128. அது சகோ. நெவிலின் வேலையல்ல. அது உங்களுடைய வேலை பாருங்கள்? நீங்கள் சகோ. நெவிலிடம், அவர் என்ன பிரசங்கிக்க வேண்டும், எப்படி பிரசங்கிக்க வேண்டும் என்று கூறுவது கிடையாது. பாருங்கள், அது உங்களுடைய வேலை. டீக்கன்மார்களாகிய நீங்கள் அதைச் செய்ய வேண்டும், அதை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள். அது சகோ. நெவிலுடன் சம்பந்தப்பட்டதல்ல. அது உங்களுடைய வேலை. பாருங்கள்?
129. தெருவிலுள்ள ஒரு போலீஸ்காரன், காரின் பின் பக்கத்திலுள்ள பொருளைத் திருடும் ஒரு மனிதனைக் காணும் போது, அவன் நகராண்மைக் கழகத் தலைவரை அழைத்து, “ நகராண்மைக் கழகத் தலைவரே, மதிப்பிற்குரியவரே, ஐயா, இந்த காவற்படையில் நான் உமக்காக வேலை செய்கிறேன். தெருவில் ஒரு மனிதன் நேற்றிரவு காரின் டயர்களைத் திருடுவதைக் கண்டேன். நான் என்ன செய்ய வேண்டு மென்று வியக்கிறேன், அதைக் குறித்து உம்முடைய கருத்து என்ன?” என்று கேட்க வேண்டுமா என்ன? ஊ பாருங்கள்? பாருங்கள், அது புத்திசாலித்தனம் அல்ல. அது அவ்வாறு இருக்குமா? இருக்காது, ஐயா! அவன் தவறு செய்தால், அவனைக் கைது செய்ய வேண்டும்.
130. அவ்வாறே சபையில் யாராகிலும் தவறு செய்வதை நீங்கள் காணும் போது, அவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களிடம் நல்லவிதமாக பேசுங்கள், அதிகாரத் தோரணையில் பேச வேண்டாம். அவர்கள் செவி கொடுக்க மறுத்தால், நீங்கள் சொல்வதை அவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் சொல்லுங்கள். பாருங்கள்? உதாரணமாக, ஒரு பிள்ளை தவறாக நடந்து கொள்வதைக் காணும் போது, “ நடந்து உன் இடத்துக்கு போ” என்று சொல்லுங்கள். டீக்கன்மார்களே, உங்கள் இடத்தில் இருங்கள்! வையுங்கள். நீங்கள் நான்கு பேர். இரண்டு பேர் முன் பாகத்திலும், அல்லது அப்படி எங்காவது ஓரிடத்தில் உன்னிப்பாக கவனியுங்கள். ஏனெனில் குற்றவாளிகள் போன்றவர்கள் உள்ளே நுழைய வழியுண்டு, பாருங்கள். நீங்கள் ஜாக்கிரதையாயிருந்து, உங்கள் இடத்துக்கு சென்று, அங்கேயே இருங்கள், அதுவே உங்கள் இருக்கை அல்லது ஒருசுவரின் பக்கம் நின்று கொண்டு, உள்ளே வரும் ஒவ்வொருவரையும் ஜாக்கிரதையாக கவனியுங்கள்.
131. டீக்கன் தேவனுடைய வீட்டை பாதுகாக்கிறவர். யாராகிலும் உள்ளே வரும் போது, அவர்களுடன் பேசுங்கள். அவர்களை வரவேற்க அங்கு இருங்கள், அவர்களுடன் கை குலுக்குங்கள். நீங்கள் போலீஸ்காரர். “ உங்களுக்கு நாங்கள் கழியலறையை காண்பிக்கட்டுமா?” (cloak room) அல்லது “ நீங்கள் தயவுசெய்து உட்காருவீர்களா? அல்லது “ நீங்கள் இங்கு கர்த்தருக்குள் களிகூர்ந்து ஜெபிக்க விரும்புகிறோம், நீங்கள் இன்றிரவு இங்கு வந்திருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. “அவர்களை 'உட்காரப் பிரியமா, அல்லது பின்னால் உட்கார்ந்து கொள்கிறீர்களா?” அல்லது எங்காவது, அது உபச்சாரம்.
