96. உங்கள் போதகருக்காக தவிர வேறு யாருக்காகவும் காணிக்கை எடுக்கக் கூடாது என்பது என் கருத்து. யாராகிலும் நன்கொடைக்காக வந்தால், அல்லது அப்படி ஏதாவதொன்று... அல்லது யாருக்காகிலும் அதிக தேவை இருக்கும் பட்சத்தில், உதாரணமாக, இங்குள்ள இந்த சபையின் ஒரு அங்கத்தினருக்கு; நமது சகோதரரில் ஒருவருக்கு தொல்லை ஏற்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். அது மேடையிலிருந்து அறிவிக்கப்பட வேண்டும். போதகர் அதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டியது அவருடைய கடமை. ஏதாகிலும் தேவைப்படும் சகோதரர், சபை அதை தீர்த்து வைக்க வேண்டுமென்று விரும்பினால், அதை சபைக்கு தெரியப்படுத்த வேண்டும்.
97. யாருக்காகிலும் தேவையிருந்தால், தேவையுள்ள அந்த சகோதரனுக்கு நீங்கள் காணிக்கை எடுக்காதிருந்தால், அப்பொழுது குழுக்கள் ஒன்று கூடி ஆலோசித்து, சபை நிதியில்லிருந்து அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க தீர்மானம் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் சபை நிதியில் குறைவான பணம் இருந்து அவர்களால் உதவி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அந்த விஷயத்தை விவாதித்து... குழு அதற்கான முடிவு எடுத்து போதகருக்கு அறிவிக்க வேண்டும். போதகர் தேவையைச் சந்திக்க சபையோரிடம் முறையிட வேண்டும். உதாரணமாக, “ நமது சகோ. ஜோன்ஸுக்கு பயங்கரமான விபத்து ஏற்பட்டு, அவருடைய வீடு தீக்கிரையானது. இன்றிரவு, கிறிஸ்தவர் என்னும் முறையில், சகோ. ஜோன்ஸ் தங்குவதற்கு வீட்டை மீண்டும் பெற நாம் ஒவ்வொருவரும் அவருக்கு எவ்வளவு தொகை அளிக்கப் போகிறோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்” என்று கூற வேண்டும். பாருங்கள், அது வேறென்ன விஷயமாயிருந்தாலும், பாருங்கள், அவ்வாறு நாம் செய்வோம். அது மேடையிலிருந்து அறிவிக்கப்படட்டும். அப்படித்தான் அதை செய்ய வேண்டும். அதன் பிறகு உறுதிப் பணம் சபையின் பொருளாளரிடம் கொடுக்கப்பட்டு, அவர் மொத்த தொகையை அந்த நபரிடம் கொடுப்பார். அந்த நபருக்கு ஒரு ரசீதைத் தாருங்கள். இதற்கு வருமான வரி விலக்கு உண்டா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட ஒன்றுக்கு வரிவிலக்கு உண்டென்று நினைக்கிறேன்.
98. ஆனால் ஒரு அந்நியர் உள்ளே வந்து... ஒரு மனிதன் உள்ளே வந்து, “ என்ன நடந்தது தெரியுமா? நான் பயணம் செய்து கொண்டிருந்த போது, டயர் வெடித்து விட்டது. எனக்கு ஒரு புது டயர் தேவை. அதற்காக இன்றிரவு காணிக்கை எடுங்கள்” என்று சொன்னால், அதை செய்யக் கூடாது. உதவி செய்ய அது தகுதி வாய்ந்தது என்று காணப்பட்டால், குழு ஒன்று கூடி ஆலோசித்து, அந்த மனிதன் டயர் வாங்க ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்க பொருளாளரிடம் சிபாரிசு செய்ய வேண்டும். ஆனால் சபை நிதியில் பணம் குறைவாக இருந்து, அவருக்கு உதவி செய்ய வேண்டுமென்று குழு தீர்மானம் செய்தால் போதகர் இதனுடன் சம்பந்தம் கொள்ளக் கூடாது. டீக்கன்மார்கள் தான் இதை செய்ய வேண்டும், பாருங்கள், அல்லது குழுக்கள். இப்பொழுது இது... உதவி செய்ய வேண்டுமென்று தீர்மானம் எடுக்கப்பட்டால், அதை போதகரிடம் அறிவியுங்கள். அப்பொழுது போதகர் காணிக்கை எடுக்கலாம். ஆனால் கவனியுங்கள், அவர் ஒரு அந்நியராயிருந்து, அது ஒரு அவசர காரியமாயிருந்து, அவருக்கு சிறிது பணம் தேவைப்பட்டு, அது நியாயமான காரியம் என்று உங்களுக்கு தோன்றினால் (இது என் கருத்து), அது ஒரு நியாயமான காரியமாயிருந்தால், அது நியாயமான காரியம் என்று நீங்கள் அறிந்திருந்தால் மட்டுமே...
