158. இப்பொழுது, இதை சரியாகப் படித்தேன் என்று நம்புகிறேன். இதை படிக்க பில்லி எனக்கு உதவி செய்தான். இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைக் கேட்கும் போது நீங்கள்... நமது மத்தியிலுள்ள யாராகிலும்... கூட்டத்தில், பின்பு எப்பொழுதாகிலும் இந்த ஒலிநாடாவைக் கேட்க நேரிட்டால், இந்த கேள்வியைப் படிக்க பில்லி எனக்கு உதவி செய்வது தான் இது. ஏனெனில் இது மிகவும் சிறியதாக எழுதப் பட்டிருந்ததால் என்னால் அதைப் படிக்க இயலவில்லை. அது என்ன வென்று பொதுவாக அறிந்து கொண்டேன். அதாவது, “ ஆராதனை துவங்குவதற்கு முன்பு எத்தனை பாடல்களைப் பாட வேண்டும்? ஆராதனை எத்தனை மணிக்கு துவங்க வேண்டும்?”
159. முதலாவதாக நானே என் தவறை இங்கு அறிக்கையிட விரும்புகிறேன். நான் தவறு செய்யும் போது, “ நான் தவறு என்று ஒப்புக் கொள்ள விரும்புகிறேன். இதை நானே முன்னின்று செய்பவன் என்பதை அறிக்கையிட விரும்புகிறேன். ஏனெனில் இந்த நீண்ட ஆராதனைகளை நான் நடத்தினால், சபையும் அந்த பழக்கத்துக்கு ஆளானது, பாருங்கள், ஆனால் அப்படியிருக்கக் கூடாது. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், நான்... நான்... “ஞாயிறு இரவு முதற் கொண்டு; இங்கு நான் ஒருவாரம் தங்க நேரிட்டால், என் பிரசங்கத்தை நான் முப்பது அல்லது நாற்பது நிமிடங்களுக்கு மேல் செய்யப் போவதில்லை' என்று உங்கள் அனைவரிடமும் கூறினேன்.
160. ஏனெனில் இதை நான் கண்டு கொண்டேன், அதாவது ஒரு பிரசங்கம்... வல்லமையோடு செய்தி அளிக்கப்படும் போது, அது நல்ல பலனை அளிக்கிறது. ஆனால் நீங்கள் நீண்ட நேரம் பிரசங்கம் செய்தால், ஜனங்களைக் களைப்படையச் செய்து விடுகிறீர்கள், அவர்கள் அதை கிரகித்துக் கொள்வதில்லை. நான் நீண்ட நேரம் பிரசங்கம் செய்யும் காரணம். இதை நான் எப்பொழுதுமே அறிந்திருக்கிறேன். பாருங்கள்? மிகவும் வெற்றி கண்ட பேச்சாளர்கள் குறைந்த நேரம் பேசினவர்களே... இயேசு சொற்ப வார்த்தைகளைப் பேசுபவராயிருந்தார், அவருடைய பிரசங்கங்களை கவனியுங்கள். பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு நிகழ்த்தின பிரசங்கம் ஒருக்கால் பதினைந்து நிமிடங்களே இருந்திருக்கும். ஆனால் அவன் வல்லமையுடன் பிரசங்கித்தது. அதே இடத்தில் மூவாயிரம் ஆத்துமாக்களை தேவனுடைய ராஜ்யத்தில் சேர்த்தது. பாருங்கள்?
161. இந்த விஷயத்தில் நான் குற்றவாளியே. இவ்வாறு நான் செய்யக் காரணம், இதை நான் அறியாமல் இல்லை, ஆனால் நான் பிரசங்கத்தை ஒலிநாடாக்களில் பதிவு செய்கிறேன். இந்த ஒலிநாடாக்கள் வீடுகளில் மணிக்கணக்காக போட்டு கேட்கப்படும். ஆனால் வரும் ஞாயிறன்று, இதை நான் செய்த காரணத்தை; வரப்போகும் இந்த ஞாயிறன்று இவைகளை நான் செய்த காரணத்தை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இதை இப்பொழுதே இந்த ஒலிநாடாவில் கூறிவிடுகிறேன். இதை நான் செய்யக் காரணம் இந்த மணி நேரத்தின் செய்திக்காக நான் கொண்டிருந்த மிகுந்த பாரமே. அதை வெளியே அனுப்பிவிட வேண்டுமென்று முனைந்தேன். இப்பொழுது புத்தாண்டு தொடங்கி என் கூட்டங்களில் நான் முப்பது நிமிடங்கள் மாத்திரமே எடுத்துக் கொள்வேன். நான் எங்கு சென்றாலும். நான் கடிகாரத்தை, முப்பது நிமிடங்களுக்கு பிறகு மணி அடிக்கும் படியாக அதை பொருத்திக் கொண்டு, அல்லது மிஞ்சினால் நாற்பது நிமிடங்களுக்கு அதிகமாக இல்லை; அந்த செய்தியை அந்த நேரத்துக்குள் இருதயத்தில் ஊடுருவும் படியாக பிரசங்கித்து, பீட அழைப்பை... அல்லது நான் என்ன செய்யப் போகிறேனோ அதை... ஜெப வரிசையை அழைக்கப் போகிறேன்... நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் அது ஜனங்களைக் களைப்படையச் செய்கிறது, அது உங்களுக்குத் தெரியும்.
162. ஆனால் இங்கு பாருங்கள், இந்த ஆண்டு, எழுந்து வெளியே நடந்து சென்ற ஜனங்களின் எண்ணிக்கை ஒரு டஜன் இல்லை என்று நினைக்கிறேன், நான் ஜனங்களை சில சமயங்களில் இரண்டு மூன்று மணி நேரம் பிடித்து வைத்திருக்கிறேன். பாருங்கள்? அது உண்மை. ஏனெனில் உலகம் பூராவும் செல்லும் பிரசங்க ஒலிநாடாக்களை நாம் இங்கு தயாரிக்கிறோம். அங்குள்ள ஜனங்கள் மணிக்கணக்காக உட்கார்ந்து அதைக் கேட்கின்றனர்; ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆப்பிரிக்கா, ஆசியா, இன்னும் மற்ற இடங்களில்லுள்ள போதகர்களும் மற்றவர்களும், பாருங்கள், அதைக் கேட்கின்றனர்.
163. ஆனால், பாருங்கள், பிரகாரத்துக்கும், சபைக்கும்... அது பரவாயில்லை. இங்கு நீங்கள் பிரசங்க ஒலிநாடாவை தயாரிக்க நினைத்து, உங்களிடம் இரண்டு மணி நேரம் ஓடக் கூடிய ஒலிநாடா இருக்குமானால், அதில் இரண்டு மணி நேரம் செய்தியை பதிவு செய்யுங்கள்; ஆனால் ஏதாவது ஒரு நோக்கத்துக்காக நீங்கள் பிரசங் ஒலிநாடாவை தயாரிக்க வில்லை என்றால், செய்தியை சுருக்கிக் கொள்ளுங்கள். ஏன் என்று கூறுகிறேன், சிலர் வேகமாக திருப்தி கொள்வார்கள், ஆனால் சிலர் இப்படிப்பட்ட நீண்ட பிரசங்கங்களில் மட்டுமே திருப்தி கொள்வார்கள், எனவே நீங்கள் இவ்விரண்டிற்கும் இடையே உள்ள நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
164. இப்பொழுது, சில நேரங்களில், நாம் சாட்சி கூட்டத்தை நீட்டி நமது ஆராதனைகளை பாழாக்கி விடுகிறோம், நானும் கூட இவ்விதம் செய்து, அதற்கு குற்றவாளி என்பதை அறிந்திருக்கிறேன். நாங்கள் தெருக்கூட்டம் முன்பு நடத்தின போது, ஒரு வயோதிப சகோதரனிடம் ஜெபம் செய்யக் கேட்டுக் கொள்வோம். அவர் நகராண்மைத் தலைவருக்கும், மாகாண ஆளுநருக்கும், நாட்டின் ஜனாதிபதிக்கும், சுற்றியுள்ள போதகர்களுக்கும், அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரையும் சொல்லி ஜெபம் செய்வார், பிறகு மருத்துவமனையிலுள்ள சகோதரி ஜோன்ஸக்காக, இப்படி பலருக்காக, கூட்டத்திற்கு வந்த தெருவிலுள்ள ஜனங்கள் நடந்து சென்று விடுவார்கள். பாருங்கள். பாருங்கள், அவர் அவர்களைக் களைப்படையச் செய்து விடுவார். நல்லது, ஒரு ஜெபம் மட்டுமே...
165. பாருங்கள், முக்கியமானகாரியம் என்னவெனில், உங்கள் ஜெபம் அந்தரங்கத்தில் செய்யப்பட வேண்டும் - உங்கள் முக்கியமான, நீண்ட ஜெபம். உங்கள் ஜெபம் அனைத்தும்... நீங்கள் அறைக்குச் சென்று கதவையடைத்துக் கொள்ளுங்கள், அங்கு தான் நீங்கள் பகல் முழுவதும், இரவு முழுவதுவும், அல்லது இரண்டு மணி நேரம் ஜெபிக்க வேண்டும். ஆனால் இங்கு, உங்களிடம் ஜனங்களின் கவனம் உள்ள போது, சுருக்கமாக, ஜெபம் செய்யுங்கள். உங்கள் ஆராதனை அனைத்தையும்... பெரும்பாலான உங்கள் ஆராதனை நேரத்தை அந்த வார்த்தையை பிரசங்கிப்பதில் செலவிடுங்கள். அது தான் முக்கியமான காரியம்! அந்த வார்த்தையை உங்களால் கூடுமானவரைக்கும் ஊடுருவும் வல்லமையுடன் பேசி, பாருங்கள், ஜனங்களுக்கு வார்த்தையை எடுத்துரையுங்கள்.
166. இப்பொழுது, இதுவே நான் கூறும் ஆலோசனை. இப்பொழுது, இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இந்த குற்றத்தை நானே செய்திருக்கிறேன் என்று அறிக்கையிட்டேன். நான் ஏன் இதை செய்தேன் என்றும் உங்களுக்கு எடுத்துக் கூறினேன். வெளி நாடுகளில் எல்லாவிடங்களுக்கும் அனுப்ப நான் இரண்டு மணி நேரம் பிரசங்கிக்கப்பட்டு ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுவதை மாதிரியாக எடுத்துக் கொண்டு அதை பின்பற்றக் கூடாது.
167. இப்பொழுது, இதுவே நீங்கள் கடைபிடிக்கும் ஒழுங்காக இருக்க வேண்டும். ஒரு உதாரணத்தை அளிக்க விரும்புகிறேன். நான் ஒரு ஆலோசனை கூறினால் பரவாயில்லையா? சபையானது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்பட்டு, சபையோர் உள்ளே வரவேண்டும். பாடல்கள் இசைக் கருவியில் வாசிக்கப்படட்டும். எல்லோரும் தொழுது கொள்ள இங்கு வரட்டும், ஒருவரை யொருவர் சந்திக்க அனுமதிக்காதீர்கள். “நீங்கள் வெளியே செல்லுங்கள். ஒருரையொருவர் இங்கு சந்திக்காதீர்கள். சந்திக்க விரும்பினால், உங்களுக்கு சபைக்கு வெளியே உள்ள ஸ்தலம் முழுவதும் உள்ளது. ஆனால் இது தேவனுடைய பிரகாரம், இது சுத்தமாக வைக்கப்படட்டும்,” என்று கூறுங்கள். இங்கு கர்த்தருடைய ஆவி நம்முடன் இடைபடுமானால், அந்த ஆவியை நாம் காத்துக் கொள்வோம். பாருங்கள்? அது அசைவாடிக் கொண்டிருக்கும். நீங்கள் காத்துக் கொள்ளவில்லை யென்றால், அது போய்விடும். அது நிச்சயமாக போய்விடும். அதை நாம் காத்துக் கொள்வோம், அது நம்முடைய கடமை. அதற்காவே இன்றிரவு நான் இங்கு வந்திருக்கிறேன். இவைகளை ஒழுங்கின்படி கடைபிடிப்போம்.
168. இப்பொழுது பாருங்கள், இதைக் கூற விரும்புகிறேன். வழக்கமாக, நாம் விசேஷித்த பிரசங்கம் செய்தாலொழிய... ஒரு செய்தியை நீங்கள் ஒலிநாடாவில் பதிவு செய்யப் போவதாக அவர்களிடம் கூறுங்கள். பாருங்கள்? சகோ. நெவிலிடம் ஒரு செய்தி இருக்கும் பட்சத்தில்... அந்த செய்தியை ஒலிநாடாவில் பதிவு செய்து அவர் ஜனங்களுக்கு அனுப்ப விரும்பினால், “அடுத்த ஞாயிறு இரவன்று நாங்கள் இரண்டு மணி நேரம் ஒலிநாடாவில் செய்தியை பதிவு செய்யப் போகிறோம்,” மூன்று மணி நேரம் அல்லது எதுவானாலும், 'அடுத்த ஞாயிறு இரவு' என்று ஜனங்களுக்கு அறிவித்து விடுங்கள். அப்பொழுது அவர்கள் அறிந்து கொள்வார்கள். அதன் பிறகு ஜனங்கள் வரும் போது, “இன்றிரவு நாங்கள் ஒரு செய்தியை ஒலிநாடாவில் பதிவு செய்யப் போகிறோம். இங்கு என்னிடம் ஒரு செய்தி உள்ளது. அதை ஒலிநாடாவில் பதிவு செய்து அனுப்ப நான் ஏவப்படுகிறேன். நான்... இந்த செய்தியை வெளியே அனுப்ப நான் ஏவப்படுகிறேன். இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படும். இது இரண்டு மணி நேரம் எடுக்கும், அல்லது மூன்று மணி நேரம் அல்லது எதுவானாலும், அதை கூறி விடுங்கள்.
169. ஆனால், வழக்கமாக, வர்த்தகரின் கூட்டங்களைப் போன்ற இடங்களுக்கு செல்லும் போது நான் செய்வது போல், அல்லது ஜெப வரிசை அமைக்கவிருக்கும் கூட்டங்களில் நான் செய்வது போல; வியாதியஸ்தருக்கு ஜெபிப்பதற்கு முன்பு அன்றிரவு நான் மூன்று மணி நேரம் செய்தி ஒன்றை அளித்தால், அது என்னை என்ன நிலையில் ஆழ்த்தி விடும் என்று பாருங்கள். பாருங்கள்? அடுத்த நாள் இரவு சபையோரில் பாதி பேர் மாத்திரமே வருவார்கள். பாருங்கள்? ஏனெனில் அவர்களால் முடியாது, அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும், மற்றவைகளைச் செய்ய வேண்டும்.
170. இதை ஆலோசனையாகக் கூறுகிறேன். வழக்கமாக நேற்றிரவு சகோ. நெவில் பிரசங்கித்த போது கவனித்தேன். இப்பொழுது, நானறிவேன் நாமெல்லோரும்... அது திடுக்கிடச் செய்யும் ஒரு செய்தி. நான் குறிப்புகள் எழுதிக் கொண்டேன், அது இங்கு என் சட்டைப்பை, பாக்கெட்டில் உள்ளது, அதை என் செய்திகளில் உபயோகிக்கலாம். அது உண்மை. தப்பிக்க வழி, பாருங்கள், அது ஒரு அற்புதமான செய்தி. அதை அவர் எவ்வளவு வேகமாக முடித்து விட்டார், பார்த்தீர்களா? பாருங்கள், ஏறக் குறைய முப்பத்தைந்து நிமிடங்கள், பாருங்கள், அதை முடித்து விட்டார். பாருங்கள்? அது மிகவும் நல்லது. சகோ. நெவிலின் செய்திகள் வழக்கமாக அவ்விதமாகவே உள்ளன. பாருங்கள், அது நீண்ட செய்தியல்ல. பாருங்கள்? ஆனால் உங்கள் கூட்டத்தை நீங்கள் எங்கு கொன்று போட்டு விடுகிறீர்கள் என்றால், செய்திக்கு வருவதற்கு முன்பு உள்ள நீண்ட ஆராதனையே. பாருங்கள்?
171. இப்பொழுது, நீங்கள் அவ்விதம் செய்யும் போது... இப்பொழுது, எனக்குத் தெரியும், இப்பொழுது பாருங்கள், உங்கள் தர்மகர்த்தாக்களையோ, டீக்கன்மார் களையோ அல்லது போதகரையோ அவமானப்படுத்த இதை நான் கூறவில்லை. ஆனால் உண்மை எதுவோ அதையே உங்களிடம் கூறுகிறேன். இப்படித் தான் அது இருக்க வேண்டும். இப்பொழுது, நீங்கள்... அதை செய்வது எதுவென்றால், இப்பொழுது, நீங்கள் அனைவரும் நல்ல சுபாவம் படைத்தவர்கள். அப்படி இல்லாமல் போனால் நான், “சகோ. இன்னார் இன்னார் நல்ல சுபாவம் படைத்தவர் அல்ல, மற்றவர் அனைவரும் நல்ல சுபாவம் கொண்டவர்கள். அவருக்காக நாம் அனைவரும் ஜெபிப்போம்” என்று கூறியிருப்பேன். ஆனால் நீங்கள் நல்ல சுபாவம் கொண்டவர்கள். உங்களுக்கு நீடிய பொறுமை, சாந்த குணம், அமைதியான குணம் போன்றவை உள்ளன. ஆனால் அதன் காரணமாக பெண்மைத்தனம் படைத்தவர்களாய் இருக்க வேண்டாம்.
172. இயேசு நல்ல சுபாவம் படைத்தவராயிருந்தார். ஆனால் தருணம் வந்தபோது, அவர், “என்னுடைய பிதாவின் வீடு ஜெப வீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறதே, நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்,” என்றார் பாருங்கள்? அவர் எப்பொழுது பேச வேண்டும், எப்பொழுது பேசாதிருக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தார். அதைத் தான் நாமும் செய்ய வேண்டும். பாருங்கள்? இயேசுவைப் போல் எவருமே இருந்ததில்லை. அவர் தேவன். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், அவர் சபையிலுள்ள டீக்கன் உத்தியோகத்தை அவர் வகித்தார். அவர் சில கயிறுகளைப் பின்னினார். அவர் இனிமையாகப் பேசி அவர்களை வெளியே அனுப்பவில்லை, அவர் காத்திருக்க அவர்களை சாட்டையால் அடித்து தேவனுடைய வீட்டிலிருந்து வெளியே துரத்தினார் (பாருங்கள்?). அவர் டீக்கனின் உத்தியோகத்தை அப்பொழுது வகித்து, டீக்கன்மார்களாகிய உங்களுக்கு உதாரணமாயிருந்தார். பாருங்கள், அவரே உங்களுக்கு மாதிரி. “ என்னுடைய பிதாவின் வீடு ஜெப வீடு என்று எழுதியிருக்கிறதே. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், இயேசு அங்கு டீக்கனாக இருந்தார், அது உங்களுக்குத் தெரியும். அவர் டீக்கனின் பாகத்தை அப்பொழுது வகித்தார்.
173. அவர் போதகரின் பாகத்தை வகித்த போது என்ன கூறினார்? “குருடரான பரிசேயரே, குருடருக்கு வழி காட்டும் குருடர்களே” என்றார். பாருங்கள், அப்பொழுது அவர் போதகரின் பாகத்தை வகித்தார்.
174. நடக்கப் போவதை அவர் அவர்களுக்கு முன்னுரைத்த போது, அவர் தீர்க்கதரிசியின் பாகத்தை வகித்தார். பாருங்கள்?
175. வரிப்பணம் செலுத்தப்பட வேண்டும் என்னும் நிலை ஏற்பட்ட போது, அவர் தர்மகர்த்தாவின் பாகத்தை வகித்து, “பேதுருவே, நீ போய் ஆற்றில் தூண்டிலைப் போடு. நீ பிடிக்கும் முதல் மீனின்வாயில் ஒரு நாணயம் இருக்கும். அதை எடுத்து உன் நியாயமான கடன்களை அவர்களுக்கு செலுத்தி விடு என்றார். அவர் “இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்” என்றும் கூறினார்.
176. அவர் ஒருங்கே போதகர், தீர்க்கதரிசி, தர்மகர்த்தா, டீக்கனாக இருந்தார். அவர் நிச்சயமாக இருந்தார்! எனவே பாருங்கள், அவர் என்ன செய்தாரோ அதுவே பிரன்ஹாம் கூடாரத்துக்கு உதாரணமாக அமைந்திருக்கட்டும். இந்த ஜெப வீடு எல்லா வகையிலும், எல்லா உத்தியோகத்திலும், எல்லா விதங்களிலும், எவ்வித ஒப்புரவாகுதலுமின்றி அவருக்கு கனத்தைச் செலுத்தும் வீடாக இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். இங்கு சாந்த குணம், இனிமை, தயவு காணப்பட வேண்டும். இருப்பினும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கடமையைச் சரிவர செய்யக்கடவன். பாருங்கள்? அவ்விதமாக இருக்க வேண்டுமென்றே அவர் விரும்புகிறார். அவர் தயங்கவேயில்லை. எது எதுவென்று நேரடியாக கூற வேண்டிய தருணம் வந்த போது அவர் கூறினார். சாந்தகுணம் காண்பிக்க வேண்டிய நேரம் வந்த போது, அவர் சாந்த குணம் காண்பித்தார். அவர் இனியவராயும், தயவுள்ளவராயும், புரிந்து கொள்ளும் தன்மையுடையவராயும் இருந்தார். ஆனால் அதே சமயத்தில் அவர் கண்டிப்பாக இருந்தார். எல்லாமே அவருக்கு கிரமமாக செய்யப்பட வேண்டும். அவர் அதை உங்களுக்கு திருஷ்டாந்தமாக செய்து காண்பித்தார். பரிசுத்த ஆவியானவர் அந்த கருத்தை இப்பொழுது தான் எனக்களித்தார். இதற்கு முன்பு, அவர் டீக்கனாக இருந்தார் என்பது என் சிந்தனையில் எழவில்லை. அவர் டீக்கனாக இருந்தார். பாருங்கள்? அவர் டீக்கனின் உத்தியோகத்தை வகித்தார்.
177. இதைக் கூற விரும்புகிறேன். உங்கள் ஆராதனை ஏழரை மணிக்கு தொடங்கினால், உங்கள் சபையை அரை மணி நேரத்துக்கு முன்பு, ஏழு மணிக்கே திறந்து விடுங்கள். பியானோ இசைப்பவர்... ஆர்கன் இசைப்பவர்களிடம் கூறுங்கள்... அவளுக்கு நீங்கள் சம்பளம் கொடுக்கிறீர்களா? நீங்கள் ஆர்கன் இசைப்பவளுக்கு சம்பளம் கொடுக்கிறீர்களா? அவளுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறதா, அந்த பியானோ இசைப்பவளுக்கு. அவள் இலவசமாக அதை செய்கிறாள். அவளை தயவாய் கேட்டுக் கொள்ளுங்கள். அவள் சம்பளம் பெற விரும்பினால், அவளுக்கு சம்பளம் ஏதாவது கொடுங்கள். ஆராதனை தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பு வரும்படி அவளிடம் கூறுங்கள். அவள், “ என்னால் முடியாது” என்று சொல்லிவிட்டால், அவளை இங்கு அழைத்து வந்து, இனிமையான ஆர்கன் இசையை ஒலிநாடாவில் பதிவு செய்து கொள்ளுங்கள். பாருங்கள்? அது... ஒலிநாடாவைப் போடுங்கள்... அவள் ஒவ்வொரு முறையும் இங்கு இருக்க வேண்டியதில்லை, உங்கள் ஒலிநாடாவை போடுங்கள். பாருங்கள்? டீக்கன்மார்களில் ஒருவர், அல்லது வாயிற் காப்போன், அந்த ஒலிநாடாவைப் போடட்டும். ஜனங்கள் உள்ளே வரும் போது, அந்த ஒலிநாடா இயங்கிக் கொண்டிருக்கட்டும். பாருங்கள்? இதைச் செய்ய டீக்கன்மார்கள் இங்கு இல்லையென்றால், தர்மகர்த்தாக்கள், அல்லது வேறு யாராகிலும் அதை செய்யட்டும். அவர்கள் அதை அரை மணி நேரம் இயக்கட்டும்.
178. ஆனால் சரியாக ஏழரை மணிக்கு, சபை கட்டிடத்தின் மேலுள்ள மணி ஒலிக்கட்டும். பாருங்கள்? மணி இப்பொழுதும் அங்குள்ளதா? ஆம். சரி. உங்கள் மணி சரியாக ஏழரை மணிக்கு ஒலிக்கட்டும். அதன் அர்த்தம் என்னவென்றால், நீங்கள் சபையில் மேலும் கீழும் நடந்து சென்று ஜோன்ஸ் குடும்பத்தாரிடமும் மற்றவர்களிடம் கைகுலுக்கக் கூடாது என்பதே. பாடல் தலைவர் அவர் வேலையை செய்யட்டும். அங்கு பாடல் தலைவர் இல்லையென்றால், டீக்கன்மார்கள்... அல்லது... மணி ஒலிக்கும் போது பாடல்களை முன்னின்று நடத்த யாரையாகிலும் ஆயத்தம் செய்யட்டும். இப்பொழுது நாம் பாடல் புத்தகத்தில் இந்த எண்ணுக்கு திருப்புவோம் “ பாருங்கள்? அது சரியாக ஏழரை மணிக்கு தொடங்கட்டும்.
