110. சரி. ஒலிநாடாக்களின் பதிவு ஒரு ஒப்பந்தத்தின் பேரில். நான்... அந்த ஒப்பந்தம் எப்பொழுது முடிவடைகிறது என்று எனக்குத் தெரியாது. அது தர்மகர்த்தாக்களின் பொறுப்பு; டீக்கன்மார்கள் அல்ல, தர்மகர்த்தாக்கள்; போதகர் அல்ல, தர்மகர்த்தாக்கள். நான் கேள்விப்பட்டபடி, தர்மகர்த்தாக்களே இந்த ஒப்பந்தத்தை எழுதுகின்றனர். நான் தவறாயிருந்தால், தர்மகர்த்தாக்களே என்னைத் திருத்துங்கள். ஒலிநாடா பதிவு செய்பவருடன் இந்த தர்மகர்த்தாக்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். ஒரு உரிமையின் (franchise) பேரில் ஒலிநாடாக்கள் பதிவு செய்யப் படுகின்றன.
111. உரிமை பெற்றவரின் அனுமதியின்றி யாரும் ஒலிநாடாக்களைப் பதிவு செய்யவோ அவைகளை விற்கவோ கூடாது. ஏனெனில் சட்டம் அப்படித் தான் கூறுகிறது - அதாவது அது உரிமை பெற்றவரின் உரிமை யென்று பாருங்கள்? உரிமை... உரிமை பெற்றவர் இன்னார் இன்னாரை ஒலி பதிவு செய்ய அனுமதிப்பது அவரைப் பொறுத்த விஷயம். எல்லோரும் பொறுத்தது. ஒலிநாடாக்களை பதிவு செய்து விற்க, உரிமை பெற்றவர் அப்படிப்பட்டவர்களுக்கு கையொப்பமிட்ட அதிகாரம் எழுத்தில் வழங்க வேண்டும். அது சட்டப்படி சரியானது. அந்த மனிதன் அதிகாரம் பெறாமலிருந்தால், உரிமை பெற்றவர் அவரைத் தண்டனைக்குள்ளாக்க முடியும். அவர் தொல்லை விளைவிக்கக் கூடிய தீய மனிதராயிருந்தால், அவரால் அப்படி செய்ய முடியும். அந்த உரிமை பத்திரத்தை நீங்கள் படித்துப் பாருங்கள்... அது பதிப்புரிமை 'காப்பிரைட்' (copyright) போன்றது, பாருங்கள், அதே காரியம் தான். உங்களுக்கு அதை செய்ய அனுமதி கிடையாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
112. ஒலிப்பதிவு செய்யும் மற்றவர்கள் ஒருக்கால் திரு. மக்கையருடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கக் கூடும். அவர் தான் ஒலிநாடாக்கள் பதிவு செய்வதற்கு உரிமைத் தொகை வழங்குபவர். இப்பொழுது... இதைக் குறித்து எனக்குத் தெரியாது, ஏனெனில் இவை என்ன வென்றும், இது யாரைக் குறிப்பிடுகிற தென்றும் அறிந்து கொள்ள நான் போதிய நாட்கள் உங்களுடன் தங்கியிருப்பதில்லை. திரு.மக்கையருக்கு இப்பொழுதும் அந்த உரிமை அளிக்கப் பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனெனில் நான் வசிக்கும் அரிசோனாவில் அவர்கள் இப்பொழுதும் கலிபோர்னியாவிலிருந்து இந்த ஒலிநாடாக்களை வாங்குவதாக கேள்விப்படுகிறேன். சகோ. சாத்மன் என்பவர் திரு. மக்கையரின் மாமனார், இங்குள்ள சபையின் நமது சகோதரர். திரு. மக்கையர் இப்பொழுதும் ஒலிப்பதிவுக்கான உரிமை பெற்றிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
113. இப்பொழுது, ஒலிநாடாக்கள் தயார் செய்யும் விஷயத்தில் சிலகாலமாக புகார்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. இந்த சபையின் பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஏதாகிலும் புகார் வருமானால், அதை சரிபடுத்த தர்மகர்த்தாக்கள் கடமைப் பட்டிருக்கின்றனர். பாருங்கள்? எக்காரணத்தைக் கொண்டும் எதுவுமே இருக்கக் கூடாது.
