும்? பாருங்கள்?
87. இந்த ஒழுங்கை நாம் தேவனுடைய வீட்டில் கடைபிடிக்க வேண்டும். அதை எவ்விதம் காக்க வேண்டுமென்று டீக்கன்மார்கள் அறிந்திருக்க வேண்டும். பாருங்கள்? ஆகையால் தான் இவைகளை நீங்கள் சீராக வைத்திருக்க வேண்டுமென்று இப்பொழுது கூறுகிறேன். நீங்கள் பெற்றோரிடம் கூறி அவர்கள் அதற்கு செவி கொடுக்காமல் போனால், நீங்கள் வேறொரு டீக்கனை, அல்லது தர்மகர்த்தாக்களில் ஒருவரை, அல்லது சபையிலுள்ள ஒரு நல்ல மனிதரை அழைத்துச் சென்று சந்தியுங்கள். உங்கள் தர்மகர்த்தா... உங்கள் டீக்கன்மார் குழுவிலுள்ள அனைவரையும் அழைத்து அவர்களிடம், “சகோ. ஜோன்ஸ், சகோ. ஹெண்டர்ஸன், சகோ. ஜாக்ஸன்” அது யாராயிருந்தாலும்,” என்பவர்களுடைய பிள்ளைகள் தவறாக நடந்து கொள்கின்றனர். அவர்களிடம் இரண்டு மூன்று முறை அவர்களுடைய பிள்ளைகளைக் குறித்து சொல்லிப் பார்த்து விட்டோம். அவர்கள் கேட்க மறுக்கின்றனர்' என்று சொல்லுங்கள்.
88. அதன் பிறகு சகோ. ஜோன்ஸ் அல்லது சகோதரன்: அது யாராயிருந்தாலும், அவரை தனியே அழைத்து, “சகோ. ஜோன்ஸ், உங்களிடம் பேசுவதற்காக இங்கு அழைத்து வந்தோம். உங்களை நாங்கள் நேசிக்கிறோம். நாங்கள்... நீங்கள் எங்களுடைய ஒரு பாகமாக... எங்களில் ஒருவராக இருக்கிறீர்கள். இந்த ஒலிநாடாவை நான் போடுகிறேன். இதைக் குறித்து சகோ. பிரன்ஹாம் கூறியுள்ளதை உன்னிப்பாக கேளுங்கள். பாருங்கள். உங்கள் பிள்ளைகள் சரிவர நடந்து கொள்ள நீங்கள் செய்யும்படி உங்களை நாங்கள் கேட்டுக் கொண்டோம். பாருங்கள்? அவர்கள் சரியாக நடந்து கொள்ள வில்லை என்றால், அவர்கள் சரியாக நடந்து கொள்ளச் செய்ய உங்களால் முடியவில்லை என்றால், தேவனுடைய வீட்டில் எவ்விதம் சரியாக நடந்து கொள்வது என்று அவர்கள் கற்றுக் கொள்ளும் வரைக்கும், நீங்கள் சபைக்கு வரும் போது அவர்களை யாரிடமாவது விட்டு விட்டு வாருங்கள்” என்று சொல்லுங்கள். பாருங்கள்? இது ஒரு ஒழுங்கு. இதை கடை பிடித்தாக வேண்டும். பாருங்கள்?
மற்ற கேள்வி இவ்விதம் உள்ளது:
நாங்கள் தவறாகப் புரிந்து கொண்டோமா?
89. இல்லை, ஐயா. நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ள வில்லை. அது சரியானது. இதை நான் மறுபடியும் கூறுகிறேன், இந்த கட்டளைகள். இராணுவத்தில் உங்களை, “இதை நீங்கள் செய்வீர்களா?” என்று கேட்பதில்லை. நீங்கள் இராணுவத்தில் இருந்தால், அதை செய்ய பலவந்தம் பண்ணப்படுகிறீர்கள். பாருங்கள்? அப்படித்தான் இந்த... நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க பலவந்தம் பண்ணப்படுகிறேன். மற்ற மனிதர் அல்லது சகோதரர் இதைக் குறித்து என்ன கூறினாலும், இதற்காக நிற்க நான் பலவந்தம் பண்ணப்படுகிறேன். நான் மனதுகளை நோகப் பண்ணவும், மனிதரை துண்டுகளாக வெட்டவும் வேண்டியதாயுள்ளது.
