167. இப்பொழுது, சற்று நேரம்... சற்று நேரத்திற்கு முன்னர் இதை நான் படித்தேன், அதன் காரணமாகத் தான் இதை நான் கடைசியில் வைத்தேன். இப்பொழுது, நீங்கள் சற்று பொறுத்துக் கொள்ள விரும்புகிறேன். இப்பொழுது, இதை நாம் சற்று - சற்று தெளிவாக பார்ப்போம், ஏனெனில் இது ஒரு நேரடியான கூர்மையான கேள்வியாகும். ஆகவே இது பயபக்தியுடன் அணுகப்பட வேண்டிய ஒன்றாகும். அதன் பிறகு உடனடியாக, நீங்கள் எங்களுடன் சற்று நேரம் பொறுத்துக் கொள்வீர்களானால்.
168. நேரமாகிக் கொண்டிருக்கிறதென்று எனக்குத் தெரியும், ஆனால் இது... நினைவில் கொள்ளுங்கள், இதைக் குறித்தென்ன? இப்பொழுது, நீங்கள் சென்று இரவெல்லாம் நடனம் ஆடிவிட்ட பிறகு அதைக் குறித்து ஒன்றும் எண்ணுவதில்லை, (அப்படித் தானே?) உலகக் காரியங்களுக்காக செல்கிறீர்கள், ஆனால் தேவனுடைய வார்த்தை என்று வருகின்றபோது இருபது நிமிடங்களுக்கு மேலானால், சகோதரனே, நாம் ஒரு புதிய பிரசங்கியை பெற்றுக் கொள்ள வேண்டுமென்கிறோம், பாருங்கள்? அது ஒரு வெட்கக்கேடான ஒன்று. பவுல் இரவுமுழுவதும் பிரசங்கித்தான். அநேக வருடங்களுக்கு முன்பு சரியாக இங்கே காலை 2 அல்லது 3 மணி வரைக்கும் நான் பிரசங்கித்திருக்கிறேன். இங்கே ஜனங்கள் இந்த இடத்தில் மேலும் கீழுமாக நடந்து கொண்டு தேவனை துதித்துக் கொண்டிருப்பார்கள். 2 அல்லது 3 மணிக்கு அநேகர் ஒரே நேரத்தில் டசன் கணக்கில் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டதை நீங்கள் கண்டிருப்பீர்கள். தேவனே இரக்கமாயிரும். அதை நான் மறுபடியுமாக காண எனக்கு விருப்பம்தான். ஆனால் நம்மால் முடியாது; அந்த நாட்கள் சென்றுவிட்டன, நாள் இப்பொழுது கடந்து விட்டது; இப்பொழுது அது செலவழிக்கப்பட்டு விட்டது. இரவு வந்து கொண்டிருக்கிறது. ஜனங்களெல்லாரும்... “இனிமேல் எங்களால் இருக்கமுடியாது. ஆதலால்... என்னுடைய...?... செல்ல ஆயத்தமாக வேண்டும்”, அது அந்த அந்த விதமாகவே சென்று கொண்டிருக்கிறது.
169. பொறுங்கள், இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். சகோதரனே அல்லது சகோதரியே அது யார் என்று எனக்குத் தெரியாது, உங்களுடன் நான் கருத்து வேற்றுமை கொள்ளப் போகிறேன். அது இங்கே இக்காலை வைக்கப்பட்டது. அதை என்னுடைய வேதாகமத்தில் வைத்து சற்று முன்னர் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது, ஒரு சிநேகத் தன்மையான வழியில்... ஆகவே இப்பொழுது, நீங்கள் என் மீது வருத்தம் கொள்ள எனக்கு விருப்பமில்லை, நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
170. ஆகவே நினைவில் கொள்ளுங்கள், சற்று முன்னர் அந்த ஏழை ஸ்திரீக்கு, அந்த ஸ்திரீக்கு நான் செய்தது போல, இதைக் குறித்த உங்களுடைய தீர்மானத்திலும் - உங்களுடன் இதைக் குறித்து இணங்க எனக்கு விருப்பமுண்டு, அவள்... அவளும், அவளுடைய புருஷனும், அவர்கள் ஓடிப்போய் விவாகம் செய்து கொண்டனர்; அதோ அது அங்குள்ளது. ஆனால் அவள் ஒரு வாக்குக் கொடுத்திருக்கிறாள்; நீங்கள் அதனுடன் தான் இருக்கவேண்டும். பாருங்கள்? ஆகவே இப்பொழுது, நான் தேவனுடைய வார்த்தையுடன் அசையாது ஓட்டிக் கொண்டிருக்க வேண்டியவனாக இருக்கிறேன்.
171. ஆனால் இப்பொழுது, “நான் விசுவாசிக்கவில்லை” ஆனால் முதலாவதாக, “தேவன் யுத்தங்களை நியாயத்தீர்ப்புகளாக அனுப்புகிறார் என்று என்னால் விசுவாசிக்க முடியாது” நல்லது இப்பொழுது, நண்பனே, உங்களுடைய நம்பிக்கையில் தவறாக ஒரே ஒரு காரியம் தான் இருக்கின்றது, அது, வேதப் பூர்வமாக இல்லாததே, தேவன் யுத்தத்தை நியாயத்தீர்ப்பாகவும் அனுப்புகிறார். அது சரி. நான் - நான் உங்களுக்கு வேத வசனத்தை கொடுக்கப் போகிறேன்; நான் இதை அப்படியே படித்து விட்டு பிறகு உங்களுக்கு கூறிவிடப்போவதில்லை.
172. கவனியுங்கள், “ஒன்றுமறியாத ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கொல்லத்தக்கதாக, பழைய பாபிலோன் துவங்கி ஹிட்லர் வரையிலான இந்த கொலைபாதகர்கள் கைகளில் தேவன் பட்டயத்தை வைத்தார் என்று சிலர் விசுவாசிப்பது போல நான் விசுவாசிப்பதில்லை” ஆனால் அவர் அதைச் செய்தார் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களிடம் கூறி, அதை அவர் செய்தாரென்று, அல்லது அவர் அதை மறுபடியுமாக செய்யப் போகிறாரென்று அதை வேதாகமத்தின் மூலமாக அதை நிரூபித்தால், அப்படியானால் நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? (பாருங்கள்?) சரி. இதற்கு செவிகொடுங்கள்.
173. எனக்குத் தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் இங்கே அமர்ந்திருக்கின்ற என்னுடைய நெருங்கிய நண்பனாகக்கூட இது இருக்கலாம்; இது யாருடைய கையெழுத்தென்றும் எனக்குத் தெரியாது. பரலோகத்திலிருக்கிற தேவன்தான் அதை அறிவார். என்னால் உங்களுக்கு கூறமுடியவில்லை. ஆனால் இதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். “என் தேவன் அன்பின் தேவனாவார் - என் தேவன் அன்பாயிருக்கிறார். ஆகவே இதைச் செய்யமாட்டார், யுத்தங்கள் பிசாசினால் உண்டானதென்று நான் உங்களுடன் ஒப்புக்கொள்கிறேன். அது சரியான ஒன்று. அவன் தான் இந்த உலகத்தின் அதிபதி, இந்த உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு இராஜ்ஜியமும் ஒவ்வொரு தேசமும் சாத்தானைச் சேர்ந்ததாகும், தேவன் தம்முடைய வார்த்தையில் அவை அப்படித்தான் என்று கூறினார். சாத்தானும் “அவை என்னுடையது” என்றான். அவைகளெல்லாம் அவனுடையது தான் என்று இயேசுவும் ஒப்புக்கொண்டார். ஆனால் பிறகு இயேசு அவைகள் எல்லாவற்றிற்கும் அவர் சுதந்தரவாளியாக ஆகப்போகின்றார். பிறகு நமக்கு இன்னுமாக யுத்தங்கள் இருக்காது. ஆனால் இதை திருத்துதலுக்காகவும் நியாயத்தீர்ப்பிற்காகவும் இதைச் செய்ய சாத்தானை தேவன் அனுமதிக்கின்றார்.
174. இப்பொழுது, நாம் துவங்குவதற்கு முன்னர் உங்களிடம் ஒன்றை நான் கேட்க விரும்புகிறேன். நீங்கள் இதற்கு எனக்கு பதிலளித்து கண்டு பிடிக்க நான் விரும்புகிறேன். தேவன் ஒரு... (நீங்கள் கூறினீர்கள்)... இந்த காரியங்களைச் செய்வதில்லை என்று நீங்கள் விசுவாசிக்கவில்லை என்றால்... துவக்கத்திலிருந்து நாம் ஆரம்பிக்கும்படி... இப்பொழுது, உங்களால் கூடுமானவரை உங்கள் அசையாத கவனத்தை எனக்கு செலுத்துங்கள். கவனியுங்கள். பின் ஏன் தேவன் தாமே தம்முடைய சொந்த குமாரனை சிட்சித்து சிலுவையில் அவரை கொலை செய்தார்? தேவன் தம்முடைய சொந்த குமாரனை சிலுவையில் கொன்றார். “அவரை அடித்து, அவரை நொறுக்கி அவரை காயப்படுத்த வேண்டும்” என்று “அது அவருக்கு பிரிதீயாயிருந்தது” என்று வேதவசனம் கூறுகின்றது, என்னை அவர் இரட்சிக்கத்தக்கதாக தேவன் தம்முடைய சொந்த குமாரனுக்கு அந்த விதமாக செய்தார்.
175. இஸ்ரவேலின் மகத்தான ராஜாவாகிய சவுலைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். சவுல் சென்று ஓக் ராஜாவையும் அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் முழுவதுமாக அழித்து, ஆண், பெண்கள், பிள்ளைகள் மற்றும் எல்லாவற்றையும்... ஆகவே சவுல்... ஆடுமாடுகள் கூட கொல்லப்படவேண்டும், உயிர் வாழ எதையுமே விட்டு வைக்கக் கூடாது என்று தேவன் அவனிடம் கூறினார், சவுல் அங்கே சென்று சில ஆடுமாடுகளைக் கொல்லாமல் விட்டு விட்டான். ஆகவே தேவன் அவனிடமிருந்து ஆவியை எடுத்து தம்மிடமிருந்து அவனைப் பிரித்து விட்டார்; அவன் தேவனுக்கு சத்துரு ஆனான்.
176. தேவன் அந்த வயதான ராஜாவாகிய ஓகை - ஆகாபின் கைகளில் கொடுத்த போது எலியா ஏன் அங்கு நின்றான்? அவன் ஆகாபிடம் அந்த ராஜாவைக் கொல்லவேண்டும் என்று கூறினான். ஆகாப் அதைச் செய்ய மறுத்தான். எலியா ஒரு உதவிக்காரனை வைத்திருந்தான், அவன் “உன்னுடைய பட்டயத்தினால் என்னை அடி” என்றான். நீங்கள் வாசித்தால்... அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான்.
அவன் “என்னால் முடியாது” என்றான். அவன் தன்னுடைய உயிரை இழந்தான். பிறகு அவன் வேறொருவனைப் பார்த்து “என்னை அடி” என்றான். அந்த மனிதன் அவனை பட்டயத்தினால் அடித்தான், வெட்டினான். பிறகு அவன் தன்னைத் தானே துணியினால் சுற்றிக் கொண்டு வேஷமாறினவனாய் அங்கே நின்று கொண்டிருந்தான். அங்கே ஆகாப் தன்னுடைய இரதத்திலே வந்தான்.
அவன், “ஏன் - ஏன் இங்கு நீ நின்று கொண்டிருக்கிறாய்?” என்றன்.
அவன், “நான் ஒரு காவல் காரன்; ஒரு மனிதனை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அவன் என்னை அடித்து ஓடிவிட்டான்,” என்றான். மேலும் அவன், “நான் அவனை விட்டு விட்டேன். இவ்வாறு நான் செய்தால் என் சொந்த பிராணனை அதற்கு ஈடாக செலுத்த வேண்டியதாயிருக்கும் என்று அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள்” என்றான்.
அவன், “அப்படியா, நீ உன் சொந்த பிராணனை அதற்கு ஈடாக செலுத்தித்தான் ஆகவேண்டும்” என்றான்.
அவன் தன் வேஷத்தைக் கலைத்து “கர்த்தர் உரைக்கிறதாவது; அங்கேயிருந்த ராஜாவை நீ கொலை செய்யாமல் விட்டு விட்டபடியால், உன்னைத் தானே அதற்கு ஈடாக செலுத்துவாய்” என்றான். அது சரியா? அது முற்றிலும் சரி...
177. இங்கு ஒன்றை நான் உங்களுக்கு வாசித்து காண்பிக்கட்டும். பாபிலோனைக் குறித்து, யோசுவா... தேவன் யோசுவாவை அங்கே அனுப்பினபோது, அவன் சிறு குழந்தைகளை, பிள்ளைகளை, மற்ற எல்லாவற்றையும் அடியோடு அழித்துப் போட்டான், அவன் அவர்களை அழித்து போட்டான். அவன் ஒன்றையும் கூட உயிர்வாழ விடவில்லை. அவன் எல்லாவற்றையும் துடைத்தெறிந்துப் போட்டான். சிறிய பெலிஸ்திய குழந்தைகள், அவன் அவைகளை அழித்துவிட்டான். தேவன் அவனுக்கு கட்டளையிட்டார். ஆகவே அவன் அதைச் செய்யவில்லையெனில், அது அவனுடைய ஜீவனாக இருந்தது.
178. இன்னும் சில நிமிடங்களில் உங்களை நான் தெளிவாக்கி விடுவேன். தேவன் அன்பாக இருக்கிறார், பரிபூரண அன்பு; ஆனால் அன்பு என்ன என்று உங்களுக்குத் தெரியாது. அதனால் இன்று மக்களுக்கு விசுவாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் உள்ளது. தேவன் அன்பாக இருக்கிறார். அவர் அன்பில் தான் இருக்க வேண்டும். அவர் தம்முடைய வார்த்தைக்கு உத்தமமானவராக இருக்கிறார். அவர் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்ளத்தான் வேண்டும். அவர் உன்னை நேசிக்கத்தான் வேண்டும். ஆகவே அவர் உன்னை நேசித்தால், அவர் உன்னை பாதுகாத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
179. இங்கே கவனியுங்கள். பிள்ளைகளைக் கொல்லுகிறதை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். இங்குள்ள இக்காரியங்களைக் குறித்து வேதவசனங்கள் என்ன கூறுகின்றன என்று - ஒரு நிமிடம் இங்கே வேதவசனங்களில் ஒன்றை நான் உங்களுக்கு காண்பிப்பேன். இங்கே நாம் திருப்புவோம், இதை சற்று ஒரு நிமிடம் கேளுங்கள், தேவன் என்ன கூறினார் என்பதைப் பாருங்கள். இப்பொழுது நான், நீங்கள் குறித்துகொள்ள விரும்பினால் எசேக்கியேல் 9 வது அதிகாரத்திலிருந்து நான் வாசிக்கிறேன். கூர்ந்து கவனியுங்கள்:
ஆகவே... பின்பு அவர் என் காதுகள் கேட்க மகா சத்தமாய் நகரத்தின் விசாரிப்புக்காரர் சங்கரிக்கும் ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக் கொண்டு வரக்கடவர்கள் என்று சொன்னார். (இப்பொழுது இது தேவன் பேசுவதாகும்)
அப்பொழுது இதோ, ஆறு புருஷர் வடக்கே பார்த்த உயர்ந்த வாசலின் வழியிலிருந்து வந்தார்கள், ஒவ்வொரு மனிதனும் வெட்டுகிற ஆயுதத்தை தன் கையில் பிடித்துக் கொண்டிருந்தான். அவர்களில் வெள்ளை சணல் நூல் அங்கீகரித்து தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒருவன் இருந்தான்; அவர்கள் உள்ளே பிரவேசித்து வெண்கல பலி பீடத்தண்டையிலே நின்றர்கள்.
அப்பொழுது இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கோருபின் மேலிருந்தெழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்து, வெள்ளை சணல்நூல் அங்கிதரித்து தன் கையிலே - அல்லது அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்த என்னே - புருஷனைக் கூப்பிட்டு.
கர்த்தர் (LORD) (கொட்டை எழுத்து L-O-R-D க-ர்-த்-த-ர் அது தேவன் ஆகும்) கர்த்தர் அவனை நோக்கி நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய் அதற்குள்ளே செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டழுகிற மனிதனின் நெற்றியில் அடையாளம் போடு என்றார்.