நீங்கள் காணலாம், இந்த அட்டையில் என்ன எழுதப்பட்டுள்ளது என்றால்:
அவர்கள் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி உங்களைக் குறை கூறுகின்றனர்.
114. வெளிப்படையாக கூறினால், இதைக் குறித்து எனக்கு பல கடிதங்கள் வந்துள்ளன. அவர்களால் ஏன் ஒலிநாடாக்களைப் பெற முடியவில்லை என்று நான் அறிய விரும்புகிறேன். அதற்காக உரிமை அளிக்கப்பட்டவருடன் நீங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று அறிவேன், அதைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் அதனுடன் சம்பந்தம் கொள்ள நான் விரும்பவில்லை. சுவிசேஷத்தை மேலும் அறிவிக்க யாராகிலும் இந்த ஒலிநாடாக்களை உபயோகப்படுத்தக் கூடுமானால், “ஆமென்.”
115. முதலில், சகோ. ராபர்ஸனும் மற்றவர்களும் ஒலிநாடாக்களை பதிவு செய்தனர். பிறகு சகோ. பீலரும் இன்னும் அநேகரும் அவைகளைப் பதிவு செய்தனர். அதன் பிறகு அநேக ஆண்டுகளாய் இரண்டு பையன்கள், சகோ.மெர்ஸியரும் சகோ. கோடும் பதிவு செய்து வந்தனர். அவர்கள் ஒவ்வொருவர் மீதும் புகார்கள் வந்துள்ளன. ஆனால் அண்மையில் ஒலிநாடாக்களைப் பெற முடியவில்லை என்று அதிகமான புகார்கள் வருவதாகத் தோன்றுகிறது. இதைக் குறித்து ஜனங்கள் நாடு முழுவதிலுமிருந்து தொலை பேசியின் மூலம் என்னிடம் புகார் செய்துள்ளனர். வேறொரு காரியம் என்ன வெனில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாவின் மீது பதிவு செய்தல். அவைகளைக் கேட்கும் போது, ஒரு நிமிடம் ஒன்றும் மற்றொரு நிமிடம் வேறொன்றும் உள்ளது. அதன் விளைவாக உங்களால் ஒன்றுமே புரிந்து கொள்ள முடிவதில்லை.
116. இந்த ஒலிநாடாக்களை விலை கொடுத்து வாங்குபவர்கள் தரமான ஒலிநாடாக்களை பெறுதல் அவசியம். அதை அவர்கள் பெற்றுக் கொள்ள, ஒலிநாடாக்களை பதிவு செய்து விநியோகம் செய்வோர் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை. ஆனால் நமது வாடிக்கையாளர்களும் நமது சகோதரரும் (நமது சகோதரரே நமது வாடிக்கையாளர்கள்) முதல் தரமான ஒலிநாடாக்களைப் பெறுகிறார்களா என்பதில் நாம் கவனமாயிருக்க வேண்டும். ஜனங்களுக்கு திருப்தியா என்று தர்மகர்த்தாக்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு திருப்தி இல்லாமல் போனால், அவர்களுடைய பணம் உடனே திரும்ப செலுத்தப்பட வேண்டும்.