132. ஒரு போலீஸ்காரன் (அதாவது டீக்கன்) இராணுவத்தினருக்கு உள்ள மிலிடரி போலீஸ்காரன் போன்றவர், மரியாதையுடனும் அவசியப்பட்டால் அதிகாரத்துடனும் நடந்து கொள்வது. பாருங்கள்? மிலிடரி போலீஸ் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும். அவன் தன் அதிகாரத்தை பயன்படுத்தினால்; அது ஒரு இராணுவ குருவானவரைப் போல் என்று நினைக்கிறேன். பாருங்கள்? அது மரியாதையுடன் நடந்து கொள்ளுதல், மற்றெல்லாமே. ஆனால் அவருக்கு அதிகாரம் உள்ளது. பாருங்கள், நீங்கள் கவனமாயிருக்க வேண்டும். பாருங்கள், அவர் இந்த சிப்பாய்கள் குடித்து விட்டு வரும் போது, இராணுவ போலீஸ்காரன் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களுடன் ஈடுபடுகிறான். அப்படித் தான் டீக்கனும் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களுடன் ஈடுபட வேண்டும்.
133. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், டீக்கன் ஒரு போலீஸ்காரன். டீக்கனின் உத்தியோகம் சபையிலுள்ள மற்றெல்லா உத்தியோகங்களை விட மிக கண்டிப்பு வாய்ந்தது. டீக்கனின் உத்தியோகத்தைக் காட்டிலும் மிக கண்டிப்பான உத்தியோகத்தை நான் அறியேன். அது உண்மை, ஏனெனில் அவருடைய வேலை கடினமானது. அவர் தேவனுடைய மனிதன். போதகர் தேவனுடைய மனிதனாயிருப்பது போல், இவரும் தேவனுடைய மனிதன். நிச்சயமாக அவர் தேவனுடைய ஊழியக்காரன்.
134. தர்மகர்த்தாக்கள், ஒரே காரியம் என்னவெனில், அவர்கள் பொருளாதாரத்தை கவனித்துக் கொள்ள தேவனால், அந்த வேலையில் அமர்த்தப்பட்டவர்கள். நான் ஒலிநாடாக்களை குறித்து உங்களிடம் கூறினேன், இன்னும் நடந்து கொண்டிருக்கும் மற்ற காரியங்கள், கட்டிடங்கள் பழுது பார்த்தல், இவைகளுக்குப் பணம் வழங்குதல் சொத்துக்கள், பணம் போன்றவைகளை கவனித்துக் கொள்ளவே தர்மகர்த்தாக்கள் உள்ளனர். (Trustee அறங்காவலர்) டீக்கன்மார்கள் இதில் சம்பந்தப்படக் கூடாது. அவ்வாறே தர்மகர்த்தாக்களும் டீக்கன்மார் உத்தியோகத்தில் தலையிடக் கூடாது.
135. ஆனால் டீக்கன்மார்கள் வேண்டுமானால் தர்மகர்த்தாக்களின் உதவியை ஏதாவது ஒன்றில் நாடலாம், அவ்வாறே தர்மகர்த்தாக்களும் டீக்கன் மார்களின் உதவியை நாடலாம். நீங்கள் எல்லோரும் ஒருமித்து பணிபுரிகிறீர்கள், ஆனால் உங்களுக்கு தனித்தனியே உத்தியோகம் உண்டு. பாருங்கள்? சரி.
136. இப்பொழுது, சகோ. நெவிலைக் கேட்காதீர்கள். சகோ.நெவில் ஏதாவதொன்றைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொண்டால், அவர் உங்கள் போதகர், நீங்கள் மரியாதையுடனும் அன்புடனும் அவர், “ சகோ. காலின்ஸ், சகோ. ஹிக்கர்ஸன், சகோ. டோனி, உங்களில் யாராகிலும் ஒருவர், பின்னால் மூலையில் என்ன நடக்கிற தென்று தயவு செய்து பார்ப்பீர்களா?” என்று கேட்பாரானால், அவர் உண்மையான தேவனுடைய மனிதன் என்னும் முறையில் உங்கள் கடமையைச் செய்யுங்கள்.
137. நீங்கள் பிரன்ஹாம் கூடாரத்துக்கோ, அல்லது சகோ. நெவிலுக்கோ எனக்கோ ஊழியம் செய்யவில்லை. நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாருங்கள்? நீங்கள்... நீங்கள் அவருக்கே ஊழியம் செய்கிறீர்கள். அவர் அந்த போதகரின் பற்றை மதிப்பது போல், ஊழியத்தில் நீங்கள் கொண்டுள்ள பற்றையும் மதிக்கிறார். அவர் உங்களிடமிருந்து அந்த பற்றை எதிர் பார்க்கிறார்! நமது பற்றை நாம் காண்பிப்போம்.
