41. "எழும்புவார்கள்..." அப்பொழுது நீங்கள் வேறொரு காலத்துக்கு வருகிறீர்கள். பாருங்கள்? "கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி...." கள்ளக்கிறிஸ்து கள்ள அபிஷேகம் பெற்றவன், ஏனெனில் கிறிஸ்து அபிஷேகம் பண்ணப் பட்டவர். "கிறிஸ்து என்றால்" அபிஷேகம் பண்ணப்பட்டவர்" என்று பொருள் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? கள்ள அபிஷேகம் பெற்றவர்கள் இருப்பார்கள், அவர்கள் தங்களை தீர்க்கதரிசிகள் என்று அழைத்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களை நீங்கள் எவ்விதம் அடையாளம் கண்டு கொள்வீர்கள்? வார்த்தையினாலேயே; அவர்கள் சரியா என்று வார்த்தையினால் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். அவர்களை நாம் எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது? வார்த்தையினால் தான். அவர்கள். அவர்கள் வார்த்தையைக் கொண்டுள்ளதாக கூறிக் கொண்டு வார்த்தையை மறுதலிப்பார்களானால், அவர்கள் பிணியாளிகளை சொஸ்தமாக்கலாம். குருடரின் கண்களைத் திறக்கலாம். ஆனால் அவர்கள் வார்த்தையை மறுதலிப்பார்களானால், அதிலிருந்து விலகியிருங்கள். அது என்னவாயிருந்தாலும் கவலையில்லை, அந்த வார்த்தையில் நிலைத்திருங்கள் (பாருங்கள்?), ஏனெனில் "வூடு", இன்னும் மற்ற மாந்திரீக சக்தியினால் சுகமாக்கப்படுதல் நடப்பதை நான் அநேக முறை கண்டிருக்கிறன்.
42. இக்காலை வேளையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்துள்ள சகோ. சிட்னி ஜாக்சனும், சகோதரி ஜாக்சனும், இங்கு உட்கார்ந்திருக்கின்றனர். அவர் இங்கு நின்று கொண்டு அந்த பொருளை எடுத்துக் கொண்டு. மாந்திரீக சக்தியினால் நடைபெறும் சிலவற்றை உங்களுக்கு எடுத்துக் கூற முடியும். ஏன், நிச்சயமாக, ஜனங்கள் விக்கிரகங்களிடம் வந்து சுகமடைகின்றனர். பாருங்கள், ஏன்?
43. அன்றொரு நாள் நான் பிசாசினால் சுகமளிக்க முடியாது என்று கூறினதைக் கேட்டு டாக்டர் ஹகர் என்பவர் என்னைப் பார்த்து கூச்சலிட்டார். அவர், "எத்தனையோ ஜனங்களுக்கு முன்பாக நிற்கும் நீர் பிசாசு சுகமளிக்க முடியாதென்று கூறுகிறீர். என் வீட்டின்அருகில் ஒரு ஸ்திரீ இருக்கிறாள். அவள் இடுப்பைச் சுற்றி ஒரு துணியைக் கட்டிக் கொண்டு அங்கு செல்கிறாள். அவளிடம் வரும் ஜனங்கள் அந்த துணியில் காசு போட வேண்டும். அவள் அவர்களைக் கையினால் தேய்த்து, அவளுடைய தலையிலிருந்து ஒரு மயிரைப் பிடுங்கி, அவர்களுடைய இரத்தக் குழாய்களிலிருந்து இரத்தத்தை எடுத்து அந்த மயிரில் பூசி, அவளுக்குப் பின்னால் அதை எறிந்து விடுகிறாள். அவள் பின்னால் பார்ப்பதில்லை, ஏனெனில் அவ்விதம் செய்தால் ஜனங்களுக்கு வியாதி திரும்ப வந்து விடுமாம். அவர்களில் முப்பது சதவிகிதம் குணமடைகின்றனர். அப்படியிருக்க பிசாசினால் சுகமளிக்க முடியாது என்று நீர் கூறுகிறீர்" என்றார்.
