வினோதமான காரியம் என்னவெனில், இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது என்பதை அறியாதவனாய், ஸ்திரீயைக் குறித்தஇதைப் பற்றி கூற வேண்டுமென்றிருந்தேன். இது இப்பொழுது முதலாம் கேள்வியாக அமைந்து விட்டது.
33. இப்பொழுது மத்தேயு 24:19. இயேசுவிடம் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன. இவையே அந்தக் கேள்விகள்: ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடிக்கு இடிக்கப்படுதல் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும் உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? என்ற மூன்று கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அவர் மூன்று வெவ்வேறு விதங்களில் இவைகளுக்கு பதிலளிக்கிறார். ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடிக்கு எப்பொழுது சம்பவிக்குமென்றும், அவருடைய வருகையின் அடையாளம் என்னவென்றும், உலகத்தின் முடிவைக் குறித்தும் அவர் அவர்களிடம் கூறுகிறார். அவர் எவ்வாறு பதிலளிக்கிறார் என்று நீங்கள் கூர்ந்து கவனிக்காமல் போனால், நீங்கள் குழப்பமடைந்து, இவையனைத்தையும் ஒரே காலத்தில் பொருத்தி விடுவீர்கள். அதன் விளைவாக உங்களுக்கு குழப்பம் உண்டாகும்.
34. இது எதிர்காலத்தில் நிகழவிருக்கும் ஒரு சம்பவம் என்று கருதும் ஏழாம் நாள் ஆசரிக்கும் நமது சகோதரரை அவமதிக்கும் வண்ணம் இதை நான் கூறவில்லை. ஏழாம் நாள் ஆசரிப்பு என்னும் பொருளுக்கு வருவோமானால்; "நீங்கள் ஓடிப்போவது மாரிக் காலத்திலாவது, ஓய்வு நாளிலாவது சம்பவியாதபடிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்" (மத். 24:20) என்னும் போது, அவர்கள் ஓய்வு நாளை ஆசரித்துக் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. அந்த சகோதரரை குற்றப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, அவ்விதம் செய்வது கிறிஸ்தவ பண்பாய் இராது. இதை தெளிவுபடுத்துவதற்காகவே. பாருங்கள்?
35. முழு கிறிஸ்தவ உலகமும் ஒரு மதிலுக்குள் எவ்விதம் ஒன்றாக கூடியிருக்க முடியும், அன்று போல் அவை திறக்கப் படாமலும் மூடப்படாமலும் எப்படி இருந்திருக்க முடியும்? பாருங்கள்? வெப்ப மண்டலத்தில் வாழ்பவர்களுக்கு அது கோடைகாலமானாலும் மாரி காலமானாலும், அதனால் என்ன வித்தியாசம்? பாருங்கள், அது இஸ்ரவேலருக்கு மட்டுமே. அந்த காலத்தில் தான் ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராமல் போகும்.... "அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ" (மத் 24:19). ஏனெனில் கர்ப்பவதிக்கு (பாருங்கள்?) ஓடிப்போவது கடினமாயிருக்கும், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடிப்போவது கடினம். ஏனெனில் அவர்கள் எருசலேம் நகரத்தை விட்டு வெளி வந்து யூதேயாவின் மலைகளுக்கு ஓடிப் போக வேண்டும்.
36. இப்பொழுது, இதை தெளிவாக்க, இந்த ஒரு பொருளின் பேரில் நான் காலை முழுவதும் நிலைத்திருக்கக் கூடும். ஆனால் ஜனங்கள் புரிந்து கொள்ள முக்கியமான விஷயங்களை மட்டும் சொல்லி விட்டு, அதன் பிறகு அடுத்த கேள்விக்கு சென்றுவிடுகிறேன்.
37. இப்பொழுது, இயேசு அவர்களிடம் என்ன கூறினார் என்றால்... "எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்கு நகரத்துக்கு திரும்பாதிருக்கக் கடவன்; அவனுடைய வீட்டிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ள நகரத்துக்கு திரும்பாதிருக்கக்கடவன், அவன் யூதேயாவுக்கு ஓடிப் போகக்கடவன்; ஏனெனில் உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராத மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்” என்றார். அவையனைத்தும் ரோம தளபதியான தீத்து எருசலேமை முற்றுகையிட்டபோது நிறைவேறினது. அவர்கள் நகரத்தை சுட்டெரித்து, ஜனங்களைக் கொன்று போட்டு, இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து வாசல்களின் வழியாய் ஓடி, தெருக்களை அடைந்தது. அவன் அதை முற்றுகையிட்டான். அவன் எத்தனை ஆண்டுகளாக தன் சேனைகளுடன் நகரத்தைச்சுற்றிலும் பாளையமிறங்கி இருந்தான் என்று எனக்குத் தெரியவில்லை. ஜனங்கள், ஸ்திரீகள், தங்கள் சொந்த குழந்தைகளை சமைத்து தின்றனர். அவர்கள் மரங்களின் பட்டையையும், தரையில் விளைந்த புல்லையும் தின்றனர். அவர்கள் வார்த்தையை புறக்கணித்ததன் நிமித்தம் இது நடந்தது. அதுதான் அதற்கு காரணமாயிருந்தது. அதன் பிறகு...
38. ஆனால் வார்த்தையை ஏற்றுக் கொண்டவர்கள் அந்த மகத்தான வரலாற்றாசிரியர் ஜோசியஸ் எழுதியுள்ளது போல... அவன் அவர்களை நரமாம்ச பட்சணிகள் (cannibals) என்றழைத்தான். அவர்கள் பிலாத்து சிலுவையில் அறைந்த நசரேயனாகிய இயேசு என்றழைக்கப்படும் ஒரு மனிதனின் உடலைத் தின்று கொண்டிருந்தனர் என்று கூறியுள்ளான். அவர்கள் இரவில் அவருடைய உடலைத் திருடிக் கொண்டு போய்விட்டார்கள் என்றும், அதைதுண்டுகளாக வெட்டிப் புசித்தனர் என்றும் அவன் கூறுகிறான். (அவர்கள் இராப்போஜனம் ஆசரித்தனர், பாருங்கள். அது அவர்களுக்குத் தெரியவில்லை). இன்று நம்மைக் குறித்தும் மற்ற கிறிஸ்தவர்களைக் குறித்தும் கட்டுக் கதைகள் நிலவி வருவதைப் போல், அக்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு கட்டுக்கதை பரவியிருந்தது. பாருங்கள்? அவர்கள் இத்தகைய காரியங்களைக் கூறுகின்றனர். ஆனால்...
39. ஆனால், அந்த ஜனங்கள்... "நீங்கள் ஓடிப்போவது மாரிக்காலத்தில் சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்" என்று கூறப்பட்டதன் காரணம், யூதேயா அப்பொழுது பனியினால் மூடப்பட்டிருக்கும். பாருங்கள். கிறிஸ்துமஸ்? பனி மூடியிருந்த அந்த மலைப் பிரதேசத்தில் இயேசு எவ்விதம் அக்காலத்தில் பிறந்திருக்க முடியும்? "நீங்கள் ஓடிப்போவது மாரிக்காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்". ஏனெனில் ஓய்வு நாளில் எருசலேமின் வாசல்கள் மூடப்பட்டிருக்கும், அவர்கள் உள்ளே அவர்களுடைய கண்ணியில் அகப்பட்டுக் கொள்வார்கள். தீத்து வெள்ளிக்கிழமை பிற்பகலில் அங்கு அடைந்திருப்பான் என்றால், ஓய்வு நாளன்று அவர்கள் முற்றுகையிடப் பட்டிருப்பார்கள், ஏனெனில் வாசல்கள் மூடப்பட்டிருக்கும். வாசல்கள் ஓய்வு நாளில் மூடப்பட்டு அன்று திறக்கப்படாது. ஓய்வு நாளில் நகரத்துக்கு உள்ளே வருவதும் வெளியே போவதும் முடியாது.
40. இப்பொழுது, என்ன நடந்ததென்று பார்த்தீர்களா? அவர், "அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ" என்று கூறினார் (பாருங்கள்?), ஏனெனில் தப்பித்து ஓடுவதென்பது... வரலாற்றின்படி, இயேசுவையும் வார்த்தையையும் விசுவாசித்த ஒருவராவது. அது எப்பொழுது நடக்கப் போகிறது என்பதை கவனிக்காமல் இருக்கவில்லை. அவர்கள் தப்பித்து, எருசலேமிலிருந்து யூதேயாவுக்குச் சென்றனர். அவர்கள் ஜீவன் தப்ப ஓடினர். அவர்களில் ஒருவராவது. ஏனெனில் அவர்கள் தங்கள் மேய்ப்பரால் எச்சரிக்கப்பட்டு, அந்த நேரம் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தனர். தீத்து வருகிறான் என்று அவர்கள் கேள்விப்பட்டவுடனே, அவர்கள் ஜீவன் தப்ப ஓடி, நகரத்தை விட்டு வெளியேறினர்.