99. நீங்கள் என் வீட்டிற்கு சென்று அங்குள்ள என் கணக்குப் புத்தகங்களை புரட்டிப் பார்ப்பீர்களானால்; ஜனங்கள் என்னிடம் வந்து, “ நான் இன்னின்ன சபையைச் சேர்ந்த சங்கை இன்னார் இன்னார். வழியில் எனக்குத் தொல்லை ஏற்பட்டது. எனக்கு புது டயர்கள் வேண்டும்,” என்று கேட்கின்றனர். நான் அப்பொழுது தான் கூட்டங்களை முடித்து விட்டு காணிக்கையுடன் திரும்பி வந்துள்ளேன் என்று அவர்கள் அறிந்து கொண்டுள்ளனர். டயர் வாங்குவதற்கு அவர் கேட்கும் பணத்தை நான் கொடுத்து விடுவேன். ஆனால் பார்க்கப் போனால், அப்படிப்பட்ட ஒரு போதகர் அந்த இடத்தில் இருந்திருக்கவே மாட்டார். இவ்வாறு இத்தனை ஆண்டுகளாக பத்தாயிரம் இருபதாயிரம் டாலர்களை நான், அவர்கள் யாரென்று எங்கிருந்து வருகிறார்கள் என்று அறியாமலேயே கொடுத்திருக்கிறேன். ஆனால் பிறகு பார்க்கும் போது மற்ற போதகர்களும், அவர் என்னையும் கூட வெவ்வேறு காரணத்துக்கு பணம் கேட்டு ஏமாற்றி விட்டார்” என்கின்றனர்.
100. சபை அந்நியர்களுக்கு பொறுப்பாளிகள் அல்ல. தங்கள் சொந்த அங்கத்தினருக்கு மாத்திரமே. அது உண்மை. அவர்கள் தங்கள் சொந்தமானவர்களுக்கு மாத்திரமே பொறுப்பாளிகள்.
101. ஆனால் தகுதியுள்ள காரணம் இருக்குமானால், உங்கள் தர்மகர்த்தாக்கள், “நல்லது, ஒரு நிமிடம் பொறுங்கள். அங்குள்ள கார் இந்த மனிதனுடையதே. அது நடந்ததென்பது உண்மையே. அவர் நமது சபையைச் சேர்ந்தவர் அல்ல. பாருங்கள், ஆனாலும் அது நடந்துள்ளது” என்று வெளி மனிதரைப் பற்றி விசேஷமாக சிபாரிசு செய்ய விரும்பினால்...
102. நமக்கு சொந்தமானவர்கள் அல்ல, பாருங்கள், நமக்கு சொந்தமான ஜனங்கள் அல்ல. நமக்கு சொந்தமான ஜனங்களின் தேவைகள், அவர்களுடைய சகோதரரின் மத்தியில் அறிவிக்கப்படலாம்.
103. ஆனால் வெளியிலிருந்து ஒருவர் வந்து அவர் பசியாயிருப்பதாகக் கூறினால்... உங்களில் யாராகிலும் பாக்கெட்டில் கைபோட்டு அவருக்கு பண உதவி செய்ய விரும்பினால் அது உங்களைப் பொறுத்தது. ஆனால் நான் சபையிலுள்ளவர்களைக் குறித்துக் கூறுகிறேன். சபையிலுள்ளவர்கள் நன்கொடை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டால்...
104. இங்கு பிரசங்கிக்க ஒரு சுவிசேஷகர் வந்தால், அப்பொழுது நீங்கள் எடுக்கலாம். நீங்கள்... அவர் வருவதற்கு முன்பே அவருக்கு நீங்கள் காணிக்கை அளிப்பீர்கள். அல்லது சம்பளம் அளிப்பீர்கள், அல்லது அவர் எதை விரும்புகிறோரோ அதை செய்வீர்கள் என்று முன் கூட்டியே தீர்மானம் செய்து விடுகிறீர்கள்.
105. ஆனால் வெளியிலிருந்து வந்த ஒரு நபர் இங்கிருந்து, அது ஒரு நியாயமான காரணமாயிருந்தால் போதகர் குழுவும் உதவி செய்ய இணங்கி அதை போதகருக்கு தெரிவித்தால், போதகர், “ ஒரு குறிப்பிட்ட நபர் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அவரை நமக்குத் தெரியாது, அவர் இங்கு வந்து நம்மிடம் உதவி கேட்டிருக்கிறார். அவருடைய பிள்ளைகள் பசியால் வாடுவதாக அவர் கூறுகிறார். நமக்கு நேரமில்லை... அவர் கூறுவதை விசாரித்து நோக்க நமக்கு நேரம் இருக்கவில்லை” என்று கூற வேண்டும். பாருங்கள்?