44. நான், "ஓ, என்னே!' என்று நினைத்துக் கொண்டேன். அவருக்கு நான் இவ்விதம் கடிதம் எழுதினேன்: "அன்புள்ள ஐயா, ஒரு லூத்தரன் கல்லூரியின் தலைவர் தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக ஒரு அனுபவத்தின் பேரில் தனது வேதசாஸ்திரத்தை ஆதாரமிடுவது விசித்திரமாயுள்ளது. பாருங்கள்? "சாத்தான் சாத்தானைத் துரத்துவதில்லை என்று வேதம் கூறுகிறது (மத்.12:26). அத்துடன் அது முடிவு பெறுகிறது. இயேசு அவ்விதம். கூறியுள்ளார். சாத்தான்... அப்படியானால் இந்த ஜனங்கள் அதன் மூலம், அந்த மந்திரவாதியின் மூலம் எவ்விதம் சுகம் பெறுகின்றனர் என்று நீங்கள் வியக்கலாம். ஏனென்றால், ஜனங்கள் அந்த மந்திரவாதியின் மூலம் தேவனை அணுகுவதாக எண்ணுகின்றனர். சுகம் பெறுதல் விசுவாசத்தை ஆதாரமாகக் கொண்ட ஒன்றேயல்லாமல், நீங்கள் எவ்வளவு நீதியுள்ளவர்கள் என்பதையோ, எவ்வளவு நல்லவர்கள் என்பதையோ, நீங்கள் எவ்வளவாக கற்பனைகளைக் கைக் கொள்கிறீர்கள் என்பதையோ ஆதாரமாகக் கொண்டதல்ல, அது விசுவாசத்தையே ஆதாரமாகக் கொண்டது. 'விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்'. பாருங்கள்? நீங்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பதை அது ஆதாரமாகக் கொண்டதல்ல. வேசிகள் மேடைக்கு வந்து உடனே சுகம் பெறுவதையும், பரிசுத்தவாட்டி ஒருத்தி மேடைக்கு வந்து அதை இழந்து போவதையும் நான் கண்டிருக்கிறேன். நிச்சயம்மாக, அது விசுவாசத்தை ஆதாரமாகக் கொண்டது. நீ விசுவாசித்தால், நீதியின் அடிப்படையில் அல்ல".
45. பிரான்சு நாட்டில் பாருங்கள், அவர்கள் அந்த ஸ்திரீயின் கோவிலுக்கு சக்கர நாற்காலிகளில் சென்று சுகமடைந்து. நடந்து திரும்பி வருகின்றனர். அது முழுவதும் மூடநம்பிக்கையைஆதாரமாகக் கொண்டது. இறந்து போன ஒருத்தியை தொழுது கொள்ளுதல் என்பது, இறந்தவரின் ஆவியுடன் தொடர்பு கொள்ளும் செயலாகும் (spiritualism). பாருங்கள்? இருப்பினும், அவர்கள் சுகமடைகின்றனர். ஏனெனில் அவர்கள் தேவனை அணுகுவதாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது, கத்தோலிக்க மக்களை நான் தரம் குறைவாக பேசுவதாக எண்ண வேண்டாம், நான் கத்தோலிக்க முறையையே தரம் குறைவாகப் பேசுகிறேன், நான் பிராடெஸ்டெண்டு முறையையும் (பாருங்கள்?) மற்றவைகளையும், செய்வது போல.
46. இப்பொழுது ஊழியக்காரரே, இது புண்படுத்தக் கூடும் என்று அறிகிறேன், ஆனால் நான் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் என் இருதயத்திலிருந்து சத்தியத்தை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன் - கிறிஸ்துவுக்கு முன்பாக என் அறிவுக்கு எட்டின வரை. பாருங்கள்? அவையனைத்தும் மார்க்க முறைகளே. இந்த முறைகள் ஜனங்களை கட்டிப் போட்டுள்ளன. ஜனங்கள் சென்று மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தே, கத்தோலிக்க ஸ்தாபனங்களை சேர்ந்து கொள்கின்றனர். இவ்விதமான ஒரு முறையின் மூலம் அவர்கள் தேவனை அணுகுவதாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். தேவன் அதை சில வேளைகளில் மதித்து, அவர்களுடைய விக்கிரகங்களின் மூலமாக அவர்களுடைய வியாதியை அவர்களை விட்டு எடுத்துப் போடுகிறார். நல்லது, ஆப்பிரிக்காவின் பழங்குடி மக்கள் விக்கிரங்களின் மூலம் சுகம் பெறுகின்றனர் (பாருங்கள்?) ஆனால் அவர்கள் தேவனை அணுகுவதாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
47. ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி, ஒரு கெட்ட ஸ்திரீயாயிருக்க விரும்பி, கத்தோலிக்க கன்னிமடத்தை சேருகிறாள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவள் ஒரு நல்ல ஸ்திரீயாயிருப்பதற்கே அந்த கன்னிமடத்தை சேர்ந்து கொள்கிறாள். ஒரு மனிதன் கெட்ட மனிதனாக இருப்பதற்காக கத்தோலிக்க சபையைச் சேர்ந்து கொள்வதில்லை; ஒரு நல்ல மனிதனாக இருப்பதற்காகவே அங்கு போய் சேர்ந்து கொள்கிறான். நீங்கள் அவ்விதம் செய்வதில்லை. நல்லது. அது என்ன? என்று நீங்கள் கேட்கலாம். இந்தியாவிலுள்ள இந்தியர் கெட்டவர்களாக இருப்பதற்காக இந்து மதத்தைச் சேர்ந்து கொள்வதில்லை.
