145. அது நரம்பு வாத்தியக் கருவிகள் அல்லது என்ன வாத்தியக் கருவிகள் உள்ளதோ, அதை பொறுத்தது. உங்களிடம் என்ன உள்ள தென்றோ, இதன் அர்த்தம் என்னவென்றோ எனக்குப் புரியவில்லை. ஆர்கனும் பியானோவும் சபைக்குச் சொந்தமானவை. பாடல் தலைவர் ட்ரம்பட், கார்னட் போன்ற வாத்தியக் கருவிகள் இருக்க வேண்டும் என்று பிரியப்பட்டால், சபைக்கு வருபவர் யாராகிலும் இந்த வாத்தியக் கருவிகளை வாசிக்க நேர்ந்தால்... அவர்கள் இந்த வாத்தியக் குழுவில் வாசிக்க இசைந்தால், தர்மகர்த்தாக்களிடம் வாத்தியக் கருவிகளை வாங்கப் பணம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். அது தான் அவர்களுடைய கேள்வி என்று நினைக்கிறேன்.
146. வாத்தியக் கருவிகள் வாசிப்பவர்களிடம் சொந்த வாத்தியக் கருவிகள் இருக்குமானால், மிகவும் நல்லது. அவர்களிடம் சொந்த வாத்தியக் குழுவின் உறுப்பினராக ஆக அவர்கள் விரும்பினால், இங்கு எப்பொழுதாகிலும் வந்து எப்பொழுதாகிலும் ஒருமுறை வாசித்துச் செல்பவர் அல்ல. அவர் சபையின் வாத்தியக் குழுவை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இன்று இங்கு வாசித்து நாளை வேறெங்கோ வாசித்து, அதற்கு அடுத்த நாள் வேறெங்கோ வாசித்து, இப்படியாக எப்பொழுதாகிலும் ஒரு முறை இங்கு வந்து சிறிது வாசிக்கும் ஒருவருக்கு சபை ட்டிரம்பட் வாங்கித் தரக் கூடாது. இல்லை, ஐயா. அவர் இங்குள்ள வாத்தியக் குழுவைச் சேர்ந்திருந்தால், வாத்தியக் குழுவின் தலைவர் வாத்தியக் கருவியை வாங்கிக் கொடுக்க தர்மகர்த்தாக்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.