179. சரி, அதன் பிறகு சபையோர் ஒரு பாடலை பாடட்டும், வேண்டுமானால், சபையோர் இன்னும் ஒரு பாடலும் பாடலாம். அதன் பிறகு ஜெபம் செய்ய நீங்கள் முன் கூட்டியே அறிவித்த ஒருவர் (உங்களால் முடிந்தால்) ஜெபத்தில் நடத்தட்டும். போதகர்... போதகர் அங்கிருக்கக் கூடாது, பாடல் தலைவர் அதை செய்ய வேண்டும். அது சகோதரன் காப்ஸ் என்று நினைக்கிறேன், பாருங்கள். என்ன செய்ய வேண்டுமென்று அவருக்குத் தெரியும். அவர் யாரிடமாவது முன்கூட்டி அறிவித்து... அல்லது அவரே ஜெபத்தில் நடத்தலாம். ஜெபம் செய்யும் போது, சபையோர் நிற்கும்படி கூறுங்கள், பாருங்கள், அவர்கள் எழுந்து நிற்கட்டும். யாராகிலும் ஒருவர் ஜெபத்தில் நடத்தட்டும். இப்பொழுது, நீங்கள் கவனமாயிரா விட்டால்...
180. எல்லோரும் தேவனுடைய வீட்டுக்கு வந்து ஜெபிக்க வேண்டும் என்று நாம் விசுவாசிக்கிறோம். அது ஜெப வீடு. ஆனால் நீங்கள் அந்த பிரகாரத்தில் இருக்கும் போது, உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துங்கள். பாருங்கள்? ஜெபத்திற்கென நீங்கள் அழைப்பவர் யாராகிலும் பதினைந்து இருபது நிமிடங்கள் எடுத்துக் கொண்டால், உங்கள் நேரம் ஓடிவிடும்.
181. உங்கள் பாருங்கள், உங்கள் ஜெபம் வீட்டில் செய்யப்பட வேண்டும். இயேசு, 'நீ ஜெபம் பண்ணும் போது, மாயக்காரரைப் போல் நின்று கொண்டு... நீண்ட ஜெபம் பண்ணி, இதை, அதை, மற்றதை கூறாதே. அவர்கள் மனுஷர் காணும்படியாக அவ்விதம் செய்கிறார்கள். நீ ஜெபம் பண்ணும் போது... உன் அறை வீட்டுக்குள் பிரவேசித்து இரகசிய அறைக்குள் கதவைப் பூட்டி, உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாக உனக்குப் பலனளிப்பார்“ என்றார். இப்பொழுது, அவ்விதமாகவே அந்தரங்க ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டும். அவ்விதம் செய்யவே அவர் கூறினார்.
182. ஆனால் நீங்கள்; யாராகிலும் ஜெபம் பண்ணவரும் போது, பாடல் தலைவர், “சரி...” என்று கூறட்டும். முதலாம் பாடல் பாடி முடிந்த பின்பு, யாராகிலும் ஒருவர் ஜெபம் செய்யட்டும் - சுருக்கமான ஜெபம். அங்கு நின்று கொண்டு ஆளுநர்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டாம். ஜெப விண்ணப்பங்கள் ஏதாகிலும் இருக்குமானால், அதை தெரியப்படுத்துங்கள். அதை எழுதி, “ இதோ என் ஜெப விண்ணப்பம்” என்று அனுப்புங்கள். “இன்றிரவு, நாம் ஜெபிக்கும் இந்த நேரத்தில், சகோதரி இன்னார் இன்னாரை, மருத்துவமனையிலுள்ள சகோ. இன்னார் இன்னாரை, இன்னார் இன்னாரை, இன்னார் இன்னாரை மற்றும் இன்னார் இன்னாரை நினைவு கூருவோம். நீங்கள் ஜெபிக்கும் போது, உங்கள் ஜெபத்தில் இவர்களை நினைவு கூருங்கள். சகோ. ஜோன்ஸ், எங்களை இப்பொழுது ஜெபத்தில் நடத்துவீரா? நாம் எழுந்து நிற்போம்.” பாருங்கள்? ஜெப விண்ணப்பங்கள் மேடையின் மீதுவைக்கப்பட வேண்டும். அவர்களிடம் அதைப் பற்றி கூறுங்கள், அவர்களிடம் அதைப் பற்றி கூறுங்கள், அவர்களுக்கு அந்த பழக்கம் வரட்டும். ”உங்களுக்கு ஜெப விண்ணப்பம் இருக்குமானால், அதை எழுதி இங்கு வையுங்கள். நீங்கள் அதை பேசி தெரிவிக்கும் படி செய்யாதீர்கள். இப்பொழுது உங்களுக்கு ஜெப விண்ணப்பம் இருந்தால், அதை எழுந்து தெரிவியுங்கள்...” என்று கூறுவீர்களானால், முதலாவதாக, யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று, “தேவனுக்கு மகிமை! உங்களுக்குத் தெரியயுமா...” என்று தொடங்கி, சில நேரங்களில் அரை மணி நேரம் எடுத்துக் கொண்டு அதன் பிறகு உட்காருகின்றனர். பாருங்கள்?
183. நாமே இந்த சபைக்கு பொறுப்பாளிகள், மற்றவர் அல்ல. இது தேவனுக்கு நாம் கொண்டுள்ள பொறுப்பு. நீங்கள் வகிக்கும் இந்த உத்தியோகங்கள் தேவனிடம் உங்களை பொறுப்பாளிகளாகச் செய்கிறது. பாருங்கள்? இன்றிரவு இங்கு நான் நின்று கொண்டு இதைக் கூறக் காரணம், தேவனுக்கு எனக்குள்ள பொறுப்பே. இதை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பு. பாருங்கள்?
184. இப்பொழுது, அப்படி ஏதாவதொன்று... யாராகிலும் ஒருவர் ஜெபத்தில் நடத்தட்டும், அது நல்லது. அவர்கள் ஜெபத்தில் நடத்தி விட்டு, பிறகு சென்று உட்கார்ந்து கொள்ளட்டும்.