106. அப்படி ஏதாவது இருக்குமானால், அப்பொழுது நமது... நம்மைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாறு ஏதாவதொன்று எழுந்தால், நமது டீக்கன்மார்கள் சென்று விசாரிக்கலாம். பாருங்கள்? அது உதவி பெற தகுதி பெற்றிருந்தால், உதவி செய்யுங்கள். தகுதி இல்லாமல் போனால், உதவி செய்யாதீர்கள். நீங்கள் உதவி செய்ய வேண்டியதில்லை. ஆனால் அது வெளியிலிருந்து இங்கு வந்துள்ள ஒரு மனிதராயிருந்தால், போதகர் சபையோரிடம், “தர்மகர்த்தாக்கள் குழு இந்த நபரைத் தெரியாதென்று என்னிடம் கூறினார். அந்த மனிதன் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அவருடைய பெயர் ஜிம் ஜோன்ஸ் என்பதாக அவர் கூறுகிறார். “ அல்லது அது வேறென்ன பெயரோ அது. அவர் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். திரு. ஜோன்ஸ் அவர்களே, எழுந்து நிற்பீர்களா? திரு. ஜோன்ஸ், ஆராதனையின் முடிவில் நீங்கள் வெளியே செல்லும் போது, அங்கு பின்பக்க வாசலில் நில்லுங்கள். இந்த மனிதனுக்கு ஏதாவதொன்று செய்ய உங்கள் இருதயங்களில் ஏவப்பட்டால், நீங்கள் வெளியே செல்லும் போது அதை செய்யுங்கள்” என்று கூற வேண்டும். இப்பொழுது புரிந்து விட்டதா?
107. இதை உங்கள் ஒலிநாடாவில் பதிவு செய்து கொண்டீர்களா... ஒலிப்பதிவு செய்பவர். ஒருவர். சகோ. காலின்ஸ் ஒலிப்பதிவு செய்யவில்லை. இதை மறுபடியும் கூற விரும்புகிறேன். ஏனெனில் அவர் டீக்கன்மார்களில் ஒருவர்.
108. வெளியிலிருந்து யாராகிலும் ஒருவர் வந்து... அவருக்கு அவசர உதவி தேவைப்பட்டு, சபையிலிருந்து காணிக்கை பெற விரும்பினால், தர்மகர்த்தாக்கள் அல்லது டீக்கன்மார்கள் ஒன்று கூடி ஆலோசித்து... தீர்மானம் எடுத்து, அதை இந்த விதமாக செய்யலாம் என்று போதகரிடம் கூறக்கடவர்கள். அவர்கள்... அப்பொழுது போதகர் அந்த மனிதனின் பெயரைச் சொல்லி, “ இவரை நமக்குத் தெரியாது. நம்மைச் சேர்ந்தவர்களுக்கு காணிக்கை எடுப்பதற்கு முன்பாக, அதை நாம் விசாரித்து அறிவது நமது கொள்கையாகும். ஆனால் இங்குள்ள மனிதர் பணமில்லாமல் கஷ்டப்படுவதாகவும், அவருக்கு ஒரு அவசர நிலை இருப்பதாகவும், பிள்ளைகள் வியாதிப்பட்டிருப்பதால் அவர்களுக்கு மருந்து வாங்க எதுவாயிருப்பினும், இவர் இங்கு இருக்கிறார். “ ஐயா, நீங்கள் நிற்பீர்களா?” பாருங்கள், அவர் நிற்க பார்த்துக் கொள்ளுங்கள். ஆராதனை முடிந்தவுடன், இவர் முன் வாசலில் நிற்பார். நீங்கள் வெளியே செல்லும் போது, அவருக்கு உதவி செய்ய ஏவப்பட்டால், செய்யலாம். நாங்கள் சபையில் இதை அறிவிக்க மாத்திரம் செய்கிறாம்” என்று கூற வேண்டும். நீங்கள் அதற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை, நீங்கள் அதை அறிவிக்க மாத்திரம் செய்கிறீர்கள். பாருங்கள், அது அந்நியருக்கு அளிக்கப்படும் உபச்சாரம். பாருங்கள்? இப்பொழுது புரிகிறதா? சரி. அந்த கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டு விட்டதென்று நினைக்கிறேன்.
109. ஒலிநாடாக்களைக் குறித்தென்ன? அது இப்படி: