53. இப்பொழுது, அது ஒரு நல்ல கேள்வி, அதில் ஒன்றும் தவறில்லை. பிணம் என்பது எது? கழுகுகள் தின்பது தான் பிணம்.வேதத்தில் தீர்க்கதரிசி கழுகாகக் கருதப்படுகிறான். தீர்க்கதரிசி தான் கழுகு. தேவன் தம்மை கழுகென்று அழைத்துக் கொள்கிறார். விசுவாசிகளாகிய நாம் கழுகுக் குஞ்சுகள். பாருங்கள்? அவர்கள் தின்னும் பிணம் எது? வார்த்தை. வார்த்தை எங்கெல்லாம் உள்ளதோ, அங்கு பறவையின் இயல்பு வெளியரங்கமாகும். பாருங்கள்? கழுகுக்கு புது மாம்சம் தேவை. அது ஒரு பருந்து அல்ல (பாருங்கள்?), அது ஒரு கழுகு. அதற்கு நீங்கள் ஸ்தாபன பொருளை தின்னக் கொடுக்க முடியாது; அதற்கு கழுகின் ஆகாரம் தேவைப்படுகிறது. அதுதான் மிகவும் புதிய மாம்சம், மோசே செய்தது அல்ல, வேறு யாரோ செய்தது அல்ல, சாங்கி, ஃபின்னி, நாக்ஸ், கால்வின் ஆகியோர் செய்தது அல்ல, ஆனால் இப்பொழுது. இந்த நாளுக்கென கொல்லப்பட்ட மாம்சம். அதுதான் இந்த வார்த்தையை உறுதிப்படுத்துவதற்கென்று மரித்த கிறிஸ்துவின் ஒரு பாகமாயுள்ளது. அதை தான் அவர்கள் புசிக்கின்றனர். புரிகிறதா? பாருங்கள், பாருங்கள்?
54. நோவா செய்தது அல்ல, மோசே செய்தது அல்ல, அவை திருஷ்டாந்தங்கள். அவர்கள் என்ன செய்தனர் என்று நாம் படித்துக் கண்டு கொள்கிறோம். ஆனால் அவர் இப்பொழுது என்ன செய்வதாக வாக்களித்துள்ளார் என்பதே காரியம். அவர் முன் காலத்தில் அங்கு வார்த்தையாயிருந்தார்; அது அந்நாளுக்கான பிணம். வெஸ்லியின் காலத்தில் அது அந்நாளுக்கான பிணமாயிருந்தது. லூத்தரின் காலத்தில் அது அந்நாளுக்கான பிணமாயிருந்தது. ஆனால் நாம் அதற்கு செல்வதில்லை. அது ஏற்கனவே கெட்டுப்போய் விட்டது. மீதமுள்ளது சுட்டெரிக்கப்பட வேண்டும், இராப்போஜனப் பொருட்களும் கூட, அதை அடுத்த சந்ததிக்காக விட்டு வைப்பதில்லை. நீங்கள் இராப்போஜனத்தில் பங்கு கொள்ளும் போது, மீதியானதை அடுத்த நாள் காலை வரைக்கும் கூட விட்டு வைக்கக் கூடாது. அதை சுட்டெரிக்க வேண்டும் என்று வேதம் உரைக்கிறது. எனவே முன்பு நடந்ததைக் குறிப்பிடுவதா? இல்லை, ஐயா! நமக்கு இன்று புது ஆகாரம் உள்ளது. அது தான் இந்நேரத்துக்கென வாக்களிக்கப்பட்டு இந்நேரத்தில் வெளிப் பட்டுள்ள வார்த்தை. அங்கு தான் கழுகுகள் கூடுகின்றன, அங்கு தான் பிணம் உள்ளது. அதன் பேரில் நாம் நீண்ட நேரம் நிலைத் திருக்க முடியும், ஆனால் நான் கூறுவதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று நிச்சயமுடையவனாய் இருக்கிறேன்.