117. ஒருவர் என்னை தொலை பேசியில் கூப்பிட்டு, இந்த ஒலிநாடாக்களுக்காக பல மாதங்களாக காத்திருப்பதாகக் கூறினார். இதற்கு திரு.மக்கையர் என்ன சொல்லுவார் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இதைக் குறித்து ஒன்றுமே தெரியாது. நான்... இதைக் குறித்து அறிந்திருப்பது என்னுடைய வேலையில்லை. அது ஒலிநாடா விநியோகம் செய்பவரின் வேலையும் தர்மகர்தாக்களின் வேலையுமாம். இதில் நான் தலையிட முயலவில்லை, ஆனால் இதைக் குறித்த சட்டம் என்னவென்று உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். அதற்காக விண்ணப்பம் செய்யும் அன்றைய தினத்திலிருந்து இரண்டு, மூன்று, அல்லது நான்கு, ஐந்து நாட்களுக்குள் அவை தபாலில் அனுப்பப்பட வேண்டும். இந்த ஆர்டர்களை அதற்குள் நிறை வேற்றாமல் போனால், அளிக்கப்பட்ட உரிமையை எந்த நேரத்திலும் ரத்து செய்து விடலாம். பாருங்கள்?
118. ஆறு மாதங்களுக்கு அல்லது ஓராண்டுக்கு ஒரு முறை இந்த உரிமை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த ஒப்பந்தம் எப்பொழுது புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பத்திரத்தில் எழுதப் பட்டுள்ளதோ, அந்த குறிப்பிட்ட தேதியில் அது புதுப்பிக்கப்பட வேண்டும். உரிமை பெற விண்ணப்பித்தவர்களுக்கு அந்த தேதியை முன் கூட்டியே அறிவித்து, அவர்களை வரும் படி செய்து, அவர்களுடன் பேசி முடிவெடுத்து உரிமை ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும்.
119. இப்பொழுது, இந்த ஆர்டர்கள் நிறை வேற்றப்பட வேண்டும். பாருங்கள் புகார்கள் வந்துள்ளதால், அவை சரியான விதத்தில் நிறை வேற்றப்பட வேண்டும். அவர்கள் லியோவையும் ஜீனையும் குறித்து புகார் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் குறித்து புகார் செய்தனர், இப்பொழுது அவர்கள் சகோ. மக்கையரைக் குறித்து புகார் செய்கின்றனர். வேறோருவரையும் குறித்து அவர்கள் புகார் செய்யக் கூடும். அவர்கள் புகார் செய்யக் காரணம் என்ன வென்பதை நாம் கண்டு பிடிப்போம்.
120. ஒலிநாடாக்களைக் கேட்டு டஜன் கணக்கில் கடிதங்கள் வந்து, அனுப்ப வேண்டிய ஒலிநாடாக்கள் பெட்டிகள் பெட்டிகளாய் குவிந்து போனால்... பாருங்கள், அதற்கான பழிச் சொல் ஒலி நாடாவைத் தயாரிப்பவர் மேல் அல்ல. அது என் மேல் விழுகிறது. இப்பொழுது, கிறிஸ்தவன் என்னும் முறையில், விலை கொடுக்கும் ஜனங்கள் அதைப் பெற்றுக் கொள்கின்றனரா என்று கவனிப்பது என் மேல் விழுந்த கடமையாகும். அதை தர்மகர்த்தாக்களாகிய நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் ஒலிநாடாக்களின் விலையை உயர்த்தி, தரமான ஒலிநாடாக்களையும், தரமான இயந்திரங்களையும் வாங்கினால் பரவாயில்லை. ஆனால் சரியான விதத்தில் ஒலிநாடாவை தயார் செய்யும் ஒருவர் நமக்கு அவசியம். அதுதான் நமது சிரத்தை. ஒலிநாடா சரியான விதத்தில் தயார் செய்யப்பட வேண்டும். வாடிக்கையாளர் திருப்தியடைய வேண்டும். இல்லையென்றால் முழுவதையும் நிறுத்தி விடுங்கள். நாம் ஒலிநாடாக்களை தயார் செய்ய வேண்டாம், விருப்ப முள்ளவர் எவரும் வந்து பதிவு செய்து கொள்ளட்டும். ஆனால் அவர்கள் அதற்காக ஒரு விலையைக் குறித்திருப்பார்களானால், அவர்கள் கொடுத்த விலைக்கு ஒலிநாடாக்களை பெறுகின்றனரா என்று கவனித்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் அதுவே கிறிஸ்தவ மார்க்கம். அதைக் காட்டிலும் நீங்கள்...
