147. சகோதரரே, இதை நான் ஆலோசனையாக கூற விரும்புகிறேன். இது ஒரு பெரிய காரியம், இதை விவரிக்க நமக்கு அதிக நேரம் இருந்தால் நலமாயிருக்கும். ஏனெனில் இது. இது நமக்கு முக்கியம் வாய்ந்தது, பாருங்கள். இப்பொழுது, சபையானது ஒரு...
148. அவருக்கு விருப்பமானால்... ஜனங்கள் புரிந்து கொள்ள, என்றாகிலும் ஒரு இரவு கூட்டத்துக்கு முன்பு இந்த ஒலிநாடாவைப் போட விரும்பினால், இதைப் போடுங்கள். ஒலிநாடாவின் இந்த பாகத்தை மாத்திரம், முழு ஒலிநாடாவையும் அல்ல, இதை மாத்திரம். இந்த ஒலிநாடாவின் ஒரு குறிப்பிட்ட பாகத்தை ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக நீங்கள் கேட்க விரும்பும் போது, அந்த பாகம் வரும் வரைக்கும் ஒலிநாடாவை இயக்குங்கள். ஏனெனில், இது கேள்விகளைக் கொண்டதாயுள்ளது.
149. இப்பொழுது, நான் கூறினது போன்று, சபையின் டீக்கன்மார்கள் சபையின் போலீஸ்காரர்கள், சபை என்பது பொதுவாகக் கூடி நட்பு கொள்வதற்கும் களியாட்டுகளில் ஈடுபடுவதற்குமான இடமல்ல. சபை என்பது தேவனுடைய பிரகாரம். நாம் இங்கு வரும் காரணம்... நாம் ஒருவரை யொருவர் சந்திக்க விரும்பினால், நான் உங்கள் வீட்டிற்கு வரலாம், அல்லது நீங்கள் என் வீட்டிற்கு வரலாம். அல்லது நீங்கள் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் சென்று ஒருவரை யொருவர் சந்திக்கலாம். ஆனால் சகோதரரே, சபையில் ஓடியாடி விளையாடி, சம்பாஷணை நடத்துவது சரியல்ல. இங்கு நாம் வரும் போது, நமது மனதிலுள்ள அனைத்தையும் அகற்றி விட்டு வரவேண்டும். அவ்விதம் நாம் இங்கு வருவோமானால்...
150. பல ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் என்ன செய்வது வழக்கம் என்பதை பாருங்கள். சகோதரி கெர்டி அப்பொழுது பியானோ வாசித்தாள். இங்கு நான் அக்காலத்தில் போதகராயிருந்த போது, நானே போதகர், டீக்கன், தர்மகர்த்தா எல்லாமாக ஒரே நேரத்தில் இருந்து, பாருங்கள். எல்லா வேலையும் ஒரே நேரத்தில் இருந்து, பாருங்கள். எல்லா வேலையும் செய்ய வேண்டியதாயிருந்தது. ஆனால் இப்பொழுது நீங்கள் அவ்விதம் செய்ய வேண்டிய அவசியமில்லை, பாருங்கள், ஏனெனில் இவைகளைச் செய்ய உங்களுக்கு ஆட்கள் உள்ளனர். ஆனால்... எனக்கு வாயிற்காப்போர் இருந்தனர். சகோ. சூவர்ட்டும் மற்றவர்களும் வாசல் கதவண்டையில் இருப்பார்கள். அவர்கள் புத்தகங்களை அங்கே வாசலருகில் நாற்காலியின் மேல் அல்லது வேறெதாவதின் மேல் அடுக்கி வைத்திருப்பார்கள். யாராகிலும் உள்ளே வரும் போது, அவர்களுடைய 'கோட்டை மாட்டும் இடத்தை அவர்களுக்குக் காண்பிப்பார்கள், அல்லது அவர்கள் உட்காருவதற்கு இருக்கைகளைக் காண்பித்து உதவுவார்கள். அவர்களிடம் ஒரு பாட்டுப் புத்தகத்தைக் கொடுத்து ஜெப சிந்தையில் இருக்கும் படி அவர்களைக் கேட்டுக் கொள்வார்கள். எல்லோரும் அமர்ந்து ஆராதனை துவங்கும் நேரம் வரைக்கும் அமைதியாக ஜெபித்துக் கொண்டிருப்பார்கள். துவங்கும் நேரம் வரும் போது, பியானோ இசைக்கும் சகோதரி கெர்டி எழுந்து சென்று இசையை துவங்குவார்கள். அப்பொழுது ஜனங்கள் ஒன்றாக சேருவார்கள்.