பின்பு அவர்... (LORD அந்த கர்த்தர்)... என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி நீங்கள் இவன் பின்னாலே நகர மெங்கும் உருவப்போய் கண் தப்பவிடாமலும் நீங்கள் இரங்காமலும் (6வது வசனத்தை கவனியுங்கள்) முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்து - சங்கரித்து கொன்று போடுங்கள்... (தேவன் அவ்வாறு கூறினார். தேவன் அவ்வாறு கூறினார்)... அடையாளத்தை கொண்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள். என் பரிசுத்த ஸ்தலத்திலே - நுழைவாசலில் துவக்குங்கள். அப்பொழுது ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பர் மனிதனிடத்தில் துவக்கம்பண்ணினார்கள்.
180. வேறு விதமாகக் கூறினால், தேவன் இந்த ஜனங்களிடம், இப்பொழுது காத்திருங்கள்; உண்மையாக தேவனுக்காக அற்பணித்த அவர்கள்... நான் முதலாவதாக அந்த ஜனங்களுக்கு முத்திரையை இடப்போகிறேன்,” என்றார். அவர் அவர்கள் மீது ஒரு அடையாளத்தைப் போட்டார். அவர் 'இப்பொழுது வெட்டுகின்ற ஆயுதங்களை கையில் பிடித்திருக்கிற மனிதராகிய நீங்கள், சென்று ஸ்திரீகள், பிள்ளைகள் அல்லது எதையுமே விட்டு வைக்காமல் ஒவ்வொன்றையும் சங்கரித்து கொன்று போடுங்கள்” என்றார்.
181. ஜலப்பிரளயத்திற்கு முன்னர் இருந்த உலகத்தின் அழிவில், கோடிக்கணக்கான, கோடிக்கணக்கான, கோடிக்கணக்கான ஜனங்கள் பூமியின் மேல் இருந்த போது தேவன் நோவா என்னும் பேர் கொண்ட ஒரு வயதான பரிசுத்த பிரசங்கியை அனுப்பி, நூற்றிருபது வருடங்கள் பிரசங்கித்து, அவர்கள் பேழைக்குள் வரவேண்டுமென்றும் பேழைக்குள் வராத எல்லாரும் அழிக்கப்படுவர்... என்றும் கூறினார். வானங்களை தமது கட்டுக்குள் வைத்திருந்த சர்வ வல்லமையுள்ள தேவன், இலட்சக்கணக்கான வயதான மக்கள், வாலிப மக்கள், சிறிய குழந்தைகளை முற்றிலும் அழித்து போட மழையை அனுப்பினார். அவர்கள் நடுங்கி கொண்டு தண்ணீரில் மாண்டு போயினர்.
182. சர்வ வல்லமையுள்ள தேவன் - அவர் சரியாக அன்பின் தேவன் ஆவார். அது உண்மை. அவர் அப்படித்தான் இருக்கவேண்டும். அவர் தமக்கு சொந்தமானதை நேசிக்கிறார். அவர் தமது வார்த்தைக்கு உத்தமமானவராக இருக்க வேண்டும். ஆதாலால் ஒரு - ஒரு சர்ச்சைக்கல்ல, ஆனால் உங்களுடன் இணங்காமல் போக வேண்டும் என்பதற்காகவே. உங்களுடைய அன்பின் தேவன்...
183. சிறிது காலத்திற்கு முன்னர் இங்கே நான் பேசிக் கொண்டிருந்தேன்... அது ஒருக்கால் ஒரு யெகோவா சாட்சியாக இருக்கலாம். அந்த மனிதன் வந்து “சகோதரன் பிரன்ஹாம், எரிகின்ற நரகம் ஒன்றிருக்கிறது என்பதை நீர் விசுவாசிக்கின்றீர் என்பதை எனக்கு கூற முற்படுகிறீரா?” என்றார்.
நான், “அது தான் கூறுவதல்ல, வேதாகமம் அதைக் கூறுகிறது” என்றேன்.
அவர், “அப்படியானால் ஒரு நேசமிக்க பரலோகப் பிதா தம்முடைய பிள்ளைகளை எரித்துவிடுவார் என்று என்னிடம் கூற முற்படுகிறீரா? ஏன்” என்றார் “உங்களுடைய குழந்தையை நீர் எரிக்கமாட்டீர்” என்றார்.
நான் “இல்லை ஐயா!” என்றேன்.
“நல்லது அப்படியானால் மானிடராகிய நீர் அவ்வளவாக அன்பைக் கொண்டிருக்கிறீர்” என்றால் (பாருங்கள் ஜனங்கள் எப்படி காரியத்தை மாற்றுகின்றனர்?) - மானிடப்பிறவியாகிய நீங்கள் அவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர் என்றால், ஒரு நேசமிக்க பரலோகப் பிதா தம்முடைய பிள்ளைகளை அழிப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
184. நான், “முடியாது!” என்றேன். அவர் தம்முடைய பிள்ளைகளை அழிக்கமாட்டார், ஆனால் நீங்கள் யாருடைய பிள்ளை? தேவன் தம்முடைய பிள்ளைகளை அழிப்பதில்லை. அவர்களை உள்ளே கொண்டு வர தம்மால் இயன்றதை அவர் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற பிசாசுதான் தன்பிள்ளைகளை அழித்துப் போடுவான். ஆதலால் தேவன் சாத்தானை அனுமதிக்கின்றார்.