121. அவர்கள் சுவிசேஷத்தைக் கேட்க இங்கு வரும் போது, எனக்குத் தெரிந்த மட்டில் சிறந்ததை அவர்களுக்கு அளிக்க விரும்புகிறேன். (பாருங்கள்?). அவர்கள் இங்கு வரும் போது, நீங்கள் எல்லோரும் எல்லாவற்றையும் சரிவர செய்ய வேண்டும் மென்று விரும்புகிறேன். ஆகையால் தான் டீக்கன்மார்கள், தர்மகர்த்தாக்கள், போதகர்களாகிய உங்களிடம் இன்றிரவு, இதன் ஒவ்வொரு எழுத்தையும் பின்பற்ற வேண்டுமென்று அறிவுரை கூறுகிறேன். ஏனெனில் தேவனைக் கண்டு கொள்ள ஜனங்கள் இங்கு வருகின்றனர். இவையனைத்தையும் நாம் ஒழுங்கின் படி வைத்திருக்க வேண்டும்.
122. மேலும் இந்த ஒலிநாடாக்களின் விவகாரத்தை சரிபடுத்த வேண்டும். அவர்கள் விலையை உயர்த்த வேண்டுமானால், இப்பொழுது இரண்டாம் தரம் ஒலிநாடாக்களில் பதிவு செய்து கொண்டிருந்தால், தரமான ஒலிநாடாக்களை வாங்குங்கள். அதற்காக விலையை யுயர்த்தினாலும் பரவாயில்லை. அவர்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்றதை பெற்றுக் கொள்ளட்டும்.
123. உரிமை தொகையில் எனக்கு ஒரு பைசா பெற வேண்டும் மென்று விருப்பமில்லை. அவ்வாறே இந்த கூடாரமும் விருப்பம் கொண்டிருக்கவில்லை. நீங்கள் விருப்பம் கொள்ளக் கூடாது. இந்த உரிமை தொகையில் விருப்பம் கொள்ளக் கூடாது. இந்த உரிமை தொகையில் விருப்பம் கொண்டிராதிருங்கள். அவர்கள் ஒலி நாடாக்களை இங்கு பதிவு செய்வதன் காரணமாக ஒரு சிறு உரிமை தொகையை வழங்கினால் அதை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டு மென்று நினைக்கிறேன். சட்டப்பிரகாரம், ஒரு குறிப்பிட்ட உரிமை தொகையை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று அவர் திரு. பில்லருக்கும் மற்றவர்களுக்கும் விளக்கினார். அதை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. அதற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை... நீங்கள் கலந்தாலோசித்து இதை கவனித்துக் கொள்ளுங்கள். அது அனைத்தையும் என்னால் கவனித்துக் கொள்ள முடியாது. அதை நடத்த வேண்டிய முறையை உங்களுக்கு அறிவிக்கிறேன். “ நடத்த வேண்டிய முறை” என்று நான் கூறினதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். அதை நாம் சரியான விதத்தில் நடத்த விரும்புகிறோம்.