138. இப்பொழுது, சில நேரங்களில் அது கடினமாகி விடுகிறது. நான் என் முழு இருதயத்தோடு நேசிக்கின்ற ஒரு போதகர் அப்படி இருக்கிறதை காண்பது சற்று கடினமாக இருக்கிறது, அங்கு உட்கார்ந்திருக்கும் அவரிடம் வெளிப்படையாக கூற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் அன்பின் வழியில், நான் கரம் கொடுத்து அவருக்கு உதவ வேண்டும். பாருங்கள்? அவர்கள் என்னிடம் வந்து, 'சகோ.பிரன்ஹாமே, நீர் மிகவும் அருமையானவர். நீர் ஏன் ஞானஸ்நானம், இந்த, அந்த விஷயத்தில், நித்திய பாதுகாப்பு, சர்ப்பத்தின் வித்து போன்ற உபதேசங்களில் விட்டுக் கொடுத்து ஒத்துப்போகக் கூடாது?” என்கின்றனர்.
139. நான், 'சகோதரனே, உம்மை நான் நேசிக்கிறேன்... நாம் இப்பொழுது வேதாகமத்தை எடுத்துக் கொண்டு, யார் சரி யார் தவரென்று காணலாம். என்னால் அதை...” என்று கூறினால்.
140. அவர், “ ஓ, இல்லை. சகோ.பிரன்ஹாமே, நீர் கூறுவது அனைத்தும் தவறு என்று என்னால் கூற முடியும்,” என்று சொல்லி, பாருங்கள், கோபம் கொள்கின்றனர்.
141. நான், “ஓ, ஒருக்கால் இருக்கலாம். அப்படி இருந்தால் நீர் நிச்சயம் எனக்கு காட்ட முடியும்... நான் எங்கு தவறாயிருக்கிறேன் என்று உமக்கு தெரியுமல்லவா, அப்படியானால் அதை எனக்குத் காண்பியுங்கள். நான் ஏற்றுக் கொள்ளத்தயாராயிருக்கிறேன்” என்கிறேன்.
142. அதே காரியம் தான், “ஏய், அந்த குழந்தையை உட்காரச் சொல்ல உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. “ டீக்கன் தேவனுடைய வீட்டின் பாதுகாவலர். பாருங்கள்? இப்பொழுது நீங்கள்... அவர் தேவனுடைய வீட்டைப் பாதுகாத்து அதை ஒழுங்காக வைக்கிறார். அப்படித்தான் வேதம் கூறுகிறது. டீக்கன் செய்ய வேண்டியது வேறொதாவது இருந்தால், என்னிடம் வந்து கூறுங்கள். பாருங்கள், அதே காரியம், அதை செய்வது உங்கள் வேலை, மற்றவர் அதற்கு ஆதரவு கொடுங்கள்.
143. நீங்கள் யாரையும் கேட்கத் தேவையில்லை. அது உங்களுடைய வேலை. நீங்கள் சகோ. நெவிலையோ அல்லது வேறு யாரையும் கேட்காதீர்கள். சபையானது கேட்க... அதாவது கூடாரத்துக்கு கூறை போட வேண்டுமென்று சகோ.நெவில் விரும்புகிறாரா என்று தர்மகர்த்தாக்கள் கேட்கத் தேவையில்லை. பாருங்கள்? இல்லை. இல்லை. அது சகோ. நெவிலுடன் சம்பந்தப் பட்டதல்ல. இது என்னுடனும் சம்பந்தப் பட்டதல்ல, அது உங்களுடைய விவகாரம். டீக்கன்கள் கேட்கத் தேவையில்லை...
144. அவ்வாறே நீங்கள் போதகரிடம், “நீங்கள் எதைக் குறித்து பிரசங்கம் பண்ணப் போகிறீர்கள்? நீங்கள் இதை செய்யக் கூடாது” என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவர் தேவனுக்கு கீழ்ப்பட்டிருக்கிறார். பாருங்கள், உங்கள் போதகர். பிறகு நீங்கள்... தேவன் நமக்கு அளிக்கும் செய்தியை சகோ. நெவில் பிரசங்கிக்கிறார். நாம் அனைவரும் இதில் ஒன்று பட்டிருக்கிறோம். நான் சகோ. நெவிலிடம் தவறான ஒன்றைக் கூறினால், அதற்கு தேவன் என்னைப் பொறுப்பாளியாக்குவார். அது உண்மை. பாருங்கள்? எனவே தேவனே இவையனைத்துக்கும் தலைவர். பாருங்கள்? நாம் அவருடைய ராஜ தூதர்களாக, பாருங்கள், இந்த உத்தியோகங்களில் ஈடுபட்டிருக்கிறோம்.