151. ஆர்கன் இசைப்பவள் அங்கு சென்று இனிய நல்ல இசையை இசைக்க வேண்டுமென்று உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். அவளால் வர முடியாமல் போனால், அருமையான, இனிய, புனிதமான இசைகொண்ட ஒலி நாடாவைப் போடுங்கள். எனவே ஜனங்களிடம் கூறுங்கள்... ஜனங்கள் பேசிக் கொண்டிருந்தால், டீக்கன்மார்களில் ஒருவர் பீடத்திலுள்ள ஒலி பெருக்கியின் அருகில் சென்று, “ உஷ், உஷ், உஷ்” என்று சொல்லட்டும். அவர், “ இங்குள்ள இந்த கூடாரத்தில் நீங்கள் வந்து ஆராதிக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நாம் சத்தம் போடாமல் இசையைக் கேட்போம். உங்கள் இருக்கைக்குச் சென்று, உட்கார்ந்து, பயபக்தியுடன் (பாருங்கள்?) ஜெபித்துக் கொண்டிருங்கள், அல்லது வேதத்தை வாசித்துக் கொண்டிருங்கள். இந்த பிரகாரத்தில் கர்த்தர் வாசம் செய்கிறார். எல்லாரும் பயபக்தியுடன் இருந்து ஆராதிக்க நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் ஆராதனைக்கு முன்பு இங்குமங்கும் ஓடிச் சென்று பேசிக் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் ஒன்று கூடுங்கள். நீங்கள் கர்த்தரிடம் பேசவே இங்கு வந்திருக்கிறீர்கள். பாருங்கள், அமைதியாக ஜெபித்துக் கொண்டிருங்கள், அல்லது வேதத்தை வாசித்துக் கொண்டிருங்கள்” என்று கூறட்டும்.
152. நான் மார்பிள் சபைக்கு சென்றிருந்த போது... நார்மன் வின்சன்ட் பீல், அவரைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், பாருங்கள். நான் அங்கு சென்றிருந்தேன்... அவர் பெரிய மனோதத்துவ ஆசிரியர் என்று உங்களுக்குத் தெரியும். அவருடைய சபைக்கு நான் சென்ற போது, “என் கூடாரமும் இப்படி செய்தால் நலமாயிருக்கும்” என்று எண்ணினேன். நீங்கள் உள்ளே பிரவேசிக்கும் போது அந்த டீக்கன்மார்கள் கதவினருகில் நின்று கொண்டிருப்பதைக் காணலாம். அவர்கள் ஞாயிறு பள்ளித்தாளை உங்கள் கையில் கொடுத்து உங்களை உள்ளே அழைத்துச் செல்கின்றனர். உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் மூன்று முறை ஆராதனை நடத்துகின்றனர். அது நானூறு அல்லது ஐந்நூறு பேர்களை மாத்திரமே கொள்ளும். நியூயார்க் ஒரு பெரிய இடம். அவரும் பிரபலமானவர். அவர்கள் ஒரு வகுப்பை பத்து மணிக்கும் மற்றொரு வகுப்பை பதினொன்று மணிக்கும் நடத்தினர் என்று நினைக்கிறேன். அதே பிரசங்கம் மறுபடியும் செய்யப்பட்டது, அதே ஆராதனை, அதே காதிதத்தாள். ஒரு ஆராதனை முடிந்தவுடனே சபையோர் வெளியே செல்வதற்கு ஐந்து நிமிடங்கள் அளிக்கப்பட்டன என்று நினைக்கிறேன்... இவர்கள் வெளியே செல்லும் வரைக்கும் யாருமே உள்ளே வர முடியாது. அதன் பிறகு டீக்கன்மார்கள் கதவைத் திறந்து விட்டனர், அடுத்த ஆராதனைக்கு சபையோர் நிறைந்தனர். அவர்களுக்கு பழைய ”பெட்டி இருக்கைகள் இருந்தன. கதவைத் திறந்தவுடன் அவர்கள் அப்படி உள்ளே சென்று, இருக்கைகளில் (pews) அமர்ந்தனர். பழைய காலத்து இருக்கைகள். அந்த மார்பிள் சபை இருநூறு ஆண்டுகளாக இருந்த வருகிறதென்று நினைக்கிறேன்.
153. ஒரு குண்டூசி கீழே விழுந்தால் அதன் சத்தத்தையும் நீங்கள் அந்த சபையில் கேட்கும் அளவுக்கு அது அமைதியாக இருந்தது. ஆர்கனில் முன்னிசை (prelude) இசைக்கப்படுவதற்கு முன்பு குறைந்தது அரைமணி நேரம் எல்லோரும் ஜெபத்தில் தரித்திருந்தனர். “இது எவ்வளவு நன்றாயுள்ளது” என்று நான் நினைத்துக் கொண்டேன். பிறகு அந்த போதகர்... அந்த முன்னிசை ஏறக்குறைய... அவர்கள் நீர் எவ்வளவு பெரியவர்' என்னும் முன்னிசையை அல்லது வேறெதோ ஒரு பாடலை ஏறக்குறைய மூன்று அல்லது ஐந்து நிமிடங்களுக்கு ஆர்கனில் வாசித்தார்கள் என்று நினைக்கிறேன். அதை வாசிக்கத் தொடங்கின போது, எல்லோரும் ஜெபம் செய்வதை நிறுத்திவிட்டு அந்த முன்னிசையை கேட்டுக் கொண்டிருந்தனர். பாருங்கள், அது ஜெபத்திலிருந்து முன்னிசைக்கு ஒரு மாற்றத்தை அளித்தது. அவர்கள் அதை வாசித்து முடிந்த பின்பு, பாடற்குழு, அதன் பிறகு சபையோரும் பாடற்குழுவும் சேர்ந்து ஒரு பாடலைப்பாடினர். அதன் பிறகு அவர்கள் ஞாயிறு பள்ளி வகுப்புக்கு ஆயத்தமாயினர். பாருங்கள்? பிறகு ஆராதனை முடிந்தது. அங்கு தெய்வீக வழிபாட்டைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. அதற்காகவே நாம் அங்கு செல்கிறோம்.