90. நீங்கள் ஆஸ்வால்டைப் போல் ஆக விரும்பமாட்டீர்கள். பாருங்கள்? உங்களால் ஒரு மனிதனுடன் பகிரகங்மாக இணங்க முடியாமல், அவனுடன் கைகுலுக்கி, அப்பொழுதும் அவன் பேரில் வெறுப்பு கொண்டிருப்பீர்களானால், உங்களில் ஏதோ தவறுண்டு. ஒரு மனிதனுடன் நான் இணங்காமல், அவன் மீது கசப்புத்தன்மை கொண்டு, கிறிஸ்து அவனைக் கருதுவது போல் நான் கருதாமல் இருந்தால், என் ஆவியில் ஏதோ தவறுண்டு. எனக்கு கிறிஸ்துவின் ஆவி கிடையாது. பாருங்கள்?
91. அவர், “நல்லது, சகோ. பிரன்ஹாம், உங்கள் போதனை இப்படி, அப்படி உள்ளது” என்று கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
92. 'சரி, சகோதரனே, நீங்களும் நானும் ஒன்று சேர்ந்து இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு விவாதிப்போம். நாம் தனிமையில் இதை விவாதிப்போம். அவர் என்னை துண்டம் துண்டமாக வெட்டுகிறார். நானும் திரும்ப அவரிடம் ஏதாவது கடுமையாக உரைக்க வேண்டியதாயுள்ளது. ஆனால் என் இருதயத்தில் அவன் என் சகோதரன், அவருக்கு உதவி செய்ய முயல்கிறேன்” என்னும் அவரைக் குறித்து முன்பு கொண்டிருந்த அதே நல்லுணர்வைக் கொண்டிராமல் இருந்தால், அவருக்கு நான் உதவி செய்யவே முடியாது. அவருக்கு உதவி செய்ய எனக்கு ஒரு வழியும் இருக்காது. அவரை நான் நேசிக்காமல் இருந்தால், அங்கு போவதனால் என்ன பயன்? அவரிடம், “சகோதரனே, முதற்கண் உம்மை நான் நேசிக்கவேயில்லை. அங்கு நாம் செல்வதற்கு முன்பாக, இந்த வெறுப்புணர்வை என் இருதயத்தை விட்டு இந்த இடத்திலேயே நான் எடுத்துப் போடட்டும். உம்மை நான் நேசிக்காமல் போனால், என்னால் உமக்கு உதவி செய்யவே முடியாது” என்று கூறுங்கள்.
93. நீங்கள் செய்வது சரி. அது தான் செய்ய வேண்டிய முறை. பாருங்கள், அதை தொடர்ந்து செய்யுங்கள். அப்படித் தான் அது இருக்க வேண்டும். நீங்கள் அதை தவறாகப் புரிந்து கொள்ளவில்லை.
அதை தவறான விதத்தில் கடை பிடிக்கிறோமா?
94. இல்லை, நீங்கள் சரியான விதத்தில் தான் அதை செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒழுங்கு கடைபிடிக்கப்படட்டும். ஏனெனில் அது தொடர்ச்சியாக... இப்பொழுது, சிறு பிள்ளைகளும் தாய்மார்களும், சிறு குழந்தைகள் அழுவார்கள், அவர்கள் அதிகமாக அழுது உங்கள் போதகரை தொந்தரவு செய்தால், நீங்கள் தான் அவருடைய மெய்க்காவலர் (body guards) என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் சுவிசேஷத்தில் அவருடைய மெய்க்காவலர். பாருங்கள்? அது கர்த்தருடைய செய்திக்கு தடங்கலை விளைவித்தால், டீக்கன்மார்களாயிருக்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அந்நிய பாஷை பேசுகிறவன் தன் கடமையை நிறை வேற்ற வேண்டியவனாயுள்ளது போல அவ்வாறே பிரசங்கம் செய்கிறவன் வார்த்தைக்கு கடமைப் பட்டிருக்கிறான், இவைகளுக்கு கடமைப் பட்டிருக்கிறான். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு உத்தியோகத்தை செய்ய கடமைப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு உத்தியோகத்தை செய்ய கடமைப் பட்டிருக்கிறீர்கள். அதை செய்யத் தான் நாம் இங்கிருக்கிறோம்.
95. இதில் நீண்ட நேரம் நிலைத்திருக்க விரும்பவில்லை. இன்னும் சில நிமிடங்களில் நான் ஒருவரைச் சந்திக்க வேண்டும். எனவே என்னால் முடிந்த வரையில் வேகமாக முடிக்க முயல்கிறேன்.