55. இல்லை, அது அங்கு இருக்க வேண்டியதில்லை. ஆம், மணவாட்டி ஓரிடத்தில் ஒன்றாக கூடியிருப்பாள் என்பது உண்மையே, ஆனால் உயிர்த்தெழுதல் வரைக்கும் அது நடக்காது - பாருங்கள் "கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம். எபேசியர் 2 தெசலோனிக்கேயர் 5ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். "கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் (உலகம் பூராவிலும்) நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை (அவர்களைத் தடை செய்வதில்லை). தேவ எக்காளம் முழங்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் அவர்களோடே கூட எடுத்துக் கொள்ளப்பட்டு, கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்போம்" (1 தெச. 4:15-17). எனவே, கர்த்தரைச் சந்திக்கச் செல்லும் போது, மணவாட்டி ஒன்று கூடியிருப்பாள். பாருங்கள்? அவள் ஒன்று கூடியிருப்பாள். ஆனால் அவர்கள் எல்லோரும் இது போல் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஏனெனில் மணவாட்டி உலகம் சுற்றிலும் - ஆர்டிக் பிரதேசம் தொடங்கி வெப்பமான தேசம் வரையிலும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும், வடக்கிலிருந்து தெற்கு வரையிலும் - பூமியின் தூளில் நித்திரை செய்து கொண்டிருக்கிறாள்
56. "மனுஷகுமாரன் வரும் போது, அது கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிற மின்னல் போல் இருக்கும்" என்று இயேசு கூறியுள்ளார். முழு விஷயமே, உயிர்த்தெழுதல் இருக்கும், எடுத்துக் கொள்ளப்படுதல் இருக்கும். அவள் இங்கிருந்து போய் விடுவாள். அவரைச் சந்திக்க அவள் போவதற்கு முன்பு...
57. கர்த்தருடைய ஞானத்தைக் கவனியுங்கள். இப்பொழுது, உதாரணமாக, இதை கூறும் போது... கிருபையின் நினைவுகள் மூலமாகவும், வார்த்தையில் கொண்டுள்ள விசுவாசத்தின் மூலமாகவும், நான் "நாம்" என்று கூறுகிறேன். நான் உங்களோடு கூட என்னையும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவின் சரீரத்துடன் இணைத்துக் கொள்கிறேன். அதை நான் விசுவாசிக்கிறேன். நான் “நாம்” என்று கூறும் போது கிருபையினால் அதை விசுவாசிக்கிறேன். அவருடைய கிருபையினால், எடுத்துக்கொள்ளப்படும் அந்த மக்களில் நாமும் இருப்போம் என்று நான் விசுவாசிக்கிறேன்.
58. நாம் உயிர்த்தெழும் போது, முதலாவது நடப்பது என்னவெனில். உயிரோடிருப்பவர்கள் இங்கிருப்பார்கள். முதலாவதாக உயிர்த்தெழுதல் நிகழும், நித்திரையடைந்தவர்களின் உயிர்த்தெழுதல். நித்திரையிலுள்ளவர்களை தட்டி எழுப்பும் நேரம் ஒன்றிருக்கும். இப்பொழுது பூமியின் தூளில் நித்திரை செய்து கொண்டிருப்பவர்கள் - பாவத்தில் நித்திரை செய்து கொண்டிருப்பவர்கள் அல்ல, அவர்கள் தொடர்ந்து நித்திரை செய்து கொண்டிருப்பார்கள். இன்னும் ஆயிரம் ஆண்டு காலம் வரைக்கும் அவர்கள் தொடர்ந்து நித்திரையிலிருந்து எழும்புவதில்லை. ஆனால் கிறிஸ்துவுக்குள் மரித்து பூமியின் தூளில் நித்திரை செய்து கொண்டிருப்பவர்கள் முதலில் நித்திரையிலிருந்து எழுப்பப்படுவார்கள். அவர்கள் - இந்த அழிவுள்ள சரீரங்கள் கர்த்தருடைய எடுத்துக்கொள்ளப்படும் கிருபையினால் அழியாமையைத் தரித்துக் கொள்ளும். அதன் பிறகு நாம் எல்லோரும் ஒன்று கூடுவோம். அவர்கள் ஒன்று கூடத் தொடங்கும் போது, உயிரோடிருக்கிற நாம் மறுரூபப்படுவோம். இந்த அழிவுள்ள சரீரங்கள் மரணத்தைக் காண்பதில்லை. ஆனால் சடுதியாக, நம்மை வேகமாக அடித்துக் கொண்டு செல்வது போன்ற ஒன்று உண்டாகும். அப்பொழுது நீங்கள் மறுரூபமடைவீர்கள். நீங்கள் ஆபிரகாமைப் போல், வயோதிபனிலிருந்து வாலிபனாகவும், வயோதிப ஸ்திரீயிலிருந்து வாலிப ஸ்திரீயாகவும் மாறி விடுவீர்கள். இந்த சடுதியான மாற்றம் என்ன? சற்று கழிந்து நீங்கள் சிந்தனையைப் போல் பிரயாணம் செய்வீர்கள். அப்பொழுது நீங்கள் ஏற்கனவே உயிர்த்தெழுந்தவர்களை காண முடியும். ஓ, என்ன ஒரு நேரம்! அதன் பிறகு நாம் அவர்களுடன் ஒன்று சேர்ந்து, அவர்களோடு கூட எடுத்துக் கொள்ளப்பட்டு, கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்போம்.
59. உங்கள் 'அங்கிள்' தென் கென்டக்கியில் அடக்கம் பண்ணப்பட்டிருந்தால், அவர் இந்தியானாவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றோ, அல்லது இந்தியானாவில் அடக்கம் பண்ணப்பட்டிருந்தால், தென் கென்டக்கிக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றோ அவசியமில்லை. அவர் எங்கிருந்தாலும்... கடலில் மரித்தவர் கடலிலிருந்து எழுந்திருப்பார்கள். விளையாட்டு அரங்கத்தில் சிங்கங்களினால் புசிக்கப்பட்டு அழிக்கப்பட்டவர்களும், அக்கினி சூளையில் போடப்பட்டு எலும்புகளும் கூட சாம்பலானவர்களும், உயிரோடெழும்புவார்கள். அவர்கள் ரோமாபுரியில் இருந்திருந்தாலும், ரோமாபுரியிலுள்ள விளையாட்டு அரங்கத்தில் இருந்திருந்தாலும், அல்லது தென் பாகத்திலுள்ள வெப்பமான காடுகளில் இருந்திருந்தாலும், அல்லது பனி உறைந்துள்ள வடக்கு பாகத்தில் இருந்திருந்தாலும், அவர்கள் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, மருரூபமடைந்து மேலே கொண்டு வரப்படுவார்கள். உயிரோடிருப்பவர்கள் ஒரு நொடிப் பொழுதில், ஒரு கண் இமைப் பொழுதில் மறுரூபமடைந்து, அவர்களோடு கூட எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
60. ஆப்பிரிக்காவின் ஊழியக்களத்தில் மரித்துப்போன மிஷனரிமார்களைப் பாருங்கள். வடக்கிலுள்ள பனி உறைந்த இடங்களில் மரித்துப் போனவர்களைப் பாருங்கள். விளையாட்டு அரங்கங்களிலும், உலகம் முழுவதிலும், காங்கோ பிரதேசத்திலும் மரித்துப் போனவர்களைப் பாருங்கள். அவர்கள் எல்லாவிடங்களிலும் மரித்தனர் - சீனாவில், ஜப்பானில், உலகெங்கிலும், கர்த்தருடைய வருகை உலகம் முழுவதற்கும்; எடுத்துக் கொள்ளப்படுதல் உலகம் முழுவதும் சம்பவிக்கும்.
61. நேரம் மாற்றத்தைக் கவனியுங்கள். படுக்கையில் இரண்டு பேர் இருப்பார்கள்; நான் ஒருவனை எடுத்துக் கொண்டு மற்றவனை விட்டு விடுவேன். அதே நேரத்தில், "இரண்டு பேர் வயலில் இருப்பார்கள்: நான் ஒருவனை எடுத்துக் கொண்டு மற்றவனை விட்டு விடுவேன். ஒன்று பூமியின் இருளான பக்கம், மற்றது பூமியின் வெளிச்சமான பக்கம். பாருங்கள்? அது உலகம் முழுவதும் நடக்கப் போகும் எடுத்துக் கொள்ளப்படுதல். ஆம், சபையானது ஒன்று கூடியிருக்கும். ஆனால் அது உயிர்தெழுதலும் எடுத்துக் கொள்ளப்படுதலும் நிகழ்ந்த பிறகு.
62. நீங்கள் அந்த விதமாக அதை காணவில்லை என்றால், அதனால் பரவாயில்லை. அதை நான் சரியாக கூறவில்லை; இதை நாம் ஒலிநாடாவில் பதிவு செய்கிறோம். பாருங்கள்? வேறு ஊழியக்காரர்கள் இதனுடன் ஒருவேளை இணங்காமலிருக்கலாம். அதனால் பரவாயில்லை.