185. கவனியுங்கள், தீமையானது கீழே இறங்கி வந்து, சாத்தான் சென்று இயேசு கிறிஸ்து வரை தேவனுக்கு மிகவும் பரிபூரண ஊழியக்காரனாக இருந்த அவனை - யோபு - அவனுடைய பிள்ளைகளையும் அவன் கொண்டிருந்த எல்லாவற்றையுமே அழித்துப் போட அனுமதித்தது யார்? - தம்முடைய ஊழியக்காரனை சோதிக்கும்படியாக தேவன் அங்கே ஒரு கேட்டின் ஆவியை அனுப்பி, யோபின் பிள்ளைகள் எல்லாரையும், எல்லாவற்றையும், அழித்தார். அது சரியா? நிச்சயமாக.
186. நீங்கள் யாராயிருந்தாலும் சரி, என்னுடைய சகோதரனே, சகோதரியே ஓ, ஒரு மணி நேரத்திற்கு என்னால் நின்று கொண்டு அவைகளை உங்களுக்கு காண்பித்தால் எப்படியிருக்கும், அது சரி, இந்த தேவனுடைய ஆவியை நீங்கள் வேறொன்றிலும் கலக்க விடாதீர்கள். யுத்தங்கள் தேசங்களின் மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பாக இருக்கிறது. அழிவுகள் தேவனால் அனுப்பப்பட்ட ஒன்றாகும். வேதாகமம் அவ்வாறு கூறுகின்றது. தேவன் அன்பின் தேவனாக இருக்கிறார், ஆனால் தேவன் கோபாக்கினையின் தேவனாகவும் இருக்கின்றார். ஆகவே நீங்கள் நேசிக்கின்ற... நிற்க மாட்டார்கள். இன்று சபையை புண்படுத்தின காரியம் இதுதான்.
187. “ஒரு நேசிக்கின்ற பிதாவாயிருப்பதால், நான் இதைச் செய்வதைப் பொருட்படுத்த மாட்டார்” நீங்கள் அதைச் செய்ய விரும்பினால் நீங்கள் சென்று அதைச் செய்யலாம், ஏனெனில் ஆரம்பமாக தேவனுடைய அன்பு உங்களில் இல்லவேயில்லை.
188. இன்னும் சிறிது நேரத்தில் நாம் இராப்போஜனத்தை எடுக்கப் போகிறோம், ஆகவே நான் இது உங்களுக்குள் ஆழமாக பதியச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். காரியம் என்னவெனில், உங்கள் இருதயத்தில் என்ன இருக்கிறதோ, - அதுதான் உற்பத்தி செய்யும்- உங்கள் வாழ்க்கை அதன் இனம்தான் வெளிவரும். நீங்கள் ஒரு மக்காச்சோளப் பொறி செடியை எடுத்து அதிலிருந்து கனிக்கல் நாணலை (gypsum need) எப்படி நீங்கள் எடுக்கமுடியும்? நீங்கள் ஒரு... நீங்கள் ஒரு நெல்லை எடுத்து அதினின்று ஒரு ஊமச்சிமுள்ளை உற்பத்தி செய்ய முடியதோ அதே போன்றுதான் இதுவும் ஆகும். நீங்கள் அவைகளை ஒன்று சேர்க்க முடியாது, ஏனென்றால் அது இரண்டு வித்தியாசப்பட்ட சுபாவத்தை உடையவை, மொத்தமாக இரண்டு வித்தியாசப்பட்ட ஜீவன்கள். நீங்கள் நீங்கள் ஒரு கனிக்கல் கொடியின் விதையையும் ஒரு வெங்காயத்தின் விதையையும் எடுக்கலாம், சிறந்த ஒரு மனிதனாலும் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அது மிகவும் ஒன்றாகத் தென்படும். அது சரி. நீங்கள் அவைகள் ஒரு விதமாகத் தான் இருக்கும், ஆனால் அவைகளை நடுங்கள். அவையிரண்டும் உற்பத்தி செய்யும், ஒன்று கனிக்கல் செடியாக இருக்கும், மற்றொன்று வெங்காயமாக இருக்கும். அது முற்றிலும் சரி.
189. “என்ன - இந்த விதை என்ன - இந்த விதமாக சரியாகக் காணப்படுகிறதே - ஆனால் வித்தியாசமான ஜீவனை உற்பத்தி செய்கிறதே?” எனலாம். ஏனென்றால் அது அந்த விதமான ஜீவனை அதற்குள் கொண்டிருக்கிறது.
190. ஆகவே கிறிஸ்தவன் என்று கூறிக்கொள்ளும் எந்த ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ, தேவனுடைய கிருபையால், அந்த விதமான ஜீவியத்தை செய்யாவிடில், அது ஒரு கனிக்கல் செடியாகும். அவர்களுடைய கனிகளாலே அவர்களை அறிவீர்கள். அந்த காரியமானது உங்களுடைய இருதயத்தில் இருக்குமானால், நீ வேறெங்காவது என்னவாயிருக்கிறாய் என்று அது சாட்சி பகரும். அது தீமையாக இருக்குமானால், இங்கே என்னவாக நீ இருக்கிறாய் என்று அது சாட்சி பகரும். நீ மரிக்கும் போது, நீ ஏற்கெனவே எங்கிருந்தாயோ அங்கே நீ சென்றுதான் ஆக வேண்டும். உருவாக்கும் நீ நல்லவனாக இருந்தால் நீ - நீ நல்லவனாக இருக்கிறாய், ஏனெனில் தேவன் உன்னை நல்லவனாக உண்டாக்கியிருக்கின்றார், நீ மறுபடியும் பிறந்தவனாக இருந்தால், அந்த வழியாகத் தான் நீ சென்றாக வேண்டும், ஏனெனில் நீ கொண்டிருக்கிற ஜீவனானது இந்த இடத்துடன் சாட்சி பகர வேண்டும். இங்குள்ளதைக் குறித்து அது சாட்சி பகர்ந்தால் இங்கேதான் நீ சென்றாக வேண்டும். அங்கே மேல் உள்ளதைக் குறித்து அது சாட்சி பகர்ந்தால், அங்கே தான் நீ செல்ல வேண்டும். பாருங்கள்?
191. நீ என்னவாக இருக்கிறாயோ, நீ... அதை உங்கள் மனதில் இப்பொழுது கிரகித்துக் கொள்ளுங்கள். நான் முடிக்கப் போகிறேன். அது நீங்கள் இங்கே என்னவாகயிருக்கிறீர்களோ, நீங்கள் எங்கோ ஏதோ ஒரு அடையாளமாக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. கிறிஸ்தவர்களாகிய நீங்கள் எப்பொழுதும் பரிபூரணத்தில் இருக்க வேண்டுமென்று விரும்பினீர்கள். ஒரு பரிபூரணம் இருக்கின்றது, அந்த பரிபூரணம் இந்த ஜீவன் அல்ல. இங்கே கிறிஸ்தவனாக இருக்கிற ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும், இங்கே கிறிஸ்தவர்களாக இருக்கின்ற ஒவ்வொரு நபரும் ஏற்கெனவே இயேசு கிறிஸ்துவினுடைய பிரசன்னத்தில் மகிமைப் படுத்தப்பட்டாகிவிட்டது. நீங்கள் வேராரு சரீரத்தைப் பெற்றிருக்கிறீர்கள், மற்றுமொரு சமயம் உங்களுக்கு இருக்காது, இப்பொழுது சரியாக உங்களுக்கு இருக்கிறது. இந்த ஒன்று அழிந்து போகுமானால் சரியாக இப்பொழுது வேறொரு சரீரம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதைக் குறித்து உங்களால் சிந்திக்க முடிகின்றதா. அதை ஒரு நிமிடம் ஆராய்ந்து பாருங்கள்.
192. நாம் ஒவ்வொருவரும் நாளை காலை சூரியன் எழுவதற்கு முன் ஒருக்கால் நித்தியத்தில் இருக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா? இப்பொழுது நீ ஒரு கிறிஸ்தவனாக இல்லையென்றால், என் நண்பனே, ஒரே ஒரு காரியம்தான் உனக்காக விடப்பட்டிருக்கிறது. நீ அந்த வழியாகத்தான் சென்றாக வேண்டும். நீ அந்த சாலையில் இருந்தால் நீ அந்த சாலைக்குதான் சென்றாக வேண்டும். நீ ஒரு நெற்கதிராக இருந்தால் நீ நெல்லை உற்பத்தி செய்வாய். நீ களையாக இருந்தால், நீ களையினுடைய ஜீவனைத்தான் பிறப்பிப்பாய். இப்பொழுது நீ... ஒன்றையும் அறியாமல், ஒன்றையும் போதிக்காமல் உன்னை வரும் படி செய்து, சபையின் அங்கத்தினனாகமட்டும் இருக்கச் கெய்யும் ஒரு சபையைச் சர்ந்தவனாகயிருப்பின்... நீ நல்லது, “சகோதரன் பிரன்ஹாம், இயேசு கிறிஸ்துவை நம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று என்னுடைய சபை போதிக்கிறது. நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்தால் நாம் இரட்சிக்கப்படுவோம்” என்று கூறலாம். ஆனால் உன்னுடைய ஜீவியம் அதனுடன் ஒத்துப்போகவில்லையெனில், நீ இன்னுமாக அதை சென்றடைய வில்லை.
193. இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று பிசாசு கூட விசுவாசிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? வெளிப்படையாக இயேசு - இயேசு தேவனுடைய குமாரன் என்று வெளிப்படையாக பிசாசு அறிக்கை செய்தது என்பதை நீங்கள் அறிவீர்களா? அவன் இரட்சிக்கப்படவில்லை, அவன் இரட்சிக்கப்படமுடியாது; அவன்தான் பிசாசு. ஆகவே இயேசுவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கை செய்வது.
194. உங்களுக்கு தெரியுமா, பரிசேயர், சதுசேயர் அனைவரும் மிக வைராக்கியமாக இருந்த, பக்தியாக இருந்த ஜனங்கள்; தேவனை நம் இருதயங்களில் எவ்வளவாக நேசிக்கிறோம், இவ்வாறு அவர்கள் எண்ணினர்; ஆனால் அந்த குற்றமற்ற ஒன்றை, அந்த தேவனுடைய குமாரனை காணத்தவறினர், அவர் தேவனுடைய குமாரன் என்று அடையாளம் கண்டுகொள்ளத் தவறினர். ஆனால் இன்னுமாக அவர்கள் மிக பக்திவாய்ந்தவர்களாக இருந்தனர் (அது சரியா?) மிக வைராக்கியமாக, மிக அறிவு கூர்மையுள்ளவர்களாக, நம்முடைய அறிவாளிகளுக்கு தெரிந்துள்ளதைக் காட்டிலும் வேதத்தை மிக அதிகமாக அறிந்திருந்தனர். அவர்கள் உட்கார்ந்து கர்த்தரை சேவிப்பதைத் தவிர பரம்பரைப் பரம்பரையாக வேறெதுவும் செய்வதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை.
195. இப்பொழுது வேதவசனம் என்ன கூறுகிறதென்று கவனியுங்கள்: “கடைசி நாட்களில்.” என்னுடைய கிறிஸ்தவ நண்பர்களாகிய உங்களுக்கு, தேவ அன்புடன், கூறுவது. வேதாகமம், “கடைசி நாட்களில் மனிதன் துணிகரமுள்ளவனாயும், இறுமாப்புள்ளவனாயும், தேவப்பிரியராயிராமல் சுகப்போகப்பிரியனாயும் இருப்பான்” என்று கூறுகின்றது. இப்பொழுது அது உண்மையாயிருக்கிறதல்லவா?
196. இந்த கட்டிடத்தில் இருக்கின்ற ஒரு குறிப்பிட்ட நபர் அன்றொரு இரவு புத்தாண்டு விருந்திற்கு சென்றார், அடித்தளத்தில் அவர்கள் பானங்களும் களியாட்டங்களும், ஐஸ்கிரீம் இரவு உணவுகளும் இன்னும் மற்றவைகளை அவர்கள் கொண்டிருந்தனர். சபைகள் நடனங்களைக் கூட வைக்கின்றன. செய்யவேண்டாம் என்று தேவன் சரியாக எதைக் கூறினாரோ, அவர்கள் அதை கிறிஸ்துவின் நாமத்தில் செய்கின்றனர். சபை என்ன செய்ய வேண்டுமென்று இயேசு கூறினாரோ அது இங்கேயிருக்கிறது, ஆனால் அவர்கள் அதை மறுதலிக்கின்றனர். இயேசு - இங்கே தம்முடைய கடைசி வார்த்தைகளாக சபைக்கு தம்முடைய சித்தமும் பிரமாணமுமாக: “நீங்கள் உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் (இது மேய்ப்பர் ஒருவேளை இதுவரையிலும் வாசித்திருக்கலாம். இதோ மற்றையபாகம்) விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள். அவர்கள் சர்ப்பங்களை எடுப்பார்களானால் அல்லது சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களுக்கு தீங்கு செய்யாது; வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்,” என்பதே.
197. இப்பொழுது, அதைத் தான் இயேசு தம்முடைய நாமத்தில் செய்ய வேண்டுமென்று அவர்களிடம் கூறினார், அவர்கள் இருக்கின்ற ஒன்றை மறுதலிக்கின்றனர், ஆனால் அவர்கள் சென்று அவர் கூறினதற்கு முரணாக செய்து, அது கடந்து விட்டதென்று போதித்து அதனுடன் ஒன்றுமில்லை என்று கூறி, அதற்கு பதிலாக வேதாகமக் கல்வியை கற்றுக்கொடுக்கின்றனர். ஓ, நாம் இருக்கின்ற நிலையைக் குறித்து நமக்கு ஆச்சரியமில்லை.
198. இங்கே கவனியுங்கள், என் சகோதரனே இதை நான் உனக்கு கூறட்டும். இங்கிருக்கின்ற ஒவ்வொரு அங்கத்தினனும் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் மிகவுமாக நிரப்பப்பட்டு அடையாளங்கள் அவர்களைப் பின் தொடருமானால், அந்த எல்லைக்கு சபையானது வருமானால்...
199. அந்த தீவில் கப்பல் நொறுங்கின பிறகு பரிசுத்த பவுலைக் குறித்து நான் நினைக்கிறேன். தேவன் அவனுக்கு ஒரு தரிசனத்தை அளித்திருந்தார். பதினான்கு பகலும் இரவுகளும்... அவர்கள் காப்பாற்றப்படுவர் என்கிற நம்பிக்கை அற்றுப் போயிற்று. அந்த சிறிய, பழைய படகு அங்குமிங்குமாக மிதந்து கொண்டிருந்தது, இரவும் பகலும் பதினான்கு நாட்கள் அவர்களெல்லாரும் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர். பவுல் அங்கேயிருந்தான், அவன் ஒரு தரிசனத்தைக் கண்டான். அவன் “நீங்கள் தைரியமாக இருங்கள்,” ஏனெனில் நான் யாருடைய ஊழியக்காரனாக இருக்கிறேனோ அந்த தேவனுடைய தூதனானவர், அவர் என்னிடம் நின்று, “பயப்படாதே நீ இராயனுக்கு முன்பாக நிற்க வேண்டும், இதோ யாத்திரைப்பண்ணுகிற யாவரையும் தேவன் உனக்கு தயவு பண்ணினார் என்றான்” என்று கூறினான்.
200. கப்பல் சேதமுற்று கரைக்கு வந்தபோது, அவர்கள் அங்கே அந்த தீவு மக்களுடன் சென்றார்கள். பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின் மீது போடுகையில் அங்கே ஒரு பெரிய சர்ப்பம் இருந்தது, அது அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. அந்த சர்ப்பம், ஒரே நிமிடத்தில் கொல்லக் கூடிய விஷத்தை அவனுடைய கையில் ஏற்றினது. அந்த தீவார் அதைக் கண்டு, “கவனி, அந்த ஆள் செத்து மடிவான், இன்னும் ஒரு நிமிடத்தில் அவன் மரித்துப் போவான். அவன் சுவிசேஷத்தை பிரசங்கிக்க தகுதியற்றவன்” என்று கூறினார்கள்.
201. பக்தி வாய்ந்த ஜனங்கள் அவனை சங்கிலியினால் கட்டினார்கள். அந்த நாளில் இருந்த மிக அருமையான சபை அவனைச் சங்கிலியில் கட்டிப்போட்டது, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டமானது இல்லையென்றால், அதே காரியத்தை தான் இன்றைக்கும் காண்பீர்கள். அது சரி! அவள் –அவள் சிறிது சட்டத்தை உடைக்கும்போது பாருங்கள்.
202. ஆகவே ஒரு சர்ப்பம் அவன் கையைக் கவ்விக் கொண்டது. இப்பொழுது கவனியுங்கள். பவுல் பயப்படவில்லை. அவன் “இயேசு கிறிஸ்து, 'சர்ப்பங்களை அவர்கள் எடுத்தாலும் அது அவர்களுக்கு தீங்கு செய்யாது என்று கூறினார்” என்றான். ஆகவே அவன் நடந்து நெருப்பிலே அதை உதறித் தள்ளி; திரும்பி சில விறகுகளை பொறுக்கி நெருப்பிலே போடுவதற்காக எடுத்து, தன் முதுகை காட்டி அனலூட்டிக் கொண்டான்; இந்த பக்கமாக திரும்பி தன் கைகளுக்கு அனல் காட்டினான். அந்த தீவார், “ஏன் இவன் இன்னும் மரிக்கவில்லை? அந்த மனிதன் ஏன் மரிக்கவில்லை? ஏன் அவன் சடிதியாய் விழுந்து சாகவில்லை?” என்றனர். ஆனால் பவுலோ முழுவதுமாக பரிசுத்த ஆவியால் நிறைந்திருந்தான் (நான் என்ன கூற முனைகிறேன் என்று பாருங்கள்?) அந்த விஷம் அவனை பாதிக்காத அளவிற்கு முழுவதுமாக பரிசுத்த ஆவியால் நிறைந்திருந்தான்.
203. ஓ, சகோதரனே, பரிசுத்த ஆவியினால் நிறைந்திருக்கிற ஒரு சபையை எனக்குத் தாருங்கள், வேத சாஸ்திரம் படித்தவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக செய்யத் தவறினதை தேவன் ஒரு வருடத்தில் செய்வார். சபையின் அபிஷேகமானது வரும் வரை காத்திருங்கள். அந்த சிறிய மீதமுள்ளவர்கள், அவர்களுக்கு விசுவாசம் இருக்கிறது - புறஜாதிகளின் கதவுகள் அடைக்கப்பட்ட பிறகு, தேவன் அப்பொழுது ஒரு சபையை அபிஷேகம் பண்ணுவார். “அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியாயிருக்கிறவன் இன்னும் நீதியாக இருக்கட்டும். பரிசுத்த மாயிருக்கிறவன் இன்னும் பரிசுத்தமாயிருக்கட்டும்” தேவன் சபையை தேவனுடைய வல்லமையால் அபிஷேகம் பண்ணுவார், காரியங்கள் அப்பொழுது சம்பவிக்கும். அப்பொழுது மாத்திரமல்ல, இப்பொழுதும் அவர் அதைச் செய்கின்றார்.
204. அடையாளங்களையும் அற்புதங்களையும் கவனித்து; பின்பு மக்கள் சுற்றும் முற்றும் பார்த்து “அது பிசாசினால் உண்டானது” என்று கூறுகின்றனர். ஓ ஏனெனில் அவர்கள் வேத வசனங்களையோ, அல்லது தேவனுடைய வல்லமையையோ அறியாதிருக்கின்றனர். அதன் காரணமாகத்தான் அது அங்கே இருக்கின்றது.
205. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இவ்வளவு நேரம் கடந்து உங்களை வைத்திருந்ததற்காக நான் வருந்துகிறேன். நான் இவ்வாறு செய்வது அரிது. ஆனால் உங்கள் எதிர்ப்பார்ப்பின்படியாக நான் இருப்பதில்லை, உங்களுடைய எண்ணங்களுக்கும் காரியங்களுக்கும் ஏற்றவாறு ஒருக்கால் இந்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்காமல் இருந்திருக்கக்கூடும். இக்காலை இரண்டிற்கு பதிலளிக்கப்பட்டது. அப்படியில்லையெனில், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, நான் உங்களைப் புண்படுத்தவோ அல்லது எதையோ செய்ய நான் - நான் முயலவில்லை. நான் அதை கூறித்தான்... நீங்கள் கேள்வியைக் கேட்டீர்கள். எனக்குத் தெரிந்தவரை நான் உங்களுக்கு பதிலை அளித்தேன். சரி.
206. இப்பொழுது, ஒருக்கால் காரியங்களைக் குறித்து அதிகமாக எனக்குத் தெரியாமல் இருக்கலாம். எனக்கு தெரிந்திருக்க வேண்டிய ஒன்றுமே எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு காரியம் எனக்குத் தெரியும், இயேசு கிறிஸ்து பாவத்திலிருந்து நம்மை இரட்சிக்கிறார், பாவத்திலிருந்து நம்மை புறம்பே வைத்திருக்கிறார், தம்முடைய வல்லமையையும் ஆசீர்வாதங்களையும் நமக்கு அளிக்கின்றார்.
207. ஜெபிக்கப்பட்ட மக்களுக்கு என்ன சம்பவிக்கின்றது என்பதை நீங்கள் கவனிப்பீர்களானால். தேசங்களில் பாருங்கள். எல்லா இடங்களிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் பாருங்கள். நேரம் வந்துக்கொண்டிருப்பதையும் கவனியுங்கள். இங்கே சில சமயங்களுக்கு முன்னர் இரண்டு கிளைகளைக் குறித்து நாம் இங்கே பிரசங்கித்ததை கவனியுங்கள், ஆதியாகமத்திலிருந்து எடுக்கப்பட்டது, அவைகள் எப்படி எல்லா இடங்களிலும் சாட்சி பகருகின்றன என்பதைக் கவனியுங்கள். எப்படி அந்த அவிசுவாசி, தன்னுடைய மதத்தில் அடிப்படையாகவும் நல்ல முறையிலும் இருக்கிறான், ஆனால் தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறான்... ஆகவே சபை அசைந்து சென்று கொண்டேயிருக்கிறது.