124. ஒலிநாடாக்களை தயாரிக்க இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் நல்ல இயந்திரம் தேவைப் பட்டால், அதை வாங்குங்கள். அது... நான் அவர்களிடம், “ நான் சுவிசேஷ ஊழியத்துக்கு வெளியே செல்வதற்கு முன்பாக, நான் என் பிரசங்கங்களை அங்கு பிரசங்கிக்கப் போகிறேன் என்று முன்கூட்டியே அறிவித்து விடுகிறேன். அவை ஏற்கனவே இங்கு...” என்றேன். உங்கள் அனைவருக்கும் நான் வாக்களித்தேன், அதை நான் மறுபடியும் ஞாயிறு இரவு ஒலிப்பதிவு செய்யப் போகிறேன். அதாவது, “ஒதுபுது செய்தியை நான் முதலில் இந்த கூடாரத்தில் தான் பிரசங்கிப்பேன். ஏனெனில் இங்கு அவர்கள் மற்ற இடங்களைக் காட்டிலும் சிறந்த முறையில் ஒலிப்பதிவு செய்கின்றனர்” என்றேன். உங்களுக்கு ஞாபகமுள்ளதா? இங்கு நான் என் செய்திகளைப் பிரசங்கிக்க வரும் போது, ஒலிநாடா பதிவு செய்பவரிடம் எந்த ஆராதனைகளில் எதை பிரசங்கிப்பேன் என்பதை அறிவித்து விடுகிறேன். அவர்கள் என்னிடம், “ எவைகளை? நீங்கள் எவைகளை பிரசங்கம் செய்யப் போகின்றீர்கள்?” என்று கேட்கின்றனர். நான் அவரிடம், ”இந்த இரவு இன்னின்னதின் பேரில் பிரசங்கம் செய்வேன்; இந்த இரவு இன்னின்னதின் பேரில்” என்று கூறி விடுகிறேன். எனவே அவர்கள் ஆயத்தமாகி அதை தயார் செய்து, வெளியே நடக்கும் கூட்டங்களில் பதிவு செய்வதைக் காட்டிலும் சிறந்த முறையில் பதிவு செய்து, வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகின்றனர். இந்த கூடாரத்தில் ஒலி அமைப்பு நன்றாயுள்ளதால், இவை சிறந்த முறையில் தயாரிக்கப்படுகின்றன.
125. ஆனால் இந்த பெரிய சுவிசேஷ ஊழியங்களுக்கு நான் செல்லும் போது, வெளி நாடுகளில் என்ன பிரசங்கம் செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து நான் திட்டவட்டமாக கூற முடியாது. இதுவே நான் பிரசங்கிக்கும் முதலாம் செய்தியாயிருக்கும் என்று என்னால் கூற இயலாது. ஏனெனில் நீங்கள் செய்திகளைப் பிரசங்கித்துக் கொண்டு வரும்போது, உங்களுக்கு சில... அது உங்களுக்கு பழையதாகிவிடுகிறது, அதை கேட்பவர்களுக்கும் அது பழையதாகிவிடுகிறது. எனவே நீங்கள் வித்தியாசமான ஒன்றை செய்து, அந்த இடத்துக்கு தேவையான செய்தியை அளிக்க வேண்டியதாயுள்ளது. அவர்கள் வெளிநாட்டு ஊழியத்திலும் இந்த கருவியை உபயோகித்தால், ஒலிநாடாக்கள் நன்றாக வரும்.
126. நீங்கள் நல்ல ஒலிநாடாக்களை தயாரித்து, அனுப்புவதற்கு முன்பு, அவைகளைப் போட்டு சரிபார்த்து அனுப்புங்கள். இல்லையென்றால் முழுவதையுமே நிறுத்தி விடுங்கள். நமக்கு அதனுடன் யாதொரு தொடர்பும் வேண்டாம். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த ஒலிநாடாக்களை பதிவு செய்து கொள்ளட்டும். பாருங்கள்? தொடர்ந்து செய்ய விரும்பினால், புகார் எதுவுமே இல்லாதபடி இதை சரிவர செய்யுங்கள், பாருங்கள். நமக்கு புகார்கள் எதுவும் இருக்கக் கூடாது. ஒரு புகார் இருக்குமானால், அதை கவனித்து, சரிபடுத்துவோம்.
127. நான் கூடுமான வரைக்கும் வேகமாக முடிக்கிறேன். பில்லியிடம் இரண்டு, இல்லை மூன்று கேள்விகள் உள்ளன. அதன் பிறகு நாம் முடித்து விடுவோம்.