154. நமது சபையும் அதை பின்பற்றினால் நலமாயிருக்கும் என்று நினைக்கிறேன். இதைக் கூற விரும்புகிறேன். நாம் அவ்விதம் செய்யப் போகிறோம். பாருங்கள்? அதை நாம் செய்வோம். யாராகிலும் செய்யும் ஒன்று. அது நல்லதாயிருக்குமானால், நாமும் அதைச் செய்வோம். பாருங்கள்? நல்ல காரியம் எதையும் நாம் தள்ளிவிட விரும்பவில்லை, அதை நாம் எப்படியும் செய்வோம். பாருங்கள்? நீங்கள் சென்று அங்கு நின்று கொள்ளுங்கள். அவர்கள் காலையில் தொடங்கினால், ஜனங்கள் இங்குமங்கும் செல்லத் தொடங்கினால், யாராகிலும் ஒருவர் டீக்கன்மார்களில் ஒருவர் - அங்கு சென்று, “ இங்குள்ள கூடாரத்தின் சட்டதிட்டம் என்னவென்றால்...” என்று கூறட்டும்.
155. அவர்கள் அவ்விதம் இங்கு செய்கின்றனரா என்று எனக்குத் தெரியவில்லை, அவர்கள் செய்யக் கூடும். நான் இங்கு இருப்பதில்லை, பாருங்கள், ஆகையால் எனக்குத் தெரிவதில்லை. ஆராதனைகள் தொடங்குவதற்கு முன்பு இங்கு நான் வருவதில்லை.
156. அவர்கள் சபைக்குள் வந்து பேசத் தொடங்கினால் யாராகிலும் எழுந்து சென்று, “ உஷ், உஷ், உஷ், ஒரு நிமிடம் என்று சொல்ல வேண்டும். பாருங்கள்? ஒரு சகோதரியை அங்கு அனுப்பி இசை இசைக்கும்படி செய்யுங்கள். இசை இசைக்க யாரும் இல்லையென்றால், ஆர்கன் இசை பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாவைப் போடுங்கள். நாம் இப்பொழுது... இந்த கூடாரத்தில் ஒரு புதிய நியமம் கைக்கொள்ளப்படுகிறது. ஜனங்கள் உள்ளே பிரவேசித்த பிறகு, குசுகுசுவென்றோ, உரக்க பேசுவதோ கூடாது. பாருங்கள்?” இன்னும் சில நிமிடங்களில் ஆராதனை தொடங்கும். அதுவரைக்கும் நீங்கள் வேதத்தைப் படியுங்கள், அல்லது தலைகுனித்து மெளனமாக ஜெபியுங்கள்” என்று கூறுங்கள். சில முறை அவ்விதம் செய்தால், அவர்கள் எல்லோரும் கற்றுக் கொள்வார்கள். பாருங்கள்? பாருங்கள்.
157. யாராகிலும் பேசிக் கொண்டிருப்பதை நீங்கள் கேட்கும் போது... சில முறை அவ்விதம் செய்த பிறகும் சிறிது நேரம் கழித்து யாராகிலும் ஒருவர் பாருங்கள், ஒருவர் மாத்திரம் பேசிக் கொண்டிருந்து, மற்றவர் எவருமே பேசாமலிருந்தால், டீக்கன்மார்களில் ஒருவர் அவரிடம் நடந்து சென்று, “ஆராதனையின் போது நீங்கள் ஆராதிக்க வேண்டும், பாருங்கள்? என்று சொல்ல வேண்டும். பாருங்கள்”, பாருங்கள், இது பேசும் வீடல்ல, ஆராதனை செய்வதற்கான வீடு. புரிகின்றதா?
அவ்வளவு தான் என்று நினைக்கிறேன். தயவு செய்து விளக்குங்கள்... (ஆம், பார்ப்போம், ஆம்.) டீக்கன்மார்கள் எவ்விதம்... பிரகாரத்தில். ஆம், அவ்வளவு தான். அது உண்மை. அதுதான்...