48. நான் ஜைனரின் கோயிலுக்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த பூசாரி என்னைப் பேட்டி கண்டார். அவர் போப்பைப் போல், ஒரு பெரிய தலையணையின் மேல் உட்கார்ந்து கொண்டு, கால்களை மடக்கிக் கொண்டு, கால்விரல்களை கைகளினால் பிடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு நல்ல கண்பார்வை இருந்தது. அவர் கண்ணாடி இல்லாமலேயே தன் சொந்த கண்களால் 23ம் சங்கீதத்தை ஒப்பிட்டு, கால் அங்குலம் பரப்புள்ள இரும்புத் துண்டில் எழுதியுள்ளார். அதை எழுதுவதென்பது மனித புத்திக்கு எட்டாத ஒரு செயலாகும். அவர் தமது இயற்கை கண்களை உபயோகித்து அதை செதுக்கியுள்ளார். அவருக்கு நாற்பது வயது அல்லது அதற்கும் சற்று அதிகமாக இருக்கும். பாருங்கள்?
49. ஏன் நிச்சயமாக, நீங்கள்... நீங்கள், இங்கேயே இருந்து கொண்டு, மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் செய்பவைகளைக் கேள்விப்படுகிறீர்கள். நீங்கள் ஒரு முறை மிஷன் ஊழியக் களங்களுக்கு சென்று காண வேண்டும். உங்கள் கண்கள் திறக்கப்பட நீங்கள் காண வேண்டும். பாருங்கள்,
50. இப்பொழுது, அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிற ஜைன மத சகோதரிகளை எண்ணிப் பாருங்கள்; அவர்கள் சமைப்பதில்லை; அவர்கள் உண்பதில்லை; அவர்கள் பிச்சையெடுத்து பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் கைகளினால் சிறு துடைப்பானை (mop) உண்டாக்கி, தெருக்களிலிருந்து எறும்புகளையும் மற்றவைகளையும் பெருக்கித் தள்ளி விடுகின்றனர். ஏனெனில் அவர்கள் மறுஜென்மத்தில் (reincarnation) நம்பிக்கை கொண்டுள்ளனர்; ஒரு வேளை அவர்கள் தங்கள் பந்துக்களை மிதித்து விடக்கூடும். அவர்கள் எறும்புகளை மிதித்து விட மாட்டார்கள், ஈக்களை கொல்ல மாட்டார்கள், ஒன்றையும் செய்ய மாட்டார்கள். விரலுக்கு அறுவை சிகிச்சை செய்ய அவர்கள் ஒரு கத்தியை கூட தண்ணீரில் கொதிக்க வைக்க (Sterilizc) மாட்டார்கள். ஒரு கிருமியைக் கொல்லாமல், மனிதன் சாகும்படி விட்டு விடுவார்கள். அந்த கிருமி ஒருவேளை வேறு ஜென்மம் எடுத்த அவர்களுடைய உறவினனாய் இருக்கக் கூடும். பாருங்கள்? நீங்கள் மேலான, மேலான, மேலான ஜென்மம் எடுத்து முடிவில் மனிதனாகப் பிறந்து, பிறகு நல்ல மனிதனாக, நல்ல மனிதனாக ஆகி தெய்வமாகி விடுகிறீர்கள். இவ்விதம் மேலும், மேலும், மேலும் ஜென்மம் எடுக்கிறீர்கள்.
51. அவர்கள் கெட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக அவ்விதம் செய்வதில்லை. அவர்கள் உத்தமமாக அதைச் செய்கின்றனர்; ஆனால் பாருங்கள், "மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு" (நீதி. 14:12). ஜனங்களே, இன்று காலையில் இந்த கேள்விகளின் பேரில் வகுப்பாக கூடியுள்ள உங்களிடம் எனக்குக் கூறத் தெரிந்த ஒரே ஒரு காரியம் உண்டு, அது வார்த்தை, தேவனுடைய வார்த்தை. அப்பொழுது நீங்கள், இயேசு கிறிஸ்துவே அந்த வார்த்தை என்றும், அந்த வார்த்தை இப்பொழுது நமது மத்தியில் மாம்சமாகி, இந்தக் காலத்தில் அவர் என்ன செய்வாரென்று உரைத்துள்ளாரோ, அதை அப்படியே நிறைவேற்றிக் கொண்டு வருகிறார் என்பதை விசுவாசிப்பீர்கள். சரி,
இப்பொழுது, அவ்விதம் தான் அவர்களைக் கண்டு கொள்வீர்கள், அவர்களுடைய சபையினால் அல்ல, அவர்களுடைய கோட்பாடுகளினால் அல்ல, அவர்களுடைய அடையாளங்களினால் அல்ல, அவர்களுடைய ஸ்தாபனங்களினால் அல்ல, எந்த சுகமாக்குதலினாலும் அல்ல, ஆனால் வார்த்தையினால். பாருங்கள்?