185. உங்களுக்கு விசேஷித்த... இதைக் கூறி, ஆராதனையை நீட்ட விரும்பவில்லை... யாருக்காகிலும் விசேஷித்த பாடல்கள் பாட விருப்பம் இருக்கக் கூடும். சபையில் இவ்வாறு அறிவியுங்கள். “விசேஷித்த பாடல்கள் பாட விரும்புவோர், ஆராதனை தொடங்குவதற்கு முன்பு பாடல் தலைவரிடம் தெரியப்படுத்துங்கள்.” அதைக் குறித்துக் கொண்டு... “சகோதரனே, நான் வருந்துகிறேன். எனக்குப் பிரியம் தான்... அதை செய்ய எனக்கு நிச்சயம் பிரியம். ஆனால் இன்றைய இரவுக்கான விசேஷித்த பாடல்கள் ஒழுங்கு செய்யப்பட்டு விட்டது. ஒரு குறிப்பிட்ட இரவு நீங்கள் வருவீர்கள் என்று கூறினால், அன்றைய நிகழ்ச்சி நிரவில் உங்கள் பெயரை சேர்த்துக் கொள்கிறேன். பாருங்கள், இன்றைக்கான நிகழ்ச்சி நிரல் எழுதப்பட்டு விட்டது” என்று கூறுங்கள்.
186. சகோ. காப்ஸ் அல்லது பாடல் தலைவர் யாராகிலும் பாடல் தலைவர் ஒருவர் இருக்க வேண்டும், அது யாராயிருந்தாலும் பரவாயில்லை. போதகர் அங்கு நின்று கொண்டு... பாடல்களை அறிவித்து அதிக பொறுப்புகளை வகிக்க வேண்டாம். அவர் போதகர், பாருங்கள், பாடல் தலைவர் அங்கு நின்று கொண்டு பாடல்களை நடத்தட்டும். அது அவருடைய வேலை.
187. போதகரின் வேலை பிரசங்கம் செய்வது, பாருங்கள், பாடல்களை நடத்துவதல்ல. அவர் பாடல்களை நடத்தக் கூடாது, பாடல் தலைவர் பாடல்களை நடத்த வேண்டும். போதகர் செய்தியை அளிக்கும் பொறுப்பை பெற்றுள்ளவர். அவருடைய நேரம் வரும் போது, அவர் அலுவலகத்திலிருந்து அல்லது வேறெதாவது இடத்திலிருந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றவராய் புத்துணர்ச்சியுடன் வர வேண்டும். பாடல்கள் பாடும் போது, அவர் மேடையின் மேல் இருக்க வேண்டும் என்பதில்லை. அவர் அங்கே அலுவலகத்தில், அல்லது இங்கே எங்காவது ஓரிடத்தில் தங்கியிருக்கட்டும். அறைகளில் வைக்கப்பட்டுள்ள ஒலிப் பெருக்கிகள் (intercoms) ஆராதனையில் நடந்து கொண்டிருப்பதை அவரிடம் கொண்டு வரும். பாருங்கள்? நேரம் வரும் போது, அவர் கடைசி பாடலைக் கேட்கும் போது... மூன்றாவது பாடலாக ஒரு விசேஷித்தபாடல், உதாரணமாக தனியாகப்பாடுதல், அல்லது இரண்டு பேர் பாடுதல், பாடப்படும் போது. பாருங்கள்?
188. சபையோர் இரண்டு பாடல்களைப் பாடுகின்றனர், ஜெபம், காணிக்கை (நீங்கள் எடுப்பீர்களென்றால்). ஒவ்வொரு மனிதனும் தன் வேலையில் நிலை கொண்டிருக்கட்டும். இந்த கடைசி பாடலை நாம் இப்பொழுது பாடும் போது, மாலை காணிக்கை எடுக்க வாயிற் காப்போர் முன் வாருங்கள்” என்று கூறுங்கள். பாருங்கள்? முதலாம் பாடல் பாடி முடிந்தவுடன், வாயிற் காப்போர் தங்கள் இடங்களில் நின்று கொண்டிருக்கின்றனர். சரி, இப்பொழுது நாம் ஜெபம் செய்யப் போகிறோம்” என்று அறிவியுங்கள். “நாம் இன்னார் இன்னார், இன்னார் இன்னாரை நினைவு கூர விரும்புகிறோம்” என்று சொல்லி அந்த பெயர்களைப் படியுங்கள்.“ சரி, எல்லோரும் எழுந்து நில்லுங்கள். சகோதரனே, எங்களை ஜெபத்தில் நடத்துவீரா?” . பிறகு அது முடிந்து விடுகிறது.
189. பிறகு அவர்கள் இரண்டாம் பாடலைப் பாடும் போது, அல்லது நீங்கள் எவ்விதமாகப் பாடினாலும்... நீங்கள் காணிக்கை எடுக்க விரும்பினால், காணிக்கை எடுங்கள். இல்லையென்றால் விட்டு விடுங்கள்... அல்லது முதலில் பாடல், அதன் பிறகு மாலை காணிக்கை, பிறகு இரண்டாம் பாடல், இப்படியாக நடத்துங்கள். பிறகு உங்கள் கடைசி பாடல்... உங்கள் கடைசி பாடல், பாருங்கள், போதகருக்கு அழைப்பாக அமையட்டும். கடைசி பாடல் பாடி முடிந்தவுடன், ஆர்கன் மாத்திரம் இசைத்துக் கொண்டிருக்கட்டும். அப்பொழுது போதகர் வருகிறார். பாருங்கள், எல்லாமே ஒழுங்காக அமைந்துள்ளது, எல்லோருமே அமைதியாயுள்ளனர். வேறொன்றுமே அங்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு டீக்கனும் தன் இடத்தில் நின்று கொண்டிருக்கிறார். போதகர் அங்கு நின்று கொண்டிருக்கிறார்.
190. அவர் உள்ளே வந்து, சபையோருக்கு வாழ்த்துதல் கூறி, வேதாகமத்தை திறந்து, “இன்றிரவு நாம் வேதாகமத்திலிருந்து ஒரு பாகத்தை வாசிக்கப் போகின்றோம். “ பாருங்கள், அவ்வாறு கூறி அந்த பாகத்தை எடுத்த பின்பு, “ தேவனுடைய வார்த்தைக்கு மரியாதை செலுத்தும் வகையில், வேத வசனத்தைப் படிக்கும் போது நாம் எழுந்து நிற்போம்,” என்று சொல்வது நல்லது. பாருங்கள், ”இன்றிரவு நான் சங்கீதங்களின் புத்தகத்திலிருந்து படிக்கிறேன்” அல்லது எந்த பாகமோ அதை அறிவியுங்கள். அல்லது வேறு யாராகிலும், பாடல் தலைவரோ அல்லது உங்களுடன் இருக்கும் கூட்டாளி எவராகிலும் வேத பாகத்தை வாசிக்கலாம். ஆனால் நீங்கள் அதை வாசித்தால் மிகவும் நல்லது. அதை படித்த பின்பு, பிரசங்கத்துக்கான உங்கள் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். பாருங்கள்? அவ்வளவு நேரம், நீங்கள் மொத்தம் முப்பது நிமிடங்கள் செலவழித்திருப்பீர்கள். அப்பொழுது ஏறக்குறைய எட்டு மணி ஆயிருக்கும்.
191. எட்டு மணி தொடங்கி ஏறக்குறைய எட்டே முக்கால் மணி வரை முப்பது நிமிடங்களிலிருந்து நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை பரிசுத்த ஆவி உங்களுக்கு அளிக்கும் விதமாக (பாருங்கள்?) வார்த்தையைப் பிரசங்கியுங்கள். அபிஷேகத்தின் கீழ் அவர் என்ன செய்யக் கூறுகிறாரோ, அதே விதமாக அதை சபையோருக்கு அளியுங்கள்.
192. அதன் பிறகு பீட அழைப்பைக் கொடுங்கள். “சபையிலுள்ள யாராகிலும் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்பினால், பீடத்தண்டை வரும்படி உங்களை அழைக்கிறோம், எழுந்து நில்லுங்கள்,” என்று கூறுங்கள். பாருங்கள்?
193. யாரும் எழுந்து நிற்காவிட்டால், 'ஏற்கனவே மனந்திரும்பி, பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம்பெற்றுக்கொள்ள தங்களை ஞானஸ்நானத்துக்கு ஒப்புக்கொடுக்க விரும்புவோர் யாராகிலும்உண்டா? நீங்கள் வர விரும்பினால், உங்களுக்கு இப்பொழுது நாங்கள் தருணம் அளிக்கிறோம். ஆர்கன் இசைத்துக் கொண்டிருக்கும் போது, வாருங்கள்,” என்று சொல்லுங்கள். பாருங்கள்?
194. யாரும் வராமல் போனால், “பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறாமலிருந்து, அதைப் பெற்றுக் கொள்ள நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று விருப்பமுடையோர் இன்றிரவு யாராகிலும் உண்டா?” என்று கேளுங்கள். ஒருக்கால் யாராகிலும் வரக்கூடும். அப்பொழுது இரண்டு அல்லது மூன்று பேர் அவர்கள் மேல் கைகளை வைத்து அவர்களுக்காக ஜெபியுங்கள். அவர்களை அங்குள்ள அறைகளில் ஒன்றுக்கு அனுப்பி விடுங்கள், யாராகிலும் ஒருவர் அவர்களுடன் கூட சென்று, பரிசுத்த ஆவியை எப்படி பெற்றுக் கொள்வது என்பதைக் குறித்து உபதேசிக்கட்டும். சபையோர் இவர்களிலிருந்து விலகியிருக்க வேண்டும்.
195. கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள விரும்புவோர் யாராகிலும்... ஜெபித்துக் கொள்ள பீடத்தண்டை நின்றிருந்தால் நீங்கள்... அவர்களுக்காக ஜெபியுங்கள். ஜெபிக்கும் தருணத்தில், உங்கள் தலைகளை இப்பொழுது வணங்குங்கள். நாங்கள் ஜெபிக்க போகின்றோம்” என்று சொல்லுங்கள். “நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” என்று அவர்களைக் கேளுங்கள்.
196. ஏதாகிலும் ஒரு வகையில் சபையோரைத் தாமதப்படுத்தும் ஒரு சிறு காரியம் நடக்க வேண்டுமென்றால், அவர்களை ஜெப அறைக்கு அனுப்பி விடுங்கள், நீங்களும் அவர்களுடன் செல்லுங்கள், அல்லது வேறு யாரையாகிலும் அனுப்புங்கள். சபையோர் தொடர்ந்து ஆராதனையில் பங்கு கொள்ளட்டும். பாருங்கள், அவ்விதம் செய்வதனால், நீங்கள் எவ்வகையிலும் அவர்களைத் தாமதப் படுத்த மாட்டீர்கள். பாருங்கள்?
197. அதன் பிறகு... அதற்கு முன்பு... இன்னும் சில நிமிடங்களில் யாரும் வராமல் போனால், “வியாதிக்காக எண்ணெய்ப் பூசி ஜெபம் செய்யப்பட விரும்புவோர் யாராகிலும் உண்டா? நாங்கள் வியாதியஸ்தருக்காக இங்கு ஜெபிக்கிறோம்” என்று அறிவியுங்கள்.
198. “சகோ. நெவில், உங்களைத் தனியாக காண விரும்புகிறேன்” “நல்லது, என்னை அலுவலகத்தில் வந்து காணுங்கள். டீக்கன்மார்களில் ஒருவர் இந்த விஷயத்தை கவனித்துக் கொள்வார்கள்.” பாருங்கள்? “சகோதரனே, உங்களிடம் சிலவற்றை கூற வேண்டும்.” “நல்லது, டீக்கன்மார்களில் ஒருவர் உங்களை அலுவலகத்துக்கு அழைத்து வருவார், நாம் ஆராதனை முடிந்தவுடனே உங்களை சந்திக்கிறேன்.”
199. “இப்பொழுது ஆராதனையை முடிக்க நாம் எழுந்து நிற்போம்.” பாருங்கள், முழுவதுமே ஒன்றே முக்கால் மணி நேரத்துக்கு மேல் எடுக்காது. பாருங்கள்? பாருங்கள், ஒன்றரை மணி நேரத்தில் உங்கள் ஆராதனை முடிந்து விடுகிறது. நீங்கள் ஒரு செய்தியை வேகமாக ஊடுருவும் வல்லமையோடு பேசுகிறீர்கள். நீங்கள் அவ்விதம் செய்யும் போது, எல்லோருமே திருப்தியடைந்தவர்களாய் நல்லுணர்வுடன் வீடு திரும்புகின்றனர். பாருங்கள்? நீங்கள் அவ்விதம் செய்யாமல் போனால், பாருங்கள், நீங்கள்... பாருங்கள், நீங்கள் நல்லெண்ணத்துடன் தான் செய்கிறீர்கள். பாருங்கள், ஆனால் பாருங்கள்...
200. பாருங்கள், நான் இந்த மேடையின் மேலும், உலகம் முழுவதிலும் ஏறக்குறைய முப்பத்து மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்திருக்கிறேன். இந்த நீண்ட காலத்தில் நிச்சயமாக சிறிதளவாவது கற்றுக் கொள்ள முடியும். பாருங்கள்? அவ்விதம் கற்றுக் கொள்ளாமல் போனால், இதை விட்டு விலகுவது நலம். எனவே, பாருங்கள், இதை நான் கண்டு கொண்டேன். நீங்கள் பரிசுத்தவான்களுடன் மாத்திரம் தொடர்பு கொள்ள நேரிட்டால், வேண்டுமானால், இரவு முழுவதும் கூட அதில் நிலைத்திருக்கலாம். ஆனால் நீங்கள்... பாருங்கள், அவர்களுடன் மாத்திரம் நீங்கள் ஈடுபடுவதில்லை, வெளியிலுள்ள மற்றவர்களையும் நீங்கள் பிடிக்க முயல்கிறீர்கள். அவர்களை பிடிக்க நீங்கள் அவர்களுடைய ஊழியத்தில் பணிபுரிய வேண்டும். பாருங்கள்? அவர்களை இங்கு கொண்டு வந்து, வார்த்தை அவர்களுக்கு அளிக்கப்பட்டால், பாருங்கள், குறை சொல்ல ஏதுவிராது. ஏதாவது ஒன்றிற்காக அவர்கள் உங்களைக் காண விரும்பினால், அவர்களை அலுவலகத்துக்கு கொண்டு வாருங்கள். அதற்காக சபையோரைப் பிடித்து வைக்க வேண்டாம்.
201. பிறகு, உங்களுக்குத் தெரியுமா, ஜனங்கள் எழுந்து, “ நல்லது, நான் சொல்லுகிறேன், ஒரு நல்ல சாட்சி கூட்டம் வைக்கலாம்” என்பார்கள். பாருங்கள்? இதை குற்றப் படுத்துவதாக எண்ண வேண்டாம், உங்களிடம் உண்மையையே எடுத்துரைக்கிறேன். பாருங்கள்? நான் கண்டது என்னவெனில்... இந்த சாட்சி கூட்டங்கள்... சில நேரங்களில் நன்மையைக் காட்டிலும் அதிக தீங்கு விளைவிக்கின்றன. பாருங்கள், அவை உண்மையில் அவ்விதம் செய்கின்றன.
202. எழுப்புதல் கூட்டத்தின் போது யாருக்காகிலும் ஒரு சூடான சாட்சி இருந்தால்; எழுப்புதல் கூட்டம் ஒன்று நடக்கிறதென்று வைத்துக் கொள்வோம், அதில் யாராகிலும் இரட்சிக்கப்பட்டு ஓரிரண்டு வார்த்தைகளைக் கூற விரும்பினால், நல்லது தேவனுக்கு ஸ்தோத்திரம், அவன் தன் ஆத்துமாவிலுள்ள பாரத்தைக் கூறி தீர்த்துக் கொள்ளட்டும். பாருங்கள், அவன்... அவன் அதைச் செய்ய விரும்பினால்; “கர்த்தர் எனக்கு செய்த நன்மைக்காக அவருக்கு நன்றி கூற விரும்புகிறேன். சென்ற வாரம் அவர் என்னை இரட்சித்தார். தேவனுடைய மகிமையினால் என் இருதயம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று சுருக்கமாக சொல்லி உட்கார்ந்து கொள்ளலாம். ஆமென் அது நல்லது, அதை செய்யுங்கள். பாருங்கள், அதனால் பரவாயில்லை.
203. ஆனால் நீங்கள், “வாருங்கள், அடுத்தது யார்? அடுத்தது யார்? நாம் ஒரு சாட்சியைக் கேட்போம், நாம் ஒரு சாட்சியைக் கேட்போம்” என்று நீட்டிக் கொண்டே போனால், அதற்கென்று ஒரு குறிப்பிட்ட இரவு கூட்டத்தை ஒதுக்கிவைத்து விடுங்கள். “இன்றிரவு... அடுத்த புதன் இரவு, ஜெபக் கூட்டத்துக்குப் பதிலாக சாட்சி கூட்டம் இருக்கும்” என்று அறிவியுங்கள். சாட்சிகளைக் கூற அவர்கள் கூட்டத்துக்கு வரும் போது, வேதத்தில் ஒரு பாகத்தைப் படித்து, ஜெபம் செய்து, அதன் பிறகு, “இது சாட்சிக் கூட்டமாக இருக்கு மென்று ஏற்கனவே உங்களுக்கு அறிவித்தோம்” என்று கூறுங்கள். ஜனங்கள் ஒரு மணிநேரம் அல்லது நாற்பது நிமிடங்கள், அல்லது முப்பது நிமிடங்கள் - அது எதுவானாலும் - தொடர்ந்து சாட்சி உரைக்கட்டும். நான் கூறுவது விளங்குகிறதா? நீங்கள் இந்த முறையைக் கடைபிடித்தால், அது சபையோருக்கு உதவியாயிருக்கும், எல்லாவற்றிற்கும் உதவியாயிருக்கும்.
204. இப்பொழுது, நேரமாகி விட்டது, எனவே... சகோதரனே, சகோதரர்களே, இது எனக்கு தெரிந்த மட்டும் சிறந்த பதில்கள். உங்கள் இருதயத்தில் எழுந்த கேள்விகளுக்கு இவை எனக்குத் தெரிந்த வரைக்கும் சிறந்த பதில்கள். இப்பொழுது முதல் என்ன செய்வதென்று உங்களுக்குத் தெரியும். உங்கள் மனதில் சந்தேகங்கள் எழுந்தால், இந்த ஒலிநாடாவிடம் வாருங்கள்... இதைப் போட்டு கேளுங்கள். அது டீக்கன்மார்கள், தர்மகர்த்தாக்கள், யாராயிருந்தாலும், இந்த ஒலிநாடாவைப் போட்டுக் கேளுங்கள். சபையோர் கேட்க விரும்பினால், அவர்களுக்கும் இந்த ஒலிநாடாவைப் போடுங்கள். இது எனக்குத் தெரிந்த வரைக்கும், எய்த் அண்டு பென் தெருவிலுள்ள இந்த கூடாரத்துக்கு தேவனுடைய சித்தமாக உள்ளது. சகோதரரே, இதை பரிசுத்த ஆவியின் வழிநடத்தலுடன் தயவாயும் அன்புடனும் கடை பிடித்து, உங்கள் கிருபையை ஜனங்களுக்கு முன்பாக காண்பித்து நீங்கள் கிறிஸ்தவர்கள் என்பதை அறியச் செய்ய உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். கிறிஸ்தவர்கள் என்றால் எல்லா விடங்களிலும் தள்ளப்படக் கூடிய குழந்தை என்று அர்த்தமல்ல. அது அன்பினால் நிறைந்த மனிதனை, தேவன் பேரிலும் சபையோர் பேரிலும் நிறைந்த அன்பைக் கொண்ட மனிதனைக் குறிக்கிறது. நான் கூறுவது